அன்பு, சகோதரத்துவம், மனித நேயம் போன்ற பல நல்ல எண்ணங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர் மாமனிதர் இயேசு. அவரின் பிறந்த நாளை "கிறிஸ்துமஸ் திருநாள்"ளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் மலேசியாவில் கிறிஸ்துமஸ் திருநாளை மிகுத்த மகிழ்ச்சியோடு கொண்டாடிடும் கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், ஜ.சே.க-வின் சார்பிலும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது அன்றாட வாழ்கையில் சிறந்த செயலை செழிப்பாக செய்திடவும் வாழ்வில் எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்து பல இன மக்களுடன் ஒற்றுமையாய் இத்தினத்தை கொண்டாடி மகிழ்வோம்.
இந்த நன்னாளில் “ஏழைகள் வயிற்றில் அடிக்காதே; கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே; பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே; உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே; வறுமையில் உழல்வோர்க்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்; துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே; ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே; பூசலைத் தவிர்த்திடு!” என்ற பொன் மொழிகளுக்கேற்ப வாழ வகைசெய்வோம்.
மனிதர்களின் ஆழ்மனதை தட்டி எழுப்பும் இந்த அறிவுரைகளை மனதில் தக்கவைத்துக் கொண்டு, சமுதாயத்தில் ஏழை எழியோர்க்கு இயன்ற உதவிகளை செய்திடுவோம். துன்பத்தில் இருப்போரின் இன்னல்களை அகற்ற உதவிடுவோம். மனகசப்புகளை வேரோடு களைந்து, சமத்துவமாக வாழ உறுதியேற்போம். |
|
|
|
|
No comments:
Post a Comment