25/05/2011
தேசிய முன்னணி, தேசிய அளவிலான தேர்தலை நடத்த அவரசத்தை காட்டினால், அதற்கு மக்கள் கூட்டணி அடி பணிய முடியாது என்று ஜ.செ.க வின் தலைமைச் செயலாளரும் பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சருமான லிம் குவான் எங் தெரிவித்தார். இம்முடிவு, நேற்று நடந்து முடிந்த கட்சியின் தேசிய செயலவை கூட்டத்தில் இந்த நிலைப்பாடு காணப்பட்டது என்று அவர் அறிவித்தார்.
மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் அமைந்துள்ள மாநிலங்களில் ஐந்து வருட கால தவணை முடியும் வரை, தேர்தலுக்கான அறிகுறி தென்பட்டாலும் அதற்கு மக்கள் கூட்டணி தலைவணங்காது என்று கூறிய அவர், எனினும் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்றால் அதற்கு சம்மதம் தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.
இதற்கு இதர கட்சிகள் இணக்கம் தெரிவிக்குமா என்று கேட்டதற்கு, ஜ.செ.க-வின் இந்த முடிவு, மக்கள் கூட்டணியின் இதர கட்சிகளின் விவாதத்திற்கு உட்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜ.செ.க இந்த முடிவினை எடுத்தாக அவர் மேலும் கருத்துரைத்தார். "அடுத்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மக்களுக்கு மக்கள் கூட்டணி நிறைய செய்ய வேண்டியுள்ளது. மக்கள் கூட்டணியின் வெற்றி அனைத்து உறுப்பு கட்சிகளின் வெற்றியா அமைய வேண்டும்" என்று லிம் கூறினார்.
No comments:
Post a Comment