Thursday, October 28, 2010

ஊக்கமும் ஆரோக்கியமும் கலந்த ஜனநாயக கட்டாயத்தின் பெயரில் தானாக வாக்கு பதிவு செயல் முறை அவசியமாகும் பட்சத்தில் வயது வரம்பு 18 க்கு மேல் என்ற விதிமுறை தேவை.

ஒரு தனிமனித விருப்பத்திற்கு மாறாக யாரையும் வர்புர்த்தி வாக்காளர் பதிவு முறையை அமுல்படுத்துவதில்  அரசாங்கத்திற்கு  எந்த ஒரு  நம்பிக்கையும்  இல்லை என்று பாஸ் கட்சியை சார்ந்த கெதெரிஹ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் கேட்ட துணைக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அவர்கள் கூறினார். மேலும் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு வாக்கு பதிவு செய்யும் எண்ணமில்லை என்றால் அவர்களின் உரிமையை தட்டிப் பறிக்கும் செயலாக தானாக பதிவு முறை வகை செய்வது மட்டுமல்லாமல் ஜனநாயக கொள்கைக்கு எதிரான செயாலாக அவை திகழும்  என்று நஸ்ரி மேலும் கருத்துரைத்தார்.

அவ்வாறு செய்வதனால் அவை இறுதியில் பிரச்சனையில் வந்து முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும், காரணம் நிறைய மக்களின் அடையாள அட்டையின் முகவரியும் அவர்கள் வசிக்கும் இட முகவரியும் முழுமையா மாறுபட்டிருக்கிறது என்ற விளக்கமளித்தார்.

தேசிய முன்னணியின் அமைச்சரவையின் பிரதிநிதி என்ற முறையில்  டத்தோ ஸ்ரீ நஸ்ரி கூறிய பதில் ஆட்சிரியதிற்க்கு உட்பட்டதல்ல, காரணம் தேசிய முன்னணியின் கொள்கை தானாக வாக்கு பதிவு முறையை அமுல்படுத்தினால் அவை அவர்களுக்கு பாதமாக வந்து முடியும் என்ற பயம் மேலோங்கி இருக்கிறது. ஒரு சமூதாய கடப்பாடுள்ள ஜனநாயக அரசாங்கம் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் சுமார் 50  இலட்சம் பதிவு பெறாத வாக்காளர்களின் பதிவு பெறுவதில் சிறந்த முனைப்பை காட்டவேண்டுமே ஒழிய காரணங்கள் காட்டி தண்டிக்களித்தல் கூடாது.

இதன் தொடர்பில் இந்த எண்ணிக்கை அடைய தேர்தல் ஆணையமும் எந்த விருப்பமும் காட்டுவதில்லை.பணியாட்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டாமல் இருப்பதற்கு அரசியல் கட்சிகள் இவர்களுக்கு துணை பதிவதிகாரிகளை வழங்கினாலும் தேர்தல் ஆணையத்தின் முயற்சி ஏமாற்றத்தை காட்டுகிறது.  இதன் அடிப்படையில் தானாக வாக்கு பதிவு முறையை அரசாங்கம் தள்ளுபடி செய்வது எந்த விதத்திலும் நியாமான ஒன்றல்ல.

கடந்த வருடம் தேர்தல் ஆணையம் இப்பிரச்சனைக்கு பதிலளிக்கும் வகையில் "அதிவேகத்தில் நடமாடும் சமூக"கலாச்சாரமே இதற்க்கு காரணம் என்று சுட்டிக்காட்டினர். மேலும் இக்கலாச்சாரத்தின் எதிர்மறை விளைவாக பலர் அடிக்கடி இடமாற்றம் செய்வதும்  அதற்க்கு  ஏற்றவாறு  முகவரியை அடையாள அட்டையில் மாற்றாமல் இருப்பதும்  தேர்தல் ஆணையத்திற்கு சிக்கலை உருவாக்குவதாக சொல்லப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் சொன்ன காரணம் எந்த ஒரு வகையிலும் தானாக வாக்காளர் பதிவு முறைக்கு எந்த ஒரு இடையூறாக  விழங்கும்   என்று சொல்ல முடியாது. அதுமட்டுமல்லாமல் "அதிவேகத்தில் நடமாடும் சமூக" கலாச்சாரம் தான பதிவு செய்வது பிரச்சனை என்றால், அதே பிரச்சனைதானே நேரடியாக சென்று பதிவு செய்பவர்களுக்கும் உண்டாகும்.

எந்த அடிப்படையில் இவை வேறுபட்டுள்ளது.?அது மட்டுமல்லாமல்
பழைய முகவரிலேயே வாக்காளர் பதிவு செய்பவர்கள் அவர்களின் புதிய முகவரியை அடையாள அட்டையில் புதுபிக்கவில்லை என்றால் என்ன பிரச்சனை நேரப்போகிறது?தானாக வாக்கு பதிவு முறையை அமுல்படுத்தினால் பிறகு முகவரியை மாற்றிக்கொள்ளலாமே?  இதற்க்கு எந்த தடையுமில்லை என்பதனை தேர்தல் ஆணையம் மறந்து விடக்கூடாது.

தானாக வாக்கு பதிவு முறைக்கு தடையாக இருப்பது காலாச்சாரமோ அல்லது முகவரிகள் அல்ல தேசிய முண்ணனியின் தன்மூப்பான செயலும் மட்டுமே. இப்பிரச்சனைக்கு சுலபமான எளிமையான முறைதான் என்ன?
ஒரு சில நாடுகளில் கட்டாய வாக்களித்தல் முறையை கடைப்பிடிக்கும் பச்சத்தில் நம் நாட்டில் தானாக வாக்கு பதிவு முறை பற்றி இன்னமும் விவாதம் நடத்தி கொண்டிருக்கிறோம்.

மேலும் வாக்களிப்பு வயது வரம்பு 21 லிருந்து 18 க்கு குறைத்து ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த வாக்களிப்பு முறையை நாடு ஏற்றுக்கொள்ளவேண்டும். இதே போன்ற 18 வயது வாக்களிப்பு முறை சுமார் 100  நாடுகளில் நிறைவேற்றி கடைபிடுக்கும் தருணத்தில் மலேசியாவிலும் இந்த வயது வரம்பு முறை கொண்டுவரவேண்டும்.
ஒருவர் 18  வயது அடைந்தவுடன் தேசிய பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படும் பொழுது வாக்களிப்பு வாய்ப்பை இவர்களுக்கு ஏன் வழங்கக்கூடாது. 

அரசாங்கம் இந்த செயல் முறைக்கு தனது வெளிப்படையான காரணமான இளைஞர்களின் ஆதரவு மக்கள் கூட்டணிக்கு கூடுவதை மனதில் கொண்டு இந்த வாக்காளர் முறையை தாமதப்படுத்தக்கூடாது.

Tuesday, October 26, 2010

"பெண்கள் முன்னேற்ற மனித பாதுகாப்புக்கு அதிகாரமளித்தல்"

இம்மாதம் 23 ம், 24 ம் திகதி இஸ்தான்புல், துர்கீயில் நடைபெற்ற "பெண்கள் முன்னேற்ற மனித பாதுகாப்புக்கு அதிகாரமளித்தல்" மாநாட்டில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் ஆற்றிய உரை.


கடந்த பல வருடங்களாக மலேசியாவில் மனித கடந்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மலேசியா கவனிப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதில் பெண்களும் மற்றும் சிறார்களும் இதற்க்கு ஆளாகி வருகின்றனர்.

சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு படி சுமார் இரண்டு இலட்சம் பெண்களும் இரண்டு இலட்சத்து இருபத்தைந்து சிறார்களும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படிருக்கிறார்கள் என்று புள்ளி விவகாரம் காட்டுகிறது.

இந்த புள்ளி விவகாரப்படி இதில் சுமார் 60 சதவிகித மக்கள் நாட்டில் புகுந்து குறிப்பிடாத காலகட்டத்தில் மாயமாகுகின்றனர். மீதமுள்ள 40 சதவிகித மக்கள் தென்கிழக்கு நாடுகளில் விநியோகம் செய்யப்படுகின்றனர். மலேசியா நாட்டில் குற்ற செயல்கள் அதிகரிப்பு போதை, சட்டவிரோத பண பரிவர்த்தணை, சட்டவிரோத வர்த்தகம் மற்றும் பல விதமான செயல்கள் துள்ளியமாக நடைபெறுகிறது.

பெண்கள் மற்றும் குழைந்தைகள் பாலிய தொழிலுக்கு கடத்த மலேசியா ஒரு சிறந்த சந்திப்பு முனையாக திகழ்கிறது என்பது உண்மையாகிறது. சமீபத்தில் குடிநுழைவு அதிகாரிகள் இவர்களுக்கு துணை நின்றதின் காரணமாக பல அதிகாரிகள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். மலேசியாவிற்கு கொண்டு வரப்படும் பெண்களுக்கும் சிறுமிகளும் பர்மா கம்போடியா இந்தோனேசியா பிலிப்பைன் தாய்லாந்து மற்றும் வியாட்நாம் போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவிற்குள் கடத்தப்படுகின்றனர். அதன் பிறகு இந்தோனேசியா பிலிப்பைன் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு சட்டவிரோத சீன வர்த்தக மூலம் கடந்தப்படுகின்றனர்.


சட்டவிரோத குடியேறிகள் பலர் உடலுழைப்பு தொழிலாளிகளாகவும், கட்டுமாண தொழிலாளர்களாகவும் ,விவசாய துறைகளில் பணியாட்களாகவும் வேலை செய்யும் பொழுது பல இன்னல்களை சந்திக்கின்றனர். சமீபத்தில் தலைதூகியுள்ள இந்த ஆள் கடத்தல் வர்த்தகம் மிகப்பெரிய லாபத்தை தருவதாக அறிவிக்கப்படுள்ளது. இதன் வர்த்தக லாபத் தொகை சுமார் 2 கோடி வெள்ளி மதிப்பை தாண்டுகிறது என்று சொல்லப்படுகிறது. அதற்க்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வது விபசார தொழிலாகும். மலேசியாவில் விபச்சாரம் சட்டவிரோதம். அதிலும் சட்டவிரோத தொழிலில் வெளிநாட்டவர்கள் ஈடுபடுவது பொதுவாகிவிட்டது.

மனித கடத்தல் எதிரான சட்டம் 2007 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றபட்டாலும் அதில் பல குறைபாடுகள் இருக்கவே செய்கிறது. இதன் விளைவு பல அப்பாவி மக்கள் இது போன்ற செயல்களை தீவிரப்படுத்தும் கும்பலிடம் சிக்கி பாழாபோவது. இவர்களின் அறியாமையும் இதற்க்கு காரணம் என்று சொல்லலாம். சட்ட விரோத மனித கடத்தலை பற்றி பகுத்தறிவு அல்லாமையே இதற்க்கு காரணம்.

சமீபத்தில், குடிநுழைவு இலாக்காவை சார்ந்த அதிகாரிகளை கைது செய்தது வரவேற்கக்கூடிய ஒன்று. இவர்களின் மேல் முறையான விசாரணை நடத்தி இவர்களுக்கு பின்னணியில் இருக்கக்கூடிய மேலும் பலரை அரசாங்கம் விரைந்து கைது வேட்டையை தீவிர படுத்த வேண்டும்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

1998 ம், பல நாடுகள் ரோம் சட்ட விதிகளுக்கு மதிப்பளித்து ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பினர் ஆனார்கள். இந்த சட்ட படி உலக நாடிகளில் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு நாடாக இருந்தாலும் இதன் சட்டத்திலிருந்து தப்ப முடியாது. அந்த வகையில் இந்த சட்டத்தின் கீழ் இன படுகொலை, மனிதகுளத்திற்கு வேறுபட்ட கொள்கை பயன்பாடு, கூட்டுக்கொலை, கற்பழிப்பு போன்ற அனைத்தும் மிகவும் கடுமையாக கருதப்படிகிறது. இந்த சட்ட மசோதாவை உலக நாடாளுமன்ற நடவடிக்கை குழு முழுமையாக ஊக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 28-ம் திகதி மே மாதம், உகாண்டா நாட்டில் கம்பாலா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமதுறை அமைச்சர் டத்தோ நஸ்ரி அவர்கள் கூடிய விரைவில் மலேசியா இந்த ரோம் சட்ட குழுமத்தில் உறுப்பினராக சேர கையெழுத்திடும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நான் கேள்வி எழுப்பிய பொழுது, வெளியுறவு அமைச்சு ரோம் சட்ட குழுமத்தில் இணையும் அறிக்கை ஒன்றை கூடிய விரையில் அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்ய விருப்பத்தை அறிவித்தது.

இன்றைய நாள் வரை சுமார் 100 நாடுகள் இந்த ரோம் சட்ட குழுமத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் மலேசியா அரசாங்கத்தின் மெத்தன போக்கு அனைவைரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

(பட குறிப்பு - மு.குலசேகரனுடன், புகிட் மேர்த்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் சொங் எங் மற்றும் இம்மாநாட்டின் ஏற்பாட்டு குழுச் செயலாளர் ரபி)

அதிகம் பேசும் உதயகுமார்

வாழ்க தமிழ்ப் பணி தொண்டு

ஜெலப்பாங் ஜ.செ.க கைவசமே

Wednesday, October 20, 2010

2011 ம் ஆண்டு வரவு செலவு திட்டம்

ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினரும். ஜ.செ.க வின் தேசிய உதவித் தலைவருமாகிய மு.குலசேகரன் 2011 ம் ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து.

- பூர்வகுடிமக்கள் சம்பந்தமான சட்டம் அவர்களின் அனைத்து மேம்பாட்டுக்கும் தடையாக இருக்கும் வேளையில் அதனை அரசாங்கம் முற்றாக அழித்தல் வேண்டும்.மேலும் இவர்களின் கிராமத்து தலைவர்களுக்கு சிறப்பு ஊதியம் இவர்களின் மனதை கவர்வதற்காக வழங்கப்படும் செயலாக பிரதிபளிக்கிறது. காரணம் அவை அனைத்தும் நிர்வாக உயர்வை தான் கொண்டுவருமே ஒழிய வாழ்க்கை மேம்பாட்டை கிடையாது. இவர்களின் பூர்விகத்தை அரசாங்கம் முழுமையாக அங்கீகரித்து இவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய வகை செய்ய வேண்டும்.

- சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிகையை கருத்தில் கொண்டு எத்தனை புதிய சீன மற்றும் தமிழ் பள்ளிகளை கட்டவுள்ளது என்ற விவரத்தை தெளிவுபடுத்த வில்லை. ஒவ்வொரு முறை கல்வி அமைச்சு ஒரு குறிப்பிட்ட தொகை தமிழ் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டது   என்று சொல்வதும் அதற்க்கு பிறகு அதனை கூட்டி இன்னொறு  தொகையை  ம.இ.க அமைச்சர்கள் கூறுவதும் வியப்பாக உள்ளது. கல்வி மேம்பாட்டிலும் கண்ணாமூச்சி ஆட்டம் எதற்கு. ஆகவே மத்திய அரசாங்கம் இதனை எண்ணத்தில் கொண்டு சீனர்கள் மற்றும் இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு புதிய வடிவத்தை உருவாக்கவேண்டும்.

- நாட்டில் பல திறமைசாலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் என்னென்ன நடவடிக்ககளை மேற்கொண்டுள்ளது என்று அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும். ஏன் இந்நாட்டில் பிறந்து ஆரம்ப கல்வி பயின்று, அதன் பிறகு வெளி நாடுகளுக்கு சென்று உயர் கல்வி முடித்தவுடன் நாடு திரும்ப இவர்களுக்கு விருப்பமில்லை? மேலும் பலர் நாடு திரும்பினாலும் சிங்கப்பூரில் வேலை செய்கிறார்கள். இவர்களின் வெளிநாட்டு உயர்கல்விக்கு  உதவித்தொகை வழங்கப்படும் பொழுது அதனை முறையான  சட்டப்படி இவர்களுக்கு வழுக்குதல் வேண்டும். அதனை தொடர்ந்து இவர்கள் இந்நாட்டில் வேலை செய்ய வாய்ப்பும் தகுந்த ஊதியமும் வழங்கப்படுதல் வேண்டும். நாடு முன்னேற்றம் பெற இளைஞர்களின்  பங்கு அளப்பரியது. அதிலும் இவர்களின் திறமை வெளிநாடு முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்தினால் நம் நாடு வளம் நிறைந்து முன்னேற்றம் காணாத நாடாக திகழும்.

