Thursday, August 12, 2010

டிண்டிங்ஸ் இந்தியர் சங்க தீர்மானங்கள்

அரசாங்க சார்பற்ற இயக்கங்களும் சமுதாய தலைவர்களும் இணைந்து டிண்டிங்ஸ் இந்திய சங்க நிலப்பிரச்சனை குறித்த விவரங்களை மக்களுடன் கலந்தாலோசிக்க கூட்டம் ஒன்றினை சித்தியவான் காந்தி மண்டபத்தில் ஏற்பாடு செய்தது. இரண்டு ஹெக்டர் நிலப்பரப்பை கொண்ட இந்நிலத்தை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்திக்கொள்ளும் திட்டத்தை பற்றி பேசப்பட்டது.



கலந்து கொண்ட அணைத்து பொது மக்களும் மற்றும் பொது இயக்கங்களும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை முற்றாக எதிர்த்து குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களின் அதிருப்தியையும் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உணர்வுள்ள இந்திய மக்கள்கள் கலந்துகொண்டு கருத்து பறிமாறினர்.


மு.குலசேகரன் தனது கருத்தை வந்தவர்களிடம் அறிவிக்கிறார்
இந்த கலந்துரையாடலில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் வந்திருந்த மக்களிடம் தனது நிலைபாட்டினை உறுதி அளித்தார். மத்திய அரசாங்கத்தின் திட்டம் ஒரு தேவையற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்தியர்களின் சொந்த சொத்தை பாதுகாக்க இந்தியர்கள் போராட வேண்டிய நிலை உருவாகிறது? ஏழைகளின் சொத்தை பாது காப்பது அரசாங்கத்தின் கடமை இல்லையா?இந்தியர்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு அரசாங்கத்தை நம்பி முறையிட்டால் அரசாங்கம் நமது சொத்தை துண்டாட முயல்கிறது.இந்த பிரச்சனை சுமுகமாக தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு எண்ணமில்லா பட்சத்தில் நமது இந்தியர்களின் உணர்ச்சியை தூண்ட வழிசெய்கிறது தேசிய முன்னணி.

இவ்வகையில் மக்கள், தேசிய முன்னணியின் அராஜகத்தையும் உணர்வற்ற செயலையும் வெறுக்கும் நிலை கூடிய விரைவில் நடைபெறும் சாத்தியம் உண்டு என்பதனை இதன் வழி அறிய முடிகிறது.

சுற்று வட்டார இந்திய மக்கள்கள் இந்நிலத்தை அவர்களின் தனிப்பட்ட சொத்தாக நினைக்கும் காரணத்தில் இந்த நிலத்தை கைமாற்றும் முயற்சியை மத்திய அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும். அன்றைய காலங்களில் நமது மூதாதையர்கள் வாங்கிய சொத்து இன்று நமது இந்தியர்களின் சின்னமாக விளங்கும் இந்நிலத்தை "லிட்டில் இந்தியா" என்று அரசாங்கம் பிரகடனம் செய்தல் வேண்டும்.

அதன் தொடர்பில் கீழ்வரும் தீர்மானங்கள் மத்திய அரசாங்கத்தின் கவனத்திர்க்கு :

டிண்டிங்ஸ் இந்திய சங்கத்திற்கு சொந்தமான 2ஹெக்டர் நில விவகார கூட்டம் நேற்று சித்தியவான் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. சித்தியவான் இந்திய மக்களுடன் கலந்தலோசித்தப் பிறகு கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

தீர்மானம் : இந்த தீர்மானத்தை ஒரு முன்னோடியாகவும், இந்திய மக்களின் ஒற்றுமையின் குரலாகவும் கருதி கீழ்வரும் அணைத்து தீர்மானங்களையும் மத்திய அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும்.

1. 2 ஹெக்டர் பரப்பளவு கொண்ட டிண்டிங்ஸ் இந்தியர் சங்க நிலம் எங்களின் மூதாதையர்கள் தொட்ட தொழிலாளர்களாக உழைத்த வியர்வையின் பணத்தில் வாங்கப்பட்டவையாகும். இந்நிலத்திற்கு பல இன மக்களின் ஆதரவும் கொடையாளர்களின் பங்கும் அளப்பரியது. எந்த ஒரு காரணத்தினால் இந்நிலத்தை மத்திய அரசாங்கம் இந்தியர்களின் சிறப்பு அம்சம் கொண்ட நிலமாக கருதி அதனை கைப்பற்ற முயற்சியை கைவிடுதல் வேண்டும்.

