Friday, October 1, 2010

தேசிய முன்னணியின் தடைக்கல் விலகல் பொதுதேர்தலுக்கு வழிவிடும்--மு.குலசேகரன்

தேசிய முன்னணியின் மிகப்பெரிய இடையுறு "சாமிவேலு" பதவி விலகல் பொதுத்தேர்தலுக்கு வழிவிடும்.

பொதுத்தேர்தலில் தோல்வியை தழுவிய பின் பதவி விலகும் பட்டியலில் சாமிவேலு ஒரு முன்மாதிரி அல்ல.காரணம் இதற்க்கு முன்பு கெராக்கானை சேர்ந்த துன் லிம் சொங் யு அவர்களும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

அதன் பிறகு மிகவும் கௌரவமாக தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு அரசியலை விட்டு ஓய்வெடுத்தார்.

இன்றைய சூழ்நிலைக்கு,யாரும் சாமிவேலுவின் நடவடிக்கையை மிகப்படுத்தி பேசியதே கிடையாத பட்சத்தில் தனது சொந்த சுயலாப அரசியல் கொள்கைக்கு அவர் செய்ததைதான் அனைவரும் தலைகுரைவாகவே பேசினார்கள் என்பது உண்மை.கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியை அடைந்தும் ம.இ.க தலைவர் பதவியை விடாமல் தங்கவைத்ததுதான் மிகப்பெரிய கேள்வி குறியாகவே இருந்தது தேசிய முன்னணியில். அதனால் தேசிய முன்னணி பல விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாகத்தான் தேசிய முன்னணியை சார்ந்த தலைவர்கள் சாமிவேலுவை பதவி விலக வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினர்.மேலும் இவரின் அரசியல் சர்வதிகாரம் தேசிய முன்னணி கூட்டணிக்கு பாதகமாகவே திகழ்ந்தது.

தனது இரும்புக்கோட்டையாக திகழ்ந்த சுங்கை சிபூட் நாடாளுமன்றத்தில் தோல்வி கண்டது ஒரு நல்ல பாடமாக எடுத்துக்கொண்டு சாமிவேலு தனது தலைவர் பதவியை ஒப்படைத்துவிட்டு பொதுத்தேர்தல் முடிவினை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைத்தார்.

சாமிவேலுவை பற்றி மேலும் கருத்துரைத்த மகாதீர், "பிற நாடுகளில் ஒரு தலைவன் தனது அரசியல் மரியாதையை இழந்துவிட்டால், உடனடியாக பதவியை துச்சமகா கருதி விலகிவிடுவான். ஜப்பான் போன்ற நாடுகளில் தலைவர் ஹராகிரி (தற்கொலை) செய்து கொள்வார்கள். ஆனால், நாம் சாமிவேலுவை அது போன்று தற்கொலையை செய்ய சொல்லவில்லை. ம.இ.க-வை சரியான முறையில் வழிநடத்த தவறிய காரணத்தின் அடிப்படையில் சாமிவேலு தோல்விகண்டார். ஆகாவே பதவி விலகுவது நன்று. இவரின் போக்கு அஹ்மாட் படாவியை விட மோசமாக இருக்கிறது. இருப்பினும் பதவியை விட்டு கொடுக்க மனம் வரவில்லை சாமிக்கு. நிலைமை மோசமடையும் முன்னமே இவர் பதவி விலகி இருக்கவேண்டும்." என்று கூறினார்.

அதனை அடுத்து தற்போதைய பிரதமர் ம.இ.க-வின் 63வது போதுப்பேரவையில் பேசிய பொழுது,தேசிய முன்னணி கூட்டணி தலைவர்கள் மக்களின் நர்மதிப்பையும் புகழையும் இழந்து விட்டு தனது சொந்த கட்சியில் பிரமளமாக இருப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை என்ற மறைமுகமான செய்தியை சாமிவேலுவின் செவிகளுக்கு பரிசாக படைத்தார். இருப்பினும் அப்பொழுது அந்த செய்தி செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.

சாமிவேலு 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி விலகுவேன் என்று சொன்ன பதவி விலகல் அறிவிப்பு ஒரு ஆட்சிரியமல்ல. ஆனால், தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளால் எதிர்பார்த்தது.இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கலாம் அனால் மக்களுக்கு அல்ல. காரணம், இந்த பதவி விலகளை அன்றைய காலம் செய்யாமல் இன்றைய நாள் வரை காத்திருந்ததின் காரணம் என்ன என்று பலர் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். இத்தனை நாள் காத்திருந்து என்ன மாற்றத்தை கொண்டு வந்தார் சாமிவேலு? இல்லை என்ற உண்மை ஒரு புறம் இருக்க எதற்காக சாமிவேலு பதவியை விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டினார் என்ற கேள்வி மறுபுறம் எழுந்து நிற்கிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நஜிப் நாடாளுமன்றத்தை அடுத்த வருடம் கலைக்கலாம் என்ற ஆருடமும் உருவாகிஉள்ளது. இது சாத்தியமாக வேண்டுமானால்,சாமிவேலு சொன்ன வார்த்தையின் செயலை உறுதிபடுத்திய பிறகுதான்,நஜிப் தனது அறிவிப்பை செய்வார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.ஆகாவே தேசிய முன்னணிக்கு மிகச் சிறந்த தடைக்கல்லாக திகழ்ந்த சாமிவேலுவின் பதவி விலகல் அடுத்த பொதுத்தேர்தலுக்கு வகைசெய்யும் என்ற உண்மை கூடிய விரைவில் வெளிச்சமாகும்.

No comments:

Post a Comment