Showing posts with label ஜ.செ.க. Show all posts
Showing posts with label ஜ.செ.க. Show all posts

Saturday, May 14, 2011

டிஎபி அடுத்த தேர்தலில் மலாய் பகுதிகளிலும் களம் இறங்கும்


அண்மைய சரவாக் தேர்தலில் அடைந்துள்ள வெற்றிகளைக் கருத்தில் கொண்டு டிஎபி சீனர் அல்லாத தொகுதிகளிலும் தடம் பதிக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.

சரவாக்கை அடுத்து சீனர்களை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கட்சி மலாய் பெரும்பான்மையைக் கொண்ட கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் போட்டியிடுவதற்கு குறைந்தது இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியிலாவது போட்டியிட அது எண்ணுகிறது.

“நாங்கள் திரங்கானுவில் பண்டார் தொகுதியில் போட்டியிட எண்ணியுள்ளோம். கிளந்தானைப் பொறுத்த வரையில் நாங்கள் இன்னும் தொகுதியைத் தேடி வருகிறோம்,” என டிஎபி துணை தேசிய அமைப்புச் செயலாளர் வின்சென்ட் வூ கூறினார்.

“எதிர்கால பக்காத்தான் கூட்டங்களில் டிஎபி அந்த விஷயத்தை எழுப்பும்”, என்றார் அவர்.

வூ, கிளந்தான், திரங்கானு மேம்பாட்டு விவகாரங்களுக்கான இயக்குநரும் ஆவார். அவ்விரு மாநிலங்களிலும் உள்ள அடி நிலை கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையும் அதுவே என அவர் சொன்னார்.

“டிஎபி 1980ளில் கிளந்தானிலும் திரங்கானுவிலும் போட்டியிட்டது. நடப்பு அரசியல் சூழ்நிலைகளுக்கு இணங்க அந்த மாநிலங்களில் அது மீண்டும் போட்டியிடுவதற்கான தருணம் வந்து விட்டது”, என குவா மூசாங் டிஎபி கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் வூ கூறினார்.

கடைசியாக அது கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பாடாங் காரோங் சட்டமன்றத் தொகுதியில் 1990 தேர்தலில் டிஎபி வேட்பாளரை நிறுத்தியது.

டிஎபி சீனர் ஆதிக்கம் பெற்ற கட்சி என அம்னோ கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் தாழ்வாகக் கூறி வருகின்றன என வூ தெரிவித்தார்.

ஆகவே டிஎபி பல இனக் கட்சி என்பதைக் காட்டுவதற்கு சீனர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து பொருத்தமான தொகுதிகளையும் அடையாளம் காண முயலுவோம்,” என்றார் அவர்.

அண்மைய சரவாக் தேர்தலில் கிட்டத்தட்ட சீனர் பெரும்பான்மை இடங்கள் அனைத்தையும் அந்தக் கட்சி வென்றதைத் தொடர்ந்து அது சீனர் ஆதிக்கக் கட்சி என பட்டியிலப்பட்டது. அதனைப் போக்குவதற்காக அது தற்போது சீனர் அல்லாத பகுதிகளில் ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நாட்டில் சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பெரும்பாலான தொகுதிகளை அந்தக் கட்சி வென்றுள்ளது. அது அடுத்த தேர்தலில் சீனர் அல்லாத தொகுதிகளிலும் ஊடுருவாவிட்டால் தேக்க நிலையை அடைந்து விடும்.

ஆனால் அதன் விரிவாக்கம் பிகேஆருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் அது சீன வாக்காளர்களைக் கணிசமாகக் கொண்ட தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.

Sunday, April 3, 2011

இந்தியர் ஆதரவு சரிவதைத் தடுக்க பக்காத்தான் கூட்டம்

“இண்டர்லோக்” எதிர்ப்பைத் தீவிரப்படுத்துவது, பக்காத்தான் ஆட்சி புரியும் மூன்று மாநிலங்களில் மந்திரி புசார்களுக்கு சிறப்பு இந்திய உதவியாளர்களை நியமிப்பது, எதிர்க்கட்சிகள் கட்டுக்குள் உள்ள மாநிலங்களில் ஊராட்சி மன்றங்களில் இந்தியர்கள் வேலைக்குச் சேர்க்கப்படுவதை அதிகரிப்பது ஆகிய மூன்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு பக்காத்தான் ராக்யாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரப்பற்றற்ற கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.


பினாங்கில் நேற்று நடைபெற்ற அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் டிஎபியைச் சேர்ந்த ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் அந்தத் தகவலை வெளியிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளுக்கான இந்தியர் ஆதரவு சரிவு கண்டதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என அவர் சொன்னார்.
2008ம் ஆண்டு தேர்தலில் இந்தியர் வாக்குகள் பாரிசான் நேசனலிடமிருந்து பக்காத்தானுக்குத் திசை மாறியதால் வழக்கமாக நாடாளுமன்றத்தில் அதற்கு இருந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ஆளும் கூட்டணி இழந்தது.

“கடந்த சில மாதங்களில் ஜோகூர், மலாக்கா, பாகாங் ஆகியவற்றில் நிகழ்ந்த இடைத் தேர்தல்கள் முடிவுகள் மலேசிய இந்தியர்கள் பக்காத்தானுக்கு அளித்த ஆதரவு குறைவதைக் காட்டின”, என குலசேகரன் மலேசியாகினியிடம் கூறினார்.

“ஆனால் அதனை தீவகற்பம் முழுமைக்குமான முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது”, என அவர் மேலும் சொன்னார்.

மலேசிய இந்தியர்களுடைய அவாக்களை நிறைவேற்றுவதற்கு பக்காத்தானே சிறந்த வழி என எடுத்துக் காட்டுவதற்கு சில நடவடிக்கைகள் அவசியம் என்பதை அந்தக் கூட்டம் ஒப்புக் கொண்டதாக குலசேகரன் குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டத்தில் நான்கு எம்பிக்களும் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“பள்ளிக்கூடங்களில் பாட நூலாக இண்டர்லோக் பயன்படுத்துவதற்கான எதிர்ப்பைத் தீவிரப்படுத்தும் பொருட்டு விளக்கக் கூட்டங்களை நடத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.”
துணைப் பிரதமர் முஹைடின் யாசின் சொல்லியிருப்பதற்கு மாறாக அந்தப் பிரச்னை முடியவில்லை. தீவிரமடைந்துள்ளது. நமது இளைஞர்கள் வாசிப்பதற்கு பொருத்தமான நூல் அது அல்ல என வலியுறுத்துவதில் அரசு சாரா சீன அமைப்புக்களும் இணைந்து கொண்டுள்ளதாக குலசேகரன் சொன்னார்.
இந்தியர் அதிருப்தியைப் புறக்கணிப்பது விவேகமல்ல
அண்மைய வரலாற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டால் இந்தியர் அதிருப்தியைப் புறக்கணிப்பது விவேகம் அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.
“மலேசியாவில் வாழ்கின்ற மற்ற இல்லாதவர்களுடைய தலைவிதியிலிருந்து மலேசிய இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்தைப் பிரிக்க முடியாது.”

“மலேசியாவில் உள்ள வறியவர்களின் நிலையை மேம்படுத்துவதில் ஒரு பகுதியாக மட்டுமே அந்த சமூகத்துக்கு விரிவான முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும்”, என்றார் குலசேகரன்.

“பக்காத்தான் மாநிலங்களில் முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு இந்தியர் விவகார அதிகாரிகளை நியமிப்பதும் ஊராட்சி மன்றங்களில் அதிகமான இந்தியர்களைச் சேர்ப்பதும் வெறும் ஒப்பனை நடவடிக்கைகள் என எளிதாகக் கூறி விட முடியும். ஆனால் மலேசிய இந்தியர்கள்களுக்கு உதவ பக்காத்தான் உண்மையிலேயே நோக்கம் கொண்டுள்ளது.”

“அந்த நடவடிக்கைகள் இந்தியர்களை சமாதானப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக புத்ராஜெயாவை பக்காத்தான் பிடிக்கும்போது தேசிய அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எடுத்துக் காட்டாக அந்த நடவடிக்கைகளைக் கருத வேண்டும்”, என்றும் குலசேகரன் குறிப்பிட்டார்.

