Showing posts with label இனவாதம். Show all posts
Showing posts with label இனவாதம். Show all posts

Tuesday, February 8, 2011

மலாய் ஆலோசனை மன்றத்தின் நடவடிக்கை விரோதத் தன்மையை நிலைநாட்டும்

செம்பருத்தி இணையதள செய்தி









ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்தும் உள்நோக்கத்துடனும் இழிவு படுத்திய இண்டர்லோக் நாவலை தடைசெய்ய கோரிக்கை விடுத்தால், மலாய் ஆலோசனை மன்றம் ஒட்டுமொத்த மலேசியவாழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அளவிற்கு குரல் எழுப்புவது நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற  உறுப்பினர் மு. குலசேகரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குலா தெரிவித்துள்ளதாவது:
நாவலை தடைசெய்ய இந்தியர்கள் கொடுக்கும் குரலுக்கும் மலாய் மேலாண்மையை காரணமாக கொண்டு மலாய் ஆலோசனை மன்றம் சொல்லும் காரணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. எதற்க்காக மலாய் மேலாண்மையை பற்றி இவர்கள் இவ்வேளையில் பேச வேண்டும்?
பிற இனத்தவர்களுக்கு சகல வாழ்வுரிமைகள் இருக்கும் வேளையில் இந்நாட்டில் பிறந்து வளர்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் அதே சலுகைகளும் உரிமைகளும் உண்டு என்பதனை மலாய் ஆலோசனை மன்றம் ஆழமாக உணர்தல் வேண்டும்.
இண்டர்லோக் நாவலில் வார்த்தை கோளாறுகள் மட்டுமல்லாமல் சரித்திரபூர்வமான தவறுகள் ஏற்பட்டுள்ளது. அதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த ஒரு மதத்தை சார்ந்த எழுத்தாளனாக இருந்தாலும், ஒரு நாவலை எழுதும் முன், அதன் கற்பனை கதாபாத்திரத்திற்கு நல் வழி ஒழுக்க குணங்களை எடுத்து காட்ட வேண்டும்.
அதனை செய்யாமல் இந்திய சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் விமர்சனம் செய்து புத்தகம் வெளியிட்டு அதனை பாட புத்தகமாக அங்கிகாரம் வழங்கியது மலேசியவாழ் இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
இந்நாவலை தடை செய்ய கோரிக்கை விடுத்தது “இந்தியர்களின் பாரம்பரியத்தை பற்றி இனிமேலும் யாரும் தவறாக எழுதக்கூடாததற்க்காகவும், இந்தியர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மட்டுமே”. ஆனால் மலாய் ஆலோசனை மன்றம் மிகவும் உணர்சிகரமாக இப்பிரச்னை கையாளுகிறது.
ஒரு மலாய் இலக்கியவாதியின் நாவலை ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே எதிர்க்கும் அதே வேளையில், அனைத்து மலாய்காரர்களும் இனிமேலும் எந்த ஒரு அரசியல் கூட்டணியின் இந்திய பிரதிநிதிகளுக்கு ஆதரவு வழங்ககூடாது என்பது, தனிமனித ஜனநாயக சுதந்திரத்திற்கு  தடையாக அமைகிறது.
மேலும், மலாய்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் மத்தியில் ஒற்றுமையை முறிக்க தூண்டும் செயலாகவும் உள்ளது. இவர்களின் இத்தகையான கூற்று, மலாய் மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவராது, மாறாக மனதில் காலத்திற்கும் அழியாத விரோதத்தன்மையை நிலைநாட்டும் என்பதே திண்ணம்.
இந்தியர்களின் ஆட்சேப குரலின் காரணத்தால் இண்டர்லோக் நாவலை தடைசெய்தால், அரசாங்கம் பலவீனமாகிவிடும் என்று மலாய் ஆலோசனை மன்றம் கூறுவது அர்த்தமற்றது. அந்நாவல் இந்திய சமுதாயத்தின் கௌரவத்திற்கு இழிவை ஏற்படுத்தியது, இந்தியர்களின் மத்தியில் வேதனை உண்டாகியுள்ளது.
பல அடிப்படையற்ற குறிப்புகள் அடங்கிய மகஜரை மலாய் ஆலோசனை மன்றம் பிரதமருக்கு வழங்கியதோடு மௌனம் சாதிப்பது அனைவருக்கும் நல்லது. மேலும் மேலும் விஷம குணத்தோடு சூழ்நிலையை உஷ்ண நிலைக்கு கொண்டு செல்ல முற்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.
தவறாக கதை விமர்சனம் செய்த ஒரு இலக்கியவாதிக்கு இத்தனை ஆதரவு குரல் என்றால், பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குரல் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதனை அரசாங்கம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
ஆகவே அரசாங்கம் மலாய் ஆலோசனை மன்றத்தின் மகஜரை பெற்றுக்கொண்ட அதே வேளை, இவர்களின் எல்லை மீறலான செயலை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இவ்வாறு குலசேகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Saturday, November 27, 2010

