அண்மைய சரவாக் தேர்தலில் அடைந்துள்ள வெற்றிகளைக் கருத்தில் கொண்டு டிஎபி சீனர் அல்லாத தொகுதிகளிலும் தடம் பதிக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.
சரவாக்கை அடுத்து சீனர்களை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கட்சி மலாய் பெரும்பான்மையைக் கொண்ட கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் போட்டியிடுவதற்கு குறைந்தது இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியிலாவது போட்டியிட அது எண்ணுகிறது.
“நாங்கள் திரங்கானுவில் பண்டார் தொகுதியில் போட்டியிட எண்ணியுள்ளோம். கிளந்தானைப் பொறுத்த வரையில் நாங்கள் இன்னும் தொகுதியைத் தேடி வருகிறோம்,” என டிஎபி துணை தேசிய அமைப்புச் செயலாளர் வின்சென்ட் வூ கூறினார்.
“எதிர்கால பக்காத்தான் கூட்டங்களில் டிஎபி அந்த விஷயத்தை எழுப்பும்”, என்றார் அவர்.
வூ, கிளந்தான், திரங்கானு மேம்பாட்டு விவகாரங்களுக்கான இயக்குநரும் ஆவார். அவ்விரு மாநிலங்களிலும் உள்ள அடி நிலை கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையும் அதுவே என அவர் சொன்னார்.
“டிஎபி 1980ளில் கிளந்தானிலும் திரங்கானுவிலும் போட்டியிட்டது. நடப்பு அரசியல் சூழ்நிலைகளுக்கு இணங்க அந்த மாநிலங்களில் அது மீண்டும் போட்டியிடுவதற்கான தருணம் வந்து விட்டது”, என குவா மூசாங் டிஎபி கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் வூ கூறினார்.
கடைசியாக அது கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பாடாங் காரோங் சட்டமன்றத் தொகுதியில் 1990 தேர்தலில் டிஎபி வேட்பாளரை நிறுத்தியது.
டிஎபி சீனர் ஆதிக்கம் பெற்ற கட்சி என அம்னோ கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் தாழ்வாகக் கூறி வருகின்றன என வூ தெரிவித்தார்.
ஆகவே டிஎபி பல இனக் கட்சி என்பதைக் காட்டுவதற்கு சீனர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து பொருத்தமான தொகுதிகளையும் அடையாளம் காண முயலுவோம்,” என்றார் அவர்.
அண்மைய சரவாக் தேர்தலில் கிட்டத்தட்ட சீனர் பெரும்பான்மை இடங்கள் அனைத்தையும் அந்தக் கட்சி வென்றதைத் தொடர்ந்து அது சீனர் ஆதிக்கக் கட்சி என பட்டியிலப்பட்டது. அதனைப் போக்குவதற்காக அது தற்போது சீனர் அல்லாத பகுதிகளில் ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நாட்டில் சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பெரும்பாலான தொகுதிகளை அந்தக் கட்சி வென்றுள்ளது. அது அடுத்த தேர்தலில் சீனர் அல்லாத தொகுதிகளிலும் ஊடுருவாவிட்டால் தேக்க நிலையை அடைந்து விடும்.
ஆனால் அதன் விரிவாக்கம் பிகேஆருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் அது சீன வாக்காளர்களைக் கணிசமாகக் கொண்ட தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
No comments:
Post a Comment