Showing posts with label இந்தியர்கள். Show all posts
Showing posts with label இந்தியர்கள். Show all posts
Monday, April 4, 2011
Thursday, March 17, 2011
Monday, January 24, 2011
நாடு முழுவதும் இண்டர்லோக்கிற்கு எதிராகப் போலீஸ் புகார்கள்
மலேசியா இன்று செய்தி.
இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது என்றும் அது இடைநிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டாய வாசிப்பு பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறி நாடு முழுவதும் பல இந்திய அமைப்புக்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரே சமயத்தில் புகார் செய்துள்ளன.
பேராக்கில் ஈப்போ, பத்து காஜா, சித்தியவான், தெலுக் இந்தான், தைப்பிங் ஆகியவற்றிலும் பாகாங்கில் குவாந்தானிலும் கிளந்தானில் கோத்தா பாருவிலும் கோலாலம்பூரில் செந்தூல், பினாங்கில் தாசெக் குளுகோரிலும் மலாக்காவில் ஜாசினிலும் நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சனிலும் போலீசில் புகார்செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது என்றும் அது இடைநிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டாய வாசிப்பு பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறி நாடு முழுவதும் பல இந்திய அமைப்புக்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரே சமயத்தில் புகார் செய்துள்ளன.
பேராக்கில் ஈப்போ, பத்து காஜா, சித்தியவான், தெலுக் இந்தான், தைப்பிங் ஆகியவற்றிலும் பாகாங்கில் குவாந்தானிலும் கிளந்தானில் கோத்தா பாருவிலும் கோலாலம்பூரில் செந்தூல், பினாங்கில் தாசெக் குளுகோரிலும் மலாக்காவில் ஜாசினிலும் நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சனிலும் போலீசில் புகார்செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
“அரசாங்கமும் கல்வி அமைச்சும் இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்காமல் அந்த சர்ச்சையை வேண்டுமென்றே தொடர விரும்புகின்றன”, என்றும் கூறி தாம் அவற்றின் போக்கு மற்றும் நிலை மீதும் புகார் செய்துள்ளதாக பேராக் டிஎபி இளைஞர் பிரிவின் அரசியல் கல்விப் பிரிவுத் தலைவர் பி சுகுமாரன் கூறினார்.

“சுய மரியாதையுள்ள எந்த இந்திய சமூகமும் தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய இண்டர்லாக் நாவலை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் ஆதாரமற்றது, அவமானப்படுத்துகிறது, இன உணர்வுகளைத் தொடுகிறது. இந்திய சமூகத்தை முழுமையாக இழிவுபடுத்தும் வகையில் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட வரலாற்று பிழைகளும் அதில் உள்ளன”, என்று சுகுமாரன் சொன்னார்.
அந்த நாவல் பற்றி மேலும் மறு ஆய்வுகளோ அல்லது மற்ற தரப்புக்களுடன் ஆலோசனைகளோ நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட அந்த டிஎபி போராளி, அந்தப் புத்தகம் இந்த நாட்டில் நிலவுகிற இன ஒற்றுமை சீர்குலைவதற்கு வழி வகுப்பதற்கு முன்னர் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலிருந்து அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
"அந்த நாவலில் வருகின்ற கதாபாத்திரங்கள் ஆக்கப்பூர்வப் பண்புகளைப் பிரதிபலிக்கவில்லை. பள்ளிக்கூட நிலையில் அது கற்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டால் அது புனிதமான பண்புகளை மேம்படுத்தாது. மாறாக மற்ற இனங்கள் மீதும் இந்திய சமூகம் மீதும் வெறுப்புணர்வையே அதிகரிக்கும்”, என்றும் சுகுமாரன் குறிப்பிட்டார்
Monday, January 10, 2011
மாணவர்களை செருப்பால் அடித்த ஆசிரியரை தண்டிப்பது யார்?
இடைநிலைப்பள்ளியில் புகுமுக வகுப்பை சார்ந்த இரண்டு இந்திய மாணவர்களை ஆசிரியர் தலையில் செருப்பால் அடித்தது மட்டுமல்லாமல் கீழே தள்ளி மாணவனின் நெஞ்சில் உதைத்தார் என்று அம்மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.இந்நிகழ்வு சுல்தான் அப்துல் அசிஸ் இடைநிலைப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. மாணவர்கள் ஒன்று கூடும் சபை நிகழ்வில் இவ்விருவரும் பேசிக்கொண்டிருந்தனர் என்ற காரணத்தினால் அந்த ஆசிரியர் அளவுக்கு மீறிய செயலை செய்தது கண்டிக்கத்தக்கது.
