Friday, June 17, 2011

அமைச்சரவையில் மாற்று கருத்துக்களை தெரிவிக்க பயப்படும் ம.சீ.ச, தேசிய முன்னணியில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒரே சூழ்நிலைதான்

மக்கள் நலனை பாதுகாக்க தவறிய ம.சீ.ச ஒரு சந்தர்ப்பவாதி என்று தான் சொல்ல வேண்டும். மக்களின் உதவித்தொகை குறைப்பு மற்றும் சிறந்த மாணவர்களுக்கு அரசாங்க உபகார சம்பளம் வழங்குவதில் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ள பொது சேவை இலாக்காவின் செயல் போன்ற விவகாரங்களை அமைச்சரவையில் எழுப்ப ம.சீ.ச தைரியமற்ற நிலையில் உள்ளது என்று ஜ.செ.க வின் தேசிய பொதுச் செயலாளரும் பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சருமான லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

இது போன்ற ம.சீ.ச-வின் செயல்கள் ஜ.செ.க-வின் கண்களுக்கு புதுசல்ல என்பதும் உண்மை. சமீபத்தில் உள்நாட்டு வர்த்தக வாணிப அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ம.சீ.ச-வின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ சுவா சொய் லேக்கின் மீது கண்டன அறிக்கை ஒன்றில், சுவா சொய் லேக் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தேசிய பொருளாதார மன்ற கூட்டத்தில், சுவா  சொய்   லேக்   செய்தியாளர்களிடம்  கூறியது,  தான்  மக்களிடமும் அரசாகத்திடமும் இரட்டை நாடகம் அரங்கேற்றம் செய்கிறார் என்றும் இஸ்மாயில் அவரை மேலும் சாடியுள்ளார்.

தனக்கு எதிராக வெளியிட்ட அந்த அறிக்கையை அந்த அமைச்சர் மீட்டுக்கொள்ளவோ அல்லது தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று சொல்லுமளவிற்கு டத்தோ சுவா சொய் லேக்கிற்கு தைரியம் உண்டா என்று, குவான் எங் கேட்டுக்கொண்டார்.

இது போன்ற சூழ்நிலை மீண்டும் மீண்டும் தொடர்கதையாககும்  வேளையில்,  வருகிற  பொதுத்தேர்தலில் படு தோல்வி  கண்டால் ம.சீ.ச தேசிய முன்னணியை விட்டு விலகும் என்று அறிக்கையை சுவா சொய் லேக் விடுகிறார் என்பது வியப்பாக உள்ளது என்று, குவான் எங் தெரிவித்துள்ளார்.

ஆகவே, ம.சீ.ச தேசிய முன்னணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் சூழ்நிலை சமம் என்பது இதன் வழி  நிரூபனமாகிவிட்டது   என்று லிம் குவான் எங் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment