Showing posts with label காமாட்சி துரைராஜு. Show all posts
Showing posts with label காமாட்சி துரைராஜு. Show all posts

Friday, January 28, 2011

மூக்கை நுழைத்தது குலசேகரன் அல்ல! -

செம்பருத்தி இணையதளம் செய்தி.










ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை என்பது மக்கள் பிரச்னையை நாடாளு மன்றத்தில் மட்டும் விவாதிப்பதில் இல்லை, மாறாக அனைத்து உள்ளநாட்டு வெளிநாட்டு அரசியல், சமூகவியல், பொருளாதாரம் என்று இன்னும் பல மக்களின் பிரச்னைகளை இனம் மதம் பாராமல் குரல்கொடுப்பதே அவர்களின் முதற்க் கடமை என பஹாங் மாநில ஜ.செ.க-வின் மகளிர் தலைவி து.காமாட்சி தெரிவித்துள்ளார்.
“குவால பிலா தமிழ்ப்பள்ளியின் விவகாரத்தை மு.குலசேகரன் அவர்கள் மூக்கை நுழைத்தார் என்று நெகிரி மாநிலத்தின் முன்னாள் ம.இ.க இளைஞர் அணியின் சசாசி சாடுவது எந்த வகையில் நியாயமாகும்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் து.காமாட்சி இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணியில் மக்கள் சேவையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது யார் சகோதரர் சசாசி அவர்களே?
உங்கள் ம.இ.க தலைவர்கள் அதிகப்படியான நேரங்களில் தொகுதி விட்டு தொகுதி சென்று பல நிகழ்சிகளில் கலந்து கொள்வது சரியா? அல்லது அவர்களும் நீங்கள் சொன்னது போல அடுத்த பொதுத்தேர்தலில் வாய்ப்புக்கு கல்தாவா?
மக்களின் ஆதரவை மகுடமாக் கொண்டு செயல்படும் மு.குலசேகரன் போன்ற தலைவர்களை குறைக் கூறுவதற்கு உங்களின் அரசியல் தகுதி என்ன? அல்லது இனிமேல் தான் வாய்ப்பின்  வழியை உருவாக்கிக் கொள்கிறீர்களா?
மு.குலசேகரனை குறை கூறினால் உங்களுக்கு அரசியலில் வாய்ப்பு மலரும் என்றால், உங்களின் தாக்குதலை மு.குலசேகரன் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வார் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
ஐயா மேதாவி சசாசி அவர்களே, குவால பிலா தமிழ்ப்பள்ளியின் பிரச்னைக்குத் தீர்வு கண்ட விஷயம் என்று சொல்லும் நீங்கள், மு.குலசேகரனிடம் இப்பிரச்னையைக் கொண்ட வந்த பொது மக்களிடம் தெரிவித்திருக்கலாமே? ஏன் செய்ய வில்லை?
பல நாட்களாக் இப்பிரச்னையை அப்பள்ளியின் மாணவர்களும் பெற்றோர்களும் குரல் கொடுத்த பொழுது உங்களின் அதிமேதாவிதனத்தை அங்கே காட்டிருக்கலாமே? ஏன் காட்ட வில்லை? அவ்வாறு செய்திருந்தால், மு.குலசேகரனிடம் மக்கள் இப்பிரச்னையை கொண்டுவர அவசியம் உருவாக்கி இருக்காது.
அந்த பள்ளிக்கு நிலம் அங்கே உள்ளது இங்கே உள்ளது என்று தட்டி கழிக்காமல் உடனடியாக அப்பள்ளிக்கான நிலப்பட்டாவை உரிய நேரத்தில் உரிய தரப்பினரிடம் வழங்கிருந்தால் இப்பிரச்னை தீர்வு கண்டிருக்கும் அல்லவா? இந்த சொற்ப அரசியல் அறிவு கூர்மை கூடவா இல்லை உங்களுக்கு?
சகோதரர் சசாசி, கடந்த திகதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்க்கா அப்பள்ளிக்கான நிலத்திற்கு குரல் கொடுத்திருந்தால் மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கும் அல்லவா? அதனை தவிர்த்து வீண் குறை கூறுவது யாருக்கும் லாபம் தராது அதுவும் நீங்கள் கூறிய அதிமேதாவிதனமான குறைகளுக்கு சொல்ல வார்த்தை கிடையாது.
ஏன் இவ்வளவு அனாவசியத்தனம். அக்கூட்டம் யாருடைய அரசியல் நாடாகமல்ல, ஆனால் ம.இ.க.வின் குட்டி தலைவர்களின் அரசியல் கூத்தை வெட்டவெளிச்சமாக்கிய நிகழ்வு அது. உணர்ந்து கொள்ளவும்.
இறுதியாக, இந்த ஒரு தமிழ்ப்பள்ளி மட்டும் தான் பிரச்னையாக உள்ளது போலவும், அதற்க்கு மு.குலசேகரன் போன்ற தலைவர்கள் முட்டி மோதி கொண்டு தலையிட்டு அரசியல் படம் காட்டுவது போலவும் விளங்காமல் விளங்காத்தனமாக கருத்து தெரிவித்த சகோதரர் சசாசி, நாட்டில் இன்னும் எத்தனையோ தமிழ்ப்பள்ளி கூடங்கள் இவ்வகையான அவல நிலையில் இருக்கின்றன என்று தெரிந்து பேசவும்.
இந்நிலை இன்று புதிதாக முளைத்தது அல்ல, 53  வருட தேசிய முன்னணி ஆட்சியில், ம.இ.க.வின் சாதனையின் சின்னம் என்று புறிந்து கொள்ள வேண்டும்.
குவால பிலா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் மு.குலசேகரனின் நற்பணியை புரிந்திராமல் பத்திரிகை அறிக்கை விட்டு அரசியலில் பரிதாப நிலையில் இருக்கும் சசாசி போன்ற சகோதரருக்கு இத்தெளிவுரை பிற்காலத்தில் கைகொடுக்கும் என காமாட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Friday, December 24, 2010

கருணை மடல்

காராக், கடந்த டிசம்பர் மாதம் 2009 பாஹவ் நகரில் கொத்தடிமை கொடுமையில் சிக்கிய குனாவை ஜசெக வைசேர்ந்த காமாட்சி துரை ராஜூ காவல் துரையினர் உதவியோடு மீட்டு வந்தார். குனா வயது 16 தந்த தகவல் படிஅவருடைய அக்கா ப்ரியாவும் வயது 19 மீட்கப்பட்டார். 

குனா தற்பொழுது காராக்கில் ஒரு வாகனம் கழுவும்பட்டரயில் வேலை செய்து வருகிரார். இவருக்கு பிறப்பு பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லை. பல முறைமுயற்சி செய்தும் அவற்றை பெருவதில் பிரச்சனை அதிகமாக இருப்பதாக காமாட்சி துரை ராஜூ கூறினார். இதுவிஷயமாக சில மாதங்களுக்கு முன் டத்தோ தேவமனியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த போது உதவிகேட்டிருந்தேன். இது நாள் வரை எந்த பதிலும் கிடைக்க வில்லை. 

தாய் தந்தை இருவரும் பராமரிக்கும் குழந்தைகள் கூட தவரான வழியில் பாதை மாறி செல்வது நாம் கண்கூடாக பார்க்க நேர்கிறது. குனாவோ சிறுவயது முதல் பெற்றோரை பார்காமல் சிறார் கொடுமைக்கு ஆளானர். மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம்ஒதுங்காதவர். 

மிகச் சிறிய வயதிலேயே கடுமயாக வேலை வாங்கப்பட்டவர். சம்பளம் இல்லாமலேயே பல இடங்களில் வேலை செய்துள்ளார். இவருக்கு கிடைத்ததெல்லாம் அடியும் உதயும் தான்.

