ஒரு தனிமனித விருப்பத்திற்கு மாறாக யாரையும் வர்புர்த்தி வாக்காளர் பதிவு முறையை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை என்று பாஸ் கட்சியை சார்ந்த கெதெரிஹ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் கேட்ட துணைக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அவர்கள் கூறினார். மேலும் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு வாக்கு பதிவு செய்யும் எண்ணமில்லை என்றால் அவர்களின் உரிமையை தட்டிப் பறிக்கும் செயலாக தானாக பதிவு முறை வகை செய்வது மட்டுமல்லாமல் ஜனநாயக கொள்கைக்கு எதிரான செயாலாக அவை திகழும் என்று நஸ்ரி மேலும் கருத்துரைத்தார்.
அவ்வாறு செய்வதனால் அவை இறுதியில் பிரச்சனையில் வந்து முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும், காரணம் நிறைய மக்களின் அடையாள அட்டையின் முகவரியும் அவர்கள் வசிக்கும் இட முகவரியும் முழுமையா மாறுபட்டிருக்கிறது என்ற விளக்கமளித்தார்.
தேசிய முன்னணியின் அமைச்சரவையின் பிரதிநிதி என்ற முறையில் டத்தோ ஸ்ரீ நஸ்ரி கூறிய பதில் ஆட்சிரியதிற்க்கு உட்பட்டதல்ல, காரணம் தேசிய முன்னணியின் கொள்கை தானாக வாக்கு பதிவு முறையை அமுல்படுத்தினால் அவை அவர்களுக்கு பாதமாக வந்து முடியும் என்ற பயம் மேலோங்கி இருக்கிறது. ஒரு சமூதாய கடப்பாடுள்ள ஜனநாயக அரசாங்கம் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் சுமார் 50 இலட்சம் பதிவு பெறாத வாக்காளர்களின் பதிவு பெறுவதில் சிறந்த முனைப்பை காட்டவேண்டுமே ஒழிய காரணங்கள் காட்டி தண்டிக்களித்தல் கூடாது.
இதன் தொடர்பில் இந்த எண்ணிக்கை அடைய தேர்தல் ஆணையமும் எந்த விருப்பமும் காட்டுவதில்லை.பணியாட்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டாமல் இருப்பதற்கு அரசியல் கட்சிகள் இவர்களுக்கு துணை பதிவதிகாரிகளை வழங்கினாலும் தேர்தல் ஆணையத்தின் முயற்சி ஏமாற்றத்தை காட்டுகிறது. இதன் அடிப்படையில் தானாக வாக்கு பதிவு முறையை அரசாங்கம் தள்ளுபடி செய்வது எந்த விதத்திலும் நியாமான ஒன்றல்ல.
கடந்த வருடம் தேர்தல் ஆணையம் இப்பிரச்சனைக்கு பதிலளிக்கும் வகையில் "அதிவேகத்தில் நடமாடும் சமூக"கலாச்சாரமே இதற்க்கு காரணம் என்று சுட்டிக்காட்டினர். மேலும் இக்கலாச்சாரத்தின் எதிர்மறை விளைவாக பலர் அடிக்கடி இடமாற்றம் செய்வதும் அதற்க்கு ஏற்றவாறு முகவரியை அடையாள அட்டையில் மாற்றாமல் இருப்பதும் தேர்தல் ஆணையத்திற்கு சிக்கலை உருவாக்குவதாக சொல்லப்பட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் சொன்ன காரணம் எந்த ஒரு வகையிலும் தானாக வாக்காளர் பதிவு முறைக்கு எந்த ஒரு இடையூறாக விழங்கும் என்று சொல்ல முடியாது. அதுமட்டுமல்லாமல் "அதிவேகத்தில் நடமாடும் சமூக" கலாச்சாரம் தான பதிவு செய்வது பிரச்சனை என்றால், அதே பிரச்சனைதானே நேரடியாக சென்று பதிவு செய்பவர்களுக்கும் உண்டாகும்.
எந்த அடிப்படையில் இவை வேறுபட்டுள்ளது.?அது மட்டுமல்லாமல்
பழைய முகவரிலேயே வாக்காளர் பதிவு செய்பவர்கள் அவர்களின் புதிய முகவரியை அடையாள அட்டையில் புதுபிக்கவில்லை என்றால் என்ன பிரச்சனை நேரப்போகிறது?தானாக வாக்கு பதிவு முறையை அமுல்படுத்தினால் பிறகு முகவரியை மாற்றிக்கொள்ளலாமே? இதற்க்கு எந்த தடையுமில்லை என்பதனை தேர்தல் ஆணையம் மறந்து விடக்கூடாது.
தானாக வாக்கு பதிவு முறைக்கு தடையாக இருப்பது காலாச்சாரமோ அல்லது முகவரிகள் அல்ல தேசிய முண்ணனியின் தன்மூப்பான செயலும் மட்டுமே. இப்பிரச்சனைக்கு சுலபமான எளிமையான முறைதான் என்ன?
ஒரு சில நாடுகளில் கட்டாய வாக்களித்தல் முறையை கடைப்பிடிக்கும் பச்சத்தில் நம் நாட்டில் தானாக வாக்கு பதிவு முறை பற்றி இன்னமும் விவாதம் நடத்தி கொண்டிருக்கிறோம்.
மேலும் வாக்களிப்பு வயது வரம்பு 21 லிருந்து 18 க்கு குறைத்து ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த வாக்களிப்பு முறையை நாடு ஏற்றுக்கொள்ளவேண்டும். இதே போன்ற 18 வயது வாக்களிப்பு முறை சுமார் 100 நாடுகளில் நிறைவேற்றி கடைபிடுக்கும் தருணத்தில் மலேசியாவிலும் இந்த வயது வரம்பு முறை கொண்டுவரவேண்டும்.
ஒருவர் 18 வயது அடைந்தவுடன் தேசிய பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படும் பொழுது வாக்களிப்பு வாய்ப்பை இவர்களுக்கு ஏன் வழங்கக்கூடாது.
அரசாங்கம் இந்த செயல் முறைக்கு தனது வெளிப்படையான காரணமான இளைஞர்களின் ஆதரவு மக்கள் கூட்டணிக்கு கூடுவதை மனதில் கொண்டு இந்த வாக்காளர் முறையை தாமதப்படுத்தக்கூடாது.
No comments:
Post a Comment