Monday, November 29, 2010
Sunday, November 28, 2010
Saturday, November 27, 2010
இனவாத புரட்சியா? அல்லது இழிளிவு நிலையின் முதிர்ச்சியா? - மு.குலசேகரன்
இனவாத வார்த்தைகளை பள்ளிகளில் அள்ளி வீசிவது மலேசியாவில் உள்ள பல மலாய் இனத்தை சார்ந்த ஆசிரியர்களின் இடையே ஒரு வீர தீர செயலாக கருத்தப்படுகிறது. மாணவர்களுக்கு ஒற்றுமையின் கூற்றை விளக்க வேண்டிய ஆசிரியர்கள், பல இன மாணவர்கள் மத்தியில் நடைபெறும் கூட்டங்களில் இந்தியர்களையும் சீனர்களையும் குறி வைத்து கேவலப்படுத்துகின்றனர். பள்ளி பருவகாலங்களில் இது போன்ற கேலிப் பேச்சுகளுக்கு ஆளாவது மனதில் வெறுப்புத்தன்மையையும் பகைமை குணத்தையும் உருவாக்கும் என்பதனை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.
இனவாதம் என்ற பெயரில், ஆய்வு கட்டுரைகள் எழுதுவதும், பொது இடங்களில் இழிவாக பேசுவதும், அரசாங்க பயிற்சி முகாம்களில் இனவாத கொள்கைகளை விதைப்பதும் போன்ற செயல்கள் சமீபகாலமாக எந்த ஒரு கட்டுபாடின்றி துளிர் விட்டு படர ஆரம்பத்துவிட்டது. இதனை அரசாங்கம் ஒரு பொழுதும் கடுமையாக கருதாமல் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டே போனதால் மீண்டு இது தொடர் கதையாகி விட்டது. வெறுத்து போன வார்த்தை விதைகளை மாணவர்களின் மத்தியில் விதைத்தால் எப்படி நமது நாடு ஒன்று பட்ட சமுதாய சின்னமாக விளங்கும்.
தன்னுடைய இனத்தின் மேன்மைகளை பிற இனத்தவரிடம் சொல்லி புரிய வைப்பது சிறப்பு. அதேசமயத்தில் குறிவைத்து பிற இனத்தை சங்கடப்படுத்தி பேசுவது தவறு என்று நாளும் தெரிந்த ஆசிரியர்களுக்கு தெரியாத?
முக்கியமான தேர்வு நாளான ஐந்தாம் படிவம் தேசிய தேர்வின் போது மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சொல்லி அனுப்புவது சிறந்ததா அல்லது இழிவு படுத்துவது சிறந்ததா? மாணவர்கள் இச்சூழ்நிலையில் எப்படி சிறப்பாக தனது கவனத்தை பரீட்சையில் செலுத்த முடியும்?
கண்டிப்பாக மாணவர்களின் எண்ணம் சிதற தொடங்கிவிடும் என்று ஒரு தேர்வு மேற்பார்வையாளருக்கு தெரியாதா?
முக்கியமான தேர்வு நாளான ஐந்தாம் படிவம் தேசிய தேர்வின் போது மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சொல்லி அனுப்புவது சிறந்ததா அல்லது இழிவு படுத்துவது சிறந்ததா? மாணவர்கள் இச்சூழ்நிலையில் எப்படி சிறப்பாக தனது கவனத்தை பரீட்சையில் செலுத்த முடியும்?
கண்டிப்பாக மாணவர்களின் எண்ணம் சிதற தொடங்கிவிடும் என்று ஒரு தேர்வு மேற்பார்வையாளருக்கு தெரியாதா?
போர்ட்டிக்சன் அருகாமையில் உள்ள லுகுட் ராஜா ஜமாத் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றுகொண்டிருக்கும் எஸ்.பி.எம் தேர்வின் இரண்டாவது நாளன்று, தலைமை தேர்வு அதிகாரி இந்திய மற்றும் சீன மாணவர்களை குறிவைத்து இழிவாக பேசியது பலரின் கவனத்தை ஈன்றது மட்டுமல்லாமல் இதற்கு முடிவு என்பது இல்லையா என்ற கேள்வி பலரின் மத்தியில் தொடங்கிவிட்டது.
இந்த சூழ்நிலை இனவாத புரட்சியா? அல்லது இழிளிவு நிலையின் முதிர்ச்சியா? என்று சிந்திக்க வேண்டியதுள்ளது. இந்த நிலை தொடர்வதின் உள்நோக்கமென்ன? இவர்களின் இழிவுக்கு இந்தியர்களும் சீனர்களும் அடக்குமுறைக்கு ஆளாகுவது எந்த விதத்தில் நியாயம்? இதே போன்ற வார்த்தைகளை இந்தியகளோ அல்லது சீனர்களோ பள்ளியில் பேசியிருந்தால் என்னென்ன சூழ்நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்? அவ்வகையில் ஏதேனும் நடந்ததா? இல்லை, காரணம் நாட்டின் எல்லா இன மக்களின் ஒற்றுமை என்பது மிக முக்கியமான அம்சம். அதனை காப்பாற்ற வேண்டும். அவ்வாறு செய்தல் மட்டுமே சுபிச்சத்துடன் வாழ முடியும் என்பது உண்மை.அது இந்தியர்களுக்கும் சீனர்களும் தெரிந்த ஒன்று.
இதற்கும் முன்பு பேசப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மேல் முறையான,விரைவான மற்றும் பொருத்தமான சட்டம் பாய்திருந்தால் இன்று இந்த நிலை மீண்டும் எழ வாய்ப்பில்லை. ஆனால் தேசிய முன்னணி அரசாங்கம் ஒரு குருட்டுதன்மையுடைய கோழை அரசாங்கம். இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மேல் எந்த ஒரு உடனடி தீர்வை எடுக்க முடியாமல் தவிக்கும் செயலிழந்த அரசாங்கம். பிற இனத்தின் மேல் கருணை இல்லா அரசு தேசிய முன்னணி என்பது ஒரு முன்னுதாரணம்.
இதற்க்கு காரணம் நிச்சயமாக இந்த ஆணவ தேசிய முன்னணி அரசாங்கமே. காலங்காலமாக விஷமூட்டப்பட்டு வந்த இவர்களின் சிந்தனை முறையை மாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல ஆனால் முடியாத காரியமல்ல. அரசாங்க சேவை பயிற்சி திட்டத்தில் இருக்கும் அனைத்து இனவாத ஓட்டைகளை அடித்தால் இவை அனைத்தும் சரியாகும். மேலும், இனவாத வார்த்தைகளை உபயோகப்படுத்தினால் உடனடியாக அவர்களின் மேல் எந்த ஒரு பாரபட்சமின்றி கடுமையான சட்டத்தை உபயோகப்படுத்த வேண்டும்.
இப்படியான கருத்துக்களை விதைப்பவர்கள் எல்லோரும் என்னைப்பொறுத்தவரையில் மக்களை பிரித்து ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சக்தியொன்றின் கைக்கூலிகள். இச்சூழ்நிலையை களைய ஒட்டுமொத்த இந்திய அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் ஒரு மனதோடு இனவாத வார்த்தை வன்முறை புரியும் தனிமனிதர்களுக்கு எதிராக குரல் கொடுத்து அரசாங்கத்திற்கும் அசூரதனமான அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே சிந்தனை மாற்றத்தை உருவாக்க முடியும்.
அதற்க்கு தோள்கொடுப்பார்களா ம.இ.க பிரதிநிதிகள்? அல்லது மீண்டும் ரகசிய அறையில் ரகசிய ஒப்பந்தம் செய்வார்களா?
ஆணவமும் வெறுப்புதன்மையும் கொண்ட அம்னோ தேசிய முன்னணி, கொள்கை பாணி மாறாது - மு.குலசேகரன்
மிகுந்த பரபரப்புடன் பேசப்படும் முன்கணிப்புகளில் ஒன்று தான், கூடிய விரையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தல் வியூகங்கள். சமீபத்தில் தேசிய முன்னணியின் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி பிரதமருக்கு புதிய புத்துணர்ச்சியை தந்துள்ளதாக பேசப்படுகிறது. அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் ஆருடங்கள் வெளியாகின்றன.
அதனை தொடர்ந்து சமீபத்தில் தேசிய முன்னணி உறுப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்றான தேசிய முன்னணி நேரடி உறுப்புரிமை, தேர்தல் உத்திகளை வலுப்படுத்த செய்யும் சூழ்சிகள் என்று கருதப்படுகிறது. இவை அனைத்தையும் கவனிக்கும் பொழுது இடைத்தேர்தல் இல்லை என்ற சாத்தியக் கூறு அப்பட்டமான பொய்யாக திகழ வாய்ப்புள்ளது. அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது போல நாடுதழுவிய அளவில் வெறும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் அடுத்த வருட மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பேராக் மாநில மக்களின் மன ஆதங்கம் மிகவும் மாறுபட்ட நிலையில் உள்ளது. அதாவது மக்கள் கூட்டணி மீண்டும் பேராக் மாநில ஆட்சியை கைப்பற்றுமா மேலும் நஜிப்பை நாடாளுமன்ற எதிர் அணி தலைவாராக பதவியில் அமரவைக்க சாத்தியம் உள்ளதா என்ற கேள்விகளுக்கு மட்டும் பதில் தேவைப்படுகுறது. இவர்களின் ய்திர்பார்ப்பு மிகப்பெரிய உண்மையாக அமைய சாத்தியமே. இருந்தாலும் இந்த உண்மைகளை மனதில் வைத்துக்கொண்டு கனவு காண்டல் மட்டுமே போதாது அதனை உறுதி செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் தோல்வியை தழுவியது மக்கள் கூட்டணியின் அபரிமிதமான நம்பிக்கை எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து. உயர்ந்த நம்பிக்கை உறக்கத்திலிருந்து மக்கள் கூட்டணிக்கு கண்விழிக்க எழுப்பப்பட்ட ஓசைதான் அது. நமது பலவினங்களை முழுமையாக கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து மக்களின் மனதில் மீண்டும் பலமாக நம்பிக்கையை பிடிக்க பாடுபட வேண்டும். தற்சமய சூழலுக்கு இரட்டிப்பாக உழைத்தாக வேண்டும்.
ஒரு நேர்மையான சமயுரிமை கொண்ட மலேசியாவை பார்க்க வேண்டும் என்ற மலேசியர்களின் கனவு மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என்பது திண்ணம்.
ஒரு சில நேரங்களில் மக்களின் ஆசியோடு தர்மம் தவறி தறிகெட்ட ஆட்சி நடத்திய அரசாங்கங்களின் வரலாறுகள் உள்ளதை நாம் மறக்க கூடாது. அந்த பட்டியலில் அடுத்த இடம் பிடிக்க துடிப்புடன் ஆட்சி செய்வது தேசிய முன்னணிதான். ஆட்சி நெறிகளை மதிக்காமல் வழி தவறி செல்லும் ஆணவ தேசிய முன்னணி, பரிதாபமாக நிலைக்கு தள்ளப்படும் நாள் தூரத்தில் இல்லை. இக்குணம் அவர்களின் ஆண்டாண்டு கால குணம். அதனை மாற்றி அமைத்தால் அவர்கள் தத்தளிக்க நேரிடும். ஆகவே அவர்களை ய்திரனியில் அமர வைப்பதே மிகச் சிறந்தது.
எடுத்துகாட்டாக, சமீபத்தில் மலாய் அல்லாதாரின் விசுவாசத்தை பற்றி பேசிய தற்காப்பு அமைச்சரின் வார்தகை, மக்கள் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுபினர்களின் கோபத்திற்கு ஆளாகியது. அனைவரும் அந்த கூற்றை எதிர்த்தனர். மேலும் செய்த தவற்றிற்க்கு மன்னிப்பு கேட்காமல், என்னை இராணுவ சேவையில் சென்றது நாட்டின் மேல் உள்ள விசுவாத்தை காட்ட எனக்கு சவால் விடுத்தார் சஹிட் ஹமிடி. இந்த அழைப்பு எனக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. ஒருவர் தனது நாட்டின் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை இராணுவ சேவையில் சேர்ந்துதான் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சருக்கு தெரியவில்லை.
