Monday, May 30, 2011

சுயேச்சை மின் உற்பத்தி ஒப்பந்த விவரத்தை மக்களுக்கு தெரிவை - தோணி பூவா

ரகசிய அதிகார சட்டத்திலிருந்து அகற்றி, சுயேச்சை  மின் உற்பத்தி ஒப்பந்தத்தை அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்கும் அவசியத்தில் இருக்கும் தருணத்தில், அவைகளை மக்களுக்கு  காட்ட வேண்டுமென்று  பெட்டாலிங்   உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் தோணி பூவா தேசிய முன்னணிக்கு சவால் விடுத்துள்ளார்.

தனது அறிக்கை அவர் கூறியதாவது "மக்கள் நலனைப் பணயம் வைத்து கொள்ள லாபத்தை கொள்ளையடிக்க அந்த நிறுவனங்கள் அடைவதற்கு வழி அமைத்த அந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய மறுப்பதால், அரசாங்கம் அவைகளை வெளியிட வேண்டும்" என்றார் அவர்.

"அரசாங்கம் மறு ஆய்வு செய்வதற்கு கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் இடம் தார இயலாது என்று கூறிய ம.சீ.ச வின் தேசிய தலைவர் சுவா சை லேக்கின் கருத்து எந்த ஒரு லாபத்தையும் மக்களுக்கு தராது.

ஆகையால், இவ்விவகாரம் குறித்து சுவாவிடம் விவாதம் செய்வது அனுகூலத்தையும் தராது என்பது உறுதி. அதன் அடிப்படையில், தேசிய முன்னணி அமைச்சரவை அந்த ஒப்பந்த உள்ளடக்க தகவலை வெளியிட வேண்டும் என்று சுவா வலியுறுத்த வேண்டும்" என்று தோணி தெரிவித்தார்.

Wednesday, May 25, 2011

முகைதீன், வரலாற்றில் மிக மோசமான துணை அமைச்சரும் அம்னோவின் துணைத் தலைவருமாவார் - லிம் கிட் சியாங்


ஜ.செ.க தனது அரசியல் கொள்கைகளை விரிவாக்கம் செய்ய எண்ணம் கொண்டுள்ள வேளையில், நாட்டினுடைய துணை பிரதமர் மிகவும் கோமாளித்தனமான வசனங்களை பறக்க விடுகிறார். 

இதற்கு முன்பு நேற்று நாட்டின் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சஹிட் ஹமிடி, ஜ.செ.க வை நோக்கி, கட்சியின் பலத்தை காட்ட மக்கள் கூட்டணியை விட்டு விலகி தேர்தலை சந்திக்குமாறு சவால் விடுத்தார். அவரின் அந்த கூற்று "நவீன சதித்திட்டம்" கொண்டுள்ள அறிக்கையாக அமைந்துள்ளது என்று நான் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், முகைதீன் மக்களை நோக்கி "ஜ.செ.க வின் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்" என்று அறிக்கை தொடுத்தது, சஹிட்டை விட துணைப்பிரதமர் ஒரு புத்திகேட்டவர் என்பதனை தெளிவுபடுத்திவிட்டது. 

முகைதீன், பாகோவில் பேசுகையில், "ஜ.செ.க ஒரு சீனர்கள் ஆதிக்கம் கொண்ட கட்சியாக இருக்கும் வேளையில், முன்பு மலாய் மக்களின் நலன்களை பொருப்படுத்தாமல், இன்று மலாய் மக்களின் மனதை கவர்ந்து ஆதரவை பெற பல சூழ்சிகளை செய்கிறது" என்று கூறியுள்ளார். 

ஒரு வேளை, ஜ.செ.க சீனர்கள் ஆதிக்கம் நிறைந்த கட்சி அது என்றைக்கும் மலாய் மக்களின் நலனை அக்கறை கொண்டதில்லை என்று கூறுவதில் உண்மையிருந்தால், எதற்காக முகைடினும் சஹிட்டும் ஜ.செ.க வின் செயலை கண்டு கொந்தளிக்கவேண்டும்? அவர்கள் இருவரும் அச்சத்தை தளர்ந்தல்லவா இருக்க வேண்டும். மேலும், ஒரு வேளை ஜ.செ.க வின் அந்த செயல் முறை தோல்வியை தழுவினால், அந்நிலையை தன்வசப்படுத்திக்கொண்டு அவ்விருவரும் கண்டனமல்லவா தெரிவிக்க வேண்டும். எதற்காக பீதியில் உளறல்? 

ஜ.செ.கவுக்கு எதிராக வீசப்படும் ஒவ்வொரு செயல்களிலும் உண்மையில்லை மற்றும் அவை அடிப்படையற்றது என்பது அம்னோவிற்கு நன்கு தெரியும் அதே சமயத்தில், ஜ.செ.வின் கொள்கை விரிவாக்கம் திட்டத்தில், ஜ.செ.க மலாய் இனத்தவர்களின் ஆதரவை பெற்றுவிடும் என்ற பயத்தில் அம்னோ உறுப்பினர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மையே. 

இதற்கு முன்பு ஜ.செ.க எந்த ஒரு பொதுத்தேர்தலிலும் மலாய் வேட்பாளருக்கு வாய்ப்பு தந்து கிடையாது என்று சொல்லும் முகைடினின் ஒரு மதியற்ற துணைபிரதமர் என்பதற்கு சான்று. 

இவர்கள் இருவரின் கூற்று ஒரு தவறானது என்பதனை தெரிவிக்க, ஜ.செ.க கடந்த 10 பொதுத்தேர்தலில் மலாய் வேட்பாளருக்கு வாய்ப்பளித்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

1969-ம் ஆண்டு முதல் முதலாக ஜ.செ.க பொதுத்தேர்தலில் களமிறங்கிய பொழுது , ஜோகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலத்தில், ஒரு நாடாளுமன்றம் மற்றும் 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மலாய் வேட்பாளரை நிறுத்தியது. அந்த பொதுத்தேர்தலில், சுமார் இருவர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிவாகை சூடினர். அவர்களில் தாப்பா ரோட் சட்டமன்ற தொகுதியில் இப்ராஹீம் சிங்கேவும், ஹாஜி ஹஸ்ஸான் பின் ஹாஜி அஹ்மாட் சி ருசா தொகுதியிலும் ஜ.செ.க-வின் பிரதிநிதிகளாக இருந்தனர். 

அதனை தொடர்ந்து இன்றைய நாள் வரை சுமார் ஐந்து சட்டமன்ற தொகுதியிலும், மேலும் ஒருவர் நாடாளுமன்ற தொகுதியிலும் ஜ.செ.க வின் சின்னத்தை சிறப்பித்தனர் என்பது வரலாற்று உண்மை. இந்த உண்மையை அறியாத முகைதீன் ஒரு வராலாற்று மூடன் என்றுதான் சொல்லவேண்டும். 

- லிம் கிட் சியாங்- அறிக்கை 

மக்கள் கூட்டணி மாநிலத்தில் சட்டமன்றம் கலைக்கப்படாது - லிம் குவான் எங் உறுதி


25/05/2011


தேசிய முன்னணி, தேசிய அளவிலான தேர்தலை நடத்த அவரசத்தை காட்டினால், அதற்கு மக்கள் கூட்டணி அடி பணிய முடியாது என்று ஜ.செ.க வின் தலைமைச் செயலாளரும் பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சருமான லிம் குவான் எங் தெரிவித்தார். இம்முடிவு, நேற்று நடந்து முடிந்த கட்சியின் தேசிய செயலவை கூட்டத்தில் இந்த நிலைப்பாடு காணப்பட்டது என்று அவர் அறிவித்தார்.

மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் அமைந்துள்ள மாநிலங்களில் ஐந்து வருட கால தவணை முடியும் வரை, தேர்தலுக்கான அறிகுறி தென்பட்டாலும் அதற்கு மக்கள் கூட்டணி தலைவணங்காது என்று கூறிய அவர், எனினும் பொதுத்தேர்தல்  அடுத்த ஆண்டு நடைபெற்றால் அதற்கு சம்மதம் தெரிவிப்போம் என்று அவர் கூறினார். 

இதற்கு இதர கட்சிகள் இணக்கம் தெரிவிக்குமா என்று கேட்டதற்கு, ஜ.செ.க-வின் இந்த முடிவு, மக்கள் கூட்டணியின் இதர கட்சிகளின் விவாதத்திற்கு உட்பட்டது என்று அவர் தெரிவித்தார். 

பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜ.செ.க இந்த முடிவினை எடுத்தாக அவர் மேலும் கருத்துரைத்தார். "அடுத்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மக்களுக்கு மக்கள் கூட்டணி நிறைய செய்ய வேண்டியுள்ளது. மக்கள் கூட்டணியின் வெற்றி அனைத்து உறுப்பு கட்சிகளின் வெற்றியா அமைய வேண்டும்" என்று லிம் கூறினார். 

Tuesday, May 24, 2011

மன்னிப்பு கேள் இல்லையேல் சட்டம் பாயும்

நண்பன் செய்தி 


தயார் நிலையில் இருங்கள்

நண்பன் செய்தி 24/05/2011



பல்லின தேர்வு குழு தேவை

நண்பன் செய்தி 24/05/2011

இந்திய மாணவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்

நண்பன் செய்தி 24/05/2011


வாழ்ந்தவர்களுக்கு நிலம் கிடையாது

தமிழ் நேசன் செய்தி 24/05/2011

பொது சேவை இலாகா தேவையில்லை

தமிழ் நேசன் செய்தி 24/05/2011


குறைந்த பட்ச சம்பளம் எப்போது?

தமிழ் நேசன் செய்தி 24/05/2011



சுயேச்சை கல்வி குழு தேவை

தமிழ் நேசன் செய்தி 24/05/2011



Monday, May 16, 2011

அன்வாருடைய பிரதிவாதித் தரப்பு பிரதமரையும் அவரது துணைவியாரையும் பேட்டி காணும்


16 MAY | செய்தி. மலேசியாஇன்று 

அன்வார் இப்ராஹிமின் பிரதிவாதித் தரப்பு குதப்புணர்ச்சி வழக்கு 11 தொடர்பில் அடுத்த சில நாட்களில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் ஆகியோரை பேட்டி காணும்.

அந்தப் பட்டியலில் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவரும் அம்னோ செனட்டருமான முகமட் எஸாம் முகமட் நோர் , ரோஸ்மாவுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படும் முன்னாள் ஒட்டக்காரர் மும்தாஸ் ஜபார் ஆகியோரும் அடங்குவர்.

அவர்கள் ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலமூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டி காணப்படுவர். “பின்னர் நாங்கள் அவர்களை சாட்சியமளிக்க அழைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்.” என வழக்குரைஞர் கர்பால் சிங் கூறினார்.


“நஜிப்பை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதிவாதித் தரப்பு பேட்டி காண வேண்டும் என அரசு தரப்பு விரும்புகிறது. ஆனால் நாங்கள் நடு நிலையான இடம் ஒன்றை விரும்புகிறோம். அதனல் ஜாலான் டூத்தாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தைப் பரிந்துரை செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில் நாங்கள் அவர்களைப் பேட்டி காண்போம்,” என அவர் சொன்னார்.

“அரசு தரப்பு வழங்கிய பட்டியலிலிருந்து நாங்கள் 25 சாட்சிகளைத் தேர்வு செய்துள்ளோம்.”

பேட்டியைப் பதிவு செய்வதற்கு உதவியாக நீதிமன்ற வளாகத்தில் ஒர் அறையை ஒதுக்குவதற்கு அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது,” என்றும் கர்பால் குறிப்பிட்டார்.

“குற்றம் நடந்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்ததற்கான சாட்சிகள்” (‘Alibi witness’) குதப்புணர்ச்சி நிகழ்ந்ததாக கூறப்படும் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதியில் இருந்த ‘அலபாய் சாட்சிகளும்’  பேட்டி காணப்படும் சாட்சிகளில் அடங்குவர் என இன்னொரு பிரதிவாதி வழக்குரைஞரான சங்கர நாயர் கூறினார்.


“நாங்கள் அவர்களை முதலில் பேட்டி காண்போம். பின்னர் யாரை அழைப்பது என முடிவு செய்வோம்,” என சங்கரா தெரிவித்தார்.
பிரதிவாதித் தரப்பு நிபுணர்களான- டாக்டர் டேவிட் வெல்ஸ், டாக்டர் பிரியான் மெக்டொனால்ட், இந்தியத் தடயவியல் நிபுணர் ஒருவர் ஆகியோரும் சாட்சியமளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு தரப்பு 73 சாட்சிகளைக் கொண்ட பட்டியலைத் தயாரித்திருந்தது. அதில் அரசு தரப்பு வாதத்தின் போது 26 பேர் சாட்சியமளித்தனர். அவர்களில் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானும் ஒருவர் ஆவார்.

அன்வாருக்கு எதிராக போதுமான ஆதாரங்களை அரசு தரப்புக் காட்டியிருப்பதால் அன்வார் எதிர்வாதம் செய்ய வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜபிடின் முகமட் டியா இன்று ஆணையிட்டார்.

விசாரணை மீண்டும் ஜுன் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். 

Sunday, May 15, 2011

கிறிஸ்துவச் சதி: சிறப்புப் போலீஸ் பிரிவு தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது


கிறிஸ்துவச் சதி எனக் கூறப்படுவது மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ‘ஒரளவு அடிப்படை’ இருப்பதாக உள்துறை அமைச்சு நேற்று அறிவித்த பின்னர் அந்தச் சதி குறித்து போலீஸில் புகார் செய்த டிஎபி உறுப்பினர் அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தப்பட்டிருக்கலாம் என டிஎபி ஜெலுத்தோங் எம்பி ஜெப் ஊய் சந்தேகம் கொண்டுள்ளார்.


டிஎபி புக்கிட் துமா கிளையின் குழு உறுப்பினரான முகமட் ரசாலி அப்துல் ரஹ்மான் என்ற அந்த உறுப்பினர், ஜெலுத்தோங் வட்டாரத்தில் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சிறப்புப் போலீஸ் பிரிவு அதிகாரியான அவரது உறவினரால் வற்புறுத்தப்பட்டு போலீசில் புகார் செய்திருக்கலாம் என கோலாலம்பூரில் ஜெப் ஊய்
நிருபர்களிடம் கூறினார்.


“அந்த அதிகாரியும் முகமட் ரசாலியும் உறவினர்கள் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்துசான் மலேசியா அந்தச் செய்தியைப் பெறுவதற்கு உதவியவர் அந்த அதிகாரி ஆவார். போலீசார் அந்தக் கோணத்தில் விஷயத்தைப் புலனாய்வு செய்து நியாயமான முடிவுக்கு வருவர் என நான் நம்புகிறேன்.”

“உத்துசான் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து நாங்கள் போலீஸில் புகார் செய்த ஐந்து நாட்களுக்குப் பின்னர் முகமட் ரசாலி போலீஸில் புகார் செய்ததின் நோக்கம் என்னவென்றோ அல்லது எண்ணம் என்னவென்றோ எங்களுக்குத் தெரியாது”, என்றார் அவர்.

மே 8ம் தேதி ஊய் போலீஸில் புகார் செய்யச் சென்ற போது அவருடன் முகமட் ரசாலியும் உடன் சென்றிருந்தார். ஊய், அதற்கு ஆதாரமாக போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒன்றாகக் காணப்படும் பத்திரிக்கை புகைப்படம் ஒன்றையும் காட்டினார்.


உத்துசான் குற்றச்சாட்டுக்களை மறுத்துப் போலீஸில் புகார் செய்யுமாறு தமக்கு யோசனை தெரிவித்தது முகமட் ரசாலி என்றும் அந்த ஜெலுத்தோங் எம்பி கூறிக் கொண்டார்.

அந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குப் புகார் கிடைத்திருப்பதைப் போலீசார் நேற்று உறுதி செய்தனர். அந்த நிகழ்வுகள் பற்றி ‘மாறுபட்ட’ தகவல்கள் அந்தப் புகாரில் அடங்கியிருப்பதாக போலீசார் கூறினர்.

ஆனால் முகமட் ரசாலியும் அதிகாரிகளும் புகார் பற்றிய விவரங்களைத் தர மறுத்து விட்டனர்.

Saturday, May 14, 2011

சிறுமி அனுஷா சித்ரவதை: குற்றவாளியைச் சட்டம் தண்டித்தாக வேண்டும் – சார்ல்ஸ் சந்தியாகோ


அண்மையில் பாதுகாவலரால் சித்ரவதை செய்யப் பட்ட 13 வயது சிறுமி அனுஷாவின் பாட்டியான லீலாவதி காளிமுத்து நேற்று மாலை (வியாழக்கிழமை) தமது அலுவலகத்தில் கண்ணீர் கம்பலையுமாய் தனது பேத்தியின் நிலையைப் பற்றிய மனவேதனையைக் கொட்டித் தீர்த்தார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

சிறுமி அனுஷாவின் பெற்றோர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரது நான்காவது வயதிலேயே பிரிந்து
விட்டதாகவும், அதற்குப் பிறகு பன்னிரண்டு வயது வரை தனது பாதுகாப்பில்தான் அனுஷா இருந்ததாகவும் பாட்டி லீலாவதி கூறினார்.


இவ்வாறு விளக்கமளிக்கையில், தனது மகனும் அனுஷாவின் தந்தையுமான சேகரன் கேட்டுகொண்டதுக்கிணங்க, அனுஷாவை அவரிடம் அனுப்பி விட்டதாகவும் கூறிய லீலாவதி, அனுப்பி நான்கு மாதம் கூட ஆகவில்லை, ஆனால் இப்படி கொடூரமாக சித்ரவதை செய்யப் பட்டிருப்பதை சொல்லி மலை மலையாய் கண்ணீர் துளியைச் சிந்தினார்.

பிள்ளைகள் எவ்வளவுதான் தவறுகள் செய்திருந்தாலும் அவர்களை கடுமையான முறையில் அடிப்பதோ அல்லது புண்படுத்தும் அதிகாரமோ பெற்றோர்களுக்கு இல்லை என கூறிய சார்ல்ஸ், உண்மையில் சொல்லப் போனால் அவர்களது மீது எந்த ஒரு புண்ணும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவதும் பிள்ளைகளைச் சுகாதாரமாக வளர்ப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் கொடுமை படுத்துபவர் யாராகினும் எந்த ஒரு பாரபட்சமுமின்றி தண்டனை பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்திய சார்ல்ஸ், அனுஷாவுக்கு தற்போது பாதுகாப்பும் அரவணைப்பும் மிக முக்கியம் என ஆலோசனைக் கூறினார்.

அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தம்மால் முடிந்த வரையில் சட்டபூர்வமாக உதவிகள் வழங்கத் தயார் எனவும் சார்ல்ஸ் கூறினார்.

உத்துசான் விவகாரம்: இரு அமைச்சர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம், எம்.குலசேகரன் திட்டமிடுகிறார்


பினாங்கு மாநிலத்தில் டிஎபியும்  கிறிஸ்துவ ஆயர்களும் ஒன்றிணைந்து கிறிஸ்துவ சமயத்தை அதிகாரப்பூர்வமான சமயமாக்க சதி செய்தனர் என்ற சர்ச்சையான செய்தியை உத்துசான் மலேசியா வெளியிட்டது.

ஆனால் கடந்த சனிக்கிழமை உத்துசான் வெளியிட்ட அந்தச் செய்தியை தாங்கள் நம்பவில்லை என்று பினாங்கு மாநிலத்தை சேர்ந்த இரண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களான ஹில்மி யாயா (தெலுக் பஹாங்) மற்றும் முகம்மட் பாரித் சாட் (புலவு பெத்தோங்) தெரிவித்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“இவ்விருவர்களின் நிலைப்பாடு தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சிரியத்தை தந்துள்ளது. காரணம், உத்துசான் நாளிதழ் வெளியிடும் செய்தியை அம்னோவை சேர்ந்த இவர்கள் நம்பவில்லை. மேலும் அவர்கள் அவ்வாறு சொல்வதற்கான இரண்டு முக்கிய காரணத்தையும் தந்துள்ளனர்:


முதலாவதாக, அம்னோ உயர்மட்ட தலைவர்கள் அச்செய்தியை படித்தவுடன் உடனடியாக அக்கூற்றை மறுக்கவில்லை.

இரண்டாவதாக, ஒரு சில தேசிய முன்னணியின் தலைவர்கள் அச்செய்தியின் உண்மையை ஆராயாமாலும், அதன் உண்மையை உறுதி செய்யாமலும் அதனை உண்மையென  நம்பியதுதான்.”

உத்துசானின் அந்த செய்தியை படித்தவுடன், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினும் தகவல் தொடர்பு மற்றும் கலை கலாச்சார அமைச்சர் ரைஸ் யாத்திமும் அந்தத் தகவலை முழுமையாக ஏற்றுக்கொண்டு உத்துசானிடம் விளக்கம் கோராமல், நாட்டில் இஸ்லாம் மதத்தின் அதிகாரப்பூர்வ நிலை பற்றி கேள்வி எழுப்பக்கூடாது என்று மலேசியர்களுக்கு ஒட்டுமொத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இரு தேசிய முன்னணியின் முழு அமைச்சர்கள் இந்தச் செய்தியை வைத்துப் புதிய வடிவத்தில் அரசியல் நாடகத்தை உருவாகக் முனைந்தது பலரின் மனதைப் புண்படுத்தியுள்ளது என்றார் குலசேகரன்.

