Monday, June 27, 2011

பொதுத் தேர்தலில் 11 மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றும்.


எந்நேரத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில், நடப்பிலுள்ள 4 மாநிலத்தை தவிர மேலும் 7  மாநிலங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றும் இலக்கை கொண்டுள்ளது என்று ஜ.செ.க வின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். 

அவரின் அந்த மூன்று இலக்குகள் பின்வருமாறு: 

- தற்சமயம் கைவசமுள்ள நான்கு மாநிலங்களின் ஆட்சியை தற்காத்துக்கொள்ளும் 

- மேலும் அதே சமயத்தில் பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற தீவிர முயற்சியை மக்கள் கூட்டணி பலபடுத்தும்.

- நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா, பஹாங், திரங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைக்க இலக்கை கொண்டுள்ளது.

இந்த இலக்கை முன்னோடியாக வைத்து, வருகிற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு மக்கள் கூட்டணி வலுவான போட்டியை தரும் என்பது உறுதி என்று அவர் கூறியுள்ளார். 

நாட்டினுடைய நடப்பு அரசியல் சூழலை உண்ணிப்பாக கவனித்தால் பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் வேளையில், தேசிய முன்னணி தனது ஆட்சி பீடத்தை தக்க வைத்துகொள்ள பல முயற்சிகளை எடுக்கலாம். காரணம், வருகிற தேர்தல் தேசிய முன்னணிக்கும் அம்னோவிர்க்கும் வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமையும் என்று லிம் தெரிவித்தார். 

Wednesday, June 22, 2011

தேசிய முன்னணி பெர்சே 2.0 அமைதி பேரணியில் கலந்து கொள்ள லிம் கிட் சியாங் அழைப்பு


தேசிய முன்னணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் பெர்சே 2.0 பேரணியில் கலந்து கொண்டு, நேர்மையான சுதந்திரமான மாசில்லாத முறையில் தேர்தல் நடைபெறவேண்டும் என்று மக்கள் குரல் கொடுப்பதற்கு ஆதரவு தரவேண்டும் என்று ஜ.செ.க வின் ஆலோசகரும் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். 

நாட்டினுடைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஜாக், துணை பிரதமர் முகைதீன் யாசின் மற்றும் தேசிய முன்னணியின் இதர அரசியல் தலைவர்களும் ஜூலை 9 ம் திகதி நடைபெறும் அந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு மக்களுக்கு அங்கிகாரம் தர வேண்டும் என்று ஜ.செ.க-வின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான கிட் சியாங் அழுத்தமாக தெரிவித்துள்ளார். 

"இந்த அழைப்பு பெர்சே பேரணியின் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சிகள் (தேசிய முன்னணியும்) மற்றும் அரசாங்க சார்பற்ற இயக்கங்களுக்கும் விடுத்த அழைப்பின் பெயரில் நான் இந்த அழைப்பை விடுக்கிறேன்" என்று தனது செய்தி அறிக்கையில் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பிரதமருடன், துணை பிரதமர், தேசிய முன்னணியின் அமைச்சரவையின் உறுப்பினர்கள் மற்றும் இதர தேசிய முன்னணி அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வை குறித்து வெளிப்படையான நிலைப்பாடினை வெளியிட்டால் அவை அவர்களின் தலைமைத்துவத்தின் நேர்மையான நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் அதே தருணத்தில் நமது மலேசியாவின் ஜனநாயகத்தின் வரலாற்றின் அடையாளமாக அந்நாள் திகழும் சாத்தியமுண்டு என்று அவர் மேலும் தெரிவித்தார்.



- பெர்சே கோரிக்கை பின் வருமாறு: 

- கண்யமற்ற வாக்காளர் பட்டியலை தூய்மைபடுத்துதல்
- தபால் வாக்களிப்பு முறையை சீர்படுத்துதல் 
- நிலையான மையை பயன்படுத்துதல் 
- தகவல் ஊடங்கங்களுக்கு சுதந்திரத்தை வழங்குதல்
- 21 நாட்கள் தேர்தல் பிரசார அவகாசத்தை வழங்குதல் 
-அரசியல் சட்டத்தை நடைமுறைபடுத்தும், பொது அமைப்புகளை பலப்படுத்துதல்  
- லஞ்ச சீர்கேட்டை நிர்மூலமாக்குதல். 
- தூய்மையற்ற அரசியல் கொள்கையை அகற்றுதல் 


இதனை தொடர்ந்து கூடுதலாக இரண்டு தீர்மானங்களை கிட் சியாங் தனது கோரிக்கையில் இணைத்துள்ளார். அவை,


- எந்த சூழ்நிலையிலும், 1969 ம் ஆண்டில் நடைபெற்ற மேஇதனை தொடர்ந்து கூடுதலாக இரண்டு தீர்மானங்களை கிட் சியாங் தனது  13, கருப்பு நாளை தேர்தல் காலத்தில் நினைவுபடுத்தல் கூடாது ; மற்றும் 

- நாடாளுமன்ற கலைக்கப்பட்ட பிறகு "அரசாங்க காப்பாளர்" அமைச்சரவையை தற்காலிகமாக அமைக்க வேண்டும். அவ்வப்போது அமைச்சர்களும் மற்றும் மாநில ஆட்சி குழு உறுப்பினர்களும் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில், எந்த ஒரு சிறப்பு அரசாங்க ஒதுக்கீடுகளை வழங்குவதாக அறிவித்தல் கூடாது என்று, லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். 

Friday, June 17, 2011

அமைச்சரவையில் மாற்று கருத்துக்களை தெரிவிக்க பயப்படும் ம.சீ.ச, தேசிய முன்னணியில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒரே சூழ்நிலைதான்

மக்கள் நலனை பாதுகாக்க தவறிய ம.சீ.ச ஒரு சந்தர்ப்பவாதி என்று தான் சொல்ல வேண்டும். மக்களின் உதவித்தொகை குறைப்பு மற்றும் சிறந்த மாணவர்களுக்கு அரசாங்க உபகார சம்பளம் வழங்குவதில் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ள பொது சேவை இலாக்காவின் செயல் போன்ற விவகாரங்களை அமைச்சரவையில் எழுப்ப ம.சீ.ச தைரியமற்ற நிலையில் உள்ளது என்று ஜ.செ.க வின் தேசிய பொதுச் செயலாளரும் பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சருமான லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

இது போன்ற ம.சீ.ச-வின் செயல்கள் ஜ.செ.க-வின் கண்களுக்கு புதுசல்ல என்பதும் உண்மை. சமீபத்தில் உள்நாட்டு வர்த்தக வாணிப அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ம.சீ.ச-வின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ சுவா சொய் லேக்கின் மீது கண்டன அறிக்கை ஒன்றில், சுவா சொய் லேக் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தேசிய பொருளாதார மன்ற கூட்டத்தில், சுவா  சொய்   லேக்   செய்தியாளர்களிடம்  கூறியது,  தான்  மக்களிடமும் அரசாகத்திடமும் இரட்டை நாடகம் அரங்கேற்றம் செய்கிறார் என்றும் இஸ்மாயில் அவரை மேலும் சாடியுள்ளார்.

தனக்கு எதிராக வெளியிட்ட அந்த அறிக்கையை அந்த அமைச்சர் மீட்டுக்கொள்ளவோ அல்லது தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று சொல்லுமளவிற்கு டத்தோ சுவா சொய் லேக்கிற்கு தைரியம் உண்டா என்று, குவான் எங் கேட்டுக்கொண்டார்.

இது போன்ற சூழ்நிலை மீண்டும் மீண்டும் தொடர்கதையாககும்  வேளையில்,  வருகிற  பொதுத்தேர்தலில் படு தோல்வி  கண்டால் ம.சீ.ச தேசிய முன்னணியை விட்டு விலகும் என்று அறிக்கையை சுவா சொய் லேக் விடுகிறார் என்பது வியப்பாக உள்ளது என்று, குவான் எங் தெரிவித்துள்ளார்.

