Friday, December 31, 2010

மக்கள் கூட்டணியில் நம்பிக்கையான எதிர்காலம் பிறக்கும்


செம்பருத்தி இனைய செய்தி. 
தினமும் காலம் நம்மை கடந்து செல்கிறது. காலத்தை வெல்ல நம்மால் முடியவில்லை. புதிதாக தோன்றிய அனைத்து முயற்சிகளும், 2011 ஆண்டு பழைமையானதாக தென்படும் வேளையில், புதிய கோணத்தில் சிந்தித்து முயற்சிகளை துரிதப்படுத்த புதிய சக்தி நமக்கு புது வருடத்தில் பிறக்கும் என்பது மெய்யாகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
மலரப்போகும் புதுவருடத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவரும் இணைந்து சுதந்திரமாக கொண்டாடி வரவேற்க்கவிருக்கும் புது வருடம், அனைத்து வழிகளுக்குமான புதிய ஆராம்பமாக அமையுமென நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதே சமயத்தில் பல சமுதாய சிக்கல்களையும் களைந்தெறிய கடமையும் நமக்கு உள்ளது என்பதனை மறுக்கவும் முடியாது.
புது வருடம் ஒவ்வொரு ஆண்டும் உதயமாகும் போதிலும் கூடவே அனைத்து மக்களும் அந்த தினத்தை புதிதாக பிறக்கின்ற ஒரு வருடமாக கருதும் வேளையில், புதிய ஆரம்பம் ஒன்றினை குறிப்பிடும் ஒரு நாளாக செயற்பட வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள்
அதே வேளையில் பல புதிய ஆரம்பம் என்று குறிப்பிடும் தருணத்தில் பல குறிப்பிட்ட மாற்றங்களை மக்கள் நலனுக்காக அமைய வேண்டும் என்பது என்னுடைய கனவாகிறது.
அவ்வகையில், முதன்மையாக இருக்கக்கூடிய வன்முறை கலாச்சாரம். சமீபத்தில் ஈப்போ வட்டாரத்தில் ஏற்படும் தொடர் கொலை சம்பவங்கள் மனதில் திகில் பிடிக்க செய்கிறது. இதற்க்கு என்ன காரணம் என்பதை நாம் கூர்மையாக சிந்திக்க வேண்டும்.
கிராமாபுரங்களிருந்து நகர்ப்புறத்திற்கு வேலை வாய்ப்புகளை தேடிவரும் இளைஞர்கள் ஒரு சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக தவறான சேர்க்கையில் ஈடுபடும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். அதன் விளைவு இந்திய சமுயாத்தில் குற்ற செயல்களின் அதிகரிப்பு. இதனை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது ஒரு புறமிருக்க அதனை சமுதாய இயக்கங்களின் கவனமும் குறைவாகவே காணப்படுகிறது. இப்பிரச்சனைக்கு புதிய சிந்தனை மலர்ச்சி தேவை.
அரசாங்கத்தின் பழைய வழக்கங்களை குறைசொல்லியோ அல்லது பழைய அரசியல் கோபதாபங்களை எடுத்துக்காட்டியோ மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பது உண்மை. ஆனால் பல ரூபங்களில் சுய முயற்சியும் அரசாங்கத்தின் நல திட்டங்களும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்௦க முடியும் என்ற  வாய்ப்பு உள்ளது. அதனை அரசாங்கம் மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ராணுவ சேவையில் மலாய் அல்லாதவர்களின் ஆர்வக்குறைவு என்பது உண்மையாக இருந்தாலும், இவர்களின் ஆர்வத்தை பன்மடங்கு உயர்த்த முயற்சிகளை அரசாங்கம் கண்டதில்லை என்பதும் உண்மையாகிறது. அதற்க்கு காரணம் அரசாங்கம் என்று முழுமையாக சொல்லலாம் ஆனால் வாய்ப்புகளை வழங்கும் பொழுது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதே வேளையில், அரசாங்கமும் வாய்ப்பு வழங்கியதோடு மனநிறைவு கொள்ளாமல், மலாய் அல்லாதவர்களின் பதவி உயர்வை  வருடாந்திர முறையில் கண்காணித்தல் வேண்டும். மேலும் பல அரசாங்க துறைகளில் சமமான வாய்ப்பு முறையை வழங்க அரசாங்கம் வழி செய்ய உறுதிசெய்ய குரல்கொடுப்போம்.
அடுத்த கட்டமாக தமிழ் கல்விக்கூடங்களின் பின்தங்கிய நிலையை வருகிற புதுவருடத்தில் புதிய தோற்றத்தை உருவாக்க அனைத்து இந்திய தலைவர்களும் பொறுப்புடன் பணியாற்றவேண்டும். சமீபத்தில் குவாலா பிலா தமிழ் பள்ளியை நேரில் கண்டபொழுது, வளர்ச்சி அடைந்த நாட்டில் இது போன்ற பள்ளிக்கூடங்களின் அவல நிலையின் தொடர்கதையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
வருகிற புதுவருடத்தில் இது போன்ற தமிழ் பள்ளி பள்ளிகளுக்கும் அதன் மாணவர்களுக்கு புதிய எதிர்காலம் காத்திருக்கிறது என்ற உறுதி மொழியை வழங்க சபதமெடுப்போம்.
இறுதியாக புதுவருட சந்தோஷ உணர்வு ஒருபுறமிருக்க, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பல குடும்பங்களின் மனதை மிகவும் ஆழமாக பாதித்துள்ளது. இதற்க்கு காரணம், வேலை வாய்ப்பு குறைவும்இ குறைந்த வருமானத்திற்கு வேலை செய்வதும்தான். அடிப்படை தேவைகளை கூட பூத்தி செய்துக்கொள்ள முடியாத நிலைமையில் நாட்டில் பொருட்களின் விலை உயர்வு கண்டுள்ளது. இச்சூழ்நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் குறைந்த பட்ச சம்பள முறையை அமுல்படுத்த வேண்டும்.
அரசாங்கம் மற்றும் தனியார் துறையிலும் சுமார் 70 சதவிகித மக்கள் 1500 வெள்ளிக்கு கீழ் வருமானம் பெறுகிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் காட்டும் வேளையில், இச்சம்பளம் விலைவாசிக்கு ஏற்றதா என்று அரசாங்கம் எண்ணிப்பார்க்க வேண்டும். அதனை நாம் வருகின்ற புத்தாண்டில் மாற்றியமைக்க உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.
மலர்கின்ற இந்த புதிய ஆண்டில் நாம் அனைவரும் இனிய அனுபவத்தை பெறப்போகும் வேளையில் ஒரு இனிய புத்தாண்டு செய்தியை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன் என அவர் அவ்வறிக்கையில் குறிபிட்டுள்ளார்.

