மக்கள் ஓசை வெளிட்ட செய்தி (21/09/2010) |
வருக்கூடிய தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வேளையில் இரண்டு தொகுதிகளில் ஒரே நபர் போட்டி போடும் முறையை ஜ.செ.க மாற்றியமைத்து ஒருவருக்கு ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் கேட்டுக்கொண்டார். இதுபோல புதிய அணுகுமுறையை ஜ.செ.க பயன்படுத்தினால் அது திறமையுள்ள நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் செயலாக கருதப்படும் என்று தெரிவித்தார்.
ஒரு சட்டமன்ற தொகுதியை தங்கவைத்துகொண்டு மக்களுக்கு சேவை செய்வது ஒரு சுலபமான செயலல்ல. அது மிகப்பெரிய கடமையாகும். அவ்வகையில் இரண்டு தொகுதிகளில் எவ்வாறு முறையாக சேவைசெய்ய முடியும் என்பதனை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும். மக்களுக்கு சேவை என்பது அரசியலில் ஒரு முக்கிய பங்கு, அதனை முறையாக வழங்க வேண்டும்.
மேலும் தற்சமய சூழ்நிலையில், பேராக் மாநில ஜ.செ.க-வில் நிறைய திறமையுள்ள நபர்கள் உள்ளனர். இவர்கள் நேர்மையான கண்ணியமான வேட்பாளராக இருக்க வாய்ப்புண்டு. இவர்களின் திறமைகளை பார்த்து தக்க சமயத்தில் வாய்ப்பு வழங்குவது கட்சியின் முக்கிய கடமையாகும் என்று நான் கருதுகிறேன் என்றார் அவர்.
கடந்த காலங்களில் இரண்டு தொகுதிகளில் ஒருவரே போட்டி போடும் முறை ஒரு பொதுவானதாக இருந்தது என்பது உண்மை. காரணம் தேர்தலில் போட்டி போட யாரும் முனைப்பு காட்டுவதில்லை. இப்பொழுது அவ்வாறு கிடையாது. நிறைய நபர்கள் அவர்களின் அரசியல் திறமைகளை வெளிபடுத்த தொடங்கிவிட்டனர்.
நடந்து முடிந்த 2008-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பேராக் மாநில ஜ.செ.கவின் தலைவர் டத்தோ ங்கே கூ ஹாம் சித்தியவான் சட்டமன்றத்திலும் பெருவாஸ் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டிப் போட்டி வெற்றிப் பெற்றார். மேலும் அவரை தொடர்ந்து அதே போன்ற சூழ்நிலையில் பேராக் மாநில ஜ.செ.க-வின் செயலாளர் ங்கா கோர் மெங் பந்தை ரெமிஸ் சட்டமன்றத்திலும் தைப்பிங் நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றிக்கண்டார்.
அடுத்து வரக்கூடிய பொதுத்தேர்தல் நாட்டின் மிக முக்கியமான தேர்தலாகும். அவை தேசிய முன்னணியின் பாரம்பரிய வெற்றிக்கு சவால் விடக்கூடிய தேர்தலாக இருக்கும் வாய்ப்புள்ளது.
அதே சமயத்தில் பேராக் மாநில மக்கள் கூட்டணி மீண்டும் மாநில ஆட்சியை கைப்பற்ற என்னமிருக்கும் வகையில் தேர்தல் இயந்திரத்தை முழுமையாக பலமாக்கி கொள்ளவது மட்டுமல்லாமல், விளம்பரம், கொள்கை சூத்திரங்கள் மற்றும் எந்த நேரத்திலும் மக்களை திரட்ட கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்கவேண்டும் என்றார் அவர். அடுத்து மத்திய அரசாங்க ஆட்சியை அமைக்க நாம் எண்ணம் கொண்டிருந்தாள் இவை அனைத்தும் முக்கியாமாக கவனிக்கப்படவேண்டும்.
இவை அனைத்தையும் விட மிக முக்கியமான ஒன்று, ஒரு சிறந்த வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பதை பற்றி மக்கள் கூட்டணி சீர்தூக்கி பார்க்கவேண்டும்.
ஒரு சிறந்த மாற்றத்தை கொண்டு வர, தற்சமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை தரத்தை நன்கு கவனித்து அதில் அரசியால் சுயலாப கொள்கைவாதிகளையும் அரசியல் ஆற்றல் இல்லாத நபர்களை மாற்றி அமைத்து திறமையுள்ள நபர்களுக்கு வாய்பளிக்க இதுவே சிறந்த முறையா விளங்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது என்று, ஜ.சே.க கம்போங் பிந்தாங் கிளை ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசரிப்பில் இதனை கூறினார் மு.குலசேகரன்.
No comments:
Post a Comment