Wednesday, November 17, 2010

குறுகிய கால ஆதாயம் நீண்ட கால இழப்பாக முடியலாம் - Malaysiaindru


நடப்புப் பேராக் தலைமைத்துவத்தின் குறுகிய கால வெற்றி 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு நீண்ட கால இழப்பாக முடியக் கூடும். 13வது தேர்தல் முன் 
கூட்டியே நிகழக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேராக் டிஎபி தேர்தல்களில் டிஎபி தேசிய உதவித் தலைவர் எம் குலசேகரன் தோற்கடிக்கப்பட்டது, நாடு முழுவதும் இந்திய சமூகத்தின் உணர்வுகளை தூண்டி விட்டுள்ளது. ஓரம்கட்டப்பட்ட அந்த சமுதாயம் மீண்டும் ஆத்திரமடைந்துள்ளது.
இங்கே-இங்கா கூட்டுக்கும் குலசேகரன்-பாசிர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் பூ தரப்புக்கும் இடையிலான பேராக் மாநில டிஎபியின் கட்டுப்பாட்டுக்காக நடந்த பூசலை ஊடகங்கள், ஊதிப் பெரிதாக்கி விட்டதால் கட்சியின் சாதாரண மாநிலத் தேர்தலான  அது நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட விவகாரமாக மாறி விட்டது.
அந்த இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான அரசியல் பகைமை உருவாக்கிய நெருப்பை அணைப்பதற்கு தேசிய டிஎபி தலைவர்கள் மேற்கொண்ட பல முயற்சிகள் 
தோல்வி அடைந்தன.

பேராக் டிஎபி தேர்தல்கள் நேர்மையாகவும் கவனத்துடனும் நடத்தப்பட்டன. அந்தத் தேர்தல் நடைமுறை பற்றி எந்தத் 
தரப்பும் புகார் கூறவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் பற்றிய பொது மக்கள் எண்ணம் குறிப்பாக இந்திய சமூகத்தின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அதுவும் வலிமை வாய்ந்த காலஞ்சென்ற டிஎபி அரசியல்வாதி  பி பட்டுவிற்கு வாரிசு எனக் கருதப்பட்ட குலசேகரன் சீனர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியில் “அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டும் வகையில் பாதிக்கப்பட்டு விட்டார்” 
என இந்திய சமூகம் கருதுகிறது.

இந்தியர்கள் “எதிர்ப்புணர்வு”

இந்தியர்களை அடித்தளமாகக் கொண்ட பிஎன் உறுப்புக் கட்சிகள், அரசு சாரா அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், வழக்குரைஞர்கள்  உட்பட பல தரப்புக்களிடமிருந்து பெற்ற கைத் தொலைபேசி அழைப்புக்கள் அந்த எண்ணத்தை மேலும் 
வலுப்படுத்துகின்றன.

பேராக் தேர்தல்கள் முடிவு பற்றி அறிந்து கொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை தமக்கு பல அழைப்புக்கள் வந்தததாக டிஎபி கட்சியின் தேசிய தொழிலாளர் பிரிவுத் தலைவர் எ 
சிவநேசன் மலேசியாகினியிடம் கூறினார்.

அந்த அழைப்புக்கள் அதிகமாக இருந்ததால் தமது கைத் தொலைபேசி செயலிழந்து விட்டது என்று அவர் சொன்னார்.

தாம் நீதிமன்றத்தில் இருந்ததால் அந்த அழைப்புக்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.

பேராக் டிஎபி தேர்தல் முடிவுகள் மீது இந்தியர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புணர்வு அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் பேராக்கை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பை பாதிக்கும் என அவர் கருதுகிறார்.

12வது பொதுத் தேர்தலின் போது ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடத்திய போராட்டத்தின் விளைவாக எழுந்த உணர்வுகள் பிஎன்னுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தடுத்து விட்டன. அத்துடன் பிஎன் ஐந்து மாநிலங்களையும் இழந்தது.

இந்த முறை ஏப்ரல் மாதம் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் இந்தியர் வாக்குகள், அரசியல் அலையை பிஎன்னுக்கு சாதகமாக திருப்பி விடக் கூடும்.  

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் பிஎன் இந்திய சமூகத்திடம் தான் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஒதுக்கப்பட்டதாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் இந்திய சமூகத்தின் தேவைகளை நிறைவேறுவதற்கு சிறப்பு ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment