சிறந்த மாணவர்களுக்கு பொது சேவையின் கல்வி உபகார கடனுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுவதில் தேசிய முன்னணி அரசாங்கத்தை ம.சீ.ச கவர்வதில் தோல்வி கண்டுள்ளது என்று, ம.சீ.ச-வின் தேசிய இளைஞர் பிரிவு தலைவரும், தேசிய முன்னணியின் அமைச்சரவையில் கல்வி அமைச்சின் துணை அமைச்சருமான டத்தோ வீ கா சியோங் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஜ.செ.க.வின் தேசிய இளைஞர் பிரிவு தலைவரும், ராசா நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் கேட்டுக் கொண்டார்.
கடந்த வருடத்தை போல, இவ்வருடமும் தகுதி அடிப்படையில் 20 %, இன அடிப்படையில் 60 %, சிறப்பு சலுகையில் 10 % மேலும் 10 % சபா மற்றும் சரவாக் புமிபுத்ராக்களுக்கு என்ற முறையில் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
"ஒரு துணையமைச்சர் பொறுப்பில் இருக்கும் டத்தோ வீ கா சியோங், இவ்விவகாரம் குறித்து ஜ.செ.க வின் தேசிய பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அவர்கள் எந்த ஒரு கேள்விகளையும் எழுப்பக்கூடாது என்று கூறுவது, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை"
"தற்சமயம் தான் துணையமைச்சராக இருக்கும் தருணத்தில் தனக்கு யாரும் கேள்விகளை தொடுக்க கூடாது என்று சொல்வதற்கு சட்டங்கள் ஏதேனும் உள்ளதா? தன்னுடைய இயலாமையை, பிறர் சுட்டிக் காட்டுவது தவறு என்று வீ கா சியோங் நினைத்தால், தனது அரசியல் வாழ்கையிலிருந்து தன்னை நீக்கிக் கொள்வதே சரியானதாகும்" என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment