Thursday, December 16, 2010

அமைச்சின் புறக்கணிப்பு

காராக் - 03/04/2008 -  இல் பெந்தோங் மருத்துவமனையில் உயிரிழந்த சிவா த/பெ அய்யாவு வயது 31, சார்ந்த குடும்பத்தினருக்கு இன்றைய நாள் வரை எந்த ஒரு நீதியும் கிடைக்காமால் இழுபறி நிலையில் உள்ளது. 



இவருடைய இறப்பின் ஒரு முக்கிய காரணம் மருத்துவமனையின் கவனக்குறைவே என்று சிவாவின் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர். சிவாவின் தாயார் திருமதி பார்வதி தன மகனின் இறந்ததற்கு என்ன காரணம் என்று சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் சுகாதார அமைச்சிடம் கேட்டு வருகிறார். ஆனால் அவருக்கு எந்த ஒரு முழுமையான பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதே உறுதியாகா உள்ளது. தன மகனின் இறப்பு காரணமான சுகாதார அமைச்சின் இத்தகையான போக்கு மனித உயிருக்கு எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் இல்லை என்பதனை தெளிவுபடுத்துகிறது. 

மேலும் சுகாதார அமைச்சரின் உதவியாளரை சந்தித்து பேசியபொழுது, இது சம்பந்தமான வழக்கு தற்சமயம் தலைமை சட்ட ஆலோசகர் அலுவகலத்தில் உள்ளதாகவும், கூடிய விரைவில் வழக்கின் முடிவு அறிவிக்கப்படும் என்பதனை தெரிவித்தார். இருப்பினும் ஏன் இன்றைய நாள் வரை சுகாதாரா அமைச்சின் கவனத்தில் உள்ள இந்த வழக்கின் நிலவரங்களை எழுத்து பூர்வமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிவிக்க வில்லை என்ற கேள்வியை கேட்டதற்கு, அதன் விவரங்களை சொல்ல மறுத்து விட்டார். 

ஒவ்விரு முறையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, பொறுமையாக இரு என்ற பதிலை தவிர வேற எதுவும் அவர் கூறுவதில்லை என்று சிவாவின் தம்பி பாலா தெவித்தார். 

இதையடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை, சிவாவின் குடும்பத்தினர் பஹாங் ஜ.செ.க-வை சேர்ந்த திருமதி காமாட்சி துரைராஜுவின் உதவியோடு அமைதியான முறையில் நீதி கேட்டு அமைதி ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டனர். 

சிவாவின் மரணத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று காமாட்சி தெரிவித்தார். இந்தியர்களுக்கு பாதிப்பு என்று வந்து விட்டால் அரசாங்கமோ அல்லது அமைச்சோ உடனடி தீர்வை எடுப்பதில்லை. ஆகையால், இந்த வழக்கை, இன்னும் தள்ளி போடாமால் அந்த குடும்பத்திற்கு உடனடி இழப்பீடு தொகை பெறுவதற்கு சுகாதாரா அமைச்சு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று திருமதி காமாட்சி கேடுக்கொண்டார். 

No comments:

Post a Comment