நாகரீகம் வலர்ந்த இந்த காலத்தில்  பிறரிடம் எப்படி பழகுவது என்பது கூட தெரியாமல் வளர்ந்தது குணாவின் குற்றமா?

இன்றைய நிலையில் குனாவின் எதிர்காலம் ஒரு பெரிய கேள்வி குறியாக உள்ளது. அவரை கொட்தடிமை கொடுமையிலிருந்து காப்பாற்றியதோடு கடமை முடிந்துவிட்டது என்று என்னால் நிறுத்திக் கொள்ளமுடியவில்லை. அவனுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் பல முயற்சிகளை செய்துவருகிறேன் என்று திருமதி காமட்சி வருத்தம் தெரிவித்தார். 

பல ஆசிரமங்களுக்கு தொடர்பு கொண்டு அவரைசேர்க்க முயற்சி செய்தேன் பலன் இல்லை.சமூக நல இலாகாவிலும் நேரில் சென்று இவர் பிறச்சனையை பற்றி பேசினேன். முதலில் அடையாள அட்டை எடுத்து வர சொல்லி விட்டார்கள்

குனாவின் எதிற்காலம் கறுதி கருனை உள்ளம் கொண்ட யாராவது அவருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்தால் நமது சமுதாயத்திற்கு செய்த பெரிய உதவியாக இருக்கும். கல்வி அறிவு கிடைக்க பெறாத குனாவிற்கு தொழில் கல்வி மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆகவே தொழிற்கல்வி நடத்தும் நிறுவனஙள் முன் வந்து குனாவிற்கு உதவி செய்ய முன் வர வேண்டுகிரேன்.

நன்றி
காமாட்சி துரை ராஜூ
ஜ செ க. பஹாங் 

Thursday, December 16, 2010

அமைச்சின் புறக்கணிப்பு

காராக் - 03/04/2008 -  இல் பெந்தோங் மருத்துவமனையில் உயிரிழந்த சிவா த/பெ அய்யாவு வயது 31, சார்ந்த குடும்பத்தினருக்கு இன்றைய நாள் வரை எந்த ஒரு நீதியும் கிடைக்காமால் இழுபறி நிலையில் உள்ளது. 



இவருடைய இறப்பின் ஒரு முக்கிய காரணம் மருத்துவமனையின் கவனக்குறைவே என்று சிவாவின் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர். சிவாவின் தாயார் திருமதி பார்வதி தன மகனின் இறந்ததற்கு என்ன காரணம் என்று சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் சுகாதார அமைச்சிடம் கேட்டு வருகிறார். ஆனால் அவருக்கு எந்த ஒரு முழுமையான பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதே உறுதியாகா உள்ளது. தன மகனின் இறப்பு காரணமான சுகாதார அமைச்சின் இத்தகையான போக்கு மனித உயிருக்கு எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் இல்லை என்பதனை தெளிவுபடுத்துகிறது. 

மேலும் சுகாதார அமைச்சரின் உதவியாளரை சந்தித்து பேசியபொழுது, இது சம்பந்தமான வழக்கு தற்சமயம் தலைமை சட்ட ஆலோசகர் அலுவகலத்தில் உள்ளதாகவும், கூடிய விரைவில் வழக்கின் முடிவு அறிவிக்கப்படும் என்பதனை தெரிவித்தார். இருப்பினும் ஏன் இன்றைய நாள் வரை சுகாதாரா அமைச்சின் கவனத்தில் உள்ள இந்த வழக்கின் நிலவரங்களை எழுத்து பூர்வமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிவிக்க வில்லை என்ற கேள்வியை கேட்டதற்கு, அதன் விவரங்களை சொல்ல மறுத்து விட்டார். 

ஒவ்விரு முறையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, பொறுமையாக இரு என்ற பதிலை தவிர வேற எதுவும் அவர் கூறுவதில்லை என்று சிவாவின் தம்பி பாலா தெவித்தார். 

இதையடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை, சிவாவின் குடும்பத்தினர் பஹாங் ஜ.செ.க-வை சேர்ந்த திருமதி காமாட்சி துரைராஜுவின் உதவியோடு அமைதியான முறையில் நீதி கேட்டு அமைதி ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டனர். 

சிவாவின் மரணத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று காமாட்சி தெரிவித்தார். இந்தியர்களுக்கு பாதிப்பு என்று வந்து விட்டால் அரசாங்கமோ அல்லது அமைச்சோ உடனடி தீர்வை எடுப்பதில்லை. ஆகையால், இந்த வழக்கை, இன்னும் தள்ளி போடாமால் அந்த குடும்பத்திற்கு உடனடி இழப்பீடு தொகை பெறுவதற்கு சுகாதாரா அமைச்சு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று திருமதி காமாட்சி கேடுக்கொண்டார். 

Monday, December 6, 2010

இசைப்பிரியா கொலை, உலக பெண்கள் இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும்.- காமாட்சி துரைராஜு வேண்டுகோள்


ஷோபா என்ற இசைபிரியாவை சரண் அடைந்த பிறகும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டு கொன்ற செய்தி, சிங்கள மனித மிருகங்களின் கொடூரமான செயலை காட்டுகிறது. ஒரு போர் வீரர் என்று கூட பார்க்காமால், அவரை கொன்ற செய்தி பலரின் மனதை ஆழமாக பாதித்துள்ளது. அதிலும் ஒரு ஈழத் தமிழ்ப் பெண்மணியை இப்படியா பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது? 

ஆண்களின் பலவிதமான அட்டுளியங்களுக்கு ஆளாகும் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து போர் செய்யும் இடங்களில் கூட இவ்வாறான செயல்களுக்கு ஆளாவது, இலங்கை அரசாங்கத்தின் எல்லை இல்லா கொடுங்கோல் ஆட்சியை காட்டுகிறது.  

அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் தங்களின் அரசியல் கொள்கைகளையும் ஆணவங்களை ஒதுக்கி பெண் என்ற அடிப்படை கொள்கையை கையில் எடுத்து, ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்தின் மனிதான்மையற்ற இந்த செயலுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை உலக வாழ் பெண்கள் ஆதரிப்பார்களோ இல்லையோ ஆனால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பெண்களும், பெண்கள் இயக்கங்களும் முழுமையாக வலியுறுத்த வேண்டும். இசைப்பிரியாவை போல மேலும் பல பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்ற உண்மை மறைத்தாலும் இப்பொழுது தெரியவந்துள்ளது. 

பெண்கள் பொதுவாக மனிதாபிமானமற்ற செயலை பார்த்ததும் ஏற்படும் அந்த தார்மிக கோபம், இலங்கை அரசாங்கத்தின் எதிராக வெளிபடுத்தவேண்டும். தமிழ் பெண்கள் வீரத்தில் எந்த சூழ்நிலையிலும் ஆண்களுக்கு சமமாக நின்று போர் புரியும் குணம் உள்ளவர்கள் என்பதனை ஈழத்தில் வாழும் பல உடன் பிறவா சகோதரிகள் தெளிவுபடுத்திவிட்டனர். இவர்கள் அல்லவா வீரத் தமிழச்சிகள். 

ஈழத்தில் வாழும் தமிழர்கள் தனது தனிமனித மேம்பாட்டுக்கு போர் செய்யவில்லை. அவர்களின் உரிமை பரிக்கப்படுவதினால் போர் முனையில் நிற்கிறார்கள். இதில் ஆண் பெண் குழந்தைகள் என்று பாராமல் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்? போர் நெறி என்பது கிடையாதா? இலங்கை அரசாங்கத்தின் எல்லையற்ற இந்த செயலை உலக முழுவதிலும் உள்ள அனைத்து பெண்கள் இயக்கங்களும் இலங்கை மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும்.