-மலேசியாகினி-
இவ்வருடம் படிவம் 5 நிலை மாணவர்களுக்கு மலாய் இலக்கிய பாடநூலாக, புதிதாக அச்சிடப்பட்டுள்ள, “இண்டர்லோக்” நாவலை பயன்படுத்த ஆரசாங்கம் திட்டமிட்டுள்ள வேளையில், சர்ச்சைக்குரிய வார்த்தைகளையும் உள்நோக்கங்களையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலை அரசாங்கம் உடனடியாக மீண்டுக்கொள்ள வேண்டும் என்று டிஎபியின் தேசிய உதவித் தலைவரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் “கப்பலில் இவர்களுக்கு எந்த ஒரு சிரமும் இல்லை, காரணம் கப்பலில் இருப்பவர்களில் பெரும்பாலோர் சரளமாக தமிழிலில் பேசி பழக கூடியவர்கள். வட தேசத்திலிருந்து வந்தவர்கள் ஒரு சிலர் மலையாளத்திலும் தெலுங்கிலும் பேசுவதும் உண்டு. இருப்பினும் இவை அனைத்தும் ஏறக்குறைய தமிழ் வார்த்தைகளே. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகள் இரண்டும் திராவிட மொழிகளின் கீழ் தோற்றம் கண்டவையாகும். இதில் முக்கியமானது, இவர்கள் அனைவரும் சகஜமாக கூடி பழகும் பண்பைக் கொண்டவர்கள், காரணம் இவர்கள் அனைவரும் ஒரே ஜாதியான பறையர்கள் குலத்தைச் சார்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் தொடும் பொழுது, தீண்டாமை என்பது கிடையாது. இதனால் இவர்கள் சுதந்திரமாக கலந்து பழகலாம். கப்பலில் தங்கும் வசதிகள் முறையாக இல்லாததால் இவர்கள் ஆட்டு மந்தைகள் போலவே இருந்தனர்” என்ற 211 பக்கத்தின் எழுத்துக்கள் இந்திய இனத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தும் வாசகமாக அமைகிறது.
“மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் அர்த்தமற்றவை, இந்தியர்களின் மனதை காயப்படுத்தும் நோக்கம் கொண்டவையாக இருக்கும் வேளையில், அதில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் சிறுபிள்ளைத்தனமானது. இது போன்ற முறையற்ற வார்த்தைகளை எந்த ஓர் அறிவுள்ள மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று”, என்று குலா கூறுகிறார்.
ஜாதி என்ற ஒரு விவரம் அன்றைய காலத்தில் இருந்திருந்தாலும், அனைவரும் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்கள்
என்பது அப்பட்டமான பொய்யாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“இருப்பினும், ஜாதியை குறிவைத்து ஒரு நாவலை எழுதுவது எந்த விதத்தில் மாணவர்களுக்கு பயனாக இருக்க முடியும்? நாகரிக காலத்தில் போட்டி போட்டு கொண்டு மாணவர்கள் படிக்கும் வேளையில் இது போன்ற எழுத்துக்கள் எப்படி மாணவர்களுக்கு துணையாக அமையும்?”, என்று அவர் வினவுகிறார்.
மஇகா தனது வலிமையான எதிர்ப்பைத் தெரிவித்து அந்நாவலின் உள்ளடக்கத்தை மாற்றி அமைக்க குரல் கொடுத்துள்ளது. மஇகாவின் தேசிய தலைவர் பழனிவேல், இது போன்ற விவரங்கள் சமூதாயத்தை பாதிக்கக்கூடும் வகையில் அமைவதால், அதனை உடனடியாக சரிபடுத்த வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கும் அதே வேளையில், மஇகாவின் துணை தலைவரும் மனிதவள அமைச்சருமாகிய டாக்டர் சுப்ரமணியம் இந்நாவலின் உள்ளடக்கத்தை மீண்டும் மறு பரீசீலினை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற வார்த்தைகள் பல இன மக்களின் ஒற்றுமையை உருவாக்குவதில் சிரமத்தை எதிர்நோக்கும் என்றும் கூறியுள்ளார்.
“கோரிக்கைகளும், எதிர்க்குரல்களும் தினமும் எழுந்த வண்ணமாக இருக்கும் வேளையில், கல்வி அமைச்சு இவர்களின் வேண்டுகோளை மதிப்பதாக தெரியவில்லை. தற்சமயம் இந்த நாவலுக்கு பெரும்பாலான இணையப் பதிவாளர்கள் ஆதரவை வழங்கும் வண்ணமாக கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதில் ஒரு சிலர் “இந்நாவலின் எழுத்துக்களின் மேல் அதிகமாக உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை என்றும், அதனை இனவாதமாக பார்த்தால் இனவாதமாகத்தான் தெரியுமே ஒழிய, எழுத்தாளரின் உண்மை அதில் பறிக்கப்படுவதாக” கூறுகின்றனர்.”
தேசிய முன்னணியின் மூத்த பங்காளிக்கட்சியாக மஇகா திகழ்ந்தாலும், அம்னோவின் ஆதிக்கம் தேசிய முன்னணியில் கூடுதலாக உள்ளது என்பது உண்மை. அம்னோ ஆதிக்கவாதிகளின் உயரத்திற்கு உரிமையுடன் பேச மஇகாவிற்கு சொல்லுரிமை கிடையாது. தேசிய முன்னணி எதை சொல்கிறதோ அதனை மஇகாவும் மசீசவும் பின்மற்றியே ஆகவவேண்டும் என்பது கட்டாய சூழ்நிலையாக இருக்கும் தருணத்தில், எந்த வகையில் இவர்களின் எதிர்க்குரலை தேசிய முன்னணி எப்படி மதிக்கும்?
“தேசிய முன்னணி அரசாங்கம், இந்நாவலுக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாமல் இருப்பது, இந்தியர்களின் உணர்சிகளை அது மதிப்பளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் தேசிய முன்னணிக்கு இது ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை.
கடந்த காலத்தை போலவே தேசிய முன்னணி இந்தியர்களை அவமானப்படுவதில் குறிக்கோளுடன் உள்ளது. மேலும் அவர்களின் முந்தைய அரசியல் கர்வம் இன்னும் மேலோங்கியுள்ளதை இதன் வழி நன்கு தெரிந்துக்கொள்ளலாம். சமீபத்தில் கர்வ குணத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியது வெறும் வாய்ப்பேச்சே.”
ஒட்டுமொத்தமாக இந்திய சமூகம் புண்பட்டுள்ள வேளையில், மஇகாவும் எதிர்த்து கோரிக்கை விடுத்துள்ள அதே சமயத்தில், தேசிய முன்னணி கண்டும் காணாதது போல் இருப்பது வேதனையைத் தருகிறது என்கிறார் குலா.
“இறுதியாக, இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு காணப்படவில்லை என்றால், எதிர்வரும் தெனாங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் “இண்டர்லோக்” நாவல் சர்ச்சையை டிஎபி ஒரு பெரும் விவகாரமாக மாற்றும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன்”, என்று எம். குலசேகரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
“இன்றைய நாள் வரை அதனை மீட்டுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காதது நம்மை திடுக்கிட செய்கிறது.”
No comments:
Post a Comment