ஆகவே, ம.சீ.ச தேசிய முன்னணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் சூழ்நிலை சமம் என்பது இதன் வழி  நிரூபனமாகிவிட்டது   என்று லிம் குவான் எங் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

Friday, June 10, 2011

அனாக் மலேசியா முடியாது என்றால், ஜ.செ.க நீதி மன்றம் செல்லும்.


சுபாங் சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவும் அவரது கணவர் ராமச்சந்திரன் இருவரும் தங்களின் பெண் குழந்தையின் இனத்திற்கு அனாக் மலேசியா எனப் பதிவு செய்த விண்ணப்பம் தேசிய பதிவுதுறை நிராகரித்து விட்டது. 


இது குறித்து கருத்து தெரிவித்த ஜ.செ.க-வின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அவர்கள், கட்சி அவ்விருவரின் முயற்சிக்கும் முழுமையான ஆதரவை வழங்கும் என்பதனை தெரிவித்தார்.

ஒரு வேலை, இவ்விவகாரம் குறித்து அவர்கள் இருவரும் இப்பிரச்சனையை நீதிமன்றம் கொண்டு செல்ல விரும்பம் கொண்டிருந்தாள், அதற்கான தக்க நடவடிக்கையும் சட்ட ஆலோசனையும் வழங்க கட்சியின் தேசிய சட்ட பிரிவின் ஆலோசனையாளர் கோபிந்த் சிங் அவர்களை உதவும் மாறு குவான் எங் கேட்டுக்கொண்டுள்ளார். 

மலேசியா அனைவருக்கும் சமம் என்ற கொள்கையின் கீழ் மலேசியன் மலேசியா என்ற உணர்வுக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டின் கீழ் வாழ்வதையும் கண்டு ஜ.செ.க மிகவும் பெருமை கொள்கிறது என்று லிம் தெரிவித்தார். 

Wednesday, June 1, 2011

ம.சீ.ச தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும்

சிறந்த மாணவர்களுக்கு பொது சேவையின் கல்வி உபகார கடனுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுவதில் தேசிய முன்னணி அரசாங்கத்தை ம.சீ.ச கவர்வதில் தோல்வி கண்டுள்ளது என்று, ம.சீ.ச-வின் தேசிய இளைஞர் பிரிவு தலைவரும், தேசிய முன்னணியின் அமைச்சரவையில் கல்வி அமைச்சின் துணை அமைச்சருமான டத்தோ வீ கா சியோங் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஜ.செ.க.வின் தேசிய இளைஞர் பிரிவு தலைவரும், ராசா நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் கேட்டுக் கொண்டார்.

கடந்த வருடத்தை போல, இவ்வருடமும் தகுதி அடிப்படையில் 20 %, இன அடிப்படையில் 60 %, சிறப்பு சலுகையில் 10 % மேலும் 10 % சபா மற்றும் சரவாக் புமிபுத்ராக்களுக்கு என்ற முறையில் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.  

"ஒரு துணையமைச்சர் பொறுப்பில் இருக்கும் டத்தோ வீ கா சியோங், இவ்விவகாரம் குறித்து ஜ.செ.க வின் தேசிய பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அவர்கள் எந்த ஒரு கேள்விகளையும் எழுப்பக்கூடாது என்று கூறுவது, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை"

"தற்சமயம் தான் துணையமைச்சராக இருக்கும் தருணத்தில் தனக்கு யாரும் கேள்விகளை தொடுக்க கூடாது என்று சொல்வதற்கு சட்டங்கள் ஏதேனும் உள்ளதா? தன்னுடைய இயலாமையை, பிறர் சுட்டிக் காட்டுவது தவறு என்று வீ கா சியோங் நினைத்தால், தனது அரசியல் வாழ்கையிலிருந்து தன்னை நீக்கிக் கொள்வதே சரியானதாகும்" என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.