Monday, August 16, 2010

"மத்திய அரசாங்கம் அதன் விருப்பத்தை மாற்றிக்கொள்ளல் வேண்டும்" - மு.குலசேகரன்

எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் சித்தியவான் வாழ் இந்திய உள்ளூர் மக்கள் டிண்டிங்ஸ் இந்திய சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை மத்திய அரசாங்கத்திடம் விட்டுகொடுக்க மாட்டார்கள் என்பது உறுதியான நிலை. இந்த நிலப்பிரச்சனை குறித்து நேற்று நடைபெற்ற ஒரு சந்திப்பு கூட்டத்தில் பல உள்ளூர் இந்திய தலைவர்கள் பல கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலத்தை கைமாற்ற எண்ணம் கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தின் விருப்பம் அளவுக்கு மிஞ்சிய செயலாக கருதப்படுகிறது.

இந்த கூட்டத்தில் என்னுடன் பினாங்கு மாநில துணைமுதல்வர் முனைவர் ராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கோபாலகிருஷ்ணன், டிண்டிங்ஸ் இந்திய சங்க தலைவர், டாக்டர் ஜெயபாலன் மற்றும் டாக்டர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த இரண்டு ஹெக்டர் நிலப்பரப்பை கொண்ட இந்த நிலத்தை 1930 ம் ஆண்டு 35 தோட்டத்தை சேர்ந்த மரவேட்டும் தொழிலாளர்களின் நன்கொடையில் வாங்கப்பட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

இம்மாதம் 25 ம் திகதி மத்திய அரசாங்கம் இந்நிலத்தை கைப்பற்றிக்கொள்ள திட்டம் கொண்டுள்ளதாக கேள்விப்பட்டது உண்மை. அக்கூட்டம் மன்ஜோங் மாவட்ட மன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில் பலர் அவர்களின் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டது மட்டுமல்லமால் மக்கள் நலன் காக்கும் தலைவர்களின் நிலைப்பாட்டிற்கும் துணை நிற்க உறுதியளித்தனர். அவ்வகையில் இந்நிலம் எந்த ஒரு காரணத்தினாலும் மாற்றான் கைக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதனை தெளிவாக எடுத்துரைத்தனர். அதே சமயத்தில் இந்நிலம் அன்றைய காலங்களில் வாழ்த்த நமது முதாதயர்களின் தியாகத்தின் சின்னமாக விளங்கும் பட்சத்தில் இதன் உரிமைகளை பறிக்க யாருக்கும் இடமளிக்கக்கூடாது என்றனர். சித்தியவான் சுற்றிலும் பல காலி நிலங்கள் பள்ளி கட்டுவதற்கு தோதாக இருக்கும் சூழ்நிலையில் இந்நிலத்தை பறிப்பது இந்தியர்களின் பொறுமையை சீண்டி பார்க்கும் செயலாக வெளிப்படுகிறது.

தற்சமய சூழ்நிலைக்கு இந்நிலத்திளிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட சுங்கை வாங்கி செம்பனை தோட்டம் உள்ளது. இத்தோட்டம் அரசாங்கம் தொடர்பு நிறுவனங்களின் ஒன்றனான சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான நிலமாகும். 15ந்து வருடங்களுக்கு முன்பு சுமார் 150 ஏக்கர் நிலத்தை தற்காப்பு அமைச்சு விமான நிலையம் கண்டுவதற்க்கு அந்த தோட்டத்திலிருந்து முறைப்படி வாங்கியது. அச்சூநிலையில் 15ந்து வருடத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு நிலம் வாங்க முன்வந்த மத்திய அரசாங்கம் ஏன் ஒரு புதிய பள்ளிகூடத்தை கண்டுவதற்க்கு நிலத்தினை பெற முன்வரவில்லை? எதற்காக டிண்டிங்ஸ் இந்திய சங்க நிலத்தை மத்திய அரசாங்கம் குறிவைக்க வேண்டும்? இந்நிலத்தை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு உணர்ச்சியற்ற அநியாய வீண் சிரமங்களுக்கு வித்திடுவதுபோல் பொது மக்களின் மத்தியில் காணப்படுகிறது.

இவ்வட்டாரத்தில் வாழும் இந்தியர்களும் இந்நிலத்தை எந்த ஒரு நஷ்ட ஈட்டு தொகைக்கு மாற்றிக்கொள்ளவோ அல்லது வேற்று நிலத்தினை பெறுவதற்கோ ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. காரணம் அவை இந்தியர்களின் மேம்பாட்டை பின்தள்ளிவிடும் என்பதனை நன்கு அறிந்துள்ளனர்.

ஆகவே இந்நிலத்தை "லிட்டில் இந்தியா " என்று பிரகடனம் செய்து இந்திய பாரம்பரிய வர்த்தகத்திற்கு ஒரு சின்னமாக விளங்க இவ்விடம் அங்கிகாரம் பெற அரசாங்கம் முன்வர வேண்டும்.

இதனை தொடர்ந்து வருகிற 25 ம் திகதி மன்ஜோங் நில அலுவலகத்திற்கு மக்கள் அலையாக திரண்டு வர வேண்டும் என்பதனை பொது மக்கள் இக்கூடத்தில் தெரிவித்தனர். தற்சமயம் அனைத்து தரப்பினரும் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கையை விநியோகம் செய்து வருகின்றனர். அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி ஒருமனதாக திரண்டு இந்நிலத்தை கௌரவத்தை காக்க முன்வரவேண்டும் என்பதனை தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment