Friday, September 3, 2010

எங்கே அந்த 10ஆவது மலேசியா திட்டம்? லியு சின் தொங் கேள்வி

கடந்த மாதம் தாம் வாக்குறுதி வழங்கியது போல் எதற்காக 10ஆவது மலேசியா திட்டத்தை பிரதமர் வெளியிடவில்லை என்ற காரணத்தை விளக்கக் கோரி புகிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தொங் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் தனது வாக்குறுதி மறந்திருக்கும் சூழ்நிலையில் நான் இதனை அவருக்க மீண்டும் நினைவுறுத்த கடமைப்பட்டுள்ளேன்  என்று லியு கூறினார். கடந்த ஜூன் மாதம் 10 ம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தில் 10ஆவது மலேசியா திட்டத்தின் இரண்டு வருட  ஆரம்பகட்ட அமுலாக்க திட்டங்கள் குறித்த விவரங்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் தயாராகும் என்று கூறிய பிரதமர் இதுநாள் வரை அவ்வாக்குறுதியை நிறைவேற்றாதது குறித்து லியு அதிருப்தியை தெரிவித்தார்.

நஜிப் தான் நிகழ்த்தும் உரைகளில் அரசாங்கத்தின் நிதி நிலவரப்படி புதிய உலக  பொருளாதார மாற்றங்களுக்குகேற்பவும் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்பவும் வளர்ச்சி திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் 2011 - 2012 ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் ஆகஸ்ட் மாத இறுதில் வெளியீடு கண்டிருக்க வேண்டும். ஆனால் தாமதத்திற்கான காராணம் அத்திட்டம் முழுமை பெறவில்லை என்ற உண்மை இங்கே தெள்ளத்தெளிவாகிறது  என்று லியு கூறினார்.

"இத்திட்டம் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 1 நாள் முழுதும் நஜிப்பின் உரையை நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளோம்.அதுமட்டுமல்லாமல் 6  நாட்கள் விவாதித்து மேலும் 4 நாட்கள் அமைச்சர்களின் பதில்களையும் செவிமடுத்தோம். நாடாளுமன்ற மேலவையும் இது குறித்து 6  நாட்கள் விவாதித்தது."

"ஆகமொத்தத்தில் இத்திட்டம் மிகவும் பிரமாதாக எழுதி வெளியிடப்பட்டது என்பது மட்டுமே உண்மை.இது குறித்த செயல் திட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சி காணவில்லை.இதன் அடிப்படையில் நாடாளுமன்றம் தேவையற்ற விவகாரம் குறித்து காலத்தை வீணடித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்" என்றார்.

"இத்திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டால் அதில் மக்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த பல உண்மைகள் வெளி வரும் வாய்ப்பினை கண்டு நஜிப் பயம் கொள்கிறாரோ  என்ற கேள்வி உருவாகியுள்ளது?மேலும் இத்திட்டம் குறித்த உண்மையான விவரங்களை நாடாளுமன்றத்திடமிருந்து மறைக்க ஏதேனும் சதி செய்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது."

ஆகையால் இத்திடத்தில் ஏதேனும் விசமத்தனமான அம்சங்கள் உள்ளனவா என்ற உண்மையை மக்களுக்கு நஜிப் தெரிவித்தே ஆகவேண்டும்.  அது தவிர்த்து இது நாள் வரை தாம் கூறியது போல 2011 - 2012 ஆண்டுகளுக்கான ஆரம்பகட்ட திட்டத்தை வெளியிடாததின் காரணத்தை வெளிப்படையாக அறிவிப்பது மட்டுமல்லாமல் இத்திட்டத்தின்   துவக்க திட்டமிடுதலை நாடாளுமன்ற விவாதத்திற்கு வழி விட வகைசெய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

No comments:

Post a Comment