இனவாத புரட்சியா? அல்லது இழிளிவு நிலையின் முதிர்ச்சியா? - மு.குலசேகரன்


இனவாத வார்த்தைகளை பள்ளிகளில் அள்ளி வீசிவது மலேசியாவில் உள்ள பல மலாய் இனத்தை சார்ந்த ஆசிரியர்களின் இடையே ஒரு வீர தீர செயலாக கருத்தப்படுகிறது. மாணவர்களுக்கு ஒற்றுமையின் கூற்றை விளக்க வேண்டிய ஆசிரியர்கள், பல இன மாணவர்கள் மத்தியில் நடைபெறும் கூட்டங்களில் இந்தியர்களையும் சீனர்களையும் குறி வைத்து கேவலப்படுத்துகின்றனர். பள்ளி பருவகாலங்களில் இது போன்ற கேலிப் பேச்சுகளுக்கு ஆளாவது மனதில் வெறுப்புத்தன்மையையும் பகைமை குணத்தையும் உருவாக்கும் என்பதனை இவர்கள் மறந்து விடுகிறார்கள். 

இனவாதம் என்ற பெயரில், ஆய்வு கட்டுரைகள் எழுதுவதும், பொது இடங்களில் இழிவாக பேசுவதும், அரசாங்க பயிற்சி முகாம்களில் இனவாத கொள்கைகளை விதைப்பதும் போன்ற செயல்கள் சமீபகாலமாக எந்த ஒரு கட்டுபாடின்றி துளிர் விட்டு படர ஆரம்பத்துவிட்டது. இதனை அரசாங்கம் ஒரு பொழுதும் கடுமையாக கருதாமல் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டே போனதால் மீண்டு இது தொடர் கதையாகி விட்டது. வெறுத்து போன வார்த்தை விதைகளை மாணவர்களின் மத்தியில் விதைத்தால் எப்படி நமது நாடு ஒன்று பட்ட சமுதாய சின்னமாக விளங்கும். 

தன்னுடைய இனத்தின் மேன்மைகளை பிற இனத்தவரிடம் சொல்லி புரிய வைப்பது சிறப்பு. அதேசமயத்தில்  குறிவைத்து பிற இனத்தை சங்கடப்படுத்தி பேசுவது தவறு என்று நாளும் தெரிந்த ஆசிரியர்களுக்கு தெரியாத? 

முக்கியமான  தேர்வு நாளான ஐந்தாம் படிவம்  தேசிய தேர்வின் போது மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சொல்லி அனுப்புவது சிறந்ததா அல்லது இழிவு படுத்துவது சிறந்ததா? மாணவர்கள் இச்சூழ்நிலையில் எப்படி சிறப்பாக தனது கவனத்தை பரீட்சையில் செலுத்த முடியும்?

கண்டிப்பாக மாணவர்களின் எண்ணம் சிதற தொடங்கிவிடும் என்று ஒரு தேர்வு மேற்பார்வையாளருக்கு தெரியாதா? 

போர்ட்டிக்சன் அருகாமையில் உள்ள லுகுட் ராஜா ஜமாத் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றுகொண்டிருக்கும் எஸ்.பி.எம் தேர்வின் இரண்டாவது நாளன்று, தலைமை  தேர்வு அதிகாரி இந்திய மற்றும் சீன மாணவர்களை குறிவைத்து இழிவாக பேசியது பலரின் கவனத்தை ஈன்றது மட்டுமல்லாமல் இதற்கு முடிவு என்பது இல்லையா என்ற கேள்வி பலரின் மத்தியில் தொடங்கிவிட்டது. 

இந்த சூழ்நிலை இனவாத புரட்சியா? அல்லது இழிளிவு நிலையின் முதிர்ச்சியா? என்று சிந்திக்க வேண்டியதுள்ளது. இந்த நிலை தொடர்வதின் உள்நோக்கமென்ன? இவர்களின் இழிவுக்கு இந்தியர்களும் சீனர்களும் அடக்குமுறைக்கு ஆளாகுவது எந்த விதத்தில் நியாயம்? இதே போன்ற வார்த்தைகளை இந்தியகளோ அல்லது சீனர்களோ பள்ளியில் பேசியிருந்தால் என்னென்ன சூழ்நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்? அவ்வகையில் ஏதேனும் நடந்ததா? இல்லை, காரணம் நாட்டின் எல்லா இன மக்களின் ஒற்றுமை என்பது மிக முக்கியமான அம்சம். அதனை காப்பாற்ற வேண்டும். அவ்வாறு செய்தல் மட்டுமே சுபிச்சத்துடன் வாழ முடியும் என்பது உண்மை.அது இந்தியர்களுக்கும் சீனர்களும் தெரிந்த  ஒன்று. 

இதற்கும் முன்பு பேசப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மேல் முறையான,விரைவான மற்றும் பொருத்தமான சட்டம் பாய்திருந்தால் இன்று இந்த நிலை மீண்டும் எழ வாய்ப்பில்லை. ஆனால் தேசிய முன்னணி அரசாங்கம் ஒரு குருட்டுதன்மையுடைய கோழை அரசாங்கம். இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மேல் எந்த ஒரு உடனடி தீர்வை எடுக்க முடியாமல் தவிக்கும் செயலிழந்த அரசாங்கம். பிற இனத்தின் மேல் கருணை இல்லா அரசு தேசிய முன்னணி என்பது ஒரு முன்னுதாரணம். 

இதற்க்கு காரணம் நிச்சயமாக இந்த ஆணவ தேசிய முன்னணி அரசாங்கமே. காலங்காலமாக விஷமூட்டப்பட்டு வந்த இவர்களின் சிந்தனை முறையை மாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல ஆனால் முடியாத காரியமல்ல. அரசாங்க சேவை பயிற்சி திட்டத்தில் இருக்கும் அனைத்து இனவாத ஓட்டைகளை அடித்தால் இவை அனைத்தும் சரியாகும். மேலும், இனவாத வார்த்தைகளை உபயோகப்படுத்தினால் உடனடியாக அவர்களின் மேல் எந்த ஒரு பாரபட்சமின்றி கடுமையான சட்டத்தை உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படியான கருத்துக்களை விதைப்பவர்கள் எல்லோரும் என்னைப்பொறுத்தவரையில் மக்களை பிரித்து ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சக்தியொன்றின் கைக்கூலிகள். இச்சூழ்நிலையை களைய ஒட்டுமொத்த இந்திய அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் ஒரு மனதோடு இனவாத வார்த்தை வன்முறை புரியும் தனிமனிதர்களுக்கு எதிராக குரல் கொடுத்து அரசாங்கத்திற்கும் அசூரதனமான அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே சிந்தனை மாற்றத்தை உருவாக்க முடியும். 

அதற்க்கு  தோள்கொடுப்பார்களா ம.இ.க பிரதிநிதிகள்? அல்லது மீண்டும் ரகசிய அறையில் ரகசிய ஒப்பந்தம் செய்வார்களா?

Tuesday, September 7, 2010

உணர்ச்சிவசம் வேண்டாம்.....சிந்தித்து செயல்படுவோம்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டத்தில் இனவாத பேச்சு மேலும் தலைத்தூக்கி உள்ளது என்ற உண்மை அனைவராலும் அறிந்த ஒன்று. ஒரு மதத்தை இழிவு படுத்த இணையம் மூலம் தனது அடையாளத்தை மறைத்து அல்லது பிறரின் பெயர் முகவரியில் தனது இனவாத கருத்துக்களை வெளிப்படுத்துவது தரமற்ற நோக்கத்தையும் தைரியமைற்ற செயலையும் வெளிபடுத்துகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற செயல்கள் முழுமையாக கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஆனால் இதற்க்கு யார் பின்னணி என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மையாகும். இருப்பினும் மலேசியா தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இது போன்ற உணர்வற்ற மனிதர்களின் இனவாத செயலை தடுத்தி நிறுத்த அனைத்து வழிகளும் இருக்கும் வேளையில் ஏன் இன்றைய நாள் வரைக்கும் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்ற கேள்விக் எழ செய்கிறது. பொதுவாக இந்தியர்களை இழிவுபடுத்தம் இணைய பதிவாளர்களின் மேல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அப்படி உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது போன்ற இனவாத செயலுக்கு ஆதரவளிப்பதாக பொருளாகும் என்பதனை தெரிந்துகொள்ள மறந்துவிட்டார்களா? அல்லது அலட்சியப்போக்கா?

அரசாங்கம் இனவாத செயலை தூண்டுகிறதா அல்லது இனவாத அரசாங்கமாக மாறுகிறதா? முன்பு இல்லாத இனவாத பேச்சும் செயலும் இப்பொழுது திடீரென்று எழுந்துள்ளது ஏன்?

கீழே உள்ள படங்களை பாருங்கள்...இணைய தளத்தில் பல விசயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கும்பொழுது இனவாதமாக பேசி பலரின் உணர்சிகளை தூண்டும் அளவிற்கு செயல்படுவதை கவனிக்கலாம்.
 



இருப்பினும் நமது நாட்டின் சுபிச்சத்தை நிலைப்படுத்த இது போன்ற வர்ணனைக்கு நாம் ஒருபொழுதும் உணர்ச்சிவசமாக கருத்துரைப்பது தவறாகும். ஆகையால் இது சம்பந்தமாக அனைவரும் ஒன்றிணைந்து போலீஸ் புகர் செய்வதே சிறந்த செயலாகும் என்ற ஆலோசனையை தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, September 6, 2010

இன ஒற்றுமை சட்ட மசோதா நிறைவேற்றுதல் வேண்டும் - கர்பால் சிங் வேண்டுகோள்.

வெகுநாளாக நிலுவையிலுள்ள தேசிய இன ஒற்றுமை சட்ட மசோதாவை உடனடியாக மத்திய அரசாங்கம் சட்டமேற்றுதல் வேண்டும் என்று ஜ.செ.க-வின் தேசியத்தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினறுமான கர்பால் சிங் கேட்டுக்கொண்டார்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தேசிய இன ஒற்றுமை முன்னேற்ற இலட்சியத்துக்கு பயனுள்ள உத்தரவாதத்தை வழங்கும் என்று அறியப்படுகிறது என்று அவர் கூறினார்.

பல வருடங்களுக்கு முன்பு டத்தோக் ஷாபி அப்டால் ஒற்றுமை கலை கலாச்சார பாரம்பரிய அமைச்சாராக இருந்த பொழுது இச்சட்டத்தை பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இதுநாள் வரை மத்திய அரசாங்கம் இச்சட்டம் குறித்த அவரின் ஆலோசனையை தொடரவில்லை என்பதே உண்மையாகும். அதன் தொடர்பில் தற்சமயம் இனவாத வார்த்தை பயன்பாடு மிகவும் பரவாலாக இருக்கும் காரணத்தினால், அரசாங்கம் தேசிய தலைமைச் சட்ட அதிகாரியை இச்சட்டம் குறித்த மாதிரி சட்டரிக்கையை ஒன்றை தயார்செய்ய ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று கர்பால் கேட்டுக்கொண்டார்.

"மேலும் அந்த மாதிரி சட்டரிக்கை வருகிற நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்து அதனை அரசாங்கம் மக்களின் கருத்துக்களுக்கு பதிப்பளிக்கும் வகையில் அமைய வகைசெய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயங்களை கேட்டறிந்து அச்சட்டத்தை இன்னும் வலிமையான முறையில் உருவாக்கவேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்" என்றார் கர்பால்.

"இனவாத பேச்சுக்கள் இனியும் இந்நாட்டில் உருவாகக்கூடாது. தற்சமயம் எழுந்துள்ள இனவாத பேச்சுக்கு இதுவே மிகச் சிறந்த தீர்வாக அமையவேண்டும். ஆகவே தயாரிக்கப்படும் மாதிரி சட்டரிக்கையில் இனவாத பேச்சுக்கும் செயலுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதனை முழுமையான விரிவாக்கத்துடன் அவை அமையவேண்டும்.இது மக்களின் நலனை மட்டுமல்லாமல் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடிய செயலாக திகழவேண்டும்.அரசாங்க அதிகாரிகளின் எல்லையில்லா இனவாத பேச்சுக்கள் பல இன மக்களின் ஒற்றுமையை சீர்குலைந்து விடும். இது கடுமையாக கருதப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாகப்பட்டால்தான் இச்சூநிலையை முற்றாக ஒழிக்க முடியும்" என்றார் அவர்.