Thursday, September 2, 2010

நஜிப்பின் ஒரே மலேசியா கொள்கைக்கு மகாதீரே சிறந்த தடங்கள் - லிம் கிட் சிங்

கடந்த காலத்தை காட்டிலும் இன்றைய சூழ்நிலையில் பல இனங்களுக்கு மத்தியில் ஒன்றுமை பிளவுபட்டிருப்பதாக மகாதீர் தனது வலைப்பதிவில் கூறுயுள்ளார்.

நீண்ட காலம் பிரதமராக் இருந்த மகாதீர், நஜிப்பின் ஒரே மலேசியாவின் கொள்கையான "உருமாறும் தேசமாக மலேசியா" என்ற கருப்பொருளின் கீழ் இன்று மலேசியா வாழ் பல இன மக்களின் ஒற்றுமை மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது என்பதனை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது போன்ற சூழ்நிலை கடந்த 22 ஆண்டுகளில் நிகழ்ந்ததே கிடையாது என்கிறார் மகாதீர்.

மகாதீரின் கூற்றை நஜிப் முழுமையாக ஏற்றுக்கொள்வார? கடந்த மாதத்தில் நஜிப்பின் உருமாறும் தேசமாக மலேசியா" நிகழ்ச்சி குறித்து தனது அதிருப்தியை மகாதீர் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இன ஒற்றுமையை எந்த ஒரு காலகட்டத்திலும் நஜிப் நிலைப்படுத்த முயற்சி செய்யவில்லை என்பதே மகாதீரின்  குற்றச்சாட்டு. ஒரே மலேசியாவின் கொள்கையை பல இனங்களுக்கு மத்தியில் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளது என்று மகாதீர் கூறுகிறார்.

புதிய பொருளாதார திட்டத்தை முழுமையாக எதிர்க்கும் பட்சத்தில்,இது போன்ற பொருளாதரா திட்டம் புரட்சியை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும் என்பது மகாதீரின் கருத்தாக திகழ்கிறது.

நஜிப்பின் "இனவாத தகுதி" முறை முதன்மையாக இருக்கும் வேளையில் ஒரே மலேசியா கொள்கையான "மக்களுக்கு முதன்மை" என்ற சூழ்நிலை எந்த வகையில் சாத்தியமாகும் என்று கேள்வியை மகாதீர் கேட்டுள்ளார்.

ஆகவே 53-ம் ஆண்டு சுதந்திர தின நாள் கொண்டாடத்தில் மகாதீர், நஜிப்பின் கொள்கைக்கு எதிரியாக திழகும் வேளையில் எந்த விதத்தில் ஒரே மலேசியா கொள்கை சாத்தியாமாகும் என்ற கேள்வி உதிர்துள்ளது.

இதன் அடிப்படையில்,நஜிப் தனது ஒரே மலேசியா மற்றும் உருமாறும் தேசிய கொள்கையினை மாற்றியமைப்பாரா அல்லது அதிலிருந்து  பின்வாங்குவார என்ற கேள்வி உருவாகிஉள்ளது?

அவ்வைகையில் அம்னோ அல்லது தேசிய முன்னணி ஆதரவாளர்களின் விசுவாசி என்ற பெயரை பெறுபவர்  யாராகைருக்கும் என்ற கேள்விக்கு பதில்...நஜீப்பா அல்லது மகாதீரா?

No comments:

Post a Comment