மாணவர்கள் தப்பு செய்வது சகஜம். அவர்களை கண்டிப்பது ஆசிரியர்களின் முழுமையான கடமையும் கூட. ஆனால் ஆசிரியர்களுக்கும் எல்லை உண்டு.
இச்செயல் எல்லை மீறலை விட சர்ச்சையான விவகாரம். அதுவும் சமீப காலமாக இந்திய மாணவர்களின் மேல் ஆசிரியர்கள் இவ்வாறு செய்வது, அவர்களின் மேல் அளவு கடந்த வெறுப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஒரு வேலை, அவ்விரு மாணவர்களுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் யார் அதற்க்கு பொறுப்பு வகிப்பது? காலால் ஒரு மாணவனை நெஞ்சில் உதைத்ததாக கூறப்படும் மாணவனின் நெஞ்சில் உள்காயங்கள் ஏற்பட்டிருந்தால், என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது கல்வி கற்ற ஆசிரியர்களுக்கு தெரியாதா?
அதவைவிட பெரிய கொடுமை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்ய சென்ற பொழுது காவலர்கள் புகாரை எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் முத்தையா உதவியுடன் புகார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே போன்ற இன்னொரு சர்ச்சையான விவகாரம் கம்பாரிலும் நடந்தது. அதிலும் ஒரு இந்திய மாணவன் தான் ஆசிரியரால் செருப்பால் தாக்கப்பட்டார். இதுநாள் வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று யாருக்கும் தெரிவிப்பதும் கிடையாது. காவல்துறையில் புகார் செய்தால் அந்த ஆசிரியர்களையும் காவல்துறையில் விசாரணை செய்வதில்லை. கல்வி இலாக்காவில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுப்பதும் கிடையாது. காலம் கடந்த பிறகு தான் விசாரணை செய்கிறார்கள்.
இது போன்ற செயல்கள் மாணவர்களுக்கு பெரிய பிரச்சனையாக முடிகிறது. புகார் செய்த காரணத்தினால் இனிமேல் அம்மாணவர்கள் அப்பள்ளியில் பயில தயக்கம் காட்டுவார்கள். மாற்றலாகி வேற ஒரு பள்ளிக்கு சென்றால் அங்கே இப்பிரச்சனையை முன்வைத்து அம்மாணவர்களின் மேல் கவனத்தை ஆசிரியர்கள் முழுமையா செலுத்துவதில்லை. ஏன் என்று கேட்டால், கடந்த கால புகாரை சுட்டிக்காட்டி பேசவும் வாய்ப்புண்டு. இதனால் மனரீதியாக பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களே.சமீப காலமாக இந்தியர்களின் மேல் இழைக்கப்படும் கொடுமைகளை குறித்து நாம் அன்றாடம் தினசரி நாளிதள்களில் படிபதுண்டு. இதற்க்கு யார் காரணம் என்று ஆராயாமல், தக்க நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேசிய முன்னணின் அரசாங்கத்தை முழுமையா ஒதுக்குவதே இன்றைய சூழ்நிலையின் அவசியம்.
இரக்கமின்றி அரக்க குணத்தோடு நடந்துக்கொள்ளும் ஆசிரியர்களை குறை கூறுவதை விட பொறுப்பற்ற கல்வி அமைச்சின் தன்மூப்பான செயலே இதற்க்கு காரணம்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மேல் உரிய நடவடிக்கை தேவை என்பதெல்லாம் கடந்த கால கோரிக்கை. ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த ஆசிரியரை உடனடியாக கல்வி கற்க தகுதியற்றவர் என்று முத்திரை குத்தி பணிநீக்கம் செய்தால், இது போன்ற பிரச்சனைகள் வருங் காலத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன் தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sunday, January 2, 2011
Friday, December 24, 2010
Monday, December 20, 2010
Wednesday, December 15, 2010
Wednesday, December 8, 2010
Wednesday, December 1, 2010
Sunday, November 28, 2010
Friday, November 26, 2010
Monday, November 22, 2010
Wednesday, November 17, 2010
குறுகிய கால ஆதாயம் நீண்ட கால இழப்பாக முடியலாம் - Malaysiaindru
நடப்புப் பேராக் தலைமைத்துவத்தின் குறுகிய கால வெற்றி 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு நீண்ட கால இழப்பாக முடியக் கூடும். 13வது தேர்தல் முன்
கூட்டியே நிகழக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேராக் டிஎபி தேர்தல்களில் டிஎபி தேசிய உதவித் தலைவர் எம் குலசேகரன் தோற்கடிக்கப்பட்டது, நாடு முழுவதும் இந்திய சமூகத்தின் உணர்வுகளை தூண்டி விட்டுள்ளது. ஓரம்கட்டப்பட்ட அந்த சமுதாயம் மீண்டும் ஆத்திரமடைந்துள்ளது.
இங்கே-இங்கா கூட்டுக்கும் குலசேகரன்-பாசிர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் பூ தரப்புக்கும் இடையிலான பேராக் மாநில டிஎபியின் கட்டுப்பாட்டுக்காக நடந்த பூசலை ஊடகங்கள், ஊதிப் பெரிதாக்கி விட்டதால் கட்சியின் சாதாரண மாநிலத் தேர்தலான அது நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட விவகாரமாக மாறி விட்டது.அந்த இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான அரசியல் பகைமை உருவாக்கிய நெருப்பை அணைப்பதற்கு தேசிய டிஎபி தலைவர்கள் மேற்கொண்ட பல முயற்சிகள்
தோல்வி அடைந்தன.
பேராக் டிஎபி தேர்தல்கள் நேர்மையாகவும் கவனத்துடனும் நடத்தப்பட்டன. அந்தத் தேர்தல் நடைமுறை பற்றி எந்தத்
தரப்பும் புகார் கூறவில்லை.
ஆனால் தேர்தல் முடிவுகள் பற்றிய பொது மக்கள் எண்ணம் குறிப்பாக இந்திய சமூகத்தின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அதுவும் வலிமை வாய்ந்த காலஞ்சென்ற டிஎபி அரசியல்வாதி பி பட்டுவிற்கு வாரிசு எனக் கருதப்பட்ட குலசேகரன் சீனர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியில் “அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டும் வகையில் பாதிக்கப்பட்டு விட்டார்”
என இந்திய சமூகம் கருதுகிறது.
இந்தியர்கள் “எதிர்ப்புணர்வு”
இந்தியர்களை அடித்தளமாகக் கொண்ட பிஎன் உறுப்புக் கட்சிகள், அரசு சாரா அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், வழக்குரைஞர்கள் உட்பட பல தரப்புக்களிடமிருந்து பெற்ற கைத் தொலைபேசி அழைப்புக்கள் அந்த எண்ணத்தை மேலும்
வலுப்படுத்துகின்றன.
பேராக் தேர்தல்கள் முடிவு பற்றி அறிந்து கொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை தமக்கு பல அழைப்புக்கள் வந்தததாக டிஎபி கட்சியின் தேசிய தொழிலாளர் பிரிவுத் தலைவர் எ
சிவநேசன் மலேசியாகினியிடம் கூறினார்.
அந்த அழைப்புக்கள் அதிகமாக இருந்ததால் தமது கைத் தொலைபேசி செயலிழந்து விட்டது என்று அவர் சொன்னார்.
தாம் நீதிமன்றத்தில் இருந்ததால் அந்த அழைப்புக்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.
பேராக் டிஎபி தேர்தல் முடிவுகள் மீது இந்தியர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புணர்வு அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் பேராக்கை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பை பாதிக்கும் என அவர் கருதுகிறார்.
12வது பொதுத் தேர்தலின் போது ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடத்திய போராட்டத்தின் விளைவாக எழுந்த உணர்வுகள் பிஎன்னுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தடுத்து விட்டன. அத்துடன் பிஎன் ஐந்து மாநிலங்களையும் இழந்தது.
இந்த முறை ஏப்ரல் மாதம் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் இந்தியர் வாக்குகள், அரசியல் அலையை பிஎன்னுக்கு சாதகமாக திருப்பி விடக் கூடும்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் பிஎன் இந்திய சமூகத்திடம் தான் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஒதுக்கப்பட்டதாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் இந்திய சமூகத்தின் தேவைகளை நிறைவேறுவதற்கு சிறப்பு ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன
Friday, November 12, 2010
Monday, October 25, 2010
Sunday, October 17, 2010
Saturday, October 16, 2010
Friday, October 15, 2010
Subscribe to:
Posts (Atom)


