மேலும், அச்செய்தியை வெளியிட்ட நிறுவனத்தையோ அல்லது அச்செய்தியை எழுதியவரையோ முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று இவர்கள் இருவரும் கூறாமல் மௌனம் சாதிப்பது, தேசிய முன்னணியின் இன அரசியலின் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
 
அரசியல் நெறிமுறைகளை நன்கு அறிந்த அந்த இரு அமைச்சர்களும், உத்துசானின்  அடிப்படையற்ற செய்திகள் நாட்டு மக்களுக்கிடையே ஆத்திரத்தையும் இன ஒற்றுமைக்கு அச்சுறுத்தலையும் உருவாக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.
 
ஆகவே, ஜசெகவின் தேசிய பொதுச் செயலாளரான லிம் குவான் எங் கூறியதுபோல் அச்செய்தி ஆபாத்தான பொய் கலந்தவை என்பதனை ஏற்றுகொள்வதை விட எதிர்த்து கேள்விகளை எழுப்ப அவ்விரு அமைச்சர்களுக்கும் வேறு வழி இல்லை என்றாரவர்.

“மேலும், என்னைப் பொறுத்தமட்டில் நாட்டில் அறிவுடமை கொண்ட, நேர்மையான அரசியல் தலைவர்கள், 
உத்துசானின் அந்தத் தகவல் முற்றாக உண்மைக்கு புறம்பானது என்று கூறுவார்கள் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.
 
“இருப்பினும், தவறான தகவல் வெளியிட்ட அந்த செய்தி நிறுவனத்தைச் சாடாமல், நாட்டு மக்களுக்கு அறிவுரை என்ற பெயரில் எச்சரிக்கை விடுத்ததற்காக ஹிஷாமுடினும் ரயிஸ் யாத்திமும் பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.


“அவர்கள் அவ்வாறு செய்ய தவறினால், நாடாளுமன்றத்தின் அடுத்த வரவு-செலவு  கூட்டத்தில் அவர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்பது உறுதி”, என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கூறினார்.

டிஎபி அடுத்த தேர்தலில் மலாய் பகுதிகளிலும் களம் இறங்கும்


அண்மைய சரவாக் தேர்தலில் அடைந்துள்ள வெற்றிகளைக் கருத்தில் கொண்டு டிஎபி சீனர் அல்லாத தொகுதிகளிலும் தடம் பதிக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.

சரவாக்கை அடுத்து சீனர்களை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கட்சி மலாய் பெரும்பான்மையைக் கொண்ட கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் போட்டியிடுவதற்கு குறைந்தது இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியிலாவது போட்டியிட அது எண்ணுகிறது.

“நாங்கள் திரங்கானுவில் பண்டார் தொகுதியில் போட்டியிட எண்ணியுள்ளோம். கிளந்தானைப் பொறுத்த வரையில் நாங்கள் இன்னும் தொகுதியைத் தேடி வருகிறோம்,” என டிஎபி துணை தேசிய அமைப்புச் செயலாளர் வின்சென்ட் வூ கூறினார்.

“எதிர்கால பக்காத்தான் கூட்டங்களில் டிஎபி அந்த விஷயத்தை எழுப்பும்”, என்றார் அவர்.

வூ, கிளந்தான், திரங்கானு மேம்பாட்டு விவகாரங்களுக்கான இயக்குநரும் ஆவார். அவ்விரு மாநிலங்களிலும் உள்ள அடி நிலை கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையும் அதுவே என அவர் சொன்னார்.

“டிஎபி 1980ளில் கிளந்தானிலும் திரங்கானுவிலும் போட்டியிட்டது. நடப்பு அரசியல் சூழ்நிலைகளுக்கு இணங்க அந்த மாநிலங்களில் அது மீண்டும் போட்டியிடுவதற்கான தருணம் வந்து விட்டது”, என குவா மூசாங் டிஎபி கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் வூ கூறினார்.

கடைசியாக அது கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பாடாங் காரோங் சட்டமன்றத் தொகுதியில் 1990 தேர்தலில் டிஎபி வேட்பாளரை நிறுத்தியது.

டிஎபி சீனர் ஆதிக்கம் பெற்ற கட்சி என அம்னோ கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் தாழ்வாகக் கூறி வருகின்றன என வூ தெரிவித்தார்.

ஆகவே டிஎபி பல இனக் கட்சி என்பதைக் காட்டுவதற்கு சீனர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து பொருத்தமான தொகுதிகளையும் அடையாளம் காண முயலுவோம்,” என்றார் அவர்.

