“இதோ இன்னொரு முதுகெலும்பு இல்லாத ம.இ.கா-வின் அரசியல்வாதி. ம.இ.க-வின் தலைமைச் செயலாளர் முருகேசன் அவர்கள் ஜென்ஜாறோம் தேசிய வகைத் தமிழ் பள்ளிகளுக்குக் சென்று கூறிய வார்த்தைகளை மீண்டும் வேறு தமிழ் பள்ளிகளில் சென்று தமிழர்களின் எதிர்காலத்தில் மண்ணை தூவ வேண்டாம் என்று நான் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறேன்” என்று சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.பள்ளியில் சென்று நாலு நல்ல வார்த்தை சொல்லி மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவிப்பார்கள் என்றால், கிள்ளி கொடுத்தால் போதும் என்கிறீர்களே இது தான் ம.இ.கா-வின் புதிய தலைமைத்துவத்தின் அரசியல் வடிவமைப்பு திட்டமா. அரசாங்கத்திடமும் இப்படிதான் தமிழ் பள்ளிகளுக்கு குரல் கொடுப்பீர்களா. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளி பதம் போல″ முருகேசனின் கூற்று, தமிழ் பள்ளிகளின் மேல் ம.இ.க எவ்வாறான எதிர்கால மேம்பாட்டு திட்டத்தை கொண்டுள்ளது என்பதனை தெளிவுபடுத்துகிறது.
அரசாங்கத்திடம் அள்ளிக் கொடு என்று உரக்க குரல் கொடுங்கள் என்று மக்கள் கேட்டால், அவர்களிடமே சென்று கிள்ளி கொடுக்க முன் வாருங்கள் என்று சொல்வது முற்றிலும்
முட்டாள்தனமாக உள்ளது என்று மேலும் அவர் கூறினார்.
முட்டாள்தனமாக உள்ளது என்று மேலும் அவர் கூறினார்.
மக்களிடம் சேரவேண்டிய உரிமையைக் கேட்க மக்கள் கூட்டணி தலைவர்கள் அல்லும் பகலும் பாடுபடுகிறோம். ஆனால் நீங்கள் கிள்ளி கொடுங்கள் என்று சொல்லி இந்திய மக்களை பிச்சை எடுக்க சொல்கிறீர்களே இது எந்தவகையில் நியாயம்? இதற்கு தான் ம.இ.க இத்தனை காலம் அம்னோ
தேசிய முன்னணியில் இருந்ததா? அவர் கேள்வியெழுப்பினார்.
தேசிய முன்னணியில் இருந்ததா? அவர் கேள்வியெழுப்பினார்.
தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த வண்ணமாக இருக்கும் வேளையில் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்திடம் நமது உரிமையை தட்டிக்கேட்கக்குரல் எழுப்பி சாதனை செய்வீர்கள் என்றால், மக்களை பழைய சாக்கடையில் தள்ள முயற்சி செய்வது முற்றிலும் வேதனையாக உள்ளது என்று தன்மனக்குமுறலை சிவநேசன் வெளிப்படுத்தினார்.
கிள்ளி கொடுங்கள் என்று சொல்லி விட்டால், எந்த பெற்றோர்கள் தனது பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்ப முன்வருவார்கள்? எப்படி இந்திய சமுதாயம் முன்னேற முடியும்?
கற்றவனுக்கு அழகா இது? என மேலும் கேள்விகளைத் தொடுத்தார்.
கற்றவனுக்கு அழகா இது? என மேலும் கேள்விகளைத் தொடுத்தார்.
புத்துணர்வை உருவாக்குவதற்கான அடிப்படையை இந்திய சமுதாயத்தின் மனதில் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் இந்திய சமுதாயத்தில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது என்றும் கேட்டார்? அத்தகையான தாழ்வு மனப்பான்மை கொண்ட வார்த்தைகளை இனியும் நீங்கள் தமிழ் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டாம் என்பதனை உங்களுக்கு அறிவுறுத்தவிரும்புகிறேன் என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார்.
ஒவ்வொரு இந்தியர்களும் இன்னொரு இந்தியர்களின் வாழ்வில் சமமான உரிமையைக் கொண்டாப் பாடுபட வேண்டும். மற்றவர்களுக்கு நல்லதை கொடுக்க தயாராக இருந்தால்தான், மக்கள் சிறந்த பிரதிநிதித்துவத்தை காண முடியும். இந்த ஜனநாயக மனப்பான்மையை, உங்களின் அரசியல் லாபத்திற்காகக் கூறு போட்டு விற்காதீர்கள் என்றார்.
இன்று கிள்ளி கொடு என்று சொல்லும் நீங்கள், நாளை அரசாங்கம் தமிழ் பள்ளிக்குக் கிள்ளி கொடுப்பதை வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? என்று சிவநேசம் கேட்டார்.
ஆகவே, மு.குலசேகரன் வார்த்தையால் “முதுகெலும்பு இல்லாதக் கட்சி ம.இ.கா” என்று சொன்னதை நீங்கள் செயல் வடிவத்தில் ஆதாரப் படுத்தியதற்கு மீண்டும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி வருங் காலங்களில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மக்கள் கூட்டணியின் இந்திய தலைவர்கள் அள்ளி கொடு என்று குரல் கொடுப்போமே ஒழிய கிள்ளி கொடு என்று கீழ்த்தனமாக சொல்லமாட்டோம் என்று ஆவேசமாகக் கூறினார் சிவநேசன்.
இண்டர்லோக் நாவல் பிரச்னை என்பது இந்தியர்களின் பிரச்னை என்று ம.இ.கா குரல் கொடுக்கும் வேளையில், இண்டர்லோக் மலேசியர்களின் பல இன மக்களின் ஒற்றுமையின் நீரோட்டத்தை சிதைக்கும் என்ற கோணத்தில் மு.குலசேகரன் குரல் எழுப்புகிறார் என்பதனை அனைவரும் முதலில் அறிந்திருக்க வேண்டும் என தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மனோகரன் தெரிவித்தார்.
நாட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ள இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் அரசாங்கம் சுணக்கம் காட்டியுள்ளதை பார்த்தால், நாட்டின் கல்வி அமைச்சரின் காது மந்தமான நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் மக்களின் கோரிக்கைகள் செவிடன் காதில் உதிய சங்காக இருக்கும் வகையாக அமைகிறது.
வறுமை என்பது ஒரு இனத்திற்கு சம்பந்தமானது அல்ல. வறுமை இனம் மதம் பாராதது. சமீபத்தில் ம.இ.க-வின் தேசிய தலைவர் டத்தோ பழனிவேல், நகர மையத்தில் ஏழ்மை நிலையில் துன்பப்படும் இந்தியர்கள் மீண்டும் தோட்டங்களுக்கு செல்ல ஆலோசனை கூறியது யாராலும் என்றுக்கொள்ள முடியவில்லை. தான் ம.இ.க வின் தலைவர் என்ற நாற்காலியில் அமர்ந்த பிறகு நாட்டில் நிறைய இந்திய கோடீஸ்வரர்களை உருவாக்குவேன் என்று வசனம் பேசிய அவர், இன்று தலை கீழாக பேசுவது நியாயமாகாது.













இண்டர்லோக் நாவலுக்கு எதிரான போராட்டத்தை துணைப் பிரதமர் காவல் துறையின் உதவியோடு தடுத்து நிறுத்திவிட்டார்.