"புது வருட வாழ்த்துக்கள்"


கடந்த கால தோல்விகளை வருங் காலத்தில் வெற்றியாக மாற்றியமைக்க நமக்கு ஒவ்வொரு வருடமும் ஆண்டவனின் ஆசியோடு வருவது போல இம்முறையும் இன்னொரு 2011-ம் வருடத்தின் பிறப்பு. 

இந்த புத்தாண்டு சகல நன்மைகளையும் அனைத்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற வாழ்த்துக்களை வரும் புது வருடத்திற்கும் அதனை அனுபவிக்க காத்திருக்கும் அனைவருக்கும், ஜ.செ.க தமிழ் வலைப்பதிவின் நிர்வாக குழுவின் "புது வருட வாழ்த்துக்கள்".

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

நன்றி. 

வணக்கம்.

இருக்கு என்கிறார்கள் இருப்பதில்லை, தருவோம் என்கிறார்கள் ஆனால் தருவதில்லை

Thursday, December 30, 2010

மக்கள் கூட்டணி மாநிலங்கள் இந்திய வாக்காளர்களுக்கு நிறைய செய்து இந்தியர்களிடம் நெருங்கிய நட்பை உருவாக்க வேண்டும்.

ஜ.செ.க நெகிரி செம்பிலான் இந்திய தலைவர்கள் மற்றும் குவாலா பிலா கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மு.குலசேகரன் நிழத்திய  உரை

அநேகமாக தெனாங் சட்டமன்ற இடைத்தேர்தல் இக்காலகட்டத்தின் இறுதி பொதுத்தேர்தலாக  கருதப்படும் வேளையில், இதன் ஆதரவை முன்னோடியாக வைத்துதான் பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தை கலைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் கூறுவது போல அடுத்த பொதுத்தேர்தல் அடுத்த வருட மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்ற வியூகங்கள் உண்மையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். 

அதன் அடிப்படையில் மக்கள் கூட்டணிக்கு மிஞ்சி இருப்பது வெறும் மூன்று மாத கால அவசம் மட்டுமே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், ஒரு முக்கியமான தேர்தல் மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் சாசனத்தில் சரித்திரத்தை உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ளது. 

கடந்த கால மலேசியா நாட்டின் அரசியல் வியூகங்களை புரட்டிப் பார்த்தால், எந்த ஒரு அரசியல் ஆர்வாளரோ அல்லது அரசியல் வர்ணனையாளர்கள், நுட்பமாக அரசியல் கருத்துக்களை வெளியிட்டதில்லை என்பது தெரியவரும். அதே வேளையில் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை இழக்கும் சாத்தியமோ அல்லது ஆட்சி கவிழுமா என்ற வர்ணனைகளும் அவர்களின் எண்ணத்தில் எட்டியது கிடையாது. 

ஆனால் தற்சமய அரசியல் சூழ்நிலையை சீர்தூக்கி பார்த்தால், கடந்த பொதுத்தேர்தலின் சுனாமி அலை மீண்டும் ஒரு பேரலையை உருவாக்கி அரசியல் மறுமலர்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

இப்பொழுது, தேசிய முன்னணி தலைவர்களும் மீண்டும் ஆட்சி பீடத்தை கைப்பற்றுவது கேள்வி குறியாகிவிட்டது என்று பேச தொடங்கி விட்டனர். மக்களின் ஆதரவை எளிதாக இடைபோட முடியாமல் தவிக்கும் இக்கட்டான நிலையில் உள்ளனர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேலும் இது பற்றி பேசுகையில் ஒரு சிலர், தேசிய முன்னணியை சீர்திருத்த புரட்சியின்றி கவிழ்ப்பதும் கடினம் என்று கூறுகின்றனர். ஆனால் தேசிய முன்னணி சீர்திருத்த புரட்சியை செய்யுமா அல்லது அவ்வகையான் மாற்றங்களுக்கு தயாராக உள்ளதா என்பது கேள்வி குறியே. 

ஒரே மலேசியா கொள்கையை அடித்தளமாக கொண்ட தேசிய முன்னணி, பல இன மக்கள் உரிமைகளின் சமத்துவத்தை காப்பாற்ற இன்னும் தத்தளிக்கிறது என்பதே உண்மை. ஒரே மலேசியா கொள்கையின் கீழ் அரசியலில் வெறும் ஒப்பனை மாற்றங்களை மட்டுமே கொண்டு வருமே ஒழிய குறிப்பிடும் வகையிலான மாற்றங்களை கொண்டுவர முடியாது. இதற்க்கு காரணம் மிகப்பெரிய அளவில் உள்ள சுய அரசியல் சூழ்ச்சி முடிச்சுகள் ஆகும். பல மேடைகளில், மாற்றங்களை பற்றி பேசும் தேசிய முன்னணி மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது. அவர்களால் மாற்றம் என்ற வார்த்தையை உச்சரிக்க மட்டுமே முடியும். செயல் படுத்த முடியாது. 

இனி வருங் காலங்களில், சிறந்த ஆட்சி முறையை மலேசியர்கள் அனுபவிக்க விரும்பினால், மாற்று கூட்டணியான மக்கள் கூட்டணி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. 

கடந்த பொதுத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் புதிய அரசியல் தளத்தை உருவாக்குவதில் வேந்தர்களாக இருந்த பட்சத்தில், மீண்டும் வருகிற இடை தேர்தலிலும் அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் அசைக்க முடியாத ஆதரவை மக்கள் கூட்டணிக்கு வழங்கி மத்திய அரசாங்கத்தை கைப்பற்ற முக்கிய பங்களிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். 

ஆகவே இந்தியர்களின் வாக்கை பெறுவதில், மக்கள் கூட்டணி அரசாங்க மாநிலங்களும், மக்கள் கூட்டணி தலைவர்களும் இந்தியர்களிடம் நெருக்கமான நல்லுறவை பேணுவது அவசியமாகும் வேளையில், இந்தியர்களின் தேவைகளை சீர்தூக்கி பார்த்து அவர்களின் தேவைகளை சரிவர செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும். 

தேசிய முன்னணியின் ஆட்சியில் பல இன்னல்களையும் வேறுபாடுகளையும் அனுபவித்த இந்தியர்களின் மனதை கவர்ந்து, மக்கள் கூட்டணியின் மலேசியர்களுக்கு மலேசியா என்ற உன்னத கொள்கையின் வெளிப்பாடுகளை தெளிவுபடுத்தி அவர்களை அரவணைக்க முயற்சி செய்ய வேண்டும். 

மக்கள் கூட்டணி மக்களின் தேர்வு என்ற எண்ணத்தை அவர்களின் ஆழ்மனதில் பதிய வைக்க இன்றே நடைபோட வேண்டும்.

பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்

மக்கள் ஓசை செய்தி 30/12/2010
தமிழ் நேசன் செய்தி 30/12/2010

Tuesday, December 28, 2010

இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தல்


கோடீஸ்வரர்களை உருவாக்கும் திட்டம்: மஇக தலைவர்களின் வாடிக்கையான வேடிக்கை, குலசேகரன்

மலேசியாகினி செய்தி 27/12/2010

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மலேசியாவில் எத்தனைக் கோடீஸ்வரர்கள், அன்றைய காலத்திலிருந்து இன்றைய நாள் வரை இருந்தார்கள் மற்றும் அவர்களை உருவாக்கியது யார் என்று மஇகவின் புதிய தேசிய தலைவர் ஜி. பழனிவேல் கவனிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள் மக்களின் நலனிலும் நாட்டின் மேம்பாட்டிற்கும் அயராது உழைக்க வேண்டும். 

அதனைத் தவிர கோடீஸ்வரர்களை உருவாக்க திட்டமிடுதல் கூடாது என்று டிஎபி ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

உழைப்பை முதலீடாக வைத்து மாறு பட்ட சிந்தனையை அடித்தளமாக கொண்டு உயர்ந்தவர்கள்தான் நாட்டில் காணப்படும் பல இந்திய கோடீஸ்வரர்கள். ஒரு சிலரின் பெயர்கள் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவர்களின் உயர்வை மக்கள் நன்கு அறிவார்கள். இவர்களின் சிந்தனையில் “சுய நம்பிக்கை” மட்டுமே மேலோங்கியிருந்ததே தவிர அரசியல் பின்னணி அல்ல என்று அவர் மேலும் கூறுகிறார்.



மஇகவின் புதிய தேசிய தலைவர் பல கோணங்களில் இந்திய சமுதாயத்திற்கு “விடுதலை” வாங்கித்தர முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு மக்களின் அடிப்படை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.



மலேசியாவில் நமக்கு கூட்டறவு சங்கம் இல்லையா? இருக்கின்ற கூட்டுறவு சங்கங்களுக்கு யார் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவது? அனுபமுள்ள கூட்டுறவுகளை ஒதுக்கி ஒரு புதிய ஒன்றை ஆரம்பித்து மீண்டும் பழைய பல்லவியை 

பாடவா? என்று குலசேகரன் தமது அறிக்கையில் வினவியுள்ளார்.

மஇகவின் புதிய தலைவர் என்ற முறையில், முன்னாள் தலைவரின் அனைத்து மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான சிந்தனையைத் தீட்ட வேண்டும். முன்னாள் தலைவர் செய்த திட்டமிடுதல் கொள்கையை கைவிட வேண்டும்.

“இந்திய சமூதாயத்திற்கு நான் பெரிய திட்டம் வைத்துள்ளேன் என்பது பழைய பல்லவி. அதிலும் பழைய தேசிய தலைவரின் வீரமற்ற வசனங்கள் அவை. அதனை பின்மாற்றாமல் இருந்தால் போதும்.”

இத்தனைக் காலமாக ஜி.பழனிவேல் துணை அமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற வார்த்தைகளைக் கூறியதே கிடையாது. மேலும், முன்னாள் தேசிய தலைவர் ச.சாமிவேலு தனது சக தலைவர்களை தனது இருப்பு கரம் கொண்டு கட்சியை வழி நடத்தியுள்ளார் என்பதும் இதன் வழி வெளிப்படையாகிறது. இதற்குத்தான் மக்கள் உங்களை முன்பு தேர்ந்தெடுத்தார்களா? என்று குலசேகரன் கேட்கிறார்.

“அப்பொழுது எல்லாம் மௌனம் சாதித்துவிட்டு இப்பொழுது சீறிப் பாய்வதின் நோக்கம் என்ன? இப்பொழுதுதான் சிந்தனை புரட்சி மலர்ந்ததா? இலவச கல்வியை அரசாங்கம் வழங்கினாலும், இந்நாட்டில் இன்னும் பல நூறு தமிழ்ப்பள்ளிகள் அடிப்படை வசதி இன்றி இருக்கின்றன. அதற்கு ஒரு முடிவு பிறக்க வழி செய்யலாமே. பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை அரசாங்க பள்ளிகளாக மாற்ற ஏதேனும் திட்டம் உள்ளதா? இல்லையென்றால், அதற்குத் திட்டம் போடவும். அரசாகங்கத்திடம் பரிந்துரை செய்யவும்”, என்று தமது அறிக்கையில் குலா கோருகிறார். 

