Tuesday, September 14, 2010

ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வருமான திட்டத்தை மேலும் தாமதிக்கக்கூடாது.

நாட்டின் அனைத்து நிலை மேம்பாட்டிலும் ஊழியர்களின் பங்கு மிக மிக முக்கியமான ஒன்று. ஊழியர்களின் குறைந்த வருமான திட்டத்தை மலேசியா ஊழியர்களின் சம்மௌனம்பிடிவாதமாக  நிராகரித்துள்ளது.

இது போன்ற செயல் ஊழியர்களின் நலனில் எந்த ஒரு அக்கறையை காட்டுவதாக தெரியவில்லை.இந்த அறிவிப்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறைந்தபட்ச வருமான திட்டம் உள்ளநாட்டு வர்த்தகர்களை பாதிப்பது மட்டுமல்லாமல் குறைந்த வேலைத்திறன் மற்றும் குறைந்த வருமானம் பெரும் அந்நிய தொழிலாளர்களுக்கு லாபத்தை தருவோதொடு இந்நாட்டு நாணயம் அதிக அளவில் வெளியேற்றம் காணும் வாய்ப்பு உருவாகும் காராணத்தை சம்மௌனத்தின்  நிர்வாக இயக்குனர் சம்சுதீன் பர்தன் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் சம்பள உயர்வை நிர்ணயம் செய்வது அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் தொழில் திறமைகள் மட்டுமே. ஆகவே அதன் அடிப்படையில்தான் சம்பள உயர்வு இருக்கவேண்டும் என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

இந்த இரண்டு பலவீனமான காரணங்களை  முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது காரணம்  தற்சமயம் இந்நாட்டில் குறைந்தது சுமார் 20 லட்சம் அந்நிய தொழிலாளர்கள் பெருவாரியான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அதிலும் அவர்கள் அசுத்தமற்ற ஆபத்தான தரந்தாழ்த்திய  வேலைகளை எடுத்துக்கொண்டனர்.

இத்தொழிலுக்கான வருமானம் குறைத்து வழங்கப்படுவதால் இத்தொழிலை எந்த ஒரு உள்நாட்டு மக்களும் ஆர்வம் காட்டுவதில்லை.


53 வருடம் சுதந்திரம்  அடைந்த பிறகும், இன்னமும்  இந்நாட்டு மக்கள் பலாயிரம் பேர் அடிமட்ட ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பது உண்மை. இச்சூழ்நிலையை  முற்றாக  களையவேண்டும்.  இந்நாட்டு ஊழியர்கள்  மென்மேலும் குறைந்த  வருமானத்தை  அனுபவிக்க நாம் விடலாமா?
இது போன்ற பிரச்சனைகளை என்றைக்கும் முதலாளிமார்கள் அவர்களுக்கு சாதகமாகத்தான் சலுகைகளை பெற முயற்சிப்பார்கள். முறையான சட்ட திருத்தம் இல்லயென்றால் ஊழியர்களின் நலனை யார் பாதுகாப்பது?

ஊழியர்களுக்கான தங்குமிடவசதி, வாரத்திற்கு 5  நாள் வேலை, 90 நாட்கள் பிரசவ சிறப்பு சலுகை, வீட்டு சலுகை, இலவச மருத்துவ பாதுகாப்பு மற்றும் கல்வி அனைத்தும் குறைந்தபட்ச வருமான கோரிக்கையின் கீழ் அடக்கப்படவேண்டும். இதன் உச்சக்கட்ட தொடக்கமாக வாராந்திர சம்பள திட்ட முறையை ஊழியர்களுக்கு வழங்க வகைசெய்யவேண்டும். கடந்த காலங்களில் இதனை குறித்து பல முறை அரசாங்கத்திடம் முறையிட்டும் எந்த ஒரு பலனுமில்லை.

பல வருடங்களுக்கு முன்பு  முதலாளிகளின்  முதன்மைக்கு  மட்டுமே செவிசாய்த்த முன்னாள் பிரதமர்  மகாதீர், குறைந்தபட்ச வருமானம் என்ற சொல் மிகவும் இழிவானது என்றும் வருமான உயர்வுக்கு  ஊழியர்  உற்பத்தித்திறன் குறித்த திட்டமிடுதலை செய்தால் போதும் என்றும்  ஊழியர்களின் கோரிக்கையை தட்டிக்களித்தார்.

அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு முன் நாடாளுமன்ற கூட்டத்தில்  கேள்விக்கு  பதிலளிக்கும் வகையில் குறைந்த வருமான திட்டம் குறித்த எந்த கோரிக்கையையும் தற்சமயம் அரசாங்கம் பரிசீலினை செய்யும் சூழ்நிலையில் இல்லை காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றியுள்ளதாக தெரிவித்தது.

கடந்த வருடம் மீண்டும் அரசாங்கம் குறைந்தபட்ச ஊழியர்களின் வருமான திட்டம் பொருளாதார போட்டித்தன்மையை குறைத்து விடும் என்று குறைக்கூறி  அக்கோரிக்கையை  ஒதுக்கியது.

ஒவ்வொரு முறையும் காராணத்தை சுட்டிக்காட்டி அரசாங்கம் ஊழியர்களின் நலனில் எந்த ஒரு அக்கறையும் கொள்ளாமல் இருப்பது அரசாங்கத்தின் மனிதாபிமான பற்றாக்குறையை காட்டுகிறது.

ஒரு வளர்ச்சியடைந்த தேசமாக மலேசியா உருமாறும் பொழுது ஊழியர்களின் நலனில் அனைத்து தரப்பினரும் ஒன்றனைந்து செயல்திட்டம் தீட்டவேண்டும் என்பதனை மலேசியா ஊழியர்களின் சம்மௌனம் அறிந்துகொள்ளவேண்டும். நலங்காக்கும் திட்டம் எதுவாகினும் குறைந்தபட்ச வருமானத்தை முதன்மையாக கொண்டால் மட்டுமே சிறந்த வளர்ச்சி கண்ட நாடாக மலேசியா மாறமுடியும். தற்சமயம் நமது நாட்டின் வேலையில்ல சதவிகிதம் 3.8 -   உள்ளது. இதன் சூழ்நிலையில், பொருளாதரா அடிப்படையில் பார்த்தால் மலேசியா முழுமையான வேலைவாய்ப்பு கொண்ட நாடாக திழகும்  வேளையில்  எதற்காக  குறைந்த வருமான திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்?

ஆகவே மலேசியா ஊழியர்கள் சம்மௌனமும் மற்றும் அரசாங்கமும் குறைந்தபட்ச சம்பள திட்ட கோரிக்கையை குறித்து மறுபரிசீலினை செய்து நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக  உழைத்த ஊழியர்களின் கரங்களை திடமாக மறுக்காமல், திட்டமிட்டு ஊக்குவிக்கும் வகையில் நடந்துக்கொள்ள ஜ.செ.க பரிந்துரை செய்கிறது.

No comments:

Post a Comment