உலக வாழ் இந்திய மக்களின் மனதில் தை மாதம் ஒரு சிறப்பான மாதமாக நிலைத்துள்ளது. வருட தொடக்கத்தில் இந்தியர்களின் முதல் திருநாளாகிய பொங்கல் திருநாள் அனைவருக்கும் சமத்துவமான பொங்கலாக அமைய வேண்டுமென்று இறைவனை பிராத்திப்போம். உண்ணதமான உழைப்புக்கு உயர்ந்த கௌரவத்தை தரும் இந்த நன்னாளில், வியர்வையை சிந்தி பாடுபடும் அனைத்து மக்களுக்கும் நற்பலன் தரும் நாளாக பொங்கல் கொண்டாடப்படும் வேளையில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்நாளை கொண்டாடுவோம்.சமுதாயத்தில் சமத்துவம் மட்டும் போதாது, சமவாய்ப்பு தேவை அப்பொழுதுதான் சமவாழ்வு பிறக்கும்.
தமிழர்களின் திருநாளாகிய இப்பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக அமைய எனது சார்பிலும் மற்றும் எனது குடும்பத்தார் சார்பிலும் அனைத்து மலேசியா வாழ் மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என ஜ.செ.க வின் தேசிய உதவித் தலைவரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment