Monday, August 30, 2010

ஜ.செ.க சுகுமரானை எதற்காக போலீஸ் கைதுசெய்தது?

கடந்த 22ம் திகதி சித்தியவான் போலீஸ் நிலையம் முன் கைது செய்யப்பட்ட ஜ.செ.க சுகுமாரனின் ஜாமீன் இன்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டது. தன்னை எந்த சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்ட விவரங்கள் குறிப்பிடாத ஜாமீன் கட்டளை ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வி இன்று உருவாகிஉள்ளது. இதற்க்கான விளக்கத்தை ஸ்ரீ மன்ஜோங் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி விளக்கமளிக்க வேண்டும் என்று பெ.சுகுமாரன் கேட்டுக்கொண்டார்.

மேலும் தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகளை தாம் அடையாளம் காட்டிய பிறகும் அவ்விருவரும் மேலும் பணியில் ஈடுபடுவது குறித்து பெ.சுகுமாரன் வருத்தம் தெரிவித்தார். போலீஸ் தனது அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமல் இரட்டை வேடம் போடுவது தமக்கு வேதனை அளிக்கிறது என்றார். தவறு செய்தவர்கள் யாராகினும் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவர்களை காப்பாற்றுவது சட்டத்திற்கு எதிரான செயலாக விளங்குகிறது.

இவ்விவகாரம் குறித்து மாநில போலீஸ் படைத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அது மட்டுமில்லாமல் அந்த இரு போலீஸ் அதிகாரிகளும் வழக்கு முடியும் வரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனை குறித்து பேசிய மு.குலசேகரன்,போலீஸ் படை என்றைக்கும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய பாடுபடவேண்டுமே ஒழிய மக்களுக்கு பாதிப்பு விளைவிக்கும் அளவிற்கு செயல்பட கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

"அந்த இரண்டு அதிகாரிகளின் மேல் போலீஸ் படையும் அரசாங்கமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடக்க ஏதுவாக, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் வரை அந்த இரண்டு அதிகாரிகளும் தற்காலிக பனி நீக்கம் செய்வதற்கு போலீஸ் தனது தனிப்பட்ட முடிவை செயல்படுத்துவது முறையாக இருக்கும்." என்றார் மு.குலசேகரன்.

இப்பிரச்சனை குறித்து கூடிய விரைவில் மனித உரிமை மீறலுக்கு தாம் மகஜர் ஒன்றினை வழங்கவிருப்பதாக மேலும் கூறினார்.

No comments:

Post a Comment