Thursday, March 17, 2011

குலசேகரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பரபரப்பான உரை

செம்பருத்தி இணையதள செய்தி 

இவ்வருடத்திற்கான நாடாளுமன்ற கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய மாமன்னரின் உரையை ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் நேற்று (15/03/2011) ஆய்வுரை வழங்கினார். அதன் உரை பின்வருமாறு :
                                                                                                                           இண்டர்லோக் நாவல் 
நாட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ள இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் அரசாங்கம் சுணக்கம் காட்டியுள்ளதை பார்த்தால், நாட்டின் கல்வி அமைச்சரின் காது மந்தமான நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் மக்களின் கோரிக்கைகள் செவிடன் காதில் உதிய சங்காக இருக்கும் வகையாக அமைகிறது.
அந்த நாவல் பள்ளிகளில் பயன்படுத்தப்படாது என்று அரசாங்கமும் கல்வியமைச்சும் கூறியது அப்பட்டமான பொய்யாக திகழ்கிறது. காரணம் அந்நாவல் இன்னும் ஒரு சில பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த வகையில் பார்த்தால் நாட்டினுடைய கல்வி முறை மிகவும் பின்தள்ளிய நிலையில் இருப்பதாக இதன் வழி வெளிப்படையாகிறது.
அந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளும் சரித்திரப்பூர்வமான அம்சங்களும் முற்றாக ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். அந்த அடிப்படையில் இண்டர்லோக் நாவலை பள்ளியில் உபயோகிக்க அனுமதி ஆரம்ப கட்டத்திலேயே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய அரசாங்கத்திற்கு எண்ணமில்லை. இதனால் பல பல சர்ச்சைகள் எழுந்துள்ளதை அரசாங்கம் நன்கு அறியும்.
இந்த நாவலை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடும் மக்களின் குரலை அரசாங்கம் ஏன் மதிப்பளிக்க மறுக்கிறது?
எதனால் அந்நாவலை தடை செய்ய இவ்வளவு கால அவகாசம்?
ஒரு விவகாரத்திற்கு எதிர்ப்பு பேரலை உருவாகும் பட்சத்தில், சூழ்நிலையை சரிசெய்ய உடனடியாக அந்த விவகாரத்திற்கு முடிவெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஆனால் உலகில் எந்த நாட்டிலும் நடக்காத ஒரு அதிசயம் இந்நாட்டில் மட்டும் நடக்கிறது. எதை மக்கள் எதிர்க்கிறார்களோ அதனை நிலைநாட்ட முனைப்பு காட்டுகிறது இந்த தேசிய முன்னணி அரசாங்கம்.
இந்த நாவலை தணிக்கை செய்த குழுவினர்களின் பெயர்களை அரசாங்கம் பட்டியலிட வேண்டும். மேலும், அந்த தணிக்கை குழு கடந்த காலத்தில் எத்தனை நாவலை அனுமதி தந்துள்ளது மற்றும் அந்நாவலின் தலைப்புகளை வெளிப்படுத்தியாகவேண்டும் இந்த அரசாங்கம். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசாங்க அதிகாரிகள், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுவது அவமானமாக உள்ளது.

வறுமை நிலை ஒழிப்பு
வறுமை என்பது ஒரு இனத்திற்கு சம்பந்தமானது அல்ல. வறுமை இனம் மதம் பாராதது. சமீபத்தில் ம.இ.க-வின் தேசிய தலைவர் டத்தோ பழனிவேல், நகர மையத்தில் ஏழ்மை நிலையில் துன்பப்படும் இந்தியர்கள் மீண்டும் தோட்டங்களுக்கு செல்ல ஆலோசனை கூறியது யாராலும் என்றுக்கொள்ள முடியவில்லை. தான் ம.இ.க வின் தலைவர் என்ற நாற்காலியில் அமர்ந்த பிறகு நாட்டில் நிறைய இந்திய கோடீஸ்வரர்களை உருவாக்குவேன் என்று வசனம் பேசிய அவர், இன்று தலை கீழாக பேசுவது நியாயமாகாது.
இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்னைகளையும் கவனிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவைக்கு குழு என்னவானது?
ஏன் அந்த குழுவினால் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க முடிவில்லை? சமுதாயத்தில் குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணமாக உள்ள வேளையில் அந்த குழு எந்த விவகாரத்தில் தீவிரம் காட்டுகிறது?
சிம்பாங் ரேங்காம் தடுப்பு முகாமில் இந்தியர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம். ஆனால் நமது சமுதாயத்திற்கு வாய்ப்புகளின் சதவிகிதம் நிலையாக உள்ளதா?
இல்லை, காரணம் முறையான புனரைமைப்பு திட்டங்கள் கிடையாது. தனிமனிதனின்  சராசரி வருமானம் 36,000 வெள்ளி என்று தேசிய முன்னணி சொல்கிறது, ஆனால் பெரும்பான்மையான இந்தியர்களின் மாதத்திற்கு 500 வெள்ளியை தாண்டுவதில்லை என்று பழனிவேல் சொல்கிறார். இவர்களில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்று தெரியவில்லை.
ஒரே அரசாங்கத்தில் இருக்கும் பிரதிநிதிகள் இரு வேறு விதமான எண்ணிக்கையை வெளியிடுவது, திடுக்கிட செய்கிறது. இத்தனை காலமாக இந்தியர்களின் அடிப்படை வருமானத்தை உயர்த்த யாரும் முயலவில்லை என்பதே மெய்.
ஆகவே, நாட்டில் வறுமையை ஒழிக்க அரசாங்கம் உடனடியாக மக்கள் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுபினர்களை கொண்டு ஒரு சிறப்பு தேர்வு நிலையிலான செயற்குழு ஒன்றை அமைத்தாக வேண்டும்.
அதில் இன மதம் பாராமல் அனைத்து நிலையிலும் ஏழ்மை நிலையில் வாழ்கின்ற மக்களின் வறுமையின் காரணத்தை கண்டறிந்து ஆய்வு செய்து அதற்கான உடனடி தீர்வை அரசாங்கம் எடுக்க திட்டமிடுதல் வேண்டும்.

காட்டு விலங்குகள் கடத்தல்
சுமார் 2 பில்லியன் வரை  நாட்டில் காட்டு விலங்குகளின் கடத்தல் வழி வருமானம் பெறுகிறார்கள். இதற்காக நமது அரசாங்கம் பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் அமுல்படுத்தியதா? என்ற கேள்விக்கு பதில் இன்னும் கிடைக்காமல் இருக்கிறது.
சமீபத்தில் மலேசியா இராணுவத்தை சார்ந்த நான்கு அதிகாரிகள், அதிசய பறவை இனத்தை சேர்ந்த “எங்காங்” குருவியை கழுத்தறுத்து கொன்று அதனுடன் புகைப்படம் ஒன்றை எடுத்த விஷயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
இதனால் இந்த அதிசய குருவிகளின் எண்ணிக்கை அழிந்துக்கொண்டே போகும் வாய்ப்பு அதிகரிக்க சாத்திமுள்ளது. எதனால் அரசாங்கம் காட்டு மிருங்கங்களை காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? பாதுகாப்புக்கு செல்லும் ராணுவ அதிகாரிகள் இப்படியா மதியற்ற நிலையில் நடந்துக்கொள்வது?
ஆய்வு குறியீட்டின் படி காட்டு விளங்கு கடத்தலில் மலேசியா ஒரு முக்கியமான குவிப்பு மையமாக திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு அரசாங்கம் உடனடி முடிவு எடுத்தாக வேண்டும்.

குவலா பிலா மற்றும் மெர்லிமௌ தமிழ்ப்பள்ளி
தெனாங்கிலும் மெர்லிமௌ சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேசிய முன்னணிக்கு சாதகமான நிலையில் முடிவுற்றது. ஆனால் தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும் மென்று சொன்னது, இதற்க்கு முன்பை போல வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படுமா அல்லது நிறைவேற்றப்படுமா? என்பது கேள்வி குறையாகவே உள்ளது?
ஆகவே மெர்லிமௌ தமிழ் பள்ளி கட்டிடம் எப்பொழுது நிறைவு பெரும் என்பதனை அரசாங்கம் அறிவித்தாக வேண்டும். அதே சமயத்தில் குவலா பிலா தமிழ் பள்ளிக்கான நிலம் காணப்பட்டதா என்ற விவரத்தை அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.
மேலும், இனி வருங் காலங்களில் எந்தனை தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் கட்டப்படும்? அவை எந்தெந்த இடத்தில் கட்டப்படும்? என்ற குறிப்பையும் அரசாங்கம் பட்டியலிட வேண்டும்.
இறுதியாக, புகிட் ஜாலில் குடியிருப்பாளர்களின் விவகாரத்தில் அரசாங்கம் முறையாக நடந்துக்கொள்ளவேண்டும். அவர்களின் வீடுகளை தரைமட்டமாக முயல்வது ஏற்று கொள்ளமுடியாத ஒன்றாகும். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செய்வி சாய்த்தல் வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும்.

நன்றி..
மு. குலசேகரன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்

No comments:

Post a Comment