Saturday, July 2, 2011

வான் அஹ்மாட், தேசிய முன்னணியின் சொல்பிள்ளை மற்றும் அரசியல் குழப்பவாதி


மக்களை குழப்பி அவர்களிடம் பல பொய்யான தகவல்களை கூறி நற்பெயரை வாங்க முயற்சிக்கிறது தேசிய முன்னணி. அந்த வகையில், பெர்சே 2 பேரணி மத்திய அரசாங்கத்தை மாற்றியமைக்க மக்கள் கூட்டணி மேற்கொண்டு வரும் சதிப்பயணம் என்று தேசிய முன்னணி மக்களின் மனதில் பூச பார்க்கிறது. 

அதற்கு தோதாக தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் டத்தோ வீரா வான் அஹ்மாட் அவர்கள் பெர்சே 2 பேரணிக்கு எதிராக தெவித்த கருத்த பலரின் மத்தியில், தேர்தல் ஆணையத்தின் நேர்மைக்கு கேள்வி குறியை உருவாக்கியுள்ளது. 

ஜ.செ.க -வின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் கூறுகையில் " வான் அஹ்மாட் தேசிய முன்னணியின் கைப்பாவையாக செயல்படுவது மட்டுமல்லாமல், தனக்கு வழங்கிய பொறுப்பை அரசியல் சாசனத்திற்கு எதிராக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கிறார் என்று கூறியுள்ளார். 

எதுவேண்டுமானாலும் செய்யும் மக்கள் கூட்டணி"  என்று அம்னோவின் " இன்மைன்" ஏற்பாடு செய்திருந்த "பெர்செவின் கோரிக்கை - தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?" என்ற தலைப்பையோட்டிய கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய பொழுது, வான் அஹ்மாட் கூறியது, அவர் தேசிய முன்னணியின் பொறுப்பான கைபிள்ளை என்பது நிரூபனமானது.  


"சமீபத்தில் நடந்து முடிந்த பல இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணியின் வெற்றியை கண்டு மக்கள் கூட்டணி அஞ்சம் கொண்டுள்ள வேலையில், இந்த பெர்சே பேரணியின் வழி பல விதமான சூழ்ச்சிவலைகளை பின்னி மக்களின் ஆதரவை பெற 
"இது போன்ற கொள்கை கொண்ட துணை ஆணையர் தேர்தல் ஆணையத்தில் இருந்தால், அவர் எவ்வாறு நேர்மையாக தனது கடமையை செய்ய முடியும்? நேர்மை, நியாயம், மாசுபடியாத தேர்தல் முறை வேண்டும் என்று கோரிக்கை விடுவது தவறா? மக்களின் கோரிக்கைக்கு எதிராக குறைகூறும் இது போன்ற ஆணையர் தேவையா? 

ஆகவே, உடனடியாக தேர்தல் ஆணையத்தின் இதர ஆணையர்கள் அனைவரும் கூட்டம் ஒன்றினை அரங்கற்றம் செய்து, வான் அஹ்மாட் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.