Friday, April 1, 2011

இந்தியர்களின் பிரச்னையை தீர்க்க ஏன் இத்துணைக் காலம்? சார்ல்ஸ்








அண்மையில் இந்தியர்களின் நீண்டகால பிரச்னைகளில் முக்கிய மூன்று பிரச்னைகள் அதாவது குடியுரிமை பிரச்னை, இந்திய வியாபாரிகள் தொழில் முனைவராகும் பிரச்னை, மற்றும் இந்தியர்களுக்கு தரமான வேலை வாய்ப்பு உருவாக்கும் ஆகிய பிரச்னைகளை தற்போது நாட்டுப் பிரதமர் நாஜிப் தீர்த்து வருகின்றார் என மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
அவரின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனாலும், இங்கு எழும் கேள்வியே ஏன் இத்துணைக் வருடம் இந்தியர்களின் பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பதேயாகும் என ஜ.செ.க உறுப்பினரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.
இந்தியர்கள் காலங்காலமாக தே.மு-க்கு வாக்களித்துக் கொண்டுத்தான் இருந்தனர். 53 ஆண்டுக் காலமாக தே.மு. மலேசியாவை ஆண்டுக் கொண்டுத்தான் இருந்தது. ஆனாலும், இந்தியர்களின் பிரச்னைத் தீர்ந்தபாடில்லை. நாட்கள் பல திரண்டோட இந்திய மக்களின் பிரச்னை மேலோங்கித் தான் நின்றது.
ஆனால், இன்று இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மக்களின் பிரச்னையை தீர்பதாக சொல்கின்ற அரசாங்கத்தின் செயல் மக்கள் கூட்டணிக்கு அதிகாரத்திற்கு வந்த பிறகு பயத்தில் செய்வதுப் போல் தெரிகிறது என சாடினார் சார்ல்ஸ்.
மக்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் யாருக்கும் பயந்து அவர்களது சேவையை செய்யக் கூடாது. மாறாக மக்கள் நலனை காப்பதில் இலக்காக கொண்ட அரசாங்கமாய் திகழ வேண்டும். மக்களின் பிரச்னையை அறிந்து அதை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாக கருத வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்தியர்களின் பிரச்னை தீர்ப்பது ஒருவார பிரச்சாரமாக இருத்தல் கூடாது, அது அரசாங்க கொள்கையாகவும் யுக்தியாகவும் இருத்தல் வேண்டும் என சார்லஸ் கேட்டுக் கொண்டார்.
அதிலும், மலேசிய இந்தியர்களின் நலன் காப்பதிலும் அவர்களின் பிரச்னைகளையும் இந்த முயற்சியும் ஒரு பகடைக் காயாக இல்லாமல் இந்தியர்களின் பிரச்னையை உண்மையிலே தீர்க்க வேண்டும் என அரசாங்கத்தை சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.
எப்போது அரசாங்கம் இந்தியர்களின் பிரச்னையைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ அன்றுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Tuesday, February 8, 2011

பாவப்பட்டால் ஏமாற்றப்படுவோம், எச்சரிக்கை !!!



மலாய் ஆலோசனை மன்றத்தின் நடவடிக்கை விரோதத் தன்மையை நிலைநாட்டும்

செம்பருத்தி இணையதள செய்தி









ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்தும் உள்நோக்கத்துடனும் இழிவு படுத்திய இண்டர்லோக் நாவலை தடைசெய்ய கோரிக்கை விடுத்தால், மலாய் ஆலோசனை மன்றம் ஒட்டுமொத்த மலேசியவாழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அளவிற்கு குரல் எழுப்புவது நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற  உறுப்பினர் மு. குலசேகரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குலா தெரிவித்துள்ளதாவது:
நாவலை தடைசெய்ய இந்தியர்கள் கொடுக்கும் குரலுக்கும் மலாய் மேலாண்மையை காரணமாக கொண்டு மலாய் ஆலோசனை மன்றம் சொல்லும் காரணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. எதற்க்காக மலாய் மேலாண்மையை பற்றி இவர்கள் இவ்வேளையில் பேச வேண்டும்?
பிற இனத்தவர்களுக்கு சகல வாழ்வுரிமைகள் இருக்கும் வேளையில் இந்நாட்டில் பிறந்து வளர்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் அதே சலுகைகளும் உரிமைகளும் உண்டு என்பதனை மலாய் ஆலோசனை மன்றம் ஆழமாக உணர்தல் வேண்டும்.
இண்டர்லோக் நாவலில் வார்த்தை கோளாறுகள் மட்டுமல்லாமல் சரித்திரபூர்வமான தவறுகள் ஏற்பட்டுள்ளது. அதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த ஒரு மதத்தை சார்ந்த எழுத்தாளனாக இருந்தாலும், ஒரு நாவலை எழுதும் முன், அதன் கற்பனை கதாபாத்திரத்திற்கு நல் வழி ஒழுக்க குணங்களை எடுத்து காட்ட வேண்டும்.
அதனை செய்யாமல் இந்திய சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் விமர்சனம் செய்து புத்தகம் வெளியிட்டு அதனை பாட புத்தகமாக அங்கிகாரம் வழங்கியது மலேசியவாழ் இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
இந்நாவலை தடை செய்ய கோரிக்கை விடுத்தது “இந்தியர்களின் பாரம்பரியத்தை பற்றி இனிமேலும் யாரும் தவறாக எழுதக்கூடாததற்க்காகவும், இந்தியர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மட்டுமே”. ஆனால் மலாய் ஆலோசனை மன்றம் மிகவும் உணர்சிகரமாக இப்பிரச்னை கையாளுகிறது.
ஒரு மலாய் இலக்கியவாதியின் நாவலை ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே எதிர்க்கும் அதே வேளையில், அனைத்து மலாய்காரர்களும் இனிமேலும் எந்த ஒரு அரசியல் கூட்டணியின் இந்திய பிரதிநிதிகளுக்கு ஆதரவு வழங்ககூடாது என்பது, தனிமனித ஜனநாயக சுதந்திரத்திற்கு  தடையாக அமைகிறது.
மேலும், மலாய்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் மத்தியில் ஒற்றுமையை முறிக்க தூண்டும் செயலாகவும் உள்ளது. இவர்களின் இத்தகையான கூற்று, மலாய் மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவராது, மாறாக மனதில் காலத்திற்கும் அழியாத விரோதத்தன்மையை நிலைநாட்டும் என்பதே திண்ணம்.
இந்தியர்களின் ஆட்சேப குரலின் காரணத்தால் இண்டர்லோக் நாவலை தடைசெய்தால், அரசாங்கம் பலவீனமாகிவிடும் என்று மலாய் ஆலோசனை மன்றம் கூறுவது அர்த்தமற்றது. அந்நாவல் இந்திய சமுதாயத்தின் கௌரவத்திற்கு இழிவை ஏற்படுத்தியது, இந்தியர்களின் மத்தியில் வேதனை உண்டாகியுள்ளது.
பல அடிப்படையற்ற குறிப்புகள் அடங்கிய மகஜரை மலாய் ஆலோசனை மன்றம் பிரதமருக்கு வழங்கியதோடு மௌனம் சாதிப்பது அனைவருக்கும் நல்லது. மேலும் மேலும் விஷம குணத்தோடு சூழ்நிலையை உஷ்ண நிலைக்கு கொண்டு செல்ல முற்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.
தவறாக கதை விமர்சனம் செய்த ஒரு இலக்கியவாதிக்கு இத்தனை ஆதரவு குரல் என்றால், பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குரல் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதனை அரசாங்கம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
ஆகவே அரசாங்கம் மலாய் ஆலோசனை மன்றத்தின் மகஜரை பெற்றுக்கொண்ட அதே வேளை, இவர்களின் எல்லை மீறலான செயலை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இவ்வாறு குலசேகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Friday, January 14, 2011

