Friday, December 31, 2010

மக்கள் கூட்டணியில் நம்பிக்கையான எதிர்காலம் பிறக்கும்


செம்பருத்தி இனைய செய்தி. 
தினமும் காலம் நம்மை கடந்து செல்கிறது. காலத்தை வெல்ல நம்மால் முடியவில்லை. புதிதாக தோன்றிய அனைத்து முயற்சிகளும், 2011 ஆண்டு பழைமையானதாக தென்படும் வேளையில், புதிய கோணத்தில் சிந்தித்து முயற்சிகளை துரிதப்படுத்த புதிய சக்தி நமக்கு புது வருடத்தில் பிறக்கும் என்பது மெய்யாகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
மலரப்போகும் புதுவருடத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவரும் இணைந்து சுதந்திரமாக கொண்டாடி வரவேற்க்கவிருக்கும் புது வருடம், அனைத்து வழிகளுக்குமான புதிய ஆராம்பமாக அமையுமென நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதே சமயத்தில் பல சமுதாய சிக்கல்களையும் களைந்தெறிய கடமையும் நமக்கு உள்ளது என்பதனை மறுக்கவும் முடியாது.
புது வருடம் ஒவ்வொரு ஆண்டும் உதயமாகும் போதிலும் கூடவே அனைத்து மக்களும் அந்த தினத்தை புதிதாக பிறக்கின்ற ஒரு வருடமாக கருதும் வேளையில், புதிய ஆரம்பம் ஒன்றினை குறிப்பிடும் ஒரு நாளாக செயற்பட வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள்
அதே வேளையில் பல புதிய ஆரம்பம் என்று குறிப்பிடும் தருணத்தில் பல குறிப்பிட்ட மாற்றங்களை மக்கள் நலனுக்காக அமைய வேண்டும் என்பது என்னுடைய கனவாகிறது.
அவ்வகையில், முதன்மையாக இருக்கக்கூடிய வன்முறை கலாச்சாரம். சமீபத்தில் ஈப்போ வட்டாரத்தில் ஏற்படும் தொடர் கொலை சம்பவங்கள் மனதில் திகில் பிடிக்க செய்கிறது. இதற்க்கு என்ன காரணம் என்பதை நாம் கூர்மையாக சிந்திக்க வேண்டும்.
கிராமாபுரங்களிருந்து நகர்ப்புறத்திற்கு வேலை வாய்ப்புகளை தேடிவரும் இளைஞர்கள் ஒரு சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக தவறான சேர்க்கையில் ஈடுபடும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். அதன் விளைவு இந்திய சமுயாத்தில் குற்ற செயல்களின் அதிகரிப்பு. இதனை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது ஒரு புறமிருக்க அதனை சமுதாய இயக்கங்களின் கவனமும் குறைவாகவே காணப்படுகிறது. இப்பிரச்சனைக்கு புதிய சிந்தனை மலர்ச்சி தேவை.
அரசாங்கத்தின் பழைய வழக்கங்களை குறைசொல்லியோ அல்லது பழைய அரசியல் கோபதாபங்களை எடுத்துக்காட்டியோ மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பது உண்மை. ஆனால் பல ரூபங்களில் சுய முயற்சியும் அரசாங்கத்தின் நல திட்டங்களும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்௦க முடியும் என்ற  வாய்ப்பு உள்ளது. அதனை அரசாங்கம் மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ராணுவ சேவையில் மலாய் அல்லாதவர்களின் ஆர்வக்குறைவு என்பது உண்மையாக இருந்தாலும், இவர்களின் ஆர்வத்தை பன்மடங்கு உயர்த்த முயற்சிகளை அரசாங்கம் கண்டதில்லை என்பதும் உண்மையாகிறது. அதற்க்கு காரணம் அரசாங்கம் என்று முழுமையாக சொல்லலாம் ஆனால் வாய்ப்புகளை வழங்கும் பொழுது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதே வேளையில், அரசாங்கமும் வாய்ப்பு வழங்கியதோடு மனநிறைவு கொள்ளாமல், மலாய் அல்லாதவர்களின் பதவி உயர்வை  வருடாந்திர முறையில் கண்காணித்தல் வேண்டும். மேலும் பல அரசாங்க துறைகளில் சமமான வாய்ப்பு முறையை வழங்க அரசாங்கம் வழி செய்ய உறுதிசெய்ய குரல்கொடுப்போம்.
அடுத்த கட்டமாக தமிழ் கல்விக்கூடங்களின் பின்தங்கிய நிலையை வருகிற புதுவருடத்தில் புதிய தோற்றத்தை உருவாக்க அனைத்து இந்திய தலைவர்களும் பொறுப்புடன் பணியாற்றவேண்டும். சமீபத்தில் குவாலா பிலா தமிழ் பள்ளியை நேரில் கண்டபொழுது, வளர்ச்சி அடைந்த நாட்டில் இது போன்ற பள்ளிக்கூடங்களின் அவல நிலையின் தொடர்கதையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
வருகிற புதுவருடத்தில் இது போன்ற தமிழ் பள்ளி பள்ளிகளுக்கும் அதன் மாணவர்களுக்கு புதிய எதிர்காலம் காத்திருக்கிறது என்ற உறுதி மொழியை வழங்க சபதமெடுப்போம்.
இறுதியாக புதுவருட சந்தோஷ உணர்வு ஒருபுறமிருக்க, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பல குடும்பங்களின் மனதை மிகவும் ஆழமாக பாதித்துள்ளது. இதற்க்கு காரணம், வேலை வாய்ப்பு குறைவும்இ குறைந்த வருமானத்திற்கு வேலை செய்வதும்தான். அடிப்படை தேவைகளை கூட பூத்தி செய்துக்கொள்ள முடியாத நிலைமையில் நாட்டில் பொருட்களின் விலை உயர்வு கண்டுள்ளது. இச்சூழ்நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் குறைந்த பட்ச சம்பள முறையை அமுல்படுத்த வேண்டும்.
அரசாங்கம் மற்றும் தனியார் துறையிலும் சுமார் 70 சதவிகித மக்கள் 1500 வெள்ளிக்கு கீழ் வருமானம் பெறுகிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் காட்டும் வேளையில், இச்சம்பளம் விலைவாசிக்கு ஏற்றதா என்று அரசாங்கம் எண்ணிப்பார்க்க வேண்டும். அதனை நாம் வருகின்ற புத்தாண்டில் மாற்றியமைக்க உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.
மலர்கின்ற இந்த புதிய ஆண்டில் நாம் அனைவரும் இனிய அனுபவத்தை பெறப்போகும் வேளையில் ஒரு இனிய புத்தாண்டு செய்தியை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன் என அவர் அவ்வறிக்கையில் குறிபிட்டுள்ளார்.

No comments:

Post a Comment