மக்கள் கூட்டணி என்றைக்கும் தனது மக்களுக்கு விசுவாசதன்மை கொண்ட ஆட்சியை நடுநிருத்த பாடுபடு என்பதனை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் தேசிய முன்னணியின் அராஜகம் இதோடு முடிந்துவிடுமா? இல்லை. காரணம் எந்த நேரத்திலும் அமைச்சரவைல் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்லப்பட்ட தகவல் உண்மையில்லை என்று பிரதமர் கூறியுள்ள வேளையில், மக்களை விசுவாசத்தை சீண்டிய தற்காப்பு அமைச்சரின் வார்த்தைகளுக்கு பிரதமர் என்ன நடவடிக்கை போகிறார்? அல்லது இவரின் வார்த்தை காலத்தின் கட்டாயம் என்று சொல்லி தட்டிக்களிப்பாரா? ஆணவத்தின் எல்லை மீறல் இது.அதற்க்கு தேசிய முன்னணி தூண்டுகோலாக இருக்கிறது.
இந்த ஆணவ அகம்பாவம் கொண்ட தேசிய முன்னணி அரசாகத்திற்கு பாடம் புகுட்ட மக்கள் முழு மனதோடு மக்கள் கூட்டணி தலைவர்களுடன் ஒரு இத்த ஆதரவை வழங்க வேண்டும்.
Friday, November 26, 2010
Thursday, November 25, 2010
மலேசியா மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கேள்வி
http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=6418:2010-11-24-09-42-29&catid=43:normal-news&Itemid=18 |
http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=3734:2010-11-24-09-11-51&catid=1:aktuelle-nachrichten&Itemid=50 |
http://varudal.com/index.php?option=com_content&view=article&id=1421:2010-11-24-09-36-40&catid=13:2009-12-24-18-21-58 |
Tuesday, November 23, 2010
Monday, November 22, 2010
Wednesday, November 17, 2010
குறுகிய கால ஆதாயம் நீண்ட கால இழப்பாக முடியலாம் - Malaysiaindru
நடப்புப் பேராக் தலைமைத்துவத்தின் குறுகிய கால வெற்றி 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு நீண்ட கால இழப்பாக முடியக் கூடும். 13வது தேர்தல் முன்
கூட்டியே நிகழக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேராக் டிஎபி தேர்தல்களில் டிஎபி தேசிய உதவித் தலைவர் எம் குலசேகரன் தோற்கடிக்கப்பட்டது, நாடு முழுவதும் இந்திய சமூகத்தின் உணர்வுகளை தூண்டி விட்டுள்ளது. ஓரம்கட்டப்பட்ட அந்த சமுதாயம் மீண்டும் ஆத்திரமடைந்துள்ளது.
இங்கே-இங்கா கூட்டுக்கும் குலசேகரன்-பாசிர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் பூ தரப்புக்கும் இடையிலான பேராக் மாநில டிஎபியின் கட்டுப்பாட்டுக்காக நடந்த பூசலை ஊடகங்கள், ஊதிப் பெரிதாக்கி விட்டதால் கட்சியின் சாதாரண மாநிலத் தேர்தலான அது நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட விவகாரமாக மாறி விட்டது.
அந்த இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான அரசியல் பகைமை உருவாக்கிய நெருப்பை அணைப்பதற்கு தேசிய டிஎபி தலைவர்கள் மேற்கொண்ட பல முயற்சிகள்
தோல்வி அடைந்தன.
பேராக் டிஎபி தேர்தல்கள் நேர்மையாகவும் கவனத்துடனும் நடத்தப்பட்டன. அந்தத் தேர்தல் நடைமுறை பற்றி எந்தத்
தரப்பும் புகார் கூறவில்லை.
ஆனால் தேர்தல் முடிவுகள் பற்றிய பொது மக்கள் எண்ணம் குறிப்பாக இந்திய சமூகத்தின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அதுவும் வலிமை வாய்ந்த காலஞ்சென்ற டிஎபி அரசியல்வாதி பி பட்டுவிற்கு வாரிசு எனக் கருதப்பட்ட குலசேகரன் சீனர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியில் “அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டும் வகையில் பாதிக்கப்பட்டு விட்டார்”
என இந்திய சமூகம் கருதுகிறது.
இந்தியர்கள் “எதிர்ப்புணர்வு”
இந்தியர்களை அடித்தளமாகக் கொண்ட பிஎன் உறுப்புக் கட்சிகள், அரசு சாரா அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், வழக்குரைஞர்கள் உட்பட பல தரப்புக்களிடமிருந்து பெற்ற கைத் தொலைபேசி அழைப்புக்கள் அந்த எண்ணத்தை மேலும்
வலுப்படுத்துகின்றன.
பேராக் தேர்தல்கள் முடிவு பற்றி அறிந்து கொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை தமக்கு பல அழைப்புக்கள் வந்தததாக டிஎபி கட்சியின் தேசிய தொழிலாளர் பிரிவுத் தலைவர் எ
சிவநேசன் மலேசியாகினியிடம் கூறினார்.
அந்த அழைப்புக்கள் அதிகமாக இருந்ததால் தமது கைத் தொலைபேசி செயலிழந்து விட்டது என்று அவர் சொன்னார்.
தாம் நீதிமன்றத்தில் இருந்ததால் அந்த அழைப்புக்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.
பேராக் டிஎபி தேர்தல் முடிவுகள் மீது இந்தியர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புணர்வு அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் பேராக்கை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பை பாதிக்கும் என அவர் கருதுகிறார்.
12வது பொதுத் தேர்தலின் போது ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடத்திய போராட்டத்தின் விளைவாக எழுந்த உணர்வுகள் பிஎன்னுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தடுத்து விட்டன. அத்துடன் பிஎன் ஐந்து மாநிலங்களையும் இழந்தது.
இந்த முறை ஏப்ரல் மாதம் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் இந்தியர் வாக்குகள், அரசியல் அலையை பிஎன்னுக்கு சாதகமாக திருப்பி விடக் கூடும்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் பிஎன் இந்திய சமூகத்திடம் தான் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஒதுக்கப்பட்டதாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் இந்திய சமூகத்தின் தேவைகளை நிறைவேறுவதற்கு சிறப்பு ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன
Tuesday, November 16, 2010
Friday, November 12, 2010
அனைத்து இன மாணவர்களின் தேர்ச்சியிலும் கவனம் தேவை.
இவ்வருட 6-ம் ஆண்டு யு.பி.ஸ்.ஆர் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற நம்முடைய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மனமார தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நம் மாணவர்கள் வருகிற காலங்களில் பல சாதனைகள் படைத்து பெற்றோருக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
அதே சமயத்தில் தாய் மொழி பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தேசிய மொழி பாடங்களில் வீழ்ச்சி அடைய சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இவ்வருட தேர்ச்சி முடிவு.
ஆனாலும் இந்த வருட தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை காட்டிலும் சிறிய அளவில் குறைந்தே காணப்படுவதால், தேசிய மொழி தேர்ச்சி விகிதத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளது. இதனை கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் மீண்டும் மறு பரீசீலினை செய்ய முயற்சிக்கவேண்டும்.
தேசிய மொழி கருத்துணர்வு மற்றும் கட்டுரை போன்ற பாடங்களில், தமிழ் பள்ளி மாணவர்கள் மட்டுமே இந்த தேர்ச்சி நிலையை அடைந்திருக்கிறார்களா அல்லது மற்ற தேசிய பள்ளிகளிலும் இந்த சூழ்நிலை எழுந்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் தேவை என்பதை கல்வி அமைச்சு உணர வேண்டும்.
ஆரம்ப கட்டத்திலிருந்து இந்த சரிவு நிலையை அரசாங்கம் உணர்ந்ததா இல்லையா; ஒத்திகை பரீட்சையின் பொது தமிழ் பள்ளி மாணவர்கள் இப்பாடங்களில் என்ன தேர்ச்சி விகிதத்தை பெற்றாகள் என்ற உண்மையை கல்வி அமைச்சு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இச்சூழ்நிலையை கண்காணிக்க மறந்த கல்வி அமைச்சு; தமிழ் பள்ளிகள் மீது கல்வி அமைச்சின் கண்காணிப்பு குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஒரு வருட காலமாக எத்தனை முறை கல்வி இலாக்காவை சார்ந்த இயக்குனர்கள் தமிழ் பள்ளி மாணவர்களின் தேசிய மொழி தேர்ச்சி விகிதத்தை கண்டறிய திடீர் சோதனை மேற்கொண்டார்கள் என்பதனை அறிவிக்கவேண்டும். ஆய்வு அறிக்கை ஏதேனும் உண்டா? பெயரளவுக்கு மட்டுமே ஓரிரு முறை வருகை தந்து விட்டு மாணவர்களின் தேசிய மொழி வளத்தை காணாமல் இருந்தால் என்ன நியாயம்?
-மு.குலசேகரன்-
அதே சமயத்தில் தாய் மொழி பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தேசிய மொழி பாடங்களில் வீழ்ச்சி அடைய சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இவ்வருட தேர்ச்சி முடிவு.
ஆனாலும் இந்த வருட தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை காட்டிலும் சிறிய அளவில் குறைந்தே காணப்படுவதால், தேசிய மொழி தேர்ச்சி விகிதத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளது. இதனை கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் மீண்டும் மறு பரீசீலினை செய்ய முயற்சிக்கவேண்டும்.
தேசிய மொழி கருத்துணர்வு மற்றும் கட்டுரை போன்ற பாடங்களில், தமிழ் பள்ளி மாணவர்கள் மட்டுமே இந்த தேர்ச்சி நிலையை அடைந்திருக்கிறார்களா அல்லது மற்ற தேசிய பள்ளிகளிலும் இந்த சூழ்நிலை எழுந்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் தேவை என்பதை கல்வி அமைச்சு உணர வேண்டும்.
ஆரம்ப கட்டத்திலிருந்து இந்த சரிவு நிலையை அரசாங்கம் உணர்ந்ததா இல்லையா; ஒத்திகை பரீட்சையின் பொது தமிழ் பள்ளி மாணவர்கள் இப்பாடங்களில் என்ன தேர்ச்சி விகிதத்தை பெற்றாகள் என்ற உண்மையை கல்வி அமைச்சு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இச்சூழ்நிலையை கண்காணிக்க மறந்த கல்வி அமைச்சு; தமிழ் பள்ளிகள் மீது கல்வி அமைச்சின் கண்காணிப்பு குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஒரு வருட காலமாக எத்தனை முறை கல்வி இலாக்காவை சார்ந்த இயக்குனர்கள் தமிழ் பள்ளி மாணவர்களின் தேசிய மொழி தேர்ச்சி விகிதத்தை கண்டறிய திடீர் சோதனை மேற்கொண்டார்கள் என்பதனை அறிவிக்கவேண்டும். ஆய்வு அறிக்கை ஏதேனும் உண்டா? பெயரளவுக்கு மட்டுமே ஓரிரு முறை வருகை தந்து விட்டு மாணவர்களின் தேசிய மொழி வளத்தை காணாமல் இருந்தால் என்ன நியாயம்?
இந்த குறைகளை ஈனைத்து மாநில கல்வி இலாக்காவும் உடனடியாக சரி செய்தல் வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் தேர்வில் அல்லும் பகலும் அயராது கவனம் செலுத்தி தனது குழைந்தகளின் எதிர்காலத்தை பிரகாசிக்க முயற்சி செய்யும் சமயத்தில் கல்வி இலாக்கா கவனமின்றி இருப்பது சகல முயற்சிகளையும் அழித்துவிடும்.
எனவே இந்த வீழ்ச்சியை நன்கு ஆராய்ந்து அடுத்த ஆண்டு இதே போன்ற தேர்ச்சி விகிதத்தை மாணவர்கள் பெறாமல் இருக்க கல்வி அமைச்சு ஒரு சீரிய முயற்சியை கையாளவேண்டும் என்பதனை கேட்டுக்கொள்கிறேன். இன பாகுபாடின்றி அனைத்து மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் கல்வி அமைச்சு முழுமையா கவனிக்க பரிந்துரைசெய்கிறேன்.
Thursday, November 11, 2010
Wednesday, November 10, 2010
Tuesday, November 9, 2010
Sunday, November 7, 2010
Saturday, November 6, 2010
வசதியற்ற குடும்பங்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது
தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மு.குலசேகரன் அவர்கள் தலைமையில் அவர்தம் அலுவலகம் மற்றும் ஜ.செ.க ஈப்போ பாராட் கிளைகள் இணை ஏற்பாட்டில் வசதியற்ற இந்திய குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
ஜ.செ.க ஈப்போ பாராட் "தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு"
Subscribe to:
Posts (Atom)