- ஏன் இன்னும் மலேசியா சர்வதேச நீதி மன்ற உறப்பினர் பட்டியலில் இடம் பெற முயற்ச்சி செய்யவில்லை. பல   முறை   இதனை குறித்து நடாளும்ட்ரத்தில் கேள்வி எழுப்பியும் அரசாங்கம் பொருப்படுத்தவில்லை.

- இறுதியாக இந்தியர்களின் எதிர்காலத்தை தவிடு பொடியாக்கிய மைக்கா நிறுவன முதலீட்டு விவகராத்தை விசாரிக்க அரச விசாரணை குழு ஒன்றை அமைத்து முழுமையா புலனாய்வு செய்ய வேண்டும். இந்து நாள் வரை இப்பிரச்சனை குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணையமும் காவல்துறையும் கண்டு காணாதது போல் இருப்பது, தேசிய முன்னணியின் சூழ்ச்சியும் இதில் அடங்கியுள்ளது போல தெரிகிறது. மக்கள் நலன் காக்கப்படும் என்று சொல்லும் தேசிய முன்னணி, மைக்கா நிறுவன விவகாரத்தில் ஏமாற்றம் கண்ட இந்தியர்களின் உணர்வை மதிக்காதது ஏன்? தனது இரும்புக்கு கரங்கள் கொண்டு முதலீட்டார்களின் பணத்தை அடிமட்ட விலைக்கு
விற்ற மைக்கா நிறுவனத்தின் நயவஞ்சக செயலுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்

Saturday, October 2, 2010

குலா விளக்கக்கூட்டத்தை ரத்து செய்தார்

பேராக் டிஏபி கட்சித் தலைமைத்துவத்தில்  நெருக்கடி நிலவுவதுபோல் தெரிகிறது. அது பற்றி விளக்குவதற்கு மாநில துணைத் தலைவர் எம்.குலசேகரன் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

சண்டையிடுவதை நிறுத்திக்கொண்டு நிலைமையைத் தணிவிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்குமாறு டிஏபி தலைமைத்துவம் அவரைக் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

இன்றைய செய்தியாளர் கூட்டம், “இங்கே-இங்கா” உறவினர்கள் அவர்களின் அணியில் சேராதவர்களை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட முயற்சிகளை அம்பலப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
மாநிலத் தலைவர் இங்கே கூ ஹாம், செயலாளர் இங்கா கோர் மிங் ஆகியோரையும் அவர்களின் ஆதரவாளர்களையும் உள்ளடக்கியதுதான் “இங்கே-இங்கா” அணி. இவ்விருவரின் அதிகாரத்துவ பாணியிலான தலைமைத்துவத்தில் மற்ற தலைவர்கள்  நீண்ட காலமாகவே அதிருப்தி கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரு தரப்பாருக்குமிடையிலான தகராற்றைத் தீர்ப்பதற்காக நேற்றிரவு ஈப்போவில் உயர்நிலை சமரசக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங் உள்பட உயர் தலைவர்கள் அதில் கலந்துகொண்டார்கள்.

ஆனால், எந்தத் தீர்வும் காணப்படாமலேயே அக்கூட்டம் முடிந்தது. “இங்கே-இங்கா” அணியினர் சமரசம் செய்துகொள்ளவும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவும் மறுப்பதாக குலசேகரனின் அணியினர் கூறினர்.

இன்று குலசேகரனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒரு வாரம் வெளிநாடு செல்வதாகவும் திரும்பிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டப்போவதாகவும் கூறினார்.

