Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Saturday, December 11, 2010
Wednesday, December 8, 2010
Tuesday, December 7, 2010
Monday, December 6, 2010
இசைப்பிரியா கொலை, உலக பெண்கள் இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும்.- காமாட்சி துரைராஜு வேண்டுகோள்
ஆண்களின் பலவிதமான அட்டுளியங்களுக்கு ஆளாகும் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து போர் செய்யும் இடங்களில் கூட இவ்வாறான செயல்களுக்கு ஆளாவது, இலங்கை அரசாங்கத்தின் எல்லை இல்லா கொடுங்கோல் ஆட்சியை காட்டுகிறது.
அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் தங்களின் அரசியல் கொள்கைகளையும் ஆணவங்களை ஒதுக்கி பெண் என்ற அடிப்படை கொள்கையை கையில் எடுத்து, ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்தின் மனிதான்மையற்ற இந்த செயலுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை உலக வாழ் பெண்கள் ஆதரிப்பார்களோ இல்லையோ ஆனால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பெண்களும், பெண்கள் இயக்கங்களும் முழுமையாக வலியுறுத்த வேண்டும். இசைப்பிரியாவை போல மேலும் பல பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்ற உண்மை மறைத்தாலும் இப்பொழுது தெரியவந்துள்ளது.
பெண்கள் பொதுவாக மனிதாபிமானமற்ற செயலை பார்த்ததும் ஏற்படும் அந்த தார்மிக கோபம், இலங்கை அரசாங்கத்தின் எதிராக வெளிபடுத்தவேண்டும். தமிழ் பெண்கள் வீரத்தில் எந்த சூழ்நிலையிலும் ஆண்களுக்கு சமமாக நின்று போர் புரியும் குணம் உள்ளவர்கள் என்பதனை ஈழத்தில் வாழும் பல உடன் பிறவா சகோதரிகள் தெளிவுபடுத்திவிட்டனர். இவர்கள் அல்லவா வீரத் தமிழச்சிகள்.
ஈழத்தில் வாழும் தமிழர்கள் தனது தனிமனித மேம்பாட்டுக்கு போர் செய்யவில்லை. அவர்களின் உரிமை பரிக்கப்படுவதினால் போர் முனையில் நிற்கிறார்கள். இதில் ஆண் பெண் குழந்தைகள் என்று பாராமல் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்? போர் நெறி என்பது கிடையாதா? இலங்கை அரசாங்கத்தின் எல்லையற்ற இந்த செயலை உலக முழுவதிலும் உள்ள அனைத்து பெண்கள் இயக்கங்களும் இலங்கை மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தின் போர் குற்றம் உலகளாவிய குற்றவியல் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
இன படுகொளையன் மகிந்தா ராஜபக்சே, ஈழத் தமிழர்களை கொன்று குவித்து விட்டு லண்டனில் உல்லாச ஊர்வலம் வந்த இடத்தில் உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிராக பேரணி நடத்தினார்கள். அதனை கண்டு தத்தளிக்கும் நிலைமையில் ராஜபக்சேவும் தனது சகாக்களும் தப்பி சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈன்றுள்ளது.
லண்டனில் ஒக்ஸ்போத் பல்கலைகழகம் ஏற்பாடில் உரை நிகழ்த்தும் நிகழ்வும் ரத்து செய்திருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. மேலும் இது போன்ற இன படுகொளையாலனுக்கு எந்த ஒரு நாட்டு பல்கலைகழகத்திலும் உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கப்பட கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள்.
மானமுள்ள தமிழன் எங்கு வாழ்தாலும் அங்கே ராஜபக்சே போன்ற இனவாதிகளின் கால் பாதங்களை பதிக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனை ராஜபக்சே புரிந்து கொள்ளவேண்டும். தனது நாட்டில் அனைத்து போர் குற்றங்களையும் செய்த பிறகு எந்த சூழ்நிலையிலும் நிம்மதியாக உலகம் சுற்ற முடியாது என்பதனை ராஜபக்சே மறந்து விடக்கூடாது. ராஜபக்சே தனது கொடிய ராணுவத்தை வைத்து பல அப்பாவி மக்களை கொன்ற உண்மைஅம்மபலமாகியுள்ளது.
அதனை தொடர்ந்து, தான் போர் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்த அனைத்து போர்குற்றம், மனித உரிமை மீறல், இன படு கொலை அனைத்தும் வெட்ட வெளிச்சமாகும் அதே வேளையில், ஐ.நா பாதுகாப்பு சபை உடனடியாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை, இதன் தொடர்பில் முழுமையான நேர்மையான விசாரணை ஒன்றை ஆரம்பிக்கை ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மனித உயிர்கள் வதைக்கப்பட்டத்தின் ஆழங்களை உலக நாட்டுக்கு தெளிவு படுத்த வேண்டும். சுடான் நாட்டு அதிபர் பஷீர் இனபடுகொலை புறிந்ததின் காரணமாக உலகலாவியல் குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது போல இலங்கை அதிபர் மகிந்தாவுக்கும் அதே போன்ற கைது ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும்.
இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கையில் கிடைத்த தமிழர்களையும் பெண் போராளிகளையும் மிகவும் கொடூரமாக கொன்று குவித்துள்ளது இலங்கை ராணும். இதுகுறித்து இதுவரை வெளிவராத புதிய படங்கள் வெளியிடப்படுள்ளது.
புலிகளுடனான போரில், பொதுமக்களை ராணுவம் கொல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் பெருமளவில் போர்க்குற்றம் செய்த நாடு என பல நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன என்பது உண்மை.
அந்த வகையில் மிக அண்மையில் சில கொடூரமான படங்கள் வெளியாகியுள்ளன. வன்னியில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தின்போது சிங்களப் படைகள் தமிழர் மீது நடத்திய வெறியாட்டத்தின்போது எடுக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.
ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு, மிகக் கோரமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்ப் பெண்கள் மற்றும் போராளிகளைக் கொன்று உடல்களை தெருவில் வீசிவிட்டு சிங்களர்கள் செல்லும் காட்சிகள், உயிரோடு தமிழர்களை ஓடவிட்டு சுட்டுக் கொல்லும் கொடூரம் போன்றவை இந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தையும் ஆதாரமாக கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபை மனிதாபிமான அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தி மகிந்த ராஜபக்சேவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டை பெற முயற்சி செய்ய வேண்டும்.
மு.குலசேகரன்
மலேசியா மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பின
Friday, August 13, 2010
ஈழத் தமிழர்களின் உயிரைக்காக்க.....
அன்பான மலேசியா வாழ் மனித உணர்வுள்ள மக்கள் கூட்டணி இந்திய தலைவர்களே, உங்கள் அனைவருக்கம் எங்களின் தாழ்மையான வணக்கங்கள்.
ஈழத் தமிழர்களின் உயிரைக்காக்க நீங்கள் அனைவரும் எடுக்கும் அணைத்து நடவடிக்கைகளுக்கும் இவ்வளைப்பூங்கா உங்களுக்கு துணை நிற்கும் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
![]() |
| 13/08/10 ம் திகதி மக்கள் ஓசையில் வெளிவந்த செய்தி. |
Subscribe to:
Posts (Atom)



