Thursday, September 9, 2010

லிட்டில் இந்தியா நுழைவாய் வளைவுக் கதவு தேவைக்கேற்று அமைத்தல் வேண்டும் - மு.குலசேகரன்

லிட்டில் இந்தியா வளாகத்தில் எழுப்பப்பட்டுள்ள நுழைவாய் வளைவுக் கதவு பொருத்தமில்லாத இடத்தில் கட்டுவதற்கான காரணத்தை மாநகராட்சி மன்றம் மக்களுக்கு விளக்கவேண்டும்.

இந்தியர்கள் காலங்காலமாக லிட்டில் இந்தியா பகுதியில் வர்த்தகத்தை செய்துவரும் வேளையில், இவ்விடத்திற்க்கென்று ஒரு அடையாள சின்னமாக விளங்க ஒரு அடையாள சின்னத்தை எழுப்பியது வரவேற்க கூடிய ஒன்று.ஆனால் பொருத்தமில்லாத இடத்தில் எழுப்புவதின் காரணம் என்ன?

இந்த நுழைவாய் வளைவுக் கதவு ஆரம்ப கட்டத்தில் எந்த இடத்தில் எழுப்ப திட்டம் செய்யப்பட்டது என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் திடீரென்று அவை வேறு ஒரு இடத்திற்கு கட்டப்பட்டது பல இந்தியர்களின் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது என்பதனை மாநகராட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் லிட்டில் பகுதியில் சாலைகள் நிர்மாணிப்பு செய்யப்பட்டது.மேலும் இங்கிருக்கும் கட்டடங்களுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டது. ஆனால் இவையாவும் புதுப்பித்தலுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. கம்பீர தோற்றத்துடன் ஒரு "லிட்டில் இந்தியா" என்ற நுழைவாய் வளைவுக் கதவு இந்த இடத்திற்கு கோரமாக காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும் அது அருகில் உள்ள வர்த்தகர்களுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதற்க்கு யார் காரணம்?
இரண்டு வருடங்களுக்கு முன்பு துணை பிரதமர் லிட்டில் இந்திய பகுதிக்கு வருகை தந்த பொழுது இப்பகுதியை மேம்படுத்த சுமார் பத்து லட்சம் வெள்ளியை வழங்குவதாக கூறியிருந்தார். மேலும் இதற்க்கு முன்பு இவ்விடத்தை மேம்படுத்த மாநகராட்சி மன்றம் சுமார் மூன்று லட்சம் வெள்ளியை ஒதிக்கீடு செய்து வைத்திருந்தது. அந்த வகையில் அப்பணங்கள் இவ்விடத்தை மேம்பாட்டுத்த முழுமையாக பயன்படுத்தப்பட்டதா என்று விளக்க வேண்டும். மேலும் இது சம்பந்தமாக மேம்பாட்டு ஒப்பந்த குத்தகை எந்த வகையில் வழங்கப்பட்டது என்பதனை விவரிக்கவேண்டும். இத்திட்டத்திற்கு அங்கிகாரம் வழங்கிய மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் யார்?அவர்கள் பொது மக்களின் கருத்துக்களை சேகரித்தார்களா? இல்லை என்றால் ஏன் அதனை செய்யவில்லை?

ஒரு குறிப்பிட்ட மேம்பாட்டு திட்டத்தை அரசாங்கம் திட்டமிட்டு அமைக்கும் முன் மக்களுடன் தொடர்புக்கொண்டு அவர்களின் பரிந்துரைகளை சீர்தூக்கி பார்த்த பிறகு தான் அத்திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். அவ்வகையில் தொடர்ச்சியான மேம்பாட்டு திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட LOCAL AGENDA 21 கோட்பாடு 15 வருடங்களுக்கு முன்பு மலேசியாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மலேசியாவில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்கள் இந்த கோட்பாட்டை பயன்படுத்தும் வேளையில் ஈப்போ மாநகராட்சி மன்றம் எதற்காக பொது மக்களின் கருத்தை பெற முயவில்லை.? எதற்காக இந்தியர்களின் சின்னமாக விளங்கும் லிட்டில் இந்தியா பகுதி மேம்பாட்டிற்கு எனாதானோ என்ற செயல்திட்டங்கள் வரையப்பட்டது?

தற்சமயம் கட்டப்படும் நுழைவாய் கதவு அங்கிருக்கும் வணிகர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. பலர் என்னிடம் இது குறித்த ஆதங்கத்தை என்னிடம் தெரிவித்தனர். அந்த நுழைவாய் கதவு முழுமையாக கட்டிய பிறகு மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே அது போன்ற அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க மாநில அரசாங்கம் மாநகராட்சி மன்றத்தை இந்த நுழைவாய் கதவு கண்டுமான திட்டத்தை குறித்த முந்தய இடத்திற்கு மாற்ற பரிந்துரை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment