கடந்த ஆகஸ்ட் 27 ம் திகதி அன்று அரசாங்கம் எந்த ஒரு பாரபச்சமின்றி இனவாதமாக பேசும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி மொழியை தேசிய முன்னணி இளைஞர் ஆய்வுக்கூட்டத்தில் கூறினார் பிரதமர். ஆனால் இது நாள் வரை இனவாதமாக பேசிய இரண்டு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியின் மேல் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று பொது மக்களின் கேள்விக்கு எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருப்பது வேதனை தருகிறது.
சீனர்கள் தனது சொந்த நாட்டிற்க்கு போய் விடு என்பதும் இந்தியர்களை நாய்கள் என்பதும் இனவாதமான பேச்சாக இல்லையா?
இதே போன்ற இனவாத வார்த்தைகளை வீசிய புகிட் செலம்பாவ் இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீன மாணவர்களை பார்த்து "பாலிக் சினா" என்று கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 4-ம் திகதி கூட்டரசு மாநில போலீஸ்படைத் தலைவர் இனவாதமாக பேசிய அதிகாரி தற்சமயம் நிர்வாக வேலைகளுக்கு பணி மாற்றம் பெற்றுள்ளார் என்று சொன்னார்.
மேலும் அவரின் மேல் தொடுக்கப்பட்ட புகார் முடிவுக்கு வரும் வரை அங்கேயே பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இவர்களின் அனைவரின் மேல் முழுமையான விசாரணை அறிக்கை முடிவுக்கு வந்துவிட்டால் எதற்காக தாமதிக்கவேண்டும்.? பொது சேவைத் துறை விசாரணை அறிக்கை பெற்றுள்ளதாக கூறியது. இருப்பினும் இதனால் வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மக்களுக்கு தெரியவில்லை. ஏன்?
அதன் அடிப்படையில், பிரதமர் தனது உரையின் வழி செய்யாத ஒன்றை கூறாமல் சொன்னதை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
நன்றி.
No comments:
Post a Comment