Sunday, September 5, 2010

இரண்டாவது அனைத்துலக குறைந்த விமான நிலைய கட்டிடத்திற்கு சுதந்திர தந்தை துங்குவின் பெயரை சூட்ட வேண்டும்.

கடந்த 30 -ம் திகதி குறைந்த கட்டன விமான நிலையத்திற்கு அனைத்துலக கோலாலம்பூர்  விமான நிலையம் 2 என பெயர் சூட்டப்படும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பல உணர்வுள்ள போது மக்கள் எதற்க்காக அப்பெயரை சூட்டவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.இதற்க்கு முன்பு அனைத்துலக கோலாலம்பூர் விமான நிலையம் என்று பெயர்சூட்டப்பட்டு அதற்க்கென்று தனி அம்சாமாக அவ்விமான நிலையம் திகழும் வேளையில்  மீண்டும் அதன் பெயரை மற்றொறு விமான நிலையத்திற்கு சூட்டுவது எந்த விதத்திலும் சிறப்பம்சம் கொண்டவையாக இருக்காது என்ற கருதுகின்றனர்.

போது மக்கள் பலர் 2 என்று இன்னொரு விமான நிலையத்தை குறிப்பிடுவது எந்த வகையிலும் அம்சமாக இருக்காது என்று  கூறியுள்ளனர்.தனது  பூனைக்குட்டிக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று போது மக்களிடம் கருத்து  கேட்ட பிரதமர் இந்த அனைத்துலக விமான நிலைய கட்டிடத்திற்கு ஏன் மக்களின் விருப்பத்தை கேட்டறிய மறந்து விட்டார் என்று மு.குலசேகரன் வினவினார்.

"எல்லாவகையிலும் ஒரு சிறப்பான பெயரை அந்த விமான நிலையத்திற்கும் வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எனது தனிமனித கருத்தாக அந்த விமான நிலையத்திற்கு துங்கு அப்துல் ரஹ்மான் பெயரை சூட்டவேண்டும் என்று கருதுகிறேன். அவ்வகையில் சுதந்திர தந்தையின் பெயரை நினைவுகூறும் வகையில் அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது."

"உலக நாடுகளில் நல்ல பெயரையும் மதிப்பையும் பெற்றவர் துங்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதுமட்டுமல்லாமல் தேச இன ஒற்றுமைக்கும் முழுமையாக பாடுபட்டவர் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும்."

அனைத்து மலேசியர்களும் துங்குவின் மதிப்பிடமுடியாத சேவையையும் பங்களிப்பையும் மறக்கமுடியாத ஒன்று.அவரின் மாண்புகளையும் மேன்மைகளையும் நிலைத்திருக்க இந்த புதிய அனைத்துலக குறைந்த கட்டண விமானத்திற்கு துங்குவின் பெயரை சூட்டப்படுவதே  சாலச்சிறந்ததாகும்" என்றார் மு.குலசேகரன்.

No comments:

Post a Comment