Saturday, November 27, 2010

ஆணவமும் வெறுப்புதன்மையும் கொண்ட அம்னோ தேசிய முன்னணி, கொள்கை பாணி மாறாது - மு.குலசேகரன்


மிகுந்த பரபரப்புடன் பேசப்படும் முன்கணிப்புகளில் ஒன்று தான், கூடிய விரையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தல் வியூகங்கள். சமீபத்தில் தேசிய முன்னணியின் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி பிரதமருக்கு புதிய புத்துணர்ச்சியை தந்துள்ளதாக பேசப்படுகிறது. அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் ஆருடங்கள் வெளியாகின்றன. 

அதனை தொடர்ந்து சமீபத்தில் தேசிய முன்னணி உறுப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்றான தேசிய முன்னணி நேரடி உறுப்புரிமை, தேர்தல் உத்திகளை வலுப்படுத்த செய்யும் சூழ்சிகள் என்று கருதப்படுகிறது. இவை அனைத்தையும் கவனிக்கும் பொழுது இடைத்தேர்தல் இல்லை என்ற சாத்தியக் கூறு அப்பட்டமான பொய்யாக திகழ வாய்ப்புள்ளது. அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது போல நாடுதழுவிய அளவில் வெறும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் அடுத்த வருட மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் பேராக் மாநில மக்களின் மன ஆதங்கம் மிகவும் மாறுபட்ட நிலையில் உள்ளது. அதாவது மக்கள் கூட்டணி மீண்டும் பேராக் மாநில ஆட்சியை கைப்பற்றுமா மேலும் நஜிப்பை நாடாளுமன்ற எதிர் அணி தலைவாராக பதவியில் அமரவைக்க  சாத்தியம் உள்ளதா என்ற கேள்விகளுக்கு மட்டும் பதில் தேவைப்படுகுறது. இவர்களின் ய்திர்பார்ப்பு மிகப்பெரிய உண்மையாக அமைய சாத்தியமே. இருந்தாலும் இந்த உண்மைகளை மனதில் வைத்துக்கொண்டு கனவு காண்டல் மட்டுமே போதாது அதனை உறுதி செய்ய அனைவரும் பாடுபட வேண்டும். 

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் தோல்வியை தழுவியது மக்கள் கூட்டணியின் 
அபரிமிதமான நம்பிக்கை எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து. உயர்ந்த நம்பிக்கை உறக்கத்திலிருந்து மக்கள் கூட்டணிக்கு கண்விழிக்க எழுப்பப்பட்ட ஓசைதான் அது. நமது பலவினங்களை முழுமையாக கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து மக்களின் மனதில் மீண்டும் பலமாக நம்பிக்கையை பிடிக்க பாடுபட வேண்டும். தற்சமய சூழலுக்கு இரட்டிப்பாக உழைத்தாக வேண்டும். 

ஒரு நேர்மையான சமயுரிமை கொண்ட மலேசியாவை பார்க்க வேண்டும் என்ற மலேசியர்களின் கனவு மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என்பது திண்ணம். 

ஒரு சில நேரங்களில் மக்களின் ஆசியோடு  தர்மம் தவறி தறிகெட்ட ஆட்சி நடத்திய அரசாங்கங்களின் வரலாறுகள் உள்ளதை நாம் மறக்க கூடாது. அந்த பட்டியலில் அடுத்த இடம் பிடிக்க துடிப்புடன் ஆட்சி செய்வது தேசிய முன்னணிதான். ஆட்சி நெறிகளை மதிக்காமல் வழி தவறி செல்லும் ஆணவ தேசிய முன்னணி, பரிதாபமாக நிலைக்கு தள்ளப்படும் நாள் தூரத்தில் இல்லை. இக்குணம் அவர்களின் ஆண்டாண்டு கால  குணம். அதனை மாற்றி அமைத்தால் அவர்கள் தத்தளிக்க நேரிடும். ஆகவே அவர்களை ய்திரனியில் அமர வைப்பதே மிகச் சிறந்தது. 

எடுத்துகாட்டாக, சமீபத்தில் மலாய் அல்லாதாரின் விசுவாசத்தை பற்றி பேசிய தற்காப்பு அமைச்சரின் வார்தகை, மக்கள் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுபினர்களின் கோபத்திற்கு ஆளாகியது. அனைவரும் அந்த கூற்றை எதிர்த்தனர். மேலும் செய்த தவற்றிற்க்கு மன்னிப்பு கேட்காமல், என்னை இராணுவ சேவையில் சென்றது நாட்டின் மேல் உள்ள விசுவாத்தை காட்ட எனக்கு சவால் விடுத்தார் சஹிட் ஹமிடி. இந்த அழைப்பு எனக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. ஒருவர் தனது நாட்டின் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை இராணுவ சேவையில் சேர்ந்துதான் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சருக்கு தெரியவில்லை. 

மக்கள் கூட்டணி என்றைக்கும் தனது மக்களுக்கு விசுவாசதன்மை கொண்ட ஆட்சியை நடுநிருத்த பாடுபடு என்பதனை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

ஆனால் தேசிய முன்னணியின் அராஜகம் இதோடு முடிந்துவிடுமா? இல்லை. காரணம் எந்த நேரத்திலும் அமைச்சரவைல் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்லப்பட்ட தகவல் உண்மையில்லை என்று பிரதமர் கூறியுள்ள வேளையில், மக்களை விசுவாசத்தை சீண்டிய தற்காப்பு அமைச்சரின் வார்த்தைகளுக்கு பிரதமர் என்ன நடவடிக்கை போகிறார்? அல்லது இவரின் வார்த்தை காலத்தின் கட்டாயம் என்று சொல்லி தட்டிக்களிப்பாரா? ஆணவத்தின் எல்லை மீறல் இது.அதற்க்கு தேசிய முன்னணி தூண்டுகோலாக  இருக்கிறது. 


இந்த ஆணவ அகம்பாவம் கொண்ட தேசிய முன்னணி அரசாகத்திற்கு பாடம் புகுட்ட மக்கள் முழு மனதோடு மக்கள் கூட்டணி தலைவர்களுடன் ஒரு இத்த ஆதரவை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment