Wednesday, April 27, 2011

போர்க்குற்ற விவகாரம் : அனைத்துலக விசாரணைக்கு வேண்டுகோள்


ஐக்கிய நாடுகள் சபை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள இலங்கை போர்க்குற்ற அறிக்கையினைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் நவனீதம்பிள்ளை இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்க் குழுவின் அறிக்கையினை ஆதாரமாக வைத்து இலங்கை மீது அனைத்துலக விசாரனை ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும். இந்த விசாரணையானது பக்கச்சார்பில்லாத, சுதந்திரமான விசாரணையாக இருக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“இறுதிக்கட்டப்போரின்போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.  அது வரைக்கும் நான் இந்த அனைத்துலக விசாரணைக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.”
“போர்க் குற்றங்களை பாரதூரமான அளவில் மேற்கொள்பவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். போர்க்குற்றவாளிகளை தண்டனைகளிலிருந்து தப்பவைக்கும் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். எனவேதான் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையைப் போன்ற நாடுகளில் கட்டாயம் அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன்” என்றார்.

செம்பருத்தி இணையதள செய்தி. 



No comments:

Post a Comment