சித்தியவான் டிண்டிங்ஸ் இந்திய சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பள்ளி மேம்பாட்டிற்கு கையகப்படுத்தும் விருப்பத்தில் மாநில அரசாங்கம் பின்வாங்கிக்கொள்ளும் முடிவினை நேற்று பேராக் மாநில மந்திரி புசார் டத்தோ ஜம்ரி காதீர் அறிவித்தார். அதனை தொடர்ந்து பேராக் மாநில ம.இ.க-வின் தலைவர் டத்தோ வீரசிங்கம் அவர்கள் மன்ஜோங் மாவட்ட நில அலுவலகத்தை சந்தித்து மாநில அரசாங்கத்தின் இறுதி முடிவை தெரிவித்து அத்திட்டத்தை ரத்து செய்வது மட்டுமல்லாமல் 2.2 ஹெக்டர் நிலத்தின் மேல் போடப்பட்ட கல்வி அமைச்சின் சிம்பாங் அம்பாட் ஆரம்பப் பள்ளியின் மேம்பாட்டு திட்ட தடையுத்தரவையும் மீட்டுக்கொள்வார் என்று அறிவித்தார்.
பேராக் மாநிலத்தின் இந்த முடிவு இந்தியர்களின் ஒற்றுமைக்கும் மக்களின் உறுதியான நிலைபாட்டிற்கும் கிடைந்த ஒரு மிகப்பெரிய வெற்றியாக திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் இது ஒரு முன்னோடியாகவும் அமைகிறது என்பதனை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்நிலத்தை கையகப்படுத்தும் அந்த யோசனை உணர்வற்றது, நியாயமற்றது, அவசியமற்றது என்பதோடு அநீதியும் கூட எனக் பொது மக்களுடன் சந்திப்பில் நான் கூறியதுண்டு. இவ்விவகாரம் தொடர்பில் முக்கியமான மூடரு விசயங்களை நான் இங்க குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.
ஒன்று, சுமார் என்பது வருடங்களுக்கு முன்பு வாங்கிய இந்த நிலம், வரலாற்று மற்றும் இந்தியர்களின் உணர்சிப்பூர்வமான மாண்புகளை கொண்டுள்ள காரணம் இந்நிலம் 1930களில் சித்தியவானைச் சுற்றியிருந்த 35 தோட்டங்களின் ரப்பர் மரவெட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பில் அந்த நிலம் வாங்கப்பட்டது என்பதாகும்.
இராண்டவதாக, இந்நிலதிளிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட சுங்கை வாங்கி செம்பனை தோட்டம் உள்ளது. இத்தோட்டம் அரசாங்கம் தொடர்பு நிறுவனங்களின் ஒன்றனான சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான நிலமாகும். 15ந்து வருடங்களுக்கு முன்பு 150 ஏக்கர் நிலத்தை தற்காப்பு அமைச்சு விமான நிலையம் கண்டுவதற்க்கு அந்த தோட்டத்திலிருந்து முறைப்படி வாங்கியது. அச்சூநிலையில் 15ந்து வருடத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு நிலம் வாங்க முன்வந்த மத்திய அரசாங்கம் ஏன் ஒரு புதிய பள்ளிகூடத்தை கண்டுவதற்க்கு நிலத்தினை பெற முன்வரவில்லை என்ற உண்மையை அறிவித்தேன் என்பதாகும்.
மேலும், பொதுவாக நகர்புறத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளை மாற்று இடங்களுக்கு மாற்றியமைப்பது வாகன நெரிசலை குறைக்க வகைசெய்யும் வழக்கமாகும். அவ்வகையில் டிண்டிங்ஸ் நிலம் சித்தியவான் நகர்ப்புற மையத்தில் அமைந்தவையாகும். அந்த கோணத்தில் பார்த்தல் நகர்புறத்தில் அமைந்த நிலத்தில் பள்ளியை புதிப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?
இந்நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை எந்த ஒரு பொறுப்பான அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த சூழ்நிலையில் ஒரு கடமையுள்ள அரசாகத்த்தின் நிலைப்பாடு என்பது மக்களின் உணர்வுக்கு மதிபளிப்பதாகும். அவ்வகையில் பேராக் மாநிலத்தின் இந்த தாமதமான முடிவு ஒரு அறிவுபூர்வமான முடிவுமட்டுமல்லாமல் சரியான முடிவாக கருதுகிறேன்.
இருந்தபோதிலும் தேசிய முன்னணியின் ஆணவ ஆட்சி மற்றும் உணர்ச்சியற்ற செயல் மக்களின் ஒன்றுமைக்கு முன்னாள் இனியும் எடுபடாது என்பதனை இவ்விவகாரம் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது.
மேலும் இவ்விகாரம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கடிதமும் பெறாத வரையில் எங்களின் நிலைபாட்டில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. அதே சமயம் இந்நிலதின்மேல் மத்திய அரசாங்கத்தினுடைய விருப்பத்தை மக்களிடம் அறிவிக்கும் வகையில் வீடு வீடாக சென்று இப்பிரச்சனை குறிந்து துண்டறிக்கைகள் வழங்குவதில் நாங்கள் மேலும் மும்முரம் காட்டுவதை தொடர்வோம். ஆகவே வருகிற 25/08/10 ம் மாவட்ட அலுவலகம் சொன்ன தேதியில் இந்நிலப்பிரச்சனை குறித்த கூட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்ளவோம் என்பதனை இதன் வழி தெரிவிக்கின்றோம்.
பேராக் மாநிலத்தின் இந்த முடிவு உள்ளூர் இந்தியர்களின் ஒன்றுமையின் அதிகாரத்தில் எடுத்த முடிவாக திகழ்கிறது என்பதனை இந்தன் வழி தெரிவிக்கின்றேன்.
No comments:
Post a Comment