செம்பருத்தி இணையதள செய்தி.
பல புதிய கனவுகளோடு தேசிய பயிற்ச்சி முகாமில் சேர்ந்த 18வயது பசாந்த் சிங் என்ற சீக்கிய மாணவனுக்கு கடைசியில் அதிர்ச்சி மட்டுமே கிடைத்து. கடந்த ஜனவரி 15 ஆம் திகதி பசாந்த் சிங்-குக்கு தனது வாழ்கையில் மறக்கமுடியாத சம்பவமாக தனது நீளமான முடியை வெட்டியது, நாட்டில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இச்சம்பவம் ஸ்ரீ இம்பியான் சுங்கை பாகப் கெடா மாநிலத்திலுள்ள முகாமில் நடந்தது. பசாந்த் சிங்கின் முடி அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது கத்தரிக்கப்பட்டது.
இன்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் பொங் போ குவான், வழக்கறிஞர் பாலா, குலசேகரனின் முன்னாள் செயலாளர் திரு.பாலா ஆகியோர் புந்தோங் வட்டாரத்தில் அமைந்துள்ள பசாந்த் சிங்கின் வீட்டிற்கு சென்று பசாந்த் சிங்-கையும் அவரது தந்தை சுரிண்டர்பால் சிங் மற்றும் தாயாரையும் சந்தித்து பேசியுள்ளனர்.
“பசாந்த் சிங்கின் பெற்றோர்கள் மிகவும் வேதனையாக இருந்ததை எங்களால் உணரமுடிந்தது. பொதுவாக சீக்கியர்கள் தனது முடியை நீளமாக வைத்திருப்பது என்பது அவர்கள் தனது மத நம்பிக்கை கொடுக்கும் மரியாதையாகும் என்று தெரிவித்தனர். மேலும், தனது மகன் பசாந்த் சிங்-கின் 60 cm நீளமான முடியை ஒரு சில குறும்புத்தனமானவர்கள் கத்தரித்துவிட்டனர் என்று சொல்லி பசாந்த் சிங்கின் தந்தை மன வேதனைப்பட்டார்” என குலசேகரன் தெரிவித்தார்.
“மாணவன் பசாந்த்னுடன் நாங்கள் அனைவரும் கலந்து பேசும் பொழுது, “இன ஒற்றுமை” என்ற பாடம் அப்பயிற்சியில் சொல்லிக்கொடுக்கப்படும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவை இறுதி கட்டத்தில் பயிற்சி முடியும் முன் சொல்லி கொடுக்கப்படும் இறுதி கட்டப்பாடமாக அவை போதிக்கப்படும் என்று எங்களுக்கு தெரியவந்தது” என்று குலா மேலும் கூறினார்.
தனக்கு ஏற்பட்ட அந்த சம்பவத்தை போலீஸ் புகார் செய்யப்பட்டு, இப்பொழுது காவல்துறையும் விசாரணையை தொடங்கி இருப்பதாக கூறப்படும் அதே வேளையில், தேசிய பயிற்சி முகாமும் தனது உள்விசாரனையை நடத்தியுள்ளது. இருப்பினும், இது நாள் வரை பசாந்த் சிங்கை எந்த ஒரு தரப்பினரும் விசாரணைக்கு உதவும் விதமாக அவரிடம் மேல் விவரங்களை பெறவில்லை என்பதும் இங்கே நிரூபனமாகிறது.
ஆகவே, இச்சம்பவம் குறித்து மேலும் முழுமையான விசாரணையை காவல்துறையும் தேசிய பயிற்சி முகாமின் ஆணையமும் செய்ய வேண்டும். இப்பிரச்னை இனியும் தொடர்கதையாகாமல் இருக்க பசாந்த் சிங்கின் முடியை கத்தரித்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என குலசேகரன் கோரிக்கைவிடுத்தார்.
இதேவேளை, என்னதான் மன அதிர்ச்சி ஏற்படும் வகையில் தனக்கும் தனது மத நம்பிக்கைக்கும் சிரமம் ஏற்பட்டிருந்தாலும், தனது தேசிய சேவையை தொடர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் பசாந்த் சிங்கின் மன தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
No comments:
Post a Comment