செம்பருத்தி இணையதள செய்தி
மக்களின் ஜனநாயக உரிமையை காவல்துறை மீண்டும் மீண்டும் மதிக்க தவறியுள்ளது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை இண்டர்லோக் நாவலுக்கு எதிரான அமைதி பேரணியை முடக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைப்பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம் என குலா தெரிவித்தார்.
கடந்த 11 ம் திகதி பிப்ரவரி மாதம் பேரணிக்கு அனுமதி பெரும் மனுவை இண்ட்ராப் மனித உரிமைக் கட்சி டாங் வாங்கி காவல்துறையிடம் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எதனால் நிராகரிக்கப்பட்டது என்று காவல்துறை நேர்மையாக சொல்ல இயலாத பட்சத்தில், அந்த பேரணிக்கு மக்கள் கூடினால் அவர்களின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்கக்கூடாது.
மாறாக அந்த பேரணிக்கு காவல்துறை பாதுகாப்பு தர வேண்டும். அதே சமயத்தில் விண்ணப்பம் செய்ய வில்லை என்ற பாளை நொண்டி சாக்கை போலீசும் சம்பத்தப்பட்ட அமைச்சும் இனியும் சொல்ல கூடாது என குலா சொன்னார்.
ஆகவே, பலரும் எதிர்க்கும் அந்த நாவலை உடனடியா தடை செய்ய வில்லை என்றால், அனைத்து இந்தியர்களும் ஆதரவு தெரிவுக்கும் இண்ட்ராப் மனித உரிமைக் கட்சியின் இண்டர்லோக்கிற்க்கு எதிரான அமைதிப் பேரணிக்கு காவல்துறையும் அரசாங்கமும் மற்றும் துணைப்பிரதமர் முகைதீன் யாசினும் கண்டிப்பாக மரியாதை வழங்க வேண்டும் என்பது என்னுடைய உறுதியான நிலைப்பாடு என குலசேகரன் மேலும் சொன்னார்.
இதற்கிடையில், கொள்கை பூர்வாங்க அமைப்பின் இயக்குனர் லிம் தேக் கீ இண்டர்லோக் நாவலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
அவரின் பார்வைப்படி, இண்டர்லோக் நாவலில் மனதை புன்படுத்தப்படும் வார்த்தைகள் அதிகமாக உள்ள வேளையில் அதனை ஐந்தாம் படிவ மாணவர்களின் உபயோகத்திலிருந்து முற்றா தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாகினி இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட அந்த கல்விமானின் மின்னஞ்சல் குறிப்பில், ஒரு சில தரப்பினர் “அவதிப்புக்கு எதிரான சுதந்திரத்தை” தடை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு செய்வதினால் தவறு இழைத்தவர்களின் கருத்துக்கள் சரியானதாக கருதப்பட்டு அப்புத்தகத்தை பாட நூலாக அங்கிகாரம் வழங்க முயற்சியை நிலைநாட்டலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வேலை, மாலாய் இனத்தவர்களை அவமானப்படுத்தும் வாசகம் ஒன்று இருந்தால் இதே போன்ற “அவதிப்பு எதிரான சுதந்திரத்தை” தடை செய்வார்களா என்று அவர் கூறியிருந்தார்.