Monday, August 30, 2010

ஜ.செ.க சுகுமரானை எதற்காக போலீஸ் கைதுசெய்தது?

கடந்த 22ம் திகதி சித்தியவான் போலீஸ் நிலையம் முன் கைது செய்யப்பட்ட ஜ.செ.க சுகுமாரனின் ஜாமீன் இன்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டது. தன்னை எந்த சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்ட விவரங்கள் குறிப்பிடாத ஜாமீன் கட்டளை ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வி இன்று உருவாகிஉள்ளது. இதற்க்கான விளக்கத்தை ஸ்ரீ மன்ஜோங் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி விளக்கமளிக்க வேண்டும் என்று பெ.சுகுமாரன் கேட்டுக்கொண்டார்.

மேலும் தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகளை தாம் அடையாளம் காட்டிய பிறகும் அவ்விருவரும் மேலும் பணியில் ஈடுபடுவது குறித்து பெ.சுகுமாரன் வருத்தம் தெரிவித்தார். போலீஸ் தனது அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமல் இரட்டை வேடம் போடுவது தமக்கு வேதனை அளிக்கிறது என்றார். தவறு செய்தவர்கள் யாராகினும் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவர்களை காப்பாற்றுவது சட்டத்திற்கு எதிரான செயலாக விளங்குகிறது.

இவ்விவகாரம் குறித்து மாநில போலீஸ் படைத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அது மட்டுமில்லாமல் அந்த இரு போலீஸ் அதிகாரிகளும் வழக்கு முடியும் வரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனை குறித்து பேசிய மு.குலசேகரன்,போலீஸ் படை என்றைக்கும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய பாடுபடவேண்டுமே ஒழிய மக்களுக்கு பாதிப்பு விளைவிக்கும் அளவிற்கு செயல்பட கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

"அந்த இரண்டு அதிகாரிகளின் மேல் போலீஸ் படையும் அரசாங்கமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடக்க ஏதுவாக, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் வரை அந்த இரண்டு அதிகாரிகளும் தற்காலிக பனி நீக்கம் செய்வதற்கு போலீஸ் தனது தனிப்பட்ட முடிவை செயல்படுத்துவது முறையாக இருக்கும்." என்றார் மு.குலசேகரன்.

இப்பிரச்சனை குறித்து கூடிய விரைவில் மனித உரிமை மீறலுக்கு தாம் மகஜர் ஒன்றினை வழங்கவிருப்பதாக மேலும் கூறினார்.

Friday, August 27, 2010

25/08/10 - மன்ஜோங் நில அலுவலக வளாகத்தின் சூழ்நிலை

தூரத்திலிருந்து பார்க்கும் போது அமைதியான சூழ்நிலையில் மன்ஜோங் நில அலுவலகம். நில அலுவலக தூண்களில் ஒட்டப்பட்ட டிண்டிங்ஸ் நிலம் குறித்த கூட்ட அறிக்கை.

                                    
எதற்கும் தயாரான நிலையில் உள்ள போலீஸ் வண்டிகள். இங்கு மட்டுமல்லாமல் மேலும் பல இடங்களில் தயார் நிலையில் பல போலீஸ் வாகனங்கள் நிறுந்தப்பட்டன. 



சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்


சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்

 சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்



சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்


மன்ஜோங் மாவட்ட போலீஸ் உளவுத்துறை தலைமை அதிகாரி மணிவண்ணன்.


வேலைவெட்டி இல்லாமல் மக்கள் பணத்தில் வாங்கிய புகைப்பட கருவியை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் போலீஸ் அதிகாரி.


 திரு கோ.முனியாண்டி - தமிழ் நேசன் நிருபர்.


 திரு.சண்முகம் வந்திருக்கும் மக்களிடம் நிலவரத்தை விளக்குகிறார்.


 மண்ணின் மைந்தன் மு.குலசேகரன் மற்றும் போராட்டத்தில் இரத்தம் சிந்திய பெ.சுகுமாரன் நில அலுவகத்தில் வந்தடையும் காட்சி.

அஞ்சா நெஞ்சேன் மு.குலசேகரன் போலீஸ் உளவுத்துறை அதிகாரிகளிடம் உரையாடுகிறார்.

மன்ஜோங் நில அலுவலக ஆணையாளரை சந்திக்க செல்லும் காட்சி.
மு.குலசேகரன் அருகில் பெ.சுகுமாரன், தே.தனபாலன், திரு.குமார், திரு.ஜெகா மற்றும் பலர்.

ந்மன்ஜோங் மாவட்ட நில அலுவலக ஆட்சியாளரை சந்தித்து விளக்கம் கேட்கும் மு.குலசேகரன் மற்றும் பலர்.

மாவட்ட ஆட்சியாளரை சந்தித்த பிறகு பத்திரிக்கை பேட்டி வழங்கும் மு.குலசேகரன், திரு,சண்முகம், பெ.சுகுமாரன்.

எதிர்ப்பு மகஜர்

பல போலீஸ் உளவுத்துறை அதிகாரிகள் தம்மை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்தாலும் சற்றும் அசராத பெ.சுகுமாரன். போராட்டத்தின் மாவீரன் என்று மு.குலசேகரன் புகழாரம்.

பல இன மக்கள் இந்த எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பெ.சுகுமரானுடன் புகைப்படம் எடுத்த பொழுது.....



எது எப்படி இருந்தாலும் சித்தியவான் இந்தியர்களின் ஒன்றுமை இந்நிலப் பிரச்சனையில்  நன்கு அறிய முடிந்தது. டிண்டிங்ஸ் இந்திய சங்க நிலம் என்றைக்கும் இந்தியர்களின் சொத்தாகவே திகழும் என்று தைரியாமாக சொல்லலாம்.
இனி எந்த கொம்பனும் இந்நிலத்தை தொட முடியாது.

Thursday, August 26, 2010

பேராக் மாநில மந்திரி புசாருக்கு சித்தியவான் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க தைரியமில்லை - மு.குலசேகரன்



இந்நிலப்பிரச்சனை குறித்து பொது மக்கள் மத்தியில் பொது விவாதம் நடத்த ம.இ.க அல்லது தேசிய முன்னணி இந்திய தலைவர்கள் தயாரா?

நில அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பெ.சுகுமாரன் வழங்கிய பேட்டி


தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகளை பற்றிய விவரத்தை குறித்து பேசிய பெ.சுகுமாரன், போலீஸ் தனது கடமையை செய்ய ஒரு பொழுதும் தான் தடையா இருந்ததே கிடையாது, ஆனால் தன்னை தாக்குவதற்கு போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன உரிமையுள்ளது  என்று வினவினார். பல போலீஸ் அதிகாரிகள் அந்த பேட்டியை  பதிவு செய்து கொண்டிருந்த போதிலும், சற்றும் அசராத இந்த தமிழன், மாநில போலீஸ் படைத் தலைவர் இவ்விவரம் குறித்து உண்மையான விவரங்களை கண்டறிந்து பேசும் படி  ஆலோசனை  கொடுத்தார். 

நில அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பேசிய மு.குலசேகரன்.

 

மன்ஜோங் மாவட்ட ஆட்சியாளருடன் சந்திப்பு.

                            


நில அலுவலகத்தில் எதிர்ப்பு மனுவின் பதிலை பெற மு.குலசேகரன் தலைமையில் 25/08/10 ம் திகதி காலை மணி 08.30 க்கு சுமார் 20 இந்தியர்கள் அடங்கிய குழு ஒன்று மாவட்ட நில அலுவலக ஆட்சியாளரை சந்தித்து பேசியது.அதில் நில அலுவலக ஆட்சியாளர் இந்நிலப் பிரச்சனை  குறித்து முழுமையான விவரங்களை பெறாமல் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தார்.

இப்பிரச்சனை குறித்து பொது  மக்களிடம் மாநில மந்திரி புசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை மு.குலசேகரன் அறிவித்தார். அதற்க்கு அந்த மாவட்ட ஆட்சியாளர் எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் தத்தளித்துபோனார்.

போலீசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - மு.குலசேகரன் அறிவிப்பு


போராட்டத்தில் இரத்தம் சிந்திய தமிழன் பெ.சுகுமாரன்

பெ. சுகுமாரன் கைது செய்த பிறகு சித்தியவான் போலீஸ் நிலையத்தில் தாக்கப்பட்டார்.  

இனத்துவேசமாக பேசி இந்தியர்களை சீண்டிய மாவட்ட போலீஸ் படைத் தலைவர்.


மக்கள் ஓசை செய்தி

Wednesday, August 25, 2010

போலீஸ் புகார் செய்ய சென்ற பேரணியில் மு.குலசேகரன் மற்றும் அவரின் செயலாளர் பெ.சுகுமாரன் கைது. யாருடைய ஆணை?


பெ.சுகுமாரன் தலைமையில் பேரணி தொடக்கம்.


போலிசாரின் கைது சேட்டை


போலிசாரின் சேட்டை தொடர்கிறது...


வ.சிவகுமார் போலீசின் நடவடிக்கை குறித்து விவரிக்கிறார்...


போலீசாரால் தாக்கப்பட்ட பெ.சுகுமாரன், போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.

டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்தின் சரித்திர பூர்வ அம்சங்கள் கொண்ட இந்திய கட்டிடத்தின் நிலை... அகிம்சைவாதியான காந்தியின் நிலை...



எங்களது முதாதயர்களுடைய சொத்தை இறுதிவரை காப்பாற்றுவோம்- மு.குலசேகரன்


போராட்டம் உதயமாகும்.

டிண்டிங்ஸ் நில விவகராம் குறித்த சரித்திரம்.


அன்று முதல் இன்று வரை

Saturday, August 21, 2010

மலேசியாஇன்று செய்தி - டிண்டிங்ஸ் நிலத்தை”குட்டி இந்தியா” என்று அறிவித்திடுக


டிண்டிங்ஸ் இந்திய பாரம்பரிய நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கும் குழு, சித்தியானில் நல்ல விலைபோகும் பகுதியில் 2.2 ஹெக்டாரில் அமைந்துள்ள அந்நிலத்தை பேராக் அரசு “குட்டி இந்தியா”என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது.

உத்தேச குட்டி இந்தியா,எதிர்காலத்தில் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் என்று அது எதிர்பார்க்கிறது.

அக்கனவு நனவாக அரசாங்கம் நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் அக்குழு விரும்புகிறது. நேற்று அக்குழு மஞ்சோங் நில அலுவலகத்திடம் ஒப்படைத்த மகஜரில் இப்பரிந்துரைகள் அடங்கியுள்ளன.

பாரம்பரியமாக இந்தியர்களுக்குச் சொந்தமான அந்நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் முயற்சியின் தொடர்பில் அங்கு வாழும் இந்தியர்களின் நிலைப்பாடும் மன உணர்வுகளும் கோரிக்கைகளும் அம்மகஜரில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

மகஜரை மாவட்ட நில அதிகாரி அஹமட் ஷாபியிடம் அல்லது அவரின் உதவியாளரிடம் ஒப்படைக்க 30-பேரடங்கிய குழு ஒரு மணி நேரமாகக் காத்திருந்தததாகவும் ஆனால் அவர்கள் வரவில்லை என்றும் டிஏபி தேசிய உதவித் தலைவரும் மாநில துணைத் தலைவருமான எம்.குலசேகரன் கூறினார்.

இறுதியில் அதனைப் பெற்றுக்கொண்ட நில அலுவலகப் பணியாளர் ஒருவர், மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர் தள்ளுபடி செய்தாலொழிய இந்தியர் பாரம்பரிய நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடரும் என்று அக்குழுவினரிடம் தெரிவித்தார். அக்குழுவில் டிஏபி மாநிலத் தலைவர் இங்கே கூ ஹாமும் இடம்பெற்றிருந்தார்.

இந்திய விவகார ஆலோசகர் என்ன செய்கிறார்?

இந்த நிலத்தில் எஸ்ஆர்கே சிம்பாங்க் எம்பாட் தொடக்கப்பள்ளி கட்டும் விசயத்தில் மாநில அரசுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் முறையான தொடர்பு இல்லாமல் இருப்பது குறித்து குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

“இந்த நிலத்தின் பாரம்பரிய மதிப்பு குறித்து பேராக் மாநில பாரிசான் இந்திய விவகார ஆலோசகர் ஏன் ஸாம்ப்ரியிடம் தெரிவிக்கவில்லை? அல்லது, இது நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான மாநில அரசின் முடிவுடன் வீரசிங்கம் ஒத்துப்போன விசயமா?, என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் வினவினார்.

அது 1930 களில், சித்தியானைச் சுற்றியிருந்த 35 தோட்டங்களில் வாழ்ந்த பால்மரம் வெட்டும் இந்திய தொழிலாளர்களிடம் திரட்டப்பட்ட நன்கொடையைக் கொண்டு வாங்கப்பட்ட நிலமாகும்.

19/08/2010 மன்ஜோங் நில அலுவலகத்தில் மகஜர் சமர்பிப்பு.

படத்தொகுப்பு


டிண்டிங்ஸ் நில விவகாரம் தொடர்பில்,மத்திய அராசாங்கத்தின் விருப்பத்தை எதிர்த்து மு.குலசேகரன் தலைமையில் மன்ஜோங் நில அலுவகத்தில் எதிர்ப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை பெற்றுக்கொள்ள மாவட்ட நில அலுவலக நிர்வாக அதிகாரி அங்கு இல்லாத பட்சத்தில் அதனை பெற்றுக்கொள்ள எந்த ஒரு தரப்பிரனும் முன்னவரவில்லை. ஆயினும் அதனை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத பிரச்சனை ஒன்று புதிதாக உருவாகும் அச்சத்தில் நில அலுவலக பணியாளர் ஒருவர் அதனை 45 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்றுக்கொண்டார்.


இந்த மகஜர் சமர்பிக்கும் நிகழ்வில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சித்தியவான் வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர். உடன் பேராக் மாநில ஜ.செ.க தலைவர் டத்தோ ங்கே கூ ஹம், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன், ஜ.செ.க காமாச்சி துரைராஜூ, ஈப்போ பாராட் கிளைத்தலைவர் சேகரன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பெ. சுகுமாரன், டிண்டிங்ஸ் செயலவை உறுப்பினர்கள் சண்முகம், மு.சேதுபதி, ஜெகநாதன் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.

Wednesday, August 18, 2010

இந்தியர்களின் ஒற்றுமைக்கும் உறுதியான நிலைபாட்டிற்கும் கிடைத்த அபார வெற்றி.

சித்தியவான் டிண்டிங்ஸ் இந்திய சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பள்ளி மேம்பாட்டிற்கு கையகப்படுத்தும் விருப்பத்தில் மாநில அரசாங்கம் பின்வாங்கிக்கொள்ளும் முடிவினை நேற்று பேராக் மாநில மந்திரி புசார் டத்தோ ஜம்ரி காதீர் அறிவித்தார். அதனை தொடர்ந்து பேராக் மாநில ம.இ.க-வின் தலைவர் டத்தோ வீரசிங்கம் அவர்கள் மன்ஜோங் மாவட்ட நில அலுவலகத்தை சந்தித்து மாநில அரசாங்கத்தின் இறுதி முடிவை தெரிவித்து அத்திட்டத்தை ரத்து செய்வது மட்டுமல்லாமல் 2.2 ஹெக்டர் நிலத்தின் மேல் போடப்பட்ட கல்வி அமைச்சின் சிம்பாங் அம்பாட் ஆரம்பப் பள்ளியின் மேம்பாட்டு திட்ட தடையுத்தரவையும் மீட்டுக்கொள்வார் என்று அறிவித்தார்.

