
நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இந்த தொழிலாளர்களின் சம்பளமோ குண்டு சட்டியில் குதுரை ஓட்டுவதுப் போல் அதே அளவில்தான் உள்ளது என வருத்தம் தெரிவித்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தொழிலார்கள் தினத்தை முன்னிட்டு குறைந்த பட்ச சம்பளத்தை பற்றி ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
இக்கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை (29 ஏப்ரல்) காலை மணி 9 தொடங்கி பிற்பகல் வரை, எம்.பி.பி.ஜே அலுவலகத்தில், பிளிக் பூங்கா மவாரில் நடத்தப்படவுள்ளது என ஜ.செ.க உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
பட்டதாரிகள், தொழிற்சங்கம், அரசு சார்பற்ற இயக்கங்கள், முதலாளிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கும் இந்த கலந்துரையாடலில் சில முக்கிய விசயங்கள் பேசப்படவுள்ளன. அதில் குறைந்தபட்ச சம்பளத்திற்கும் ஏழ்மை நிலைக்கும் உள்ள தொடர்பு, அடிப்படை சம்பள நிர்ணயிப்பு குழுவின் பங்கு, மாற்றத்திற்கான நடவடிக்கை என்பவன அடங்கும்.
அண்மையில் இந்த தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பற்றி பல முறை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். கேட்கும் போதெல்லாம் வரும் ஒரே விடை அரசு இதனை ஆராய்ந்து வருகிறது. குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் என சொல்லி சொல்லி காலம் தாழ்த்தி வருகிறது.
ஆனாலும் தற்போது தொழிலாளர்கள் பெரும் குறைந்தபட்ச சம்பளமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளான சம்பளம் தான் அதாவது ரிம 720- க்கும் குறைவான சம்பளம். இது தற்போதைய வாழ்க்கை செலவை ஈடுக்கட்ட முடியுமா? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.
இத்துணைக் காலம் இந்த தொழிலாளர் வர்கத்தினர் ஏழ்மையில் வாடினது போதும். அவர்களின் சம்பள உயர்வுக்கு போராட வேண்டியதை தவிர வேறு வலி ஏதும் இல்லை போல் தெரிகிறது. ஆகவே, இந்த குறைந்தபட்ச சம்பள உயர்வை எந்த அணுகுமுறையில் நாடலாம் என்பதனை கண்டறியவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இக்கலந்துரையாடலைப் பற்றி மேல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள அழைக்க வேண்டிய நபர் ராஜ் 0166045390
No comments:
Post a Comment