Wednesday, June 22, 2011

தேசிய முன்னணி பெர்சே 2.0 அமைதி பேரணியில் கலந்து கொள்ள லிம் கிட் சியாங் அழைப்பு


தேசிய முன்னணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் பெர்சே 2.0 பேரணியில் கலந்து கொண்டு, நேர்மையான சுதந்திரமான மாசில்லாத முறையில் தேர்தல் நடைபெறவேண்டும் என்று மக்கள் குரல் கொடுப்பதற்கு ஆதரவு தரவேண்டும் என்று ஜ.செ.க வின் ஆலோசகரும் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். 

நாட்டினுடைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஜாக், துணை பிரதமர் முகைதீன் யாசின் மற்றும் தேசிய முன்னணியின் இதர அரசியல் தலைவர்களும் ஜூலை 9 ம் திகதி நடைபெறும் அந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு மக்களுக்கு அங்கிகாரம் தர வேண்டும் என்று ஜ.செ.க-வின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான கிட் சியாங் அழுத்தமாக தெரிவித்துள்ளார். 

"இந்த அழைப்பு பெர்சே பேரணியின் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சிகள் (தேசிய முன்னணியும்) மற்றும் அரசாங்க சார்பற்ற இயக்கங்களுக்கும் விடுத்த அழைப்பின் பெயரில் நான் இந்த அழைப்பை விடுக்கிறேன்" என்று தனது செய்தி அறிக்கையில் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பிரதமருடன், துணை பிரதமர், தேசிய முன்னணியின் அமைச்சரவையின் உறுப்பினர்கள் மற்றும் இதர தேசிய முன்னணி அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வை குறித்து வெளிப்படையான நிலைப்பாடினை வெளியிட்டால் அவை அவர்களின் தலைமைத்துவத்தின் நேர்மையான நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் அதே தருணத்தில் நமது மலேசியாவின் ஜனநாயகத்தின் வரலாற்றின் அடையாளமாக அந்நாள் திகழும் சாத்தியமுண்டு என்று அவர் மேலும் தெரிவித்தார்.



- பெர்சே கோரிக்கை பின் வருமாறு: 

- கண்யமற்ற வாக்காளர் பட்டியலை தூய்மைபடுத்துதல்
- தபால் வாக்களிப்பு முறையை சீர்படுத்துதல் 
- நிலையான மையை பயன்படுத்துதல் 
- தகவல் ஊடங்கங்களுக்கு சுதந்திரத்தை வழங்குதல்
- 21 நாட்கள் தேர்தல் பிரசார அவகாசத்தை வழங்குதல் 
-அரசியல் சட்டத்தை நடைமுறைபடுத்தும், பொது அமைப்புகளை பலப்படுத்துதல்  
- லஞ்ச சீர்கேட்டை நிர்மூலமாக்குதல். 
- தூய்மையற்ற அரசியல் கொள்கையை அகற்றுதல் 


இதனை தொடர்ந்து கூடுதலாக இரண்டு தீர்மானங்களை கிட் சியாங் தனது கோரிக்கையில் இணைத்துள்ளார். அவை,


- எந்த சூழ்நிலையிலும், 1969 ம் ஆண்டில் நடைபெற்ற மேஇதனை தொடர்ந்து கூடுதலாக இரண்டு தீர்மானங்களை கிட் சியாங் தனது  13, கருப்பு நாளை தேர்தல் காலத்தில் நினைவுபடுத்தல் கூடாது ; மற்றும் 

- நாடாளுமன்ற கலைக்கப்பட்ட பிறகு "அரசாங்க காப்பாளர்" அமைச்சரவையை தற்காலிகமாக அமைக்க வேண்டும். அவ்வப்போது அமைச்சர்களும் மற்றும் மாநில ஆட்சி குழு உறுப்பினர்களும் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில், எந்த ஒரு சிறப்பு அரசாங்க ஒதுக்கீடுகளை வழங்குவதாக அறிவித்தல் கூடாது என்று, லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். 

No comments:

Post a Comment