பேராக் மாநிலத்தின் இந்த முடிவு இந்தியர்களின் ஒற்றுமைக்கும் மக்களின் உறுதியான நிலைபாட்டிற்கும் கிடைந்த ஒரு மிகப்பெரிய வெற்றியாக திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் இது ஒரு முன்னோடியாகவும் அமைகிறது என்பதனை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நிலத்தை கையகப்படுத்தும் அந்த யோசனை உணர்வற்றது, நியாயமற்றது, அவசியமற்றது என்பதோடு அநீதியும் கூட எனக் பொது மக்களுடன் சந்திப்பில் நான் கூறியதுண்டு. இவ்விவகாரம் தொடர்பில் முக்கியமான மூடரு விசயங்களை நான் இங்க குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

ஒன்று, சுமார் என்பது வருடங்களுக்கு முன்பு வாங்கிய இந்த நிலம், வரலாற்று மற்றும் இந்தியர்களின் உணர்சிப்பூர்வமான மாண்புகளை கொண்டுள்ள காரணம் இந்நிலம் 1930களில் சித்தியவானைச் சுற்றியிருந்த 35 தோட்டங்களின் ரப்பர் மரவெட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பில் அந்த நிலம் வாங்கப்பட்டது என்பதாகும்.

இராண்டவதாக, இந்நிலதிளிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட சுங்கை வாங்கி செம்பனை தோட்டம் உள்ளது. இத்தோட்டம் அரசாங்கம் தொடர்பு நிறுவனங்களின் ஒன்றனான சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான நிலமாகும். 15ந்து வருடங்களுக்கு முன்பு 150 ஏக்கர் நிலத்தை தற்காப்பு அமைச்சு விமான நிலையம் கண்டுவதற்க்கு அந்த தோட்டத்திலிருந்து முறைப்படி வாங்கியது. அச்சூநிலையில் 15ந்து வருடத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு நிலம் வாங்க முன்வந்த மத்திய அரசாங்கம் ஏன் ஒரு புதிய பள்ளிகூடத்தை கண்டுவதற்க்கு நிலத்தினை பெற முன்வரவில்லை என்ற உண்மையை அறிவித்தேன் என்பதாகும்.

மேலும், பொதுவாக நகர்புறத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளை மாற்று இடங்களுக்கு மாற்றியமைப்பது வாகன நெரிசலை குறைக்க வகைசெய்யும் வழக்கமாகும். அவ்வகையில் டிண்டிங்ஸ் நிலம் சித்தியவான் நகர்ப்புற மையத்தில் அமைந்தவையாகும். அந்த கோணத்தில் பார்த்தல் நகர்புறத்தில் அமைந்த நிலத்தில் பள்ளியை புதிப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை எந்த ஒரு பொறுப்பான அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த சூழ்நிலையில் ஒரு கடமையுள்ள அரசாகத்த்தின் நிலைப்பாடு என்பது மக்களின் உணர்வுக்கு மதிபளிப்பதாகும். அவ்வகையில் பேராக் மாநிலத்தின் இந்த தாமதமான முடிவு ஒரு அறிவுபூர்வமான முடிவுமட்டுமல்லாமல் சரியான முடிவாக கருதுகிறேன்.

இருந்தபோதிலும் தேசிய முன்னணியின் ஆணவ ஆட்சி மற்றும் உணர்ச்சியற்ற செயல் மக்களின் ஒன்றுமைக்கு முன்னாள் இனியும் எடுபடாது என்பதனை இவ்விவகாரம் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது.

மேலும் இவ்விகாரம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கடிதமும் பெறாத வரையில் எங்களின் நிலைபாட்டில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. அதே சமயம் இந்நிலதின்மேல் மத்திய அரசாங்கத்தினுடைய விருப்பத்தை மக்களிடம் அறிவிக்கும் வகையில் வீடு வீடாக சென்று இப்பிரச்சனை குறிந்து துண்டறிக்கைகள் வழங்குவதில் நாங்கள் மேலும் மும்முரம் காட்டுவதை தொடர்வோம். ஆகவே வருகிற 25/08/10 ம் மாவட்ட அலுவலகம் சொன்ன தேதியில் இந்நிலப்பிரச்சனை குறித்த கூட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்ளவோம் என்பதனை இதன் வழி தெரிவிக்கின்றோம்.

பேராக் மாநிலத்தின் இந்த முடிவு உள்ளூர் இந்தியர்களின் ஒன்றுமையின் அதிகாரத்தில் எடுத்த முடிவாக திகழ்கிறது என்பதனை இந்தன் வழி தெரிவிக்கின்றேன்.

மக்களின் விருப்பத்தை மதிக்காத மத்திய அரசாங்கம்.

18/08/10 - மக்கள் ஓசையில் வெளியிட்ட செய்தி.

டிண்டிங்ஸ் நிலப்பிரச்னையில் பொய்யான தகவல் தந்த நபர் மீது போலிஸ் புகார்.

18/08/2010 ம் திகதி  மக்கள் ஓசையில் வெளிட்ட செய்தி


போலிஸ் நிலையத்தில் மு.குலசேகரனுடன் பொது மக்கள்
நேற்று (17/08/2010) மாலை மணி 5.30க்கு,  டிண்டிங்ஸ் இந்திய சங்க உறுப்பினர் மீது போலீசில் புகர் செய்யப்பட்டது. அந்த போலிஸ் புகாரில் சம்பத்தபட்ட அந்நபரின் ஆதவரில் கிங் ஒங் மேம்பாண்டு நிறுவனம் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் மேல் தடையுத்ரவு பெற்ற ஆதாரத்தைக் கொண்டு அந்நபரின் மேல் புகார் செய்யப்பட்டது. இந்நில விற்பனைக்கு தமக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் இந்நிலம் பறிபோக தாம் ஒருபொழுதும் விட்டுக்கொடுக்க மாட்டார் எனவும் பத்திரிக்கையில் பொய்யான செய்தியை அந்நபர் வழங்கியிருக்கிறார் என்பது நிருபனமானது.

Tuesday, August 17, 2010

உளறுகிறது பேராக் மாநில ம.இ.க-வின் கிழட்டு சிங்கம்.

டிண்டிங்ஸ் நில விவகாரம் குறித்து ம.இ.க உதவ முடியவில்லை என்றாலும் ஜ.செ.க வின் முயற்சியை அனாவசியமாக விமர்சிப்பதை டத்தோ வீரசிங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். - மு.குலசேகரன்

பேராக் மாநில ம.இ.கவின் தலைவர் டத்தோ வீரசிங்கம் மக்கள் கூட்டணி தலைவர்களின் முயற்சியை தவறாக விமர்சிப்பதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் கூட்டணி இந்திய தலைவர்கள் டிண்டிங்ஸ் நிலப்பிரச்சனை குறித்து மத்திய அரசாங்கத்தின் மீது அவதூறுகளை பரப்புவதாகவும் விஷமத்தனமாகவும் பேசுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.

அச்செய்தியில் ம.இ.க கண்டிப்பாக இந்நிலம் டிண்டிங்ஸ் சங்கத்திற்கே சொந்தமாக நிலைக்கும் என்ற உறுதியை வழங்கும் என்பதனை கூறியது மட்டுமல்லாமல், பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் ராமசாமியும் படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்ய முனைவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய டத்தோ வீரசிங்கம் கல்வி அமைச்சு வேறு ஒரு அருகில் உள்ள காலி நிலங்களை பள்ளி கட்டுவதற்கு வாங்குவதற்கும் சாத்தியமுண்டு என்பதனை தெரிவித்துள்ளார்.

டத்தோ வீரசிங்கம் ம.இக.வின் வெளிப்படையான நிலைபாட்டினை அறிவித்த போதிலும் தற்சமயம் போராட்டத்தில் ஈடுபடுவதை சிரமமாக கருதுகிறார். இதன் வழி வீரசிங்கத்திற்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், மக்கள் கூட்டணி இந்திய தலைவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்களை தூண்டி இப்பிரச்சனையில் அரசியல் லாபம் தேடியது கிடையாது. இப்பிரச்சனை இந்திய சமுதாய பிரச்சனை என்பதனை நன்கு மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல மக்கள் தலைவனுக்கு அழகு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை வழங்குவது. அது நமது கடமையும் கூட. மக்களின் நிலைப்பாட்டினை தெரிவதற்கு மக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டுமே ஒழிய மாநில அலுவகத்தில் இருந்து கொண்டு அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும் வீரசிங்கம். மேலும் அனைத்து பொது மக்களும் இவ்விவகாரம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் உறுதியான நிலையை அறிய முடியும் என்பதனை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ம.இ.க வாய்ச்சொல் சேவையை கொள்கையாக கொண்டிருக்கும் வேளையில் நாங்கள் மக்களின் உணர்வுக்கும் ஜனநாயக கொள்கைக்கும் கட்டுப்படும் வேளையில் மக்கள் அவர்களின் மன ஆதங்கத்தை தெரிவிக்க சிறந்த வழியில் ஒன்றுதான் அமைதி பேரணி என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். அதற்கு என்றுமே நாம் தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதனை வீரசிங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நடைபெறவுள்ள அமைதி பேரணியில் தனது உண்மையான எதிர்ப்பை தெரிவிக்கவும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் வீரசிங்கம் கட்சி பேதமின்றி இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு தனது உறுதியான நிலையை தெரிவிக்க வேண்டும். வருகிற 25/08/2010 ம் திகதி இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பாரா டத்தோ வீரசிங்கம்?

மத்திய அரசாங்கத்தின் விருபத்தை முற்றாக ம.இ.க எதிர்ப்பதாக இருந்தால் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்நிலப்பிரச்சனை குறிந்து பேசி ஒரு நல்ல முடிவினை பெற அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்ரமணியம் முயலவேண்டும். அப்படி செய்ய தவறிவிட்டால் ம.இ.க-வினர் காலித்தனமாக பேசுவதை நிருந்திக்கொள்ள வேண்டும் என்பதனை நினைவுறுத்த விரும்புகிறேன்.

2008 ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பலத்த தோல்வி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததின் விளைவுகளை ம.இ.க-வும் தேசிய முன்னணியும் இன்னும் முழுமையான பாடங்களாக கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இறுதியாக இந்நிலப்பிரச்சனை குறிந்து உங்களால் துணை நிற்க தைரியமில்லை என்றால் இந்திய சமுதாயதிற்கு துரோகம் விளைவிர்க்காதீர்கள் என்ற வேண்டுகோளை டத்தோ வீரசிங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

Monday, August 16, 2010

"மத்திய அரசாங்கம் அதன் விருப்பத்தை மாற்றிக்கொள்ளல் வேண்டும்" - மு.குலசேகரன்

எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் சித்தியவான் வாழ் இந்திய உள்ளூர் மக்கள் டிண்டிங்ஸ் இந்திய சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை மத்திய அரசாங்கத்திடம் விட்டுகொடுக்க மாட்டார்கள் என்பது உறுதியான நிலை. இந்த நிலப்பிரச்சனை குறித்து நேற்று நடைபெற்ற ஒரு சந்திப்பு கூட்டத்தில் பல உள்ளூர் இந்திய தலைவர்கள் பல கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலத்தை கைமாற்ற எண்ணம் கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தின் விருப்பம் அளவுக்கு மிஞ்சிய செயலாக கருதப்படுகிறது.