அண்மைய சரவாக் தேர்தலில் கிட்டத்தட்ட சீனர் பெரும்பான்மை இடங்கள் அனைத்தையும் அந்தக் கட்சி வென்றதைத் தொடர்ந்து அது சீனர் ஆதிக்கக் கட்சி என பட்டியிலப்பட்டது. அதனைப் போக்குவதற்காக அது தற்போது சீனர் அல்லாத பகுதிகளில் ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நாட்டில் சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பெரும்பாலான தொகுதிகளை அந்தக் கட்சி வென்றுள்ளது. அது அடுத்த தேர்தலில் சீனர் அல்லாத தொகுதிகளிலும் ஊடுருவாவிட்டால் தேக்க நிலையை அடைந்து விடும்.

ஆனால் அதன் விரிவாக்கம் பிகேஆருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் அது சீன வாக்காளர்களைக் கணிசமாகக் கொண்ட தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.

Monday, May 2, 2011

சம வாய்ப்பு நிலையாக மாறவேண்டும் – தொழிலாளர் நாள் வாழ்த்து

உழைப்பாளர் வர்க்கம் அனைவரும் மே முதல் நாளான இந்த தொழிலாளர் நாளை உரிமையுடனும் உணர்வுடனும் கொண்டாட வேண்டுவதோடு இந்நன்னாளில் மலேசியா வாழ் தொழிலாளர் சமுதாயத்திற்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தனது தொழிலாளர் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குலசேகரன் வெளியிட்டுள்ள தொழிலாளர் வாழ்த்து செய்தியில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

உண்ண உணவு, உடுக்க உடை, வாழ வீடு இவற்றோடு உலக வாழ்க்கைக்குத் தேவைப்படும் வசதிகள் அனைத்தையும் ஓயாத உழைப்பால் நமக்கு உருவாக்கித்தரும் தொழிலாளர் சமுதாயத்தை நினைத்து வணங்கிப் போற்றும் உன்னதமான நன்னாள் இம் ‘மே நாள்’.
உழைக்கும் தொழிலாளர் சமூகத்தின் உரிமையை உலகுக்கு உணர்த்திடும் மே முதல் நாள், உலக நாடுகளில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. நேர்மையான தொழிலாளர் கொள்கையை மதித்து , அதன் வழி நின்று அனைத்து தொழிலாளர் நலன்களைக் காக்கும் உணர்வோடு இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும்.
மலேசிய நாட்டில், பல்லின மக்கள் ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட பல்வேறு தொழிலாளர் நல திட்டங்களை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட குறைந்தபட்ச வருமான தொகையை முதலில் அரசாங்கம் வழங்க சட்ட திருத்தங்களை நிறைவேற்றி அமுல்படுத்த வேண்டும்.

ஏழை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அடிப்படை வசதியினை அதிகப்பட்சமாக செய்து தர வேண்டும்.

தோட்ட மக்களும் அனைத்து சலுகைகளும் பெற்று வாழ்கையில் உயர அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கம், அரசாங்கத்தின் ஊக்கத்தொகை ஆகியவை தடையின்றிக் கிடைத்திடவும் ஆவணம் செய்யவேண்டும். மேலும் பணியிடங்களில் பாலியல் வன்முறை கலாச்சாரத்தை அடியோடு களைந்து பெண்வர்கத்தின் கௌரவத்தை நிலைநாட்ட அனைவரும் பாடுபட வேண்டும்.

இப்படி எண்ணற்ற சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மலேசியாவில் வாழும் அனைத்து தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெரும் வண்ணமாக தொடர்ந்து பாடுபட்டு வரும் தொழிலாளர்களின் தோழன் ஜ.செ.க-வின் சார்பில், அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது இனிய இதயம் கனிந்த மே தின நல்வாத்துக்களை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன் என குலசேகரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நஜிப் மக்கள் கூட்டணியைப் பிளவுபடுத்த சதி செய்கிறார்”, குலசேகரன்

2 May | செய்தி. 
 
ஒரே மலேசியா கொள்கையின் நாயகனான பிரதமர் நஜிப் துன் ரசாக், தனது அரசியல் பலவீனத்தை ஒத்துக்கொள்ளும் வகையில் பாஸ் கட்சிக்கு அம்னோவில் இணைய அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிவிட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலேசகரன் மே 1 ஆம் தேதி விடுத்துள்ள அறிக்கையில் கூறினார்.

மக்கள் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் சதி நாச வேலை தொடங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தச் சதியால் அம்னோ அரசியல் அனாதையாகும் சாத்தியமும் தொலைவில் இல்லை.

மக்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூன்று கட்சிகளுக்கிடையே ஆரோக்கியமான கூட்டணி உள்ளது. ஆனால் மக்கள் கூட்டணியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அம்னோ திரைமறைவில் பலவித சூழ்ச்சி வலைகளை விரித்தது உண்மை. அதன் பின் பல அரசியல் சதித்திட்டங்களைத் தீட்டி மக்கள் கூட்டணியிடம் தோல்வி கண்டது. அம்னோவின் ஒவ்வொரு முயற்சிகளும் எந்த வகையிலும் அதற்குப் பயனைத் தரவில்லை.

சரவாக் மாநில பொதுத்தேர்தலில் ஜசெக அபாரமான வெற்றியைக் கண்டது. நஜிப்பின் வருகை எந்தவிதமான பாதிப்பையும் மக்கள் கூட்டணிக்கு ஏற்படுத்தவில்லை. சரவாக்கில் ஜசெகவின் வெற்றி பல இன மக்களின் ஆதரவு மூலம் கிடைக்கப் பெற்றதாகும். அந்த வெற்றி ஜசெகவின் வெற்றி மட்டுமல்லாமல் அது மக்கள் கூட்டணியின் அமோக வெற்றியாக பிரதிபளித்தது.

அதே வேளையில், தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளுக்குள்ளே புதிய கோணத்தில் உட்கட்சி பூசல் தலைதூக்கியுள்ளது. சீனர்களின் ஆதரவு சக்கரம் இன்று தேசிய முன்னணியில் இறுக்கமற்ற நிலையில் உள்ளது. மசீச தலைவர் டத்தோ சுவா சொய் லேக்கின் ஒவ்வொரு கூற்றும் தேசிய முன்னணியை பலவினப்படுதுகிறது. இன்று மசீச மலாய் சிறப்புரிமைகளை எதிர்த்து குரல் கொடுப்பதே அதற்குச் சான்று.

தேசிய முன்னணியின் இன்னொரு மூத்த பங்காளி கட்சியாக விளங்கும் மஇக இப்பொழுது அதன் தலைமைத்துவ மறுவடிவ திட்டத்தின் அகோரமான தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தேசிய முன்னணிக்கு இனிமேலும் இந்தியர்களின் ஆதரவு கிடையாது என்பது உறுதியாக இருக்கும் வேளையில், அம்னோ இனிமேலும் மஇகவை நம்பி அரசியல் நடத்தினால் அது அவர்களுக்கு பாதிப்பை உருவாக்கும் என்பதை அது அறிந்துள்ளது.

ஆகவே, இனிமேலும் பங்காளி கட்சிகள் ஒன்றும் சாதிக்க முடியாது என்பது அம்னோவிற்கு நன்கு தெளிவாகிவிட்டது. ஆகவே, இனியும் மசீசவையோ மஇகாவையோ சார்ந்து அரசியல் நடத்துவது ஆபத்தாகும் என்பதால், இனவாத கொள்கையைக் காட்டி நஜிப் பாஸ் கட்சியை மக்கள் கூட்டணியில் இருந்து பிரிக்க சதித்திட்டம் வரைந்துள்ளார்.

ஒரே மலேசியா கொள்கையை நிறுவியவரான நஜிப், இன்று தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட இனவாத கொள்கையைக் கொண்டு பாஸ் கட்சியை அழைப்பது அரசியல் அறமா?
இன்று, இனம், சமுதாயம், நாடு ஆகியவற்றுக்காக போராட பாஸ் தேசிய முன்னணியில் இணைய வேண்டும் என்றும்

சொல்லும் நஜிப், தற்பொழுது உள்ள அவரின் பங்காளி கட்சிகளின் மேல் நம்பிக்கை இழந்துவிட்டார் என்பதைக் கூறாமல் கூறிவிட்டார்.

மேலும், நஜிப் சொல்வதைப் போல ஜசெக எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஸ் கட்சியை அரசியல் கூட்டணியின்  கருவியாக நினைத்ததே கிடையாது.
நஜிப்பின் இன்றையச் செயல் அம்னோதான் பாஸ் கட்சியை தனது அரசியல் கருவியாக பயன்படுத்த இறங்கியுள்ளது.
இது போன்ற கொள்கையற்ற இனவாத செயல் திட்டத்திற்கு தலைவணங்காத பாஸ் தலைமைத்துவத்தின் திடமான கொள்கைக்கு ஜசெக என்றைக்கும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் என்பது உறுதி என்றார் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெகவின் உதவித் தலைவருமான எம். குலசேகரன்.