கல்வி நிலையில் நமது இந்தியர்களின் வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது? ஆய்வு செய்தீர்களா? அதனை மாற்ற பல திட்டங்களை உருவாக்க வேண்டும். இன ரீதியான உயர்கல்விக்கு தேர்ந்தெடுத்தல் முறையில் இந்தியர்களுக்கு நிரந்த வாய்ப்பு கிடைக்குமா? சீர்தூக்கி கவனியுங்கள்.  மேலும் எம்.ஆர்.எஸ்.எம் போன்ற கல்லூரிகளில் இந்தியர்களுக்கு வாய்ப்பு எத்தனை விழுக்காடு வழங்கப்படுகிறது, என்பது போன்ற கல்வி சம்பந்தமான மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

மக்கள் நலன் பெரும் திட்டம் என்பது, தலைவர் நாற்காலிக்கு வந்தவுடன் செயல்படுத்துவது அல்ல. வருவதற்கு முன்பு செய்து காட்ட வேண்டும். 

அப்பேர்பட்டவர்தான் உண்மையான மக்கள் நல தொண்டர், தலைவர் என்று சுட்டிக் காட்டிய குலா, சிதைந்துப்போன இந்திய சமுதாயத்தின் பணத்தை மறுபடியும் சுரண்ட நினைப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார்.

புதிய தலைவர் என்ற முறையில், நமது சமூதாய வளர்ச்சிக்கு சிறப்புச் சேர்க்க கொள்கை வசனங்கள் பரப்புவதை நிறுத்திவிட்டு நல்வழி செயல் திட்டங்களை உறுதிப்படுத்துமாறும், நாட்டின் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தை குறிக்கோளாகக்கொண்டு தலைமைப் பொறுப்பை வகித்தால் நல்லது என்று குலசேகரன் கூறியுள்ளார்.

Friday, December 24, 2010

பிரச்சனையை மூடிமறைப்பதில்லை; விரிந்துரை செய்து கவனிப்போம்

பிரச்சனையை மூடிமறைப்பதில்லை; விரிந்துரை செய்து கவனிப்போம்

மொட்டை கடிதம் புண்ணியமில்லை, லஞ்ச ஊழலிடம் புகார் செய்

வாழ்த்துக்கள் மாணவர்களே !!!



மூன்றாம் படிவ பி.எம்.ஆர் தேசிய தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், இந்த இணைய பதிவேட்டின் சார்பிலும், ஜ.செ.க வின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

நான்காம் படிவ நிலையில் காலடி எடுத்து வைக்கும் நீங்கள், உங்கள் பெற்றோர்களின் கனவுகளை தாங்கி சென்று உங்களின் எதிர்காலத்தையும் நினைவில் வைத்து சிறந்த பாட முறைகளை தேர்வு செய்யவும். கல்வி செல்வங்களின் குழந்தைகளான நீங்கள் அனைத்து திறமைகளையும் பெற்று வாழ்வில் உயர வாழ்த்துகிறோம். 

கருணை மடல்

காராக்கடந்த டிசம்பர் மாதம் 2009 பாஹவ் நகரில் கொத்தடிமை கொடுமையில் சிக்கிய குனாவை ஜசெக வைசேர்ந்த காமாட்சி துரை ராஜூ காவல் துரையினர் உதவியோடு மீட்டு வந்தார்குனா வயது 16 தந்த தகவல் படிஅவருடைய அக்கா ப்ரியாவும் வயது 19 மீட்கப்பட்டார்

குனா தற்பொழுது காராக்கில் ஒரு வாகனம் கழுவும்பட்டரயில் வேலை செய்து வருகிரார்இவருக்கு பிறப்பு பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லைபல முறைமுயற்சி செய்தும் அவற்றை பெருவதில் பிரச்சனை அதிகமாக இருப்பதாக காமாட்சி துரை ராஜூ கூறினார்இதுவிஷயமாக சில மாதங்களுக்கு முன் டத்தோ தேவமனியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த போது உதவிகேட்டிருந்தேன்இது நாள் வரை எந்த பதிலும் கிடைக்க வில்லை

தாய் தந்தை இருவரும் பராமரிக்கும் குழந்தைகள் கூட தவரான வழியில் பாதை மாறி செல்வது நாம் கண்கூடாக பார்க்க நேர்கிறதுகுனாவோ சிறுவயது முதல் பெற்றோரை பார்காமல் சிறார் கொடுமைக்கு ஆளானர்மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம்ஒதுங்காதவர்

மிகச் சிறிய வயதிலேயே கடுமயாக வேலை வாங்கப்பட்டவர்சம்பளம் இல்லாமலேயே பல இடங்களில் வேலை செய்துள்ளார்இவருக்கு கிடைத்ததெல்லாம் அடியும் உதயும் தான்.

நாகரீகம் வலர்ந்த இந்த காலத்தில்  பிறரிடம் எப்படி பழகுவது என்பது கூட தெரியாமல் வளர்ந்தது குணாவின் குற்றமா?

இன்றைய நிலையில் குனாவின் எதிர்காலம் ஒரு பெரிய கேள்வி குறியாக உள்ளதுஅவரை கொட்தடிமை கொடுமையிலிருந்து காப்பாற்றியதோடு கடமை முடிந்துவிட்டது என்று என்னால் நிறுத்திக் கொள்ளமுடியவில்லைஅவனுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் பல முயற்சிகளை செய்துவருகிறேன் என்று திருமதி காமட்சி வருத்தம் தெரிவித்தார்

பல ஆசிரமங்களுக்கு தொடர்பு கொண்டு அவரைசேர்க்க முயற்சி செய்தேன் பலன் இல்லை.சமூக நல இலாகாவிலும் நேரில் சென்று இவர் பிறச்சனையை பற்றி பேசினேன்முதலில் அடையாள அட்டை எடுத்து வர சொல்லி விட்டார்கள்

குனாவின் எதிற்காலம் கறுதி கருனை உள்ளம் கொண்ட யாராவது அவருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்தால் நமது சமுதாயத்திற்கு செய்த பெரிய உதவியாக இருக்கும்கல்வி அறிவு கிடைக்க பெறாத குனாவிற்கு தொழில் கல்வி மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறதுஆகவே தொழிற்கல்வி நடத்தும் நிறுவனஙள் முன் வந்து குனாவிற்கு உதவி செய்ய முன் வர வேண்டுகிரேன்.

நன்றி
காமாட்சி துரை ராஜூ
 செ பஹாங் 

Thursday, December 23, 2010

மு.குலசேகரனின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி


அன்பு, சகோதரத்துவம், மனித நேயம் போன்ற பல நல்ல எண்ணங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர் மாமனிதர் இயேசு. அவரின் பிறந்த நாளை "கிறிஸ்துமஸ் திருநாள்"ளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 


அந்த வகையில் மலேசியாவில் கிறிஸ்துமஸ் திருநாளை மிகுத்த மகிழ்ச்சியோடு கொண்டாடிடும் கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், ஜ.சே.க-வின் சார்பிலும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது அன்றாட வாழ்கையில் சிறந்த செயலை செழிப்பாக செய்திடவும் வாழ்வில் எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்து பல இன மக்களுடன் ஒற்றுமையாய் இத்தினத்தை கொண்டாடி மகிழ்வோம்.

இந்த நன்னாளில் “ஏழைகள் வயிற்றில் அடிக்காதே; கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே; பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே; உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே; வறுமையில் உழல்வோர்க்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்; துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே; ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே; பூசலைத் தவிர்த்திடு!” என்ற பொன் மொழிகளுக்கேற்ப வாழ வகைசெய்வோம். 

மனிதர்களின் ஆழ்மனதை தட்டி எழுப்பும் இந்த அறிவுரைகளை மனதில் தக்கவைத்துக் கொண்டு, சமுதாயத்தில் ஏழை எழியோர்க்கு இயன்ற உதவிகளை செய்திடுவோம். துன்பத்தில் இருப்போரின் இன்னல்களை அகற்ற உதவிடுவோம். மனகசப்புகளை வேரோடு களைந்து, சமத்துவமாக வாழ உறுதியேற்போம். 

Sunday, December 19, 2010

தெனாங் இடைத்தேர்தல்: இந்தியர்களின் வாக்குகள் அரசியல் சுனாமியை உருவாக்கும்

மலேசியாகினி செய்தி 

தேசிய முன்னணி ஆட்சியில் பல கசப்பான அனுபவங்களைக் கடந்த இந்தியர்கள், மீண்டும் அவர்கள் வாக்கின் ஆதிக்கத்தை நிரூபிக்கும் தளமாக அமையப் போகிறது தெனாங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் என்று கூறுகிறார் டிஎபி தேசிய துணைத் தலைவரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற 
உறுப்பினருமான எம்.குலசேகரன்.

இந்தச் சட்டமன்ற தொகுதியில் சுமார் 12.11 விழுக்காடு அல்லது சுமார் 1757 இந்தியர்கள் வாக்காளராக இருக்கின்றனர்.

இம்முறை தெனாங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் எடுக்கப்போகும் முடிவு உடனடியாக நாட்டின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியதாக அமையும் என்பதை உறுதியாக சொல்லமுடியும் என்றார்.

சிறந்த பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கூட்டணியை இந்தியர்கள் வாக்காளர்கள் ஆய்வு செய்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதும் திண்ணம்.

“இனவாத தேசிய முன்னணி அரசாங்கத்திடமிருந்து நமது உரிமைகளைப் பெறுவதற்கு அனுதினமும் நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்காது போனதால் மாற்று கூட்டணியை இந்திய சமூகத்தினர் 
முழுமையாக ஆதரிப்பார்கள் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”

இனவெறி பிடித்த தேசிய முன்னணியிடம் ஒரு சில ஒத்தூதி கட்சிகள் இந்தியர்களின் உரிமைகளை அடகு வைத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தேசிய முன்னணி ஆட்சியில் இந்தியர்களுக்கான பல உரிமைகள் அறிவிக்கப்படுவதுபோல் அமல்படுத்தப்படுவதில்லை. தட்டிக்கேட்டால் எதுவும் நமக்கு மிஞ்சுவதும் இல்லை.

“இந்தியர்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் சரியானவையாக இருந்திருக்கின்றனவா? அல்லது முழுமை பெற்றிருக்கிறதா? சிந்திக்கும் தருணமிது”, என்று அவர் கூறுகிறார்.

“இந்தியர்கள் இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் வாக்கு அளிக்காவிட்டாலும் ஒருவருக்கு வெற்றி உறுதி என்பதைச் சுட்டிக் காட்டிய குலசேகரன், இந்தியர்களுக்கு இத்தனை ஆண்டுகாலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒட்டுமொத்தமாகத் தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளிக்காட்ட தெனாங் தொகுதி இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச் சிறந்த சந்தர்ப்பம் இது”, என்றார்.
இந்தியர்களின் வாக்குகள் இம்முறை மக்கள் கூட்டணியின் வெற்றிக்கொடியை பறக்க விடுவதற்கான வாய்ப்பு இது.

“இந்தச் சந்தர்ப்பத்தை இந்திய வாக்காளர்கள் நழுவ விடக்கூடாது”, என்பதை வலியுறுத்திய குலசேகரன், விரைவில் மக்கள் கூட்டணி இந்திய தலைவர்கள் தெனாங் சட்டமன்ற தொகுதி இந்தியர்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள ஆயத்த நிலையில் இருக்கிறார்கள் என்றார்.

“மக்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு என்பதனை இவ்வேளையில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதனை ஆணித்தரமாகவும் சொல்றேன்”, 
என்று அவர் மேலும் கூறினார்.


Thursday, December 16, 2010

அமைச்சின் புறக்கணிப்பு

காராக் - 03/04/2008 -  இல் பெந்தோங் மருத்துவமனையில் உயிரிழந்த சிவா த/பெ அய்யாவு வயது 31, சார்ந்த குடும்பத்தினருக்கு இன்றைய நாள் வரை எந்த ஒரு நீதியும் கிடைக்காமால் இழுபறி நிலையில் உள்ளது. 



இவருடைய இறப்பின் ஒரு முக்கிய காரணம் மருத்துவமனையின் கவனக்குறைவே என்று சிவாவின் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர். சிவாவின் தாயார் திருமதி பார்வதி தன மகனின் இறந்ததற்கு என்ன காரணம் என்று சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் சுகாதார அமைச்சிடம் கேட்டு வருகிறார். ஆனால் அவருக்கு எந்த ஒரு முழுமையான பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதே உறுதியாகா உள்ளது. தன மகனின் இறப்பு காரணமான சுகாதார அமைச்சின் இத்தகையான போக்கு மனித உயிருக்கு எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் இல்லை என்பதனை தெளிவுபடுத்துகிறது. 

மேலும் சுகாதார அமைச்சரின் உதவியாளரை சந்தித்து பேசியபொழுது, இது சம்பந்தமான வழக்கு தற்சமயம் தலைமை சட்ட ஆலோசகர் அலுவகலத்தில் உள்ளதாகவும், கூடிய விரைவில் வழக்கின் முடிவு அறிவிக்கப்படும் என்பதனை தெரிவித்தார். இருப்பினும் ஏன் இன்றைய நாள் வரை சுகாதாரா அமைச்சின் கவனத்தில் உள்ள இந்த வழக்கின் நிலவரங்களை எழுத்து பூர்வமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிவிக்க வில்லை என்ற கேள்வியை கேட்டதற்கு, அதன் விவரங்களை சொல்ல மறுத்து விட்டார். 

ஒவ்விரு முறையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, பொறுமையாக இரு என்ற பதிலை தவிர வேற எதுவும் அவர் கூறுவதில்லை என்று சிவாவின் தம்பி பாலா தெவித்தார். 

இதையடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை, சிவாவின் குடும்பத்தினர் பஹாங் ஜ.செ.க-வை சேர்ந்த திருமதி காமாட்சி துரைராஜுவின் உதவியோடு அமைதியான முறையில் நீதி கேட்டு அமைதி ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டனர். 

சிவாவின் மரணத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று காமாட்சி தெரிவித்தார். இந்தியர்களுக்கு பாதிப்பு என்று வந்து விட்டால் அரசாங்கமோ அல்லது அமைச்சோ உடனடி தீர்வை எடுப்பதில்லை. ஆகையால், இந்த வழக்கை, இன்னும் தள்ளி போடாமால் அந்த குடும்பத்திற்கு உடனடி இழப்பீடு தொகை பெறுவதற்கு சுகாதாரா அமைச்சு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று திருமதி காமாட்சி கேடுக்கொண்டார். 

சுகாதாரா துறையின் தரம் முக்கியமா இல்லையா?

தமிழ் நேசன் செய்தி 16/12/2010 

Monday, December 6, 2010

இசைப்பிரியா கொலை, உலக பெண்கள் இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும்.- காமாட்சி துரைராஜு வேண்டுகோள்


ஷோபா என்ற இசைபிரியாவை சரண் அடைந்த பிறகும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டு கொன்ற செய்தி, சிங்கள மனித மிருகங்களின் கொடூரமான செயலை காட்டுகிறது. ஒரு போர் வீரர் என்று கூட பார்க்காமால், அவரை கொன்ற செய்தி பலரின் மனதை ஆழமாக பாதித்துள்ளது. அதிலும் ஒரு ஈழத் தமிழ்ப் பெண்மணியை இப்படியா பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது? 

ஆண்களின் பலவிதமான அட்டுளியங்களுக்கு ஆளாகும் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து போர் செய்யும் இடங்களில் கூட இவ்வாறான செயல்களுக்கு ஆளாவது, இலங்கை அரசாங்கத்தின் எல்லை இல்லா கொடுங்கோல் ஆட்சியை காட்டுகிறது.  

அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் தங்களின் அரசியல் கொள்கைகளையும் ஆணவங்களை ஒதுக்கி பெண் என்ற அடிப்படை கொள்கையை கையில் எடுத்து, ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்தின் மனிதான்மையற்ற இந்த செயலுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை உலக வாழ் பெண்கள் ஆதரிப்பார்களோ இல்லையோ ஆனால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பெண்களும், பெண்கள் இயக்கங்களும் முழுமையாக வலியுறுத்த வேண்டும். இசைப்பிரியாவை போல மேலும் பல பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்ற உண்மை மறைத்தாலும் இப்பொழுது தெரியவந்துள்ளது. 

பெண்கள் பொதுவாக மனிதாபிமானமற்ற செயலை பார்த்ததும் ஏற்படும் அந்த தார்மிக கோபம், இலங்கை அரசாங்கத்தின் எதிராக வெளிபடுத்தவேண்டும். தமிழ் பெண்கள் வீரத்தில் எந்த சூழ்நிலையிலும் ஆண்களுக்கு சமமாக நின்று போர் புரியும் குணம் உள்ளவர்கள் என்பதனை ஈழத்தில் வாழும் பல உடன் பிறவா சகோதரிகள் தெளிவுபடுத்திவிட்டனர். இவர்கள் அல்லவா வீரத் தமிழச்சிகள். 

ஈழத்தில் வாழும் தமிழர்கள் தனது தனிமனித மேம்பாட்டுக்கு போர் செய்யவில்லை. அவர்களின் உரிமை பரிக்கப்படுவதினால் போர் முனையில் நிற்கிறார்கள். இதில் ஆண் பெண் குழந்தைகள் என்று பாராமல் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்? போர் நெறி என்பது கிடையாதா? இலங்கை அரசாங்கத்தின் எல்லையற்ற இந்த செயலை உலக முழுவதிலும் உள்ள அனைத்து பெண்கள் இயக்கங்களும் இலங்கை மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும்.