இந்த கூட்டத்தில் என்னுடன் பினாங்கு மாநில துணைமுதல்வர் முனைவர் ராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கோபாலகிருஷ்ணன், டிண்டிங்ஸ் இந்திய சங்க தலைவர், டாக்டர் ஜெயபாலன் மற்றும் டாக்டர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த இரண்டு ஹெக்டர் நிலப்பரப்பை கொண்ட இந்த நிலத்தை 1930 ம் ஆண்டு 35 தோட்டத்தை சேர்ந்த மரவேட்டும் தொழிலாளர்களின் நன்கொடையில் வாங்கப்பட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

இம்மாதம் 25 ம் திகதி மத்திய அரசாங்கம் இந்நிலத்தை கைப்பற்றிக்கொள்ள திட்டம் கொண்டுள்ளதாக கேள்விப்பட்டது உண்மை. அக்கூட்டம் மன்ஜோங் மாவட்ட மன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில் பலர் அவர்களின் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டது மட்டுமல்லமால் மக்கள் நலன் காக்கும் தலைவர்களின் நிலைப்பாட்டிற்கும் துணை நிற்க உறுதியளித்தனர். அவ்வகையில் இந்நிலம் எந்த ஒரு காரணத்தினாலும் மாற்றான் கைக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதனை தெளிவாக எடுத்துரைத்தனர். அதே சமயத்தில் இந்நிலம் அன்றைய காலங்களில் வாழ்த்த நமது முதாதயர்களின் தியாகத்தின் சின்னமாக விளங்கும் பட்சத்தில் இதன் உரிமைகளை பறிக்க யாருக்கும் இடமளிக்கக்கூடாது என்றனர். சித்தியவான் சுற்றிலும் பல காலி நிலங்கள் பள்ளி கட்டுவதற்கு தோதாக இருக்கும் சூழ்நிலையில் இந்நிலத்தை பறிப்பது இந்தியர்களின் பொறுமையை சீண்டி பார்க்கும் செயலாக வெளிப்படுகிறது.

தற்சமய சூழ்நிலைக்கு இந்நிலத்திளிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட சுங்கை வாங்கி செம்பனை தோட்டம் உள்ளது. இத்தோட்டம் அரசாங்கம் தொடர்பு நிறுவனங்களின் ஒன்றனான சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான நிலமாகும். 15ந்து வருடங்களுக்கு முன்பு சுமார் 150 ஏக்கர் நிலத்தை தற்காப்பு அமைச்சு விமான நிலையம் கண்டுவதற்க்கு அந்த தோட்டத்திலிருந்து முறைப்படி வாங்கியது. அச்சூநிலையில் 15ந்து வருடத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு நிலம் வாங்க முன்வந்த மத்திய அரசாங்கம் ஏன் ஒரு புதிய பள்ளிகூடத்தை கண்டுவதற்க்கு நிலத்தினை பெற முன்வரவில்லை? எதற்காக டிண்டிங்ஸ் இந்திய சங்க நிலத்தை மத்திய அரசாங்கம் குறிவைக்க வேண்டும்? இந்நிலத்தை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு உணர்ச்சியற்ற அநியாய வீண் சிரமங்களுக்கு வித்திடுவதுபோல் பொது மக்களின் மத்தியில் காணப்படுகிறது.

இவ்வட்டாரத்தில் வாழும் இந்தியர்களும் இந்நிலத்தை எந்த ஒரு நஷ்ட ஈட்டு தொகைக்கு மாற்றிக்கொள்ளவோ அல்லது வேற்று நிலத்தினை பெறுவதற்கோ ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. காரணம் அவை இந்தியர்களின் மேம்பாட்டை பின்தள்ளிவிடும் என்பதனை நன்கு அறிந்துள்ளனர்.

ஆகவே இந்நிலத்தை "லிட்டில் இந்தியா " என்று பிரகடனம் செய்து இந்திய பாரம்பரிய வர்த்தகத்திற்கு ஒரு சின்னமாக விளங்க இவ்விடம் அங்கிகாரம் பெற அரசாங்கம் முன்வர வேண்டும்.

இதனை தொடர்ந்து வருகிற 25 ம் திகதி மன்ஜோங் நில அலுவலகத்திற்கு மக்கள் அலையாக திரண்டு வர வேண்டும் என்பதனை பொது மக்கள் இக்கூடத்தில் தெரிவித்தனர். தற்சமயம் அனைத்து தரப்பினரும் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கையை விநