மக்கள் ஓசை செய்தி 30/09/2010 |
Thursday, September 30, 2010
Tuesday, September 28, 2010
“தமிழ் பள்ளிகளுக்கு கிள்ளிக்கொடுப்பதை நிறுத்தி அள்ளிக் கொடுக்க மஇகா கேட்க வேண்டும்”, குலசேகரன்
தாய்மொழிப்பள்ளிகள் இந்நாட்டில் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும். அதன் அடிப்படையில், நமது தாய்மொழிப்பள்ளிகளான தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அனைத்து வசதிகளையும் உதவிகளையும் எந்த ஒரு பாரபட்சமின்றி அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும்.
, அதனை அமைச்சரவையில் உள்ள இந்திய அமைச்சர் தட்டிக்கேட்க வேண்டும் என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கூறினார்.
இந்தியர்களின் பிரச்னையைச் சிறப்பு குழு கவனிக்கும் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று இப்பொழுதான் மஇகா சேவைசெய்ய முயல்வது வேடிக்கையாக உள்ளது.
இத்தனைக் காலமாக இந்தியர்களுக்கு பிரச்னையை உருவாக்கியது யார் என்பதனை முதலில் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாரவர்.
ஏன் 30 தமிழ்ப்பள்ளிகள் மட்டும்?
இந்தியர்களின் முதன்மையான பிரச்னை தமிழ்ப்பள்ளிகள்தான் என்பதனை மறந்துவிடக்கூடாது என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சிறப்புக் குழு பத்தாவது மலேசியா திட்டத்தில் 30 பள்ளிகள் 7 கோடி ரிங்கிட்டில் தரம் உயர்த்தப்படும் என்ற தகவலை மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளது மிகவும் கேளிக்கையானதாக இருக்கிறது என்றாரவர்.
“எந்த அடிப்படையில் இந்த 7 கோடி வெள்ளி வழங்கப்பட்டது? நீங்கள் முழு அமைச்சர் என்ற முறையில் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்த தொகை எவ்வளவு? நீங்கள் பரிந்துரை செய்யும் முன் முழுமையான ஆய்வு மேற்கொண்டீர்களா? அதன் விவரங்கள் என்ன? அதனை மக்களிடம் ஏன் தெரிவிக்கவில்லை? எத்தனைத் தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் அடிப்படை வசதி இன்றி இருக்கிறன என்பதனை மக்களுக்கு விளக்க முடியுமா? எந்த ஆய்வின் மூலம் 30 தமிழ்ப்பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள்? தேர்தெடுத்த இந்தப் பள்ளிகளில் இதர மொழி பள்ளிகளை காட்டிலும் என்னென்ன வசதிகள் இல்லை என்று ஒப்பிட்டு பார்த்தீர்களா?”, என்று கேள்விகளை அடிக்கினார் குலசேகரன்.
“முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் எதற்காக அவரச அவசரமாக அரசாங்கம் வழங்கிய சின்னஞ்சிறிய ஒதுக்கீட்டை பெரிய அளவில் தம்பட்டம் அடிக்கிறீர்கள்?”, என்று அவர் வினவினார்.
இந்தியர்களின் முதன்மையான பிரச்னை தமிழ்ப்பள்ளிகள்தான் என்பதனை மறந்துவிடக்கூடாது என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சிறப்புக் குழு பத்தாவது மலேசியா திட்டத்தில் 30 பள்ளிகள் 7 கோடி ரிங்கிட்டில் தரம் உயர்த்தப்படும் என்ற தகவலை மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளது மிகவும் கேளிக்கையானதாக இருக்கிறது என்றாரவர்.
“எந்த அடிப்படையில் இந்த 7 கோடி வெள்ளி வழங்கப்பட்டது? நீங்கள் முழு அமைச்சர் என்ற முறையில் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்த தொகை எவ்வளவு? நீங்கள் பரிந்துரை செய்யும் முன் முழுமையான ஆய்வு மேற்கொண்டீர்களா? அதன் விவரங்கள் என்ன? அதனை மக்களிடம் ஏன் தெரிவிக்கவில்லை? எத்தனைத் தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் அடிப்படை வசதி இன்றி இருக்கிறன என்பதனை மக்களுக்கு விளக்க முடியுமா? எந்த ஆய்வின் மூலம் 30 தமிழ்ப்பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள்? தேர்தெடுத்த இந்தப் பள்ளிகளில் இதர மொழி பள்ளிகளை காட்டிலும் என்னென்ன வசதிகள் இல்லை என்று ஒப்பிட்டு பார்த்தீர்களா?”, என்று கேள்விகளை அடிக்கினார் குலசேகரன்.
“முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் எதற்காக அவரச அவசரமாக அரசாங்கம் வழங்கிய சின்னஞ்சிறிய ஒதுக்கீட்டை பெரிய அளவில் தம்பட்டம் அடிக்கிறீர்கள்?”, என்று அவர் வினவினார்.
பொதுநலத்திற்கு இடமில்லையா?
“மஇகாவின் அமைச்சர்கள் சிறுபான்மையாக இருக்கும் வேளையில், மக்கள் கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்திருக்கலாமே? ஏன் அதனை செய்யவில்லை? ஏன் கட்சியின் தன்னலம் கருதி முடிவு செய்கிறீர்கள்? பொது நல கொள்கை எப்பொழுது மலரும் உங்கள் எண்ணத்தில்?
“கல்வி என்பது நமது சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் வசதிகள் மறுக்கப்படுகின்றன” என்பதை வலியுறுத்திய அவர், இதனால் இதர மொழி பள்ளிகள் வசதியில் உயர்வாகவே இருக்கும் காரணத்தினால் நமது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“கல்வி என்பது நமது சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் வசதிகள் மறுக்கப்படுகின்றன” என்பதை வலியுறுத்திய அவர், இதனால் இதர மொழி பள்ளிகள் வசதியில் உயர்வாகவே இருக்கும் காரணத்தினால் நமது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பிறகு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அவற்றை மூடிவிட அரசாங்கம் முயலும்போது தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது.
“இந்நாட்டில் தற்சமயம் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காணும் வகையில் இருக்கக்கூடிய 523 பள்ளிகளை முழுமையான வசதியுள்ள தமிழ்பள்ளிகளாக மாற்ற அரசாங்கம் என்னென்னத் திட்டங்களை கொண்டிருக்கிறது என்று பட்டியலிட முடியுமா?
“மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஆனால் பள்ளிகளின் எண்ணிக்கை கூடவே இல்லை. தமிழ்ப்பள்ளிகளின் வசதிகளுக்கு முழுமையான தீர்வே கிடைக்காத பட்சத்தில், எதற்காக இந்த ஒதுக்கீடு என்று சிந்தித்து பார்த்தீர்களா? கிள்ளி வழங்கியதை அள்ளி வழங்கியதுபோல் பேசுவதுதான் அமைச்சருக்கு அழகா?”, என்று குலசேகரன் மேலும் வினவினார்.
பத்தாவது மலேசியா திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு என்று ஒதுக்கியது இவ்வளவுதானா? இதற்கு முன்பு அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்க வாக்குறுதி அளித்த ஒதுக்கீடுகள் என்னவாயிற்று என்று அவர் மேலும் கேட்டார்.
“ஆயர் தாவார் கொலம்பியா தோட்ட தமிழ்ப்பள்ளியின் நிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால், இதுநாள் வரையில் அந்தத் தமிழ்ப்பள்ளியின் அவல நிலை குறித்து எந்த ஒரு நல்ல முடிவும் பிறக்கவில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த 30 தமிழ்ப்பள்ளிகளில் இந்தக் கொலம்பியா தோட்ட பள்ளி அடங்கியுள்ளதா இல்லையா? இல்லையென்றால் விளக்கம் சொல்ல வேண்டும்” என்று குலசேகரன் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய முன்னணியின் வழக்கமான, பழைமை வாய்ந்த சூழ்ச்சிகளில் மேலும் தமிழ் பள்ளிகள் பலியாவதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். இனியும் தமிழ் பள்ளிகளின் எதிர்காலத்தை கட்சியின் சுயலாபத்திற்கு அடகுவைக்காதீர்கள் என்றாரவர்.
“இந்நாட்டில் தற்சமயம் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காணும் வகையில் இருக்கக்கூடிய 523 பள்ளிகளை முழுமையான வசதியுள்ள தமிழ்பள்ளிகளாக மாற்ற அரசாங்கம் என்னென்னத் திட்டங்களை கொண்டிருக்கிறது என்று பட்டியலிட முடியுமா?
“மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஆனால் பள்ளிகளின் எண்ணிக்கை கூடவே இல்லை. தமிழ்ப்பள்ளிகளின் வசதிகளுக்கு முழுமையான தீர்வே கிடைக்காத பட்சத்தில், எதற்காக இந்த ஒதுக்கீடு என்று சிந்தித்து பார்த்தீர்களா? கிள்ளி வழங்கியதை அள்ளி வழங்கியதுபோல் பேசுவதுதான் அமைச்சருக்கு அழகா?”, என்று குலசேகரன் மேலும் வினவினார்.
பத்தாவது மலேசியா திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு என்று ஒதுக்கியது இவ்வளவுதானா? இதற்கு முன்பு அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்க வாக்குறுதி அளித்த ஒதுக்கீடுகள் என்னவாயிற்று என்று அவர் மேலும் கேட்டார்.
“ஆயர் தாவார் கொலம்பியா தோட்ட தமிழ்ப்பள்ளியின் நிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால், இதுநாள் வரையில் அந்தத் தமிழ்ப்பள்ளியின் அவல நிலை குறித்து எந்த ஒரு நல்ல முடிவும் பிறக்கவில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த 30 தமிழ்ப்பள்ளிகளில் இந்தக் கொலம்பியா தோட்ட பள்ளி அடங்கியுள்ளதா இல்லையா? இல்லையென்றால் விளக்கம் சொல்ல வேண்டும்” என்று குலசேகரன் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய முன்னணியின் வழக்கமான, பழைமை வாய்ந்த சூழ்ச்சிகளில் மேலும் தமிழ் பள்ளிகள் பலியாவதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். இனியும் தமிழ் பள்ளிகளின் எதிர்காலத்தை கட்சியின் சுயலாபத்திற்கு அடகுவைக்காதீர்கள் என்றாரவர்.
Saturday, September 25, 2010
Thursday, September 23, 2010
இனவாத பேச்சைக் கண்டிக்கும் வகையில் சொன்னதை செயல்படுத்த வேண்டும் பிரதமர்- மு.குலசேகரன்
கடந்த ஆகஸ்ட் 27 ம் திகதி அன்று அரசாங்கம் எந்த ஒரு பாரபச்சமின்றி இனவாதமாக பேசும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி மொழியை தேசிய முன்னணி இளைஞர் ஆய்வுக்கூட்டத்தில் கூறினார் பிரதமர். ஆனால் இது நாள் வரை இனவாதமாக பேசிய இரண்டு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியின் மேல் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று பொது மக்களின் கேள்விக்கு எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருப்பது வேதனை தருகிறது.
சீனர்கள் தனது சொந்த நாட்டிற்க்கு போய் விடு என்பதும் இந்தியர்களை நாய்கள் என்பதும் இனவாதமான பேச்சாக இல்லையா?
இதே போன்ற இனவாத வார்த்தைகளை வீசிய புகிட் செலம்பாவ் இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீன மாணவர்களை பார்த்து "பாலிக் சினா" என்று கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 4-ம் திகதி கூட்டரசு மாநில போலீஸ்படைத் தலைவர் இனவாதமாக பேசிய அதிகாரி தற்சமயம் நிர்வாக வேலைகளுக்கு பணி மாற்றம் பெற்றுள்ளார் என்று சொன்னார்.
மேலும் அவரின் மேல் தொடுக்கப்பட்ட புகார் முடிவுக்கு வரும் வரை அங்கேயே பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இவர்களின் அனைவரின் மேல் முழுமையான விசாரணை அறிக்கை முடிவுக்கு வந்துவிட்டால் எதற்காக தாமதிக்கவேண்டும்.? பொது சேவைத் துறை விசாரணை அறிக்கை பெற்றுள்ளதாக கூறியது. இருப்பினும் இதனால் வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மக்களுக்கு தெரியவில்லை. ஏன்?
அதன் அடிப்படையில், பிரதமர் தனது உரையின் வழி செய்யாத ஒன்றை கூறாமல் சொன்னதை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
நன்றி.
Tuesday, September 21, 2010
Saturday, September 18, 2010
இரண்டு தொகுதிகளில் ஒரே நபர் போட்டி முறையை தவிர்த்தல் வேண்டும்
மக்கள் ஓசை வெளிட்ட செய்தி (21/09/2010) |
வருக்கூடிய தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வேளையில் இரண்டு தொகுதிகளில் ஒரே நபர் போட்டி போடும் முறையை ஜ.செ.க மாற்றியமைத்து ஒருவருக்கு ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் கேட்டுக்கொண்டார். இதுபோல புதிய அணுகுமுறையை ஜ.செ.க பயன்படுத்தினால் அது திறமையுள்ள நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் செயலாக கருதப்படும் என்று தெரிவித்தார்.
ஒரு சட்டமன்ற தொகுதியை தங்கவைத்துகொண்டு மக்களுக்கு சேவை செய்வது ஒரு சுலபமான செயலல்ல. அது மிகப்பெரிய கடமையாகும். அவ்வகையில் இரண்டு தொகுதிகளில் எவ்வாறு முறையாக சேவைசெய்ய முடியும் என்பதனை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும். மக்களுக்கு சேவை என்பது அரசியலில் ஒரு முக்கிய பங்கு, அதனை முறையாக வழங்க வேண்டும்.
மேலும் தற்சமய சூழ்நிலையில், பேராக் மாநில ஜ.செ.க-வில் நிறைய திறமையுள்ள நபர்கள் உள்ளனர். இவர்கள் நேர்மையான கண்ணியமான வேட்பாளராக இருக்க வாய்ப்புண்டு. இவர்களின் திறமைகளை பார்த்து தக்க சமயத்தில் வாய்ப்பு வழங்குவது கட்சியின் முக்கிய கடமையாகும் என்று நான் கருதுகிறேன் என்றார் அவர்.
கடந்த காலங்களில் இரண்டு தொகுதிகளில் ஒருவரே போட்டி போடும் முறை ஒரு பொதுவானதாக இருந்தது என்பது உண்மை. காரணம் தேர்தலில் போட்டி போட யாரும் முனைப்பு காட்டுவதில்லை. இப்பொழுது அவ்வாறு கிடையாது. நிறைய நபர்கள் அவர்களின் அரசியல் திறமைகளை வெளிபடுத்த தொடங்கிவிட்டனர்.
நடந்து முடிந்த 2008-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பேராக் மாநில ஜ.செ.கவின் தலைவர் டத்தோ ங்கே கூ ஹாம் சித்தியவான் சட்டமன்றத்திலும் பெருவாஸ் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டிப் போட்டி வெற்றிப் பெற்றார். மேலும் அவரை தொடர்ந்து அதே போன்ற சூழ்நிலையில் பேராக் மாநில ஜ.செ.க-வின் செயலாளர் ங்கா கோர் மெங் பந்தை ரெமிஸ் சட்டமன்றத்திலும் தைப்பிங் நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றிக்கண்டார்.
அடுத்து வரக்கூடிய பொதுத்தேர்தல் நாட்டின் மிக முக்கியமான தேர்தலாகும். அவை தேசிய முன்னணியின் பாரம்பரிய வெற்றிக்கு சவால் விடக்கூடிய தேர்தலாக இருக்கும் வாய்ப்புள்ளது.
அதே சமயத்தில் பேராக் மாநில மக்கள் கூட்டணி மீண்டும் மாநில ஆட்சியை கைப்பற்ற என்னமிருக்கும் வகையில் தேர்தல் இயந்திரத்தை முழுமையாக பலமாக்கி கொள்ளவது மட்டுமல்லாமல், விளம்பரம், கொள்கை சூத்திரங்கள் மற்றும் எந்த நேரத்திலும் மக்களை திரட்ட கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்கவேண்டும் என்றார் அவர். அடுத்து மத்திய அரசாங்க ஆட்சியை அமைக்க நாம் எண்ணம் கொண்டிருந்தாள் இவை அனைத்தும் முக்கியாமாக கவனிக்கப்படவேண்டும்.
இவை அனைத்தையும் விட மிக முக்கியமான ஒன்று, ஒரு சிறந்த வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பதை பற்றி மக்கள் கூட்டணி சீர்தூக்கி பார்க்கவேண்டும்.
ஒரு சிறந்த மாற்றத்தை கொண்டு வர, தற்சமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை தரத்தை நன்கு கவனித்து அதில் அரசியால் சுயலாப கொள்கைவாதிகளையும் அரசியல் ஆற்றல் இல்லாத நபர்களை மாற்றி அமைத்து திறமையுள்ள நபர்களுக்கு வாய்பளிக்க இதுவே சிறந்த முறையா விளங்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது என்று, ஜ.சே.க கம்போங் பிந்தாங் கிளை ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசரிப்பில் இதனை கூறினார் மு.குலசேகரன்.
Tuesday, September 14, 2010
ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வருமான திட்டத்தை மேலும் தாமதிக்கக்கூடாது.
நாட்டின் அனைத்து நிலை மேம்பாட்டிலும் ஊழியர்களின் பங்கு மிக மிக முக்கியமான ஒன்று. ஊழியர்களின் குறைந்த வருமான திட்டத்தை மலேசியா ஊழியர்களின் சம்மௌனம், பிடிவாதமாக நிராகரித்துள்ளது.
இது போன்ற செயல் ஊழியர்களின் நலனில் எந்த ஒரு அக்கறையை காட்டுவதாக தெரியவில்லை.இந்த அறிவிப்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறைந்தபட்ச வருமான திட்டம் உள்ளநாட்டு வர்த்தகர்களை பாதிப்பது மட்டுமல்லாமல் குறைந்த வேலைத்திறன் மற்றும் குறைந்த வருமானம் பெரும் அந்நிய தொழிலாளர்களுக்கு லாபத்தை தருவோதொடு இந்நாட்டு நாணயம் அதிக அளவில் வெளியேற்றம் காணும் வாய்ப்பு உருவாகும் காராணத்தை சம்மௌனத்தின் நிர்வாக இயக்குனர் சம்சுதீன் பர்தன் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் சம்பள உயர்வை நிர்ணயம் செய்வது அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் தொழில் திறமைகள் மட்டுமே. ஆகவே அதன் அடிப்படையில்தான் சம்பள உயர்வு இருக்கவேண்டும் என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
இந்த இரண்டு பலவீனமான காரணங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் தற்சமயம் இந்நாட்டில் குறைந்தது சுமார் 20 லட்சம் அந்நிய தொழிலாளர்கள் பெருவாரியான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அதிலும் அவர்கள் அசுத்தமற்ற ஆபத்தான தரந்தாழ்த்திய வேலைகளை எடுத்துக்கொண்டனர்.
இத்தொழிலுக்கான வருமானம் குறைத்து வழங்கப்படுவதால் இத்தொழிலை எந்த ஒரு உள்நாட்டு மக்களும் ஆர்வம் காட்டுவதில்லை.
53 வருடம் சுதந்திரம் அடைந்த பிறகும், இன்னமும் இந்நாட்டு மக்கள் பலாயிரம் பேர் அடிமட்ட ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பது உண்மை. இச்சூழ்நிலையை முற்றாக களையவேண்டும். இந்நாட்டு ஊழியர்கள் மென்மேலும் குறைந்த வருமானத்தை அனுபவிக்க நாம் விடலாமா?
இது போன்ற பிரச்சனைகளை என்றைக்கும் முதலாளிமார்கள் அவர்களுக்கு சாதகமாகத்தான் சலுகைகளை பெற முயற்சிப்பார்கள். முறையான சட்ட திருத்தம் இல்லயென்றால் ஊழியர்களின் நலனை யார் பாதுகாப்பது?
ஊழியர்களுக்கான தங்குமிடவசதி, வாரத்திற்கு 5 நாள் வேலை, 90 நாட்கள் பிரசவ சிறப்பு சலுகை, வீட்டு சலுகை, இலவச மருத்துவ பாதுகாப்பு மற்றும் கல்வி அனைத்தும் குறைந்தபட்ச வருமான கோரிக்கையின் கீழ் அடக்கப்படவேண்டும். இதன் உச்சக்கட்ட தொடக்கமாக வாராந்திர சம்பள திட்ட முறையை ஊழியர்களுக்கு வழங்க வகைசெய்யவேண்டும். கடந்த காலங்களில் இதனை குறித்து பல முறை அரசாங்கத்திடம் முறையிட்டும் எந்த ஒரு பலனுமில்லை.
பல வருடங்களுக்கு முன்பு முதலாளிகளின் முதன்மைக்கு மட்டுமே செவிசாய்த்த முன்னாள் பிரதமர் மகாதீர், குறைந்தபட்ச வருமானம் என்ற சொல் மிகவும் இழிவானது என்றும் வருமான உயர்வுக்கு ஊழியர் உற்பத்தித்திறன் குறித்த திட்டமிடுதலை செய்தால் போதும் என்றும் ஊழியர்களின் கோரிக்கையை தட்டிக்களித்தார்.
அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு முன் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் குறைந்த வருமான திட்டம் குறித்த எந்த கோரிக்கையையும் தற்சமயம் அரசாங்கம் பரிசீலினை செய்யும் சூழ்நிலையில் இல்லை காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றியுள்ளதாக தெரிவித்தது.
கடந்த வருடம் மீண்டும் அரசாங்கம் குறைந்தபட்ச ஊழியர்களின் வருமான திட்டம் பொருளாதார போட்டித்தன்மையை குறைத்து விடும் என்று குறைக்கூறி அக்கோரிக்கையை ஒதுக்கியது.
ஒவ்வொரு முறையும் காராணத்தை சுட்டிக்காட்டி அரசாங்கம் ஊழியர்களின் நலனில் எந்த ஒரு அக்கறையும் கொள்ளாமல் இருப்பது அரசாங்கத்தின் மனிதாபிமான பற்றாக்குறையை காட்டுகிறது.
ஒரு வளர்ச்சியடைந்த தேசமாக மலேசியா உருமாறும் பொழுது ஊழியர்களின் நலனில் அனைத்து தரப்பினரும் ஒன்றனைந்து செயல்திட்டம் தீட்டவேண்டும் என்பதனை மலேசியா ஊழியர்களின் சம்மௌனம் அறிந்துகொள்ளவேண்டும். நலங்காக்கும் திட்டம் எதுவாகினும் குறைந்தபட்ச வருமானத்தை முதன்மையாக கொண்டால் மட்டுமே சிறந்த வளர்ச்சி கண்ட நாடாக மலேசியா மாறமுடியும். தற்சமயம் நமது நாட்டின் வேலையில்ல சதவிகிதம் 3.8 -க உள்ளது. இதன் சூழ்நிலையில், பொருளாதரா அடிப்படையில் பார்த்தால் மலேசியா முழுமையான வேலைவாய்ப்பு கொண்ட நாடாக திழகும் வேளையில் எதற்காக குறைந்த வருமான திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்?
ஆகவே மலேசியா ஊழியர்கள் சம்மௌனமும் மற்றும் அரசாங்கமும் குறைந்தபட்ச சம்பள திட்ட கோரிக்கையை குறித்து மறுபரிசீலினை செய்து நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்த ஊழியர்களின் கரங்களை திடமாக மறுக்காமல், திட்டமிட்டு ஊக்குவிக்கும் வகையில் நடந்துக்கொள்ள ஜ.செ.க பரிந்துரை செய்கிறது.
Monday, September 13, 2010
Saturday, September 11, 2010
விநாயகர் சதுர்த்தி
இன ஒற்றுமையின் மூலமே நாட்டின் சுபிட்சத்தை வளப்படுத்தமுடியும்.
நாடு சுதந்திரம் அடைந்து 53வருடங்கள் ஆனாலும் இன்னும் சிலர் இனவாத வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு சிறிதும் அச்சப்படுவதில்லை.
இனவாத வார்த்தைகள் என்றைக்கும் அமைதியான சூழ்நிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அது போன்ற வார்த்தைகளை வாரி வீசுகிறார்கள். நமது நாட்டின் ஒழுக்கநெறிகளுக்கும் சட்டமைப்புக்கும் சவால் விடும் வகையில் நடந்துக்கொள்கிறார்கள்.
முதலில் இனவாதம் கொள்கை ஒழிக்கப்படவேண்டும்.மேலும் இனவாத வார்த்தைகளை அள்ளி வீசும் நபர்களின் மீது எந்த ஒரு பாரபட்சமின்றி உடனைடியாக கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் வகைசெய்ய வேண்டும். இந்நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் இன ஒற்றுமையை நிலைநிறுத்த பாடுபடவேண்டும்.
இன ஒற்றுமைதான் தேசிய பாதுகாப்பு என்பதனை மக்களுக்கு உணர்த்தவேண்டும். தேசிய பாதுகாப்பு அரசியல் நிலைப்பாட்டினை வலுப்படுத்தும் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ளல் வேண்டும்.
கடந்த காலங்களில் நாட்டின் பாதுகாப்புக்கு இன ஒற்றுமை முக்கிய பங்களித்தது. பல லட்சம் மக்கள் பல இனமாக வாழ்ந்தாலும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து வாழ முயற்சி செய்து வெற்றிகொண்டனர். அச்சூழ்நிலை நாட்டின் முதன்மை சொத்தாக திகழ்ந்தது.
மீண்டும் அச்சூழ்நிலை வலுவடைய நாம் எழுந்து நின்று இனத்துவேசமாக பேசும் நபர்களுக்கு எதிராக எதிர்குரல் கொடுப்பதை விட இன ஒற்றுமையான தகவல்களை வெளியிடுவதே சாலச்சிறந்ததாகும்.ஒற்றுமையை சீர்குலைப்பது பயங்கரவாத செயலுக்கு சமமானது.
உலகில் சிறந்த நாடாக இந்நாடு திகழ அரசியல் கொள்கைகளை பாதுகாப்பதை விட்டுவிட்டு சமூக கொள்கைகளை பரப்ப அனைவரும் முன்வரவேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டின் ஒருமைப்பாட்டை மேலோங்க செய்யமுடியும். அரசியல் தலைவர்களின் அர்பணிப்பே இதில் மிக முக்கிய பங்காகும்.
அன்பான பேச்சும் அமைதியான சூழ்நிலையும் எவ்விதமான இனவாத சந்தத்தையும் தவிடுபொடியாக்கிவிடும் என்பதில் நம்பிக்கை கொள்ளவேண்டும். வார்த்தை மூலம் வாக்குவாதங்களை வளர்க்க ஒருபொழுதும் நாம் முயற்சிசெய்ய கூடாது. உலகுக்கு அன்பின் வழி பல புகழ்பெற்ற பாடங்களை காட்டியது உண்மை. ஆகையால் அவ்வழியே நமது இன ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயலை அடியோடு அறுத்துவிடலாம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. ஒற்றுமை வலுவடையும் வரை அனைத்து மலேசியர்களும் ஓய்வெடுக்கக்கூடாது. அன்பாக பேசி அன்பாக வாழுவோம்.
சிந்தித்து பாருங்கள்.
Thursday, September 9, 2010
ராயா தின நல் வாழ்த்துக்களை
மலேசியா வாழ் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஏனைய மலேசியர்களுக்கும் ராயா தின நல் வாழ்த்துக்களை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பொன்னான நாளில் இன ஒற்றுமையை காக்க அனைத்து மலேசியர்களும் இத்தினத்தை ஒன்றினைந்து கொண்டாடுவோம்.
நன்றி.
லிட்டில் இந்தியா நுழைவாய் வளைவுக் கதவு தேவைக்கேற்று அமைத்தல் வேண்டும் - மு.குலசேகரன்
லிட்டில் இந்தியா வளாகத்தில் எழுப்பப்பட்டுள்ள நுழைவாய் வளைவுக் கதவு பொருத்தமில்லாத இடத்தில் கட்டுவதற்கான காரணத்தை மாநகராட்சி மன்றம் மக்களுக்கு விளக்கவேண்டும்.
இந்தியர்கள் காலங்காலமாக லிட்டில் இந்தியா பகுதியில் வர்த்தகத்தை செய்துவரும் வேளையில், இவ்விடத்திற்க்கென்று ஒரு அடையாள சின்னமாக விளங்க ஒரு அடையாள சின்னத்தை எழுப்பியது வரவேற்க கூடிய ஒன்று.ஆனால் பொருத்தமில்லாத இடத்தில் எழுப்புவதின் காரணம் என்ன?
இந்த நுழைவாய் வளைவுக் கதவு ஆரம்ப கட்டத்தில் எந்த இடத்தில் எழுப்ப திட்டம் செய்யப்பட்டது என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் திடீரென்று அவை வேறு ஒரு இடத்திற்கு கட்டப்பட்டது பல இந்தியர்களின் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது என்பதனை மாநகராட்சி புரிந்து கொள்ள வேண்டும்.
சமீபத்தில் லிட்டில் பகுதியில் சாலைகள் நிர்மாணிப்பு செய்யப்பட்டது.மேலும் இங்கிருக்கும் கட்டடங்களுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டது. ஆனால் இவையாவும் புதுப்பித்தலுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. கம்பீர தோற்றத்துடன் ஒரு "லிட்டில் இந்தியா" என்ற நுழைவாய் வளைவுக் கதவு இந்த இடத்திற்கு கோரமாக காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும் அது அருகில் உள்ள வர்த்தகர்களுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதற்க்கு யார் காரணம்?
இரண்டு வருடங்களுக்கு முன்பு துணை பிரதமர் லிட்டில் இந்திய பகுதிக்கு வருகை தந்த பொழுது இப்பகுதியை மேம்படுத்த சுமார் பத்து லட்சம் வெள்ளியை வழங்குவதாக கூறியிருந்தார். மேலும் இதற்க்கு முன்பு இவ்விடத்தை மேம்படுத்த மாநகராட்சி மன்றம் சுமார் மூன்று லட்சம் வெள்ளியை ஒதிக்கீடு செய்து வைத்திருந்தது. அந்த வகையில் அப்பணங்கள் இவ்விடத்தை மேம்பாட்டுத்த முழுமையாக பயன்படுத்தப்பட்டதா என்று விளக்க வேண்டும். மேலும் இது சம்பந்தமாக மேம்பாட்டு ஒப்பந்த குத்தகை எந்த வகையில் வழங்கப்பட்டது என்பதனை விவரிக்கவேண்டும். இத்திட்டத்திற்கு அங்கிகாரம் வழங்கிய மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் யார்?அவர்கள் பொது மக்களின் கருத்துக்களை சேகரித்தார்களா? இல்லை என்றால் ஏன் அதனை செய்யவில்லை?
ஒரு குறிப்பிட்ட மேம்பாட்டு திட்டத்தை அரசாங்கம் திட்டமிட்டு அமைக்கும் முன் மக்களுடன் தொடர்புக்கொண்டு அவர்களின் பரிந்துரைகளை சீர்தூக்கி பார்த்த பிறகு தான் அத்திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். அவ்வகையில் தொடர்ச்சியான மேம்பாட்டு திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட LOCAL AGENDA 21 கோட்பாடு 15 வருடங்களுக்கு முன்பு மலேசியாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மலேசியாவில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்கள் இந்த கோட்பாட்டை பயன்படுத்தும் வேளையில் ஈப்போ மாநகராட்சி மன்றம் எதற்காக பொது மக்களின் கருத்தை பெற முயவில்லை.? எதற்காக இந்தியர்களின் சின்னமாக விளங்கும் லிட்டில் இந்தியா பகுதி மேம்பாட்டிற்கு எனாதானோ என்ற செயல்திட்டங்கள் வரையப்பட்டது?
தற்சமயம் கட்டப்படும் நுழைவாய் கதவு அங்கிருக்கும் வணிகர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. பலர் என்னிடம் இது குறித்த ஆதங்கத்தை என்னிடம் தெரிவித்தனர். அந்த நுழைவாய் கதவு முழுமையாக கட்டிய பிறகு மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே அது போன்ற அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க மாநில அரசாங்கம் மாநகராட்சி மன்றத்தை இந்த நுழைவாய் கதவு கண்டுமான திட்டத்தை குறித்த முந்தய இடத்திற்கு மாற்ற பரிந்துரை செய்ய வேண்டும்.
Tuesday, September 7, 2010
உணர்ச்சிவசம் வேண்டாம்.....சிந்தித்து செயல்படுவோம்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டத்தில் இனவாத பேச்சு மேலும் தலைத்தூக்கி உள்ளது என்ற உண்மை அனைவராலும் அறிந்த ஒன்று. ஒரு மதத்தை இழிவு படுத்த இணையம் மூலம் தனது அடையாளத்தை மறைத்து அல்லது பிறரின் பெயர் முகவரியில் தனது இனவாத கருத்துக்களை வெளிப்படுத்துவது தரமற்ற நோக்கத்தையும் தைரியமைற்ற செயலையும் வெளிபடுத்துகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற செயல்கள் முழுமையாக கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஆனால் இதற்க்கு யார் பின்னணி என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மையாகும். இருப்பினும் மலேசியா தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இது போன்ற உணர்வற்ற மனிதர்களின் இனவாத செயலை தடுத்தி நிறுத்த அனைத்து வழிகளும் இருக்கும் வேளையில் ஏன் இன்றைய நாள் வரைக்கும் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்ற கேள்விக் எழ செய்கிறது. பொதுவாக இந்தியர்களை இழிவுபடுத்தம் இணைய பதிவாளர்களின் மேல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அப்படி உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது போன்ற இனவாத செயலுக்கு ஆதரவளிப்பதாக பொருளாகும் என்பதனை தெரிந்துகொள்ள மறந்துவிட்டார்களா? அல்லது அலட்சியப்போக்கா?
அரசாங்கம் இனவாத செயலை தூண்டுகிறதா அல்லது இனவாத அரசாங்கமாக மாறுகிறதா? முன்பு இல்லாத இனவாத பேச்சும் செயலும் இப்பொழுது திடீரென்று எழுந்துள்ளது ஏன்?
கீழே உள்ள படங்களை பாருங்கள்...இணைய தளத்தில் பல விசயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கும்பொழுது இனவாதமாக பேசி பலரின் உணர்சிகளை தூண்டும் அளவிற்கு செயல்படுவதை கவனிக்கலாம்.
இருப்பினும் நமது நாட்டின் சுபிச்சத்தை நிலைப்படுத்த இது போன்ற வர்ணனைக்கு நாம் ஒருபொழுதும் உணர்ச்சிவசமாக கருத்துரைப்பது தவறாகும். ஆகையால் இது சம்பந்தமாக அனைவரும் ஒன்றிணைந்து போலீஸ் புகர் செய்வதே சிறந்த செயலாகும் என்ற ஆலோசனையை தெரிவித்துக்கொள்கிறேன்.
Monday, September 6, 2010
இன ஒற்றுமை சட்ட மசோதா நிறைவேற்றுதல் வேண்டும் - கர்பால் சிங் வேண்டுகோள்.
வெகுநாளாக நிலுவையிலுள்ள தேசிய இன ஒற்றுமை சட்ட மசோதாவை உடனடியாக மத்திய அரசாங்கம் சட்டமேற்றுதல் வேண்டும் என்று ஜ.செ.க-வின் தேசியத்தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினறுமான கர்பால் சிங் கேட்டுக்கொண்டார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தேசிய இன ஒற்றுமை முன்னேற்ற இலட்சியத்துக்கு பயனுள்ள உத்தரவாதத்தை வழங்கும் என்று அறியப்படுகிறது என்று அவர் கூறினார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தேசிய இன ஒற்றுமை முன்னேற்ற இலட்சியத்துக்கு பயனுள்ள உத்தரவாதத்தை வழங்கும் என்று அறியப்படுகிறது என்று அவர் கூறினார்.
பல வருடங்களுக்கு முன்பு டத்தோக் ஷாபி அப்டால் ஒற்றுமை கலை கலாச்சார பாரம்பரிய அமைச்சாராக இருந்த பொழுது இச்சட்டத்தை பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இதுநாள் வரை மத்திய அரசாங்கம் இச்சட்டம் குறித்த அவரின் ஆலோசனையை தொடரவில்லை என்பதே உண்மையாகும். அதன் தொடர்பில் தற்சமயம் இனவாத வார்த்தை பயன்பாடு மிகவும் பரவாலாக இருக்கும் காரணத்தினால், அரசாங்கம் தேசிய தலைமைச் சட்ட அதிகாரியை இச்சட்டம் குறித்த மாதிரி சட்டரிக்கையை ஒன்றை தயார்செய்ய ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று கர்பால் கேட்டுக்கொண்டார்.
"மேலும் அந்த மாதிரி சட்டரிக்கை வருகிற நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்து அதனை அரசாங்கம் மக்களின் கருத்துக்களுக்கு பதிப்பளிக்கும் வகையில் அமைய வகைசெய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயங்களை கேட்டறிந்து அச்சட்டத்தை இன்னும் வலிமையான முறையில் உருவாக்கவேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்" என்றார் கர்பால்.
"இனவாத பேச்சுக்கள் இனியும் இந்நாட்டில் உருவாகக்கூடாது. தற்சமயம் எழுந்துள்ள இனவாத பேச்சுக்கு இதுவே மிகச் சிறந்த தீர்வாக அமையவேண்டும். ஆகவே தயாரிக்கப்படும் மாதிரி சட்டரிக்கையில் இனவாத பேச்சுக்கும் செயலுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதனை முழுமையான விரிவாக்கத்துடன் அவை அமையவேண்டும்.இது மக்களின் நலனை மட்டுமல்லாமல் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடிய செயலாக திகழவேண்டும்.அரசாங்க அதிகாரிகளின் எல்லையில்லா இனவாத பேச்சுக்கள் பல இன மக்களின் ஒற்றுமையை சீர்குலைந்து விடும். இது கடுமையாக கருதப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாகப்பட்டால்தான் இச்சூநிலையை முற்றாக ஒழிக்க முடியும்" என்றார் அவர்.
Subscribe to:
Posts (Atom)