சிறப்பு செய்திகள்

26/08/2010 - ஜ.செ.க-வின் தேசியத் தலைவர் கர்பால் சிங் வெளியிட்ட  பத்திரிக்கை அறிக்கை;


ஜ.செ.க-வின் தேசிய மத்திய செயற்குழுவின் தீர்மானங்கள்


1. அம்னோ-வும் உதுசான் மலேசியா-வும் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் அளவிற்கு செய்திகளை பரப்புகிறது. இச்செயல் முஸ்லிம் இனத்தவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் மெல் வெறுப்பை தூண்டி தேசிய முன்னணியின் தவறுகளை மறைக்க மக்களின் கவனத்தை திசைத்திருப்ப எடுத்த முயற்சியாகும்.தவறான செய்திகளை பரப்பி மக்களின் மனதில் அட்சுறுத்தலை உருவாக்க முயல்கிறது. இனம், மதம் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசர் ஆகியவற்றை மக்கள் கூட்டணிக்கு எதிராக பயன்படுத்தி , இதன் விளைவாக மே 13-ரை விட மிக மோசமான அசம்பாவித விளைவுகள் எழ முயற்சிகள் செய்கிறது. எதுவாகினும் 52 பில்லியன் பெறுமானமுள்ள பூமிபுத்ரா பங்குகளின் செல்வழி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தேசிய முன்னணியை சார்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் பினாமிகளை விசாரிக்க தேசிய முன்னணி அரச விசாரணை ஆணையம் ஒன்றினை அமைக்க உந்துசெய்ய வலியுறுத்தப்படுகிறது.

2. தனது சொந்த மகனின் நிறுவனத்திற்கு கட்டுமான குத்தகை ஒன்றை பெற கிள்ளான் மாநகராட்சி மன்றத்திற்கு சிபாரிசு கடிதத்தை கையெழுத்திட்ட தீ பூன் ஹோக்-கின் மீது தேசிய ஜ.செ.க-வின் ஒழுங்கு நடவடிக்கை குழு செய்த முடிவினில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதனை உறுதிபடுத்துதல்.

3. இந்தோனேசியாவில் அமைந்துள்ள மலேசியா தூதரகத்தின் மேல் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து ஜ.செ.க கண்டனம் தெரிவிக்கிறது. இது போன்ற செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க இந்தோனேசியா அரசாங்கம் உறுதி செய்தல் வேண்டும்.