2. மத்திய அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக இந்நிலத்தின் சரித்திர அம்சங்களை கவனித்தால், இந்தியர்களின் ஒற்றுமையில் இந்தனை காலம் பராமரித்த இந்த நிலத்தின் மாண்பை அறியவாய்ப்புண்டு. இந்நிலத்தைஅபகரிக்கும் திட்டத்தில் விருப்பம் தெரிவித்த மத்திய அரசாகத்தின் நிலைபாட்டினை சித்தியவான் வட்டாரத்தில் வாழக்கூடிய இன்றைய இந்திய சங்கதியினர் முற்றாக எதிர்க்கும் பட்சத்தில் அத்திடத்தை கைவிடுதல் வேண்டும். இந்தியர்களின் உணர்வுக்கு எதிர்மறையாக செயல்பட எண்ணம் கொண்டிருந்தாள் அவை சித்தியவான் வாழ் இந்தியர்களின் வளர்ச்சிக்கும் வருங்காலா சங்கதியினருக்கும் அச்சுறுத்தும் திட்டமாக வகை செய்யும் என்பதனை அறிதல் வேண்டும்.

3. இந்நாட்டு அங்கிகாரப்பெற்ற குடிமக்களாக இருந்த பொழுதும் இந்தியர்களுக்கென்று சிறப்புரிமை வழங்கப்படாத பட்சத்தில் சித்தியவான் வாழ் இந்திய மக்களின் பாரம்பரிய சொத்தாக விளங்கும் டிண்டிங்ஸ் இந்தியர் சங்க நிலத்தை மத்திய அரசாங்கம் பாதுகாத்து அதற்க்கு இந்திய பாரம்பரிய நிலம் என்று ஆணை பிறப்பித்தல் வேண்டும்.

4. மத்திய மற்றும் மாநில அரசாங்கம் இரண்டும் ஒன்றிணைத்து இந்தியர்களின் சொத்துடமையை பாதிக்கும் அளவிற்கு எந்த ஒரு நிலத்தையும் அபகரிக்காமல் இருக்க உறுதிசெய்தல் வேண்டும். இந்திய சொத்துடமை வளர்ச்சி எட்டா கனியாக இருக்கும் பட்சத்தில் இந்நிலைக்கு அரசாங்கமே முழுமையான காரணம் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
 
5. இனிவருங்காலங்களில் இது போன்ற இந்தியர்களின் சொத்து அபகரித்தல் முற்றாக தடைசெய்யும் வகையில், 50 வருடங்களுக்கு மேலான நிலத்தை இந்தியர்களின் சின்னமாகவும் மற்றும் இந்தியர்களின் பாரம்பரிய நிலமாகவும் உடனடி அங்கிகாரம் வகைசெய்யும் சட்ட மசோதா நிறைவேற்றல் வேண்டும்.ஆகவே இது போன்ற செயல்கள் கண்டத்திர்க்குரியவை.மேலும் இச்செயல் தொடர்ந்தாள் அவை இந்தியகளுக்கு துரோகம் விளைவிக்கும் செயலாக கருதப்படும்.

6. இறுதியாக, டிண்டிங்ஸ் இந்திய சங்க நிலத்தை இங்கிருக்கும் இந்திய மக்களின் விலை மதிக்க முடியாத சொத்தாக கருதி இந்நிலத்தை " சித்தியவான் லிட்டில் இந்தியாகவாக" பிரகடனம் செய்தல் வேண்டும் என்ற கோரிக்கையை ஒற்றுமையுடன் சமர்பிக்கிறோம்.

Tuesday, August 10, 2010

மீண்டும் வெளிச்சத்திற்கு வருகிறது டிண்டிங்ஸ் இந்தியர் சங்க நிலப்பிரச்சனை - மு.குலசேகரன்

கடந்த வாரம் மத்திய அரசாங்கம் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்திற்கு சொந்தமான 2ஹெக்டர் நிலம் குறித்து,மக்களின் ஆரம்ப கட்ட  நிலைபாட்டினை அறிந்து கொள்ள அனைவருக்கும் முன் அறிவிப்பு கடிதம் ஒன்றினை வழங்கியது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான கலந்துரையாடல் வருகிற ஆகஸ்ட் 25ம் திகதி மன்ஜோங் நில அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
டிண்டிங்ஸ் இந்தியர் சங்கப் பிரச்சனையை எந்த ஒரு தரப்பினரும் அரசியலாக்க வில்லை என்பதனை டத்தோ வீரசிங்கம் புரிந்து கொள்ளல் வேண்டும். இந்த நிலப்பிரச்சினை குறித்து பொது மக்களுடன் கருத்து ஆலோசனை பெறமுயல்வது மிகவும் சிறந்த வழியாகுமே ஒழிய ம.இ.கவை சார்ந்த நிர்வாக உறுப்பினருடன் கலந்துரைடயால் ஏற்பாடு செய்தது, யார் இவ்விவகாரத்தை அரசியல்லாக முயல்கிறார்கள் என்பதனை டத்தோ வீரசிங்கம் நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும்.

பேராக் மாநில தேசிய முன்னனின் ஆட்சியில் மந்திரி பெசாரின் இந்திய பிரிவு ஆலோசகராக செயல்படும் டத்தோ வீரசிங்கம் இந்த பிரச்சனையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பது அவரின் தகுதியற்ற செயலை தெளிவுபடுத்துகிறது. இப்பிரச்சனை குறித்து தாம் மாநில மந்திரி பெசாருடன் கலந்து பேசிய பிறகுதான் நல்ல முடிவை பிறப்பிக்க முடியும் என்ற எண்ணம் அனைவரின் எதிர்பார்ப்பே ஒழிய உறுதியான முடிவுகிடையாது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அரசியல் நெருக்கடியில் மாநில ஆட்சியை தேசிய முன்னணி கைப்பற்றிய பிறகு இவ்விவகாரம் ஒரு தீர்வற்ற தொடர்கதையாக மாற்றம் கண்டுள்ளது.

இந்நிலப் பிரச்சனை தொடர்பான சூழ்நிலை குறித்து எங்களுக்கு தெரிந்த வகையில், மத்திய அரசாங்கம் சில சாத்தியகூறு அறிக்கைகளை ஒருவருட காலத்திற்கு முன்பே தயார்செய்ய தொடங்கியது என்பதனை மறுக்கவும் மறைக்கவும் முடியாத ஒன்று. இவ்விவகாரம் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் கூட்டு முயற்சில் நடந்தது என்பதும் உண்மை. அதன் சூழ்நிலையில் மாநில இந்திய பிரிவு ஆலோசகர் டத்தோ வீரசிங்கத்திர்க்கு ஒரு சில கேள்விகள் :

1. இந்த நிலப்பிரட்சனையை நீங்கள் நன்கு அறிவீர்களா?

2.இதற்க்கு முன்பு மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்துடன் இந்நிலத்தை கைப்பற்ற விருப்பத்தினை தெரிவிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றதா இல்லையா?

3.அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட பிறகு எதற்க்காக இப்பிரச்சனை குறித்து தீர்வுகாணும் முயற்சி எடுக்கப்படுகிறது?

4. அந்த சூழ்நிலையில் தீர்வு நிலை முடிவின் உச்சக்கட்ட முடிவு என்னவாக இருக்கும்?

5.எதற்க்காக இந்தியர்கள் தனது சொந்த நிலத்தை தர்காப்பதற்க்காக இவ்வளவு போராட வேண்டியுள்ளது? இச்சூழ்நிலையை தவிர்க்க, ஆரம்ப நிலையில் கலந்தாலோசித்து நல்ல முடிவினை எடுக்க ஏன் தாமதம் ஏற்பட்டது? இது மக்கள் விருபத்திற்கு மாறான செயல் இல்லையா?

எங்களுக்கு கிடைக்கப்பெற்ற கருத்துப்படி மக்கள் இந்நிலப்பிரட்சனை குறித்து மிகவும் வேதனை அடைவது மட்டுமில்லாமல், இந்தியர்களின் நிலத்தை எதற்காக அரசாங்கம் கூறுப்போட முயல்கிறது என்ற கேள்வியும் கூடவே எழ செய்கிறது.

எத்தனையோ காலி நிலங்களில் புதிய பள்ளிகூடங்களை கட்ட விருப்பம் தெரிவிக்காத அரசாங்கம் இந்நிலத்தை பள்ளியின் பெயரில் கைப்பற்ற நினைப்பது என்ன நியாயம்? இதில் ஏதோ ஒரு மறைமுக நோக்கம் உண்டு என்ற கருத்து கேள்விக்குறியாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்நிலத்தை கைப்பைற்றிய பிறகு, இந்நிலத்தின் பாதி இடத்தை ஒரு சில அதிகாரத்திலுள்ள நபர்களின் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு வர்த்தக மேம்பாட்டிற்கு வழங்கவும் திட்டம் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலம் கடந்த 1930 ம் ஆண்டில் தோட்ட மக்களின் வியர்வை சிந்தி வாங்கியதை அனைவரும் கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிற்கும் இது தொடர்பான சித்தியவான் இந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் மாலை மணி 7 க்கு கலந்து கொண்டு தங்களின் நிலைபாட்டினை தெரிவிக்க ஒன்றாக வரவேண்டும் என்பதனை இதன் வழி தெரிவிக்கின்றேன்.

அதே சமயத்தில்,இது தொடர்பாக மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் பொதுமக்களுடன் வட்ட மேசை கூடம் ஒன்றினை ஏற்பாடு செய்து அதில் பொது மக்களின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.