நேற்றிரவு சமரசப் பேச்சுக்களில் இழுபறி நிலவியதாகவும் அதனால் 90 நிமிடங்களுக்குப் பின் அதிலிருந்து  வெளியேறியதாகவும் அவர் சொன்னார்.
“மாநிலத் தலைமைத்துவத்தில் நிலவும் பிரச்னைக்கு ஒரு உருப்படியான தீர்வு காண முடியாதிருப்பதை நினைத்தால் வெறுப்பாக இருக்க்கிறது.”
பேராக் டிஏபி-யைத் தங்கள் பிடிக்குள் வைத்துக்கொள்ள “இங்கே-இங்கா”அணி மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு தாமும் வேறு சில தலைவர்களும் ஆத்திரம் அடைந்திருப்பது உண்மைதான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

“எவ்வகையிலும் வெற்றிபெறவும் பதவியில் தொடர்ந்து இருக்கவும் அவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்.

“ஒன்றுபட்ட அரசியல் போராட்டம் என்ற கட்சிக்கொள்கை மறக்கப்பட்டு தன்னலமும் அணிசார்ந்த பூசல்களும் தலைதூக்கியுள்ளன”, என்றாரவர்.
பல்வேறு நிகழ்வுகளின் காரணமாக, மாநிலத் தலைவர்களுக்கிடையில்  சச்சரவு மூண்டதை அடுத்து நேற்றிரவு சமரசப் பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ப்பட்டதாக குலசேகரனுக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று கூறியது.
“இங்கே-இங்கா” அணியினர் மூடப்பட்ட கிளைகளைப் புதுப்பிப்பதுடன்  எதிரணிக்கு ஆதரவு அளிக்கும் கிளைகள் நவம்பர் மாதக் கட்சித் தேர்தலில் வாக்களிப்பதைத் தடுக்க அவற்றை ரத்து செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இங்கேயும் இங்காவும்  மாநில முழுவதிலும் குலசேகரனையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட மற்ற தலைவர்களையும் குறை சொல்லித் திரிகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
மேலும், எதிரணியினரின் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில், குறிப்பாக குலசேகரனின் ஈப்போ பாராட் தொகுதியிலும் மாநிலச் செயலாளர் லியோங் மெய் மிங்கின் ஜாலோங் தொகுதியிலும்  “இங்கே-இங்கா” அணியினர் புதிய கிளைகளை அமைத்திருக்கிறார்கள். அத்துடன் அங்கு ஏற்கெனவே சேவை மையங்கள் இருக்கும்போது இவர்களும் சேவை மையங்களை அமைத்திருப்பதாக அந்த வட்டாரம் கூறியது. 
“நீண்ட காலம் வாயைப் பொத்திக்கொண்டு இருந்துவிட்டோம். இனி, பொறுப்பதற்கில்லை”, என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.

எதிரணியினரின் கிளைகளை ரத்துச் செய்ய ‘இங்கே-இங்கா’ அணியினர் மகஜர் ஒன்றைத் தயாரிக்க முனைந்ததுதான் சச்சரவு வெளிப்படையாக வெடிக்கக் காரணமாக இருந்தது.

“தெபிங் திங்கி, பாசிர் பெடாமார் முதலிய கிளைகளை எப்படி ரத்துச் செய்ய முடியும்? அவை நீண்ட காலமாக இருந்து வரும் கிளைகள். 2008 தேர்தலில் கட்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவை”, என்றந்த வட்டாரம் கூறிற்று.

நேற்றைய சமரசக் கூட்டத்தில் லிம்மும் மற்ற தேசிய தலைவர்களும் பேராசைகொண்டு செயல்பட்ட “இங்கே-இங்கா” அணியினரைக் கடுமையாகக் கண்டித்தனர்.

ஆணவமும் மட்டுமீறிய தன்னம்பிக்கையும் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று லிம் கூறியதாக தெரிகிறது.

இங்கே தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் வேறு விசயங்களில் கவனம் செலுத்த முற்பட்டது கூட்டத்தினருக்கு எரிச்சலைத் தந்ததாக அந்த வட்டாரம் கூறியது.

இப்போதுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாண இங்கே அல்லது இங்கா பதவிதுறக்க வேண்டும், அது ஒன்றே வழி என்று குலசேகரனும் “இங்கே-இங்கா” அணிக்கு எதிரானவர்களும் கருதுவதாகத் தெரிகிறது.

அதன்மூலமாகத்தான் பேராக் டிஏபிமீது அவர்களுக்குள்ள பிடியை உடைத்தெறிய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இவ்விவகாரம் தொடர்பில் இங்கா-இங்கே கருத்தை அறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவர்களிடமிருந்து இதுவரை பதில் இல்லை.

பேராக் மாநில டிஎபி பதவியிலிருந்து குலா விலகுகிறாரா?

பேராக் மாநில டிஎபியில் நிலவும் உட்பூசல் காரணமாக மாநில துணைத் தலைவர் எம். குலசேகரன் அப்பதவியிலிருந்து விலகப்போவதாக வலுவான வதந்தி பரவியுள்ளது.

டிஎபியின் தேசிய துணைத் தலைவரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் பேராக் மாநில தலைமையத்துவத்தில் காணப்படும் இன்றையக் குறைபாடுகள் குறித்து இன்று அறிவிக்கப்போவதாக நேற்றிரவு அவரது டிவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

நேற்றிரவு ஈப்போவில் நடந்த கட்சியின் தலைமையத்துவ கூட்டத்திற்குப் பின்னர் அச்செய்தியை அவர் வெளியிட்டார்.

மாநில பதவியிலிருந்து விலகப்போவதற்கான வலுவான அறிகுறிகளை அவர் காட்டியுள்ளார். ஆனால், அவர் இன்னும் கட்சி உறுப்பினர் என்ற நிலையில் உள்ளார்.

“டிஎபியை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், மாநில பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து சிந்தித்து வருகிறேன். போதும் போதும் என்றாகிவிட்டது. நாளை (இன்று) நடக்கவிருக்கும் செய்தியாளர் கூட்டத்தில் நான் அனைத்தையும் விளக்குவேன்”, என்று நள்ளிரவு மணி 12.45 க்கு அவர் டிவிட்டர் செய்தார்.

இருப்பினும், கட்சியின் தேசியத் தலைவர்கள் அவருடன் நடத்திய கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் குலசேகரன் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் என்று ஒரு வட்டாரம் கூறியது.
இருந்தாலும், அவர் திட்டமிட்டிருந்தவாறு இன்று காலை மணி 10.30 க்கு அவரது செய்தியாளர் கூட்டம் பேராக் டிஎபி த்லைமையகத்தில் நடைபெறக்கூடும்.

டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், உதவித் தலைவர் டான் கோக் வாய் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் தெரசா கோக் ஆகியோர் உடனடியாக நேற்றிரவு ஈப்போ சென்றடைந்தனர். அவர்கள் உயர்நிலை சமரசப் பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.

Friday, October 1, 2010

தேசிய முன்னணியின் தடைக்கல் விலகல் பொதுதேர்தலுக்கு வழிவிடும்--மு.குலசேகரன்

தேசிய முன்னணியின் மிகப்பெரிய இடையுறு "சாமிவேலு" பதவி விலகல் பொதுத்தேர்தலுக்கு வழிவிடும்.

பொதுத்தேர்தலில் தோல்வியை தழுவிய பின் பதவி விலகும் பட்டியலில் சாமிவேலு ஒரு முன்மாதிரி அல்ல.காரணம் இதற்க்கு முன்பு கெராக்கானை சேர்ந்த துன் லிம் சொங் யு அவர்களும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

அதன் பிறகு மிகவும் கௌரவமாக தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு அரசியலை விட்டு ஓய்வெடுத்தார்.

இன்றைய சூழ்நிலைக்கு,யாரும் சாமிவேலுவின் நடவடிக்கையை மிகப்படுத்தி பேசியதே கிடையாத பட்சத்தில் தனது சொந்த சுயலாப அரசியல் கொள்கைக்கு அவர் செய்ததைதான் அனைவரும் தலைகுரைவாகவே பேசினார்கள் என்பது உண்மை.கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியை அடைந்தும் ம.இ.க தலைவர் பதவியை விடாமல் தங்கவைத்ததுதான் மிகப்பெரிய கேள்வி குறியாகவே இருந்தது தேசிய முன்னணியில். அதனால் தேசிய முன்னணி பல விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாகத்தான் தேசிய முன்னணியை சார்ந்த தலைவர்கள் சாமிவேலுவை பதவி விலக வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினர்.மேலும் இவரின் அரசியல் சர்வதிகாரம் தேசிய முன்னணி கூட்டணிக்கு பாதகமாகவே திகழ்ந்தது.

தனது இரும்புக்கோட்டையாக திகழ்ந்த சுங்கை சிபூட் நாடாளுமன்றத்தில் தோல்வி கண்டது ஒரு நல்ல பாடமாக எடுத்துக்கொண்டு சாமிவேலு தனது தலைவர் பதவியை ஒப்படைத்துவிட்டு பொதுத்தேர்தல் முடிவினை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைத்தார்.

சாமிவேலுவை பற்றி மேலும் கருத்துரைத்த மகாதீர், "பிற நாடுகளில் ஒரு தலைவன் தனது அரசியல் மரியாதையை இழந்துவிட்டால், உடனடியாக பதவியை துச்சமகா கருதி விலகிவிடுவான். ஜப்பான் போன்ற நாடுகளில் தலைவர் ஹராகிரி (தற்கொலை) செய்து கொள்வார்கள். ஆனால், நாம் சாமிவேலுவை அது போன்று தற்கொலையை செய்ய சொல்லவில்லை. ம.இ.க-வை சரியான முறையில் வழிநடத்த தவறிய காரணத்தின் அடிப்படையில் சாமிவேலு தோல்விகண்டார். ஆகாவே பதவி விலகுவது நன்று. இவரின் போக்கு அஹ்மாட் படாவியை விட மோசமாக இருக்கிறது. இருப்பினும் பதவியை விட்டு கொடுக்க மனம் வரவில்லை சாமிக்கு. நிலைமை மோசமடையும் முன்னமே இவர் பதவி விலகி இருக்கவேண்டும்." என்று கூறினார்.

அதனை அடுத்து தற்போதைய பிரதமர் ம.இ.க-வின் 63வது போதுப்பேரவையில் பேசிய பொழுது,தேசிய முன்னணி கூட்டணி தலைவர்கள் மக்களின் நர்மதிப்பையும் புகழையும் இழந்து விட்டு தனது சொந்த கட்சியில் பிரமளமாக இருப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை என்ற மறைமுகமான செய்தியை சாமிவேலுவின் செவிகளுக்கு பரிசாக படைத்தார். இருப்பினும் அப்பொழுது அந்த செய்தி செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.

சாமிவேலு 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி விலகுவேன் என்று சொன்ன பதவி விலகல் அறிவிப்பு ஒரு ஆட்சிரியமல்ல. ஆனால், தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளால் எதிர்பார்த்தது.இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கலாம் அனால் மக்களுக்கு அல்ல. காரணம், இந்த பதவி விலகளை அன்றைய காலம் செய்யாமல் இன்றைய நாள் வரை காத்திருந்ததின் காரணம் என்ன என்று பலர் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். இத்தனை நாள் காத்திருந்து என்ன மாற்றத்தை கொண்டு வந்தார் சாமிவேலு? இல்லை என்ற உண்மை ஒரு புறம் இருக்க எதற்காக சாமிவேலு பதவியை விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டினார் என்ற கேள்வி மறுபுறம் எழுந்து நிற்கிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நஜிப் நாடாளுமன்றத்தை அடுத்த வருடம் கலைக்கலாம் என்ற ஆருடமும் உருவாகிஉள்ளது. இது சாத்தியமாக வேண்டுமானால்,சாமிவேலு சொன்ன வார்த்தையின் செயலை உறுதிபடுத்திய பிறகுதான்,நஜிப் தனது அறிவிப்பை செய்வார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.ஆகாவே தேசிய முன்னணிக்கு மிகச் சிறந்த தடைக்கல்லாக திகழ்ந்த சாமிவேலுவின் பதவி விலகல் அடுத்த பொதுத்தேர்தலுக்கு வகைசெய்யும் என்ற உண்மை கூடிய விரைவில் வெளிச்சமாகும்.