ஜ.செ.க வின் தேசிய உதவித் தலைவர் குலசேகரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து

 ஜ.செ.க வின் தேசிய உதவித் தலைவர் குலசேகரனின்  பொங்கல் திருநாள் வாழ்த்து
உலக வாழ் இந்திய மக்களின் மனதில் தை மாதம் ஒரு சிறப்பான மாதமாக நிலைத்துள்ளது. வருட தொடக்கத்தில் இந்தியர்களின் முதல் திருநாளாகிய பொங்கல் திருநாள் அனைவருக்கும் சமத்துவமான பொங்கலாக அமைய வேண்டுமென்று இறைவனை பிராத்திப்போம். உண்ணதமான உழைப்புக்கு உயர்ந்த கௌரவத்தை தரும் இந்த நன்னாளில், வியர்வையை சிந்தி பாடுபடும் அனைத்து மக்களுக்கும் நற்பலன் தரும் நாளாக பொங்கல் கொண்டாடப்படும் வேளையில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்நாளை கொண்டாடுவோம்.சமுதாயத்தில் சமத்துவம் மட்டும் போதாது, சமவாய்ப்பு தேவை அப்பொழுதுதான் சமவாழ்வு பிறக்கும். 
தமிழர்களின் திருநாளாகிய இப்பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக அமைய எனது சார்பிலும் மற்றும் எனது குடும்பத்தார் சார்பிலும் அனைத்து மலேசியா வாழ் மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என ஜ.செ.க வின் தேசிய உதவித் தலைவரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


Friday, December 31, 2010

மக்கள் கூட்டணியில் நம்பிக்கையான எதிர்காலம் பிறக்கும்


செம்பருத்தி இனைய செய்தி. 
தினமும் காலம் நம்மை கடந்து செல்கிறது. காலத்தை வெல்ல நம்மால் முடியவில்லை. புதிதாக தோன்றிய அனைத்து முயற்சிகளும், 2011 ஆண்டு பழைமையானதாக தென்படும் வேளையில், புதிய கோணத்தில் சிந்தித்து முயற்சிகளை துரிதப்படுத்த புதிய சக்தி நமக்கு புது வருடத்தில் பிறக்கும் என்பது மெய்யாகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
மலரப்போகும் புதுவருடத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவரும் இணைந்து சுதந்திரமாக கொண்டாடி வரவேற்க்கவிருக்கும் புது வருடம், அனைத்து வழிகளுக்குமான புதிய ஆராம்பமாக அமையுமென நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதே சமயத்தில் பல சமுதாய சிக்கல்களையும் களைந்தெறிய கடமையும் நமக்கு உள்ளது என்பதனை மறுக்கவும் முடியாது.
புது வருடம் ஒவ்வொரு ஆண்டும் உதயமாகும் போதிலும் கூடவே அனைத்து மக்களும் அந்த தினத்தை புதிதாக பிறக்கின்ற ஒரு வருடமாக கருதும் வேளையில், புதிய ஆரம்பம் ஒன்றினை குறிப்பிடும் ஒரு நாளாக செயற்பட வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள்
அதே வேளையில் பல புதிய ஆரம்பம் என்று குறிப்பிடும் தருணத்தில் பல குறிப்பிட்ட மாற்றங்களை மக்கள் நலனுக்காக அமைய வேண்டும் என்பது என்னுடைய கனவாகிறது.
அவ்வகையில், முதன்மையாக இருக்கக்கூடிய வன்முறை கலாச்சாரம். சமீபத்தில் ஈப்போ வட்டாரத்தில் ஏற்படும் தொடர் கொலை சம்பவங்கள் மனதில் திகில் பிடிக்க செய்கிறது. இதற்க்கு என்ன காரணம் என்பதை நாம் கூர்மையாக சிந்திக்க வேண்டும்.
கிராமாபுரங்களிருந்து நகர்ப்புறத்திற்கு வேலை வாய்ப்புகளை தேடிவரும் இளைஞர்கள் ஒரு சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக தவறான சேர்க்கையில் ஈடுபடும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். அதன் விளைவு இந்திய சமுயாத்தில் குற்ற செயல்களின் அதிகரிப்பு. இதனை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது ஒரு புறமிருக்க அதனை சமுதாய இயக்கங்களின் கவனமும் குறைவாகவே காணப்படுகிறது. இப்பிரச்சனைக்கு புதிய சிந்தனை மலர்ச்சி தேவை.
அரசாங்கத்தின் பழைய வழக்கங்களை குறைசொல்லியோ அல்லது பழைய அரசியல் கோபதாபங்களை எடுத்துக்காட்டியோ மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பது உண்மை. ஆனால் பல ரூபங்களில் சுய முயற்சியும் அரசாங்கத்தின் நல திட்டங்களும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்௦க முடியும் என்ற  வாய்ப்பு உள்ளது. அதனை அரசாங்கம் மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ராணுவ சேவையில் மலாய் அல்லாதவர்களின் ஆர்வக்குறைவு என்பது உண்மையாக இருந்தாலும், இவர்களின் ஆர்வத்தை பன்மடங்கு உயர்த்த முயற்சிகளை அரசாங்கம் கண்டதில்லை என்பதும் உண்மையாகிறது. அதற்க்கு காரணம் அரசாங்கம் என்று முழுமையாக சொல்லலாம் ஆனால் வாய்ப்புகளை வழங்கும் பொழுது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதே வேளையில், அரசாங்கமும் வாய்ப்பு வழங்கியதோடு மனநிறைவு கொள்ளாமல், மலாய் அல்லாதவர்களின் பதவி உயர்வை  வருடாந்திர முறையில் கண்காணித்தல் வேண்டும். மேலும் பல அரசாங்க துறைகளில் சமமான வாய்ப்பு முறையை வழங்க அரசாங்கம் வழி செய்ய உறுதிசெய்ய குரல்கொடுப்போம்.
அடுத்த கட்டமாக தமிழ் கல்விக்கூடங்களின் பின்தங்கிய நிலையை வருகிற புதுவருடத்தில் புதிய தோற்றத்தை உருவாக்க அனைத்து இந்திய தலைவர்களும் பொறுப்புடன் பணியாற்றவேண்டும். சமீபத்தில் குவாலா பிலா தமிழ் பள்ளியை நேரில் கண்டபொழுது, வளர்ச்சி அடைந்த நாட்டில் இது போன்ற பள்ளிக்கூடங்களின் அவல நிலையின் தொடர்கதையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
வருகிற புதுவருடத்தில் இது போன்ற தமிழ் பள்ளி பள்ளிகளுக்கும் அதன் மாணவர்களுக்கு புதிய எதிர்காலம் காத்திருக்கிறது என்ற உறுதி மொழியை வழங்க சபதமெடுப்போம்.
இறுதியாக புதுவருட சந்தோஷ உணர்வு ஒருபுறமிருக்க, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பல குடும்பங்களின் மனதை மிகவும் ஆழமாக பாதித்துள்ளது. இதற்க்கு காரணம், வேலை வாய்ப்பு குறைவும்இ குறைந்த வருமானத்திற்கு வேலை செய்வதும்தான். அடிப்படை தேவைகளை கூட பூத்தி செய்துக்கொள்ள முடியாத நிலைமையில் நாட்டில் பொருட்களின் விலை உயர்வு கண்டுள்ளது. இச்சூழ்நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் குறைந்த பட்ச சம்பள முறையை அமுல்படுத்த வேண்டும்.
அரசாங்கம் மற்றும் தனியார் துறையிலும் சுமார் 70 சதவிகித மக்கள் 1500 வெள்ளிக்கு கீழ் வருமானம் பெறுகிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் காட்டும் வேளையில், இச்சம்பளம் விலைவாசிக்கு ஏற்றதா என்று அரசாங்கம் எண்ணிப்பார்க்க வேண்டும். அதனை நாம் வருகின்ற புத்தாண்டில் மாற்றியமைக்க உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.
மலர்கின்ற இந்த புதிய ஆண்டில் நாம் அனைவரும் இனிய அனுபவத்தை பெறப்போகும் வேளையில் ஒரு இனிய புத்தாண்டு செய்தியை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன் என அவர் அவ்வறிக்கையில் குறிபிட்டுள்ளார்.

Thursday, December 30, 2010

மக்கள் கூட்டணி மாநிலங்கள் இந்திய வாக்காளர்களுக்கு நிறைய செய்து இந்தியர்களிடம் நெருங்கிய நட்பை உருவாக்க வேண்டும்.

ஜ.செ.க நெகிரி செம்பிலான் இந்திய தலைவர்கள் மற்றும் குவாலா பிலா கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மு.குலசேகரன் நிழத்திய  உரை

அநேகமாக தெனாங் சட்டமன்ற இடைத்தேர்தல் இக்காலகட்டத்தின் இறுதி பொதுத்தேர்தலாக  கருதப்படும் வேளையில், இதன் ஆதரவை முன்னோடியாக வைத்துதான் பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தை கலைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் கூறுவது போல அடுத்த பொதுத்தேர்தல் அடுத்த வருட மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்ற வியூகங்கள் உண்மையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். 

அதன் அடிப்படையில் மக்கள் கூட்டணிக்கு மிஞ்சி இருப்பது வெறும் மூன்று மாத கால அவசம் மட்டுமே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், ஒரு முக்கியமான தேர்தல் மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் சாசனத்தில் சரித்திரத்தை உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ளது. 

கடந்த கால மலேசியா நாட்டின் அரசியல் வியூகங்களை புரட்டிப் பார்த்தால், எந்த ஒரு அரசியல் ஆர்வாளரோ அல்லது அரசியல் வர்ணனையாளர்கள், நுட்பமாக அரசியல் கருத்துக்களை வெளியிட்டதில்லை என்பது தெரியவரும். அதே வேளையில் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை இழக்கும் சாத்தியமோ அல்லது ஆட்சி கவிழுமா என்ற வர்ணனைகளும் அவர்களின் எண்ணத்தில் எட்டியது கிடையாது. 

ஆனால் தற்சமய அரசியல் சூழ்நிலையை சீர்தூக்கி பார்த்தால், கடந்த பொதுத்தேர்தலின் சுனாமி அலை மீண்டும் ஒரு பேரலையை உருவாக்கி அரசியல் மறுமலர்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

இப்பொழுது, தேசிய முன்னணி தலைவர்களும் மீண்டும் ஆட்சி பீடத்தை கைப்பற்றுவது கேள்வி குறியாகிவிட்டது என்று பேச தொடங்கி விட்டனர். மக்களின் ஆதரவை எளிதாக இடைபோட முடியாமல் தவிக்கும் இக்கட்டான நிலையில் உள்ளனர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேலும் இது பற்றி பேசுகையில் ஒரு சிலர், தேசிய முன்னணியை சீர்திருத்த புரட்சியின்றி கவிழ்ப்பதும் கடினம் என்று கூறுகின்றனர். ஆனால் தேசிய முன்னணி சீர்திருத்த புரட்சியை செய்யுமா அல்லது அவ்வகையான் மாற்றங்களுக்கு தயாராக உள்ளதா என்பது கேள்வி குறியே. 

ஒரே மலேசியா கொள்கையை அடித்தளமாக கொண்ட தேசிய முன்னணி, பல இன மக்கள் உரிமைகளின் சமத்துவத்தை காப்பாற்ற இன்னும் தத்தளிக்கிறது என்பதே உண்மை. ஒரே மலேசியா கொள்கையின் கீழ் அரசியலில் வெறும் ஒப்பனை மாற்றங்களை மட்டுமே கொண்டு வருமே ஒழிய குறிப்பிடும் வகையிலான மாற்றங்களை கொண்டுவர முடியாது. இதற்க்கு காரணம் மிகப்பெரிய அளவில் உள்ள சுய அரசியல் சூழ்ச்சி முடிச்சுகள் ஆகும். பல மேடைகளில், மாற்றங்களை பற்றி பேசும் தேசிய முன்னணி மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது. அவர்களால் மாற்றம் என்ற வார்த்தையை உச்சரிக்க மட்டுமே முடியும். செயல் படுத்த முடியாது. 

இனி வருங் காலங்களில், சிறந்த ஆட்சி முறையை மலேசியர்கள் அனுபவிக்க விரும்பினால், மாற்று கூட்டணியான மக்கள் கூட்டணி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. 

கடந்த பொதுத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் புதிய அரசியல் தளத்தை உருவாக்குவதில் வேந்தர்களாக இருந்த பட்சத்தில், மீண்டும் வருகிற இடை தேர்தலிலும் அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் அசைக்க முடியாத ஆதரவை மக்கள் கூட்டணிக்கு வழங்கி மத்திய அரசாங்கத்தை கைப்பற்ற முக்கிய பங்களிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். 

ஆகவே இந்தியர்களின் வாக்கை பெறுவதில், மக்கள் கூட்டணி அரசாங்க மாநிலங்களும், மக்கள் கூட்டணி தலைவர்களும் இந்தியர்களிடம் நெருக்கமான நல்லுறவை பேணுவது அவசியமாகும் வேளையில், இந்தியர்களின் தேவைகளை சீர்தூக்கி பார்த்து அவர்களின் தேவைகளை சரிவர செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும். 

தேசிய முன்னணியின் ஆட்சியில் பல இன்னல்களையும் வேறுபாடுகளையும் அனுபவித்த இந்தியர்களின் மனதை கவர்ந்து, மக்கள் கூட்டணியின் மலேசியர்களுக்கு மலேசியா என்ற உன்னத கொள்கையின் வெளிப்பாடுகளை தெளிவுபடுத்தி அவர்களை அரவணைக்க முயற்சி செய்ய வேண்டும். 

மக்கள் கூட்டணி மக்களின் தேர்வு என்ற எண்ணத்தை அவர்களின் ஆழ்மனதில் பதிய வைக்க இன்றே நடைபோட வேண்டும்.

Monday, December 6, 2010

இசைப்பிரியா கொலை, உலக பெண்கள் இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும்.- காமாட்சி துரைராஜு வேண்டுகோள்


ஷோபா என்ற இசைபிரியாவை சரண் அடைந்த பிறகும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டு கொன்ற செய்தி, சிங்கள மனித மிருகங்களின் கொடூரமான செயலை காட்டுகிறது. ஒரு போர் வீரர் என்று கூட பார்க்காமால், அவரை கொன்ற செய்தி பலரின் மனதை ஆழமாக பாதித்துள்ளது. அதிலும் ஒரு ஈழத் தமிழ்ப் பெண்மணியை இப்படியா பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது? 

ஆண்களின் பலவிதமான அட்டுளியங்களுக்கு ஆளாகும் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து போர் செய்யும் இடங்களில் கூட இவ்வாறான செயல்களுக்கு ஆளாவது, இலங்கை அரசாங்கத்தின் எல்லை இல்லா கொடுங்கோல் ஆட்சியை காட்டுகிறது.  

அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் தங்களின் அரசியல் கொள்கைகளையும் ஆணவங்களை ஒதுக்கி பெண் என்ற அடிப்படை கொள்கையை கையில் எடுத்து, ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்தின் மனிதான்மையற்ற இந்த செயலுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை உலக வாழ் பெண்கள் ஆதரிப்பார்களோ இல்லையோ ஆனால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பெண்களும், பெண்கள் இயக்கங்களும் முழுமையாக வலியுறுத்த வேண்டும். இசைப்பிரியாவை போல மேலும் பல பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்ற உண்மை மறைத்தாலும் இப்பொழுது தெரியவந்துள்ளது. 

பெண்கள் பொதுவாக மனிதாபிமானமற்ற செயலை பார்த்ததும் ஏற்படும் அந்த தார்மிக கோபம், இலங்கை அரசாங்கத்தின் எதிராக வெளிபடுத்தவேண்டும். தமிழ் பெண்கள் வீரத்தில் எந்த சூழ்நிலையிலும் ஆண்களுக்கு சமமாக நின்று போர் புரியும் குணம் உள்ளவர்கள் என்பதனை ஈழத்தில் வாழும் பல உடன் பிறவா சகோதரிகள் தெளிவுபடுத்திவிட்டனர். இவர்கள் அல்லவா வீரத் தமிழச்சிகள். 

ஈழத்தில் வாழும் தமிழர்கள் தனது தனிமனித மேம்பாட்டுக்கு போர் செய்யவில்லை. அவர்களின் உரிமை பரிக்கப்படுவதினால் போர் முனையில் நிற்கிறார்கள். இதில் ஆண் பெண் குழந்தைகள் என்று பாராமல் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்? போர் நெறி என்பது கிடையாதா? இலங்கை அரசாங்கத்தின் எல்லையற்ற இந்த செயலை உலக முழுவதிலும் உள்ள அனைத்து பெண்கள் இயக்கங்களும் இலங்கை மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும். 

இலங்கை அரசாங்கத்தின் போர் குற்றம் உலகளாவிய குற்றவியல் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

இன படுகொளையன் மகிந்தா ராஜபக்சே, ஈழத் தமிழர்களை கொன்று குவித்து விட்டு லண்டனில் உல்லாச ஊர்வலம் வந்த இடத்தில் உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிராக பேரணி நடத்தினார்கள். அதனை கண்டு தத்தளிக்கும் நிலைமையில் ராஜபக்சேவும் தனது சகாக்களும் தப்பி சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈன்றுள்ளது. 

லண்டனில் ஒக்ஸ்போத் பல்கலைகழகம் ஏற்பாடில் உரை நிகழ்த்தும் நிகழ்வும் ரத்து செய்திருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. மேலும் இது போன்ற இன படுகொளையாலனுக்கு எந்த ஒரு நாட்டு பல்கலைகழகத்திலும் உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கப்பட கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள். 

மானமுள்ள தமிழன் எங்கு வாழ்தாலும் அங்கே ராஜபக்சே போன்ற இனவாதிகளின் கால் பாதங்களை பதிக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனை ராஜபக்சே புரிந்து கொள்ளவேண்டும். தனது நாட்டில் அனைத்து போர் குற்றங்களையும் செய்த பிறகு எந்த சூழ்நிலையிலும் நிம்மதியாக உலகம் சுற்ற முடியாது என்பதனை ராஜபக்சே மறந்து விடக்கூடாது.  ராஜபக்சே தனது கொடிய ராணுவத்தை வைத்து பல அப்பாவி மக்களை கொன்ற உண்மைஅம்மபலமாகியுள்ளது. 

அதனை தொடர்ந்து, தான் போர் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்த அனைத்து போர்குற்றம், மனித உரிமை மீறல், இன படு கொலை அனைத்தும் வெட்ட வெளிச்சமாகும் அதே வேளையில், ஐ.நா பாதுகாப்பு சபை உடனடியாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை, இதன் தொடர்பில் முழுமையான நேர்மையான விசாரணை ஒன்றை ஆரம்பிக்கை ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மனித உயிர்கள் வதைக்கப்பட்டத்தின் ஆழங்களை உலக நாட்டுக்கு தெளிவு படுத்த வேண்டும். சுடான் நாட்டு அதிபர் பஷீர் இனபடுகொலை புறிந்ததின் காரணமாக உலகலாவியல் குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது போல இலங்கை அதிபர் மகிந்தாவுக்கும் அதே போன்ற கைது ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும். 

இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கையில் கிடைத்த தமிழர்களையும் பெண் போராளிகளையும் மிகவும் கொடூரமாக கொன்று குவித்துள்ளது இலங்கை ராணும். இதுகுறித்து இதுவரை வெளிவராத புதிய படங்கள் வெளியிடப்படுள்ளது.

புலிகளுடனான போரில், பொதுமக்களை ராணுவம் கொல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் பெருமளவில் போர்க்குற்றம் செய்த நாடு என பல நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன என்பது உண்மை. 
அந்த வகையில் மிக அண்மையில் சில கொடூரமான படங்கள் வெளியாகியுள்ளன. வன்னியில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தின்போது சிங்களப் படைகள் தமிழர் மீது நடத்திய வெறியாட்டத்தின்போது எடுக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. 
ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு, மிகக் கோரமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்ப் பெண்கள் மற்றும் போராளிகளைக் கொன்று உடல்களை தெருவில் வீசிவிட்டு சிங்களர்கள் செல்லும் காட்சிகள், உயிரோடு தமிழர்களை ஓடவிட்டு சுட்டுக் கொல்லும் கொடூரம் போன்றவை இந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன. 
இவை அனைத்தையும் ஆதாரமாக கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபை மனிதாபிமான அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தி மகிந்த ராஜபக்சேவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டை பெற முயற்சி செய்ய வேண்டும். 
மு.குலசேகரன் 
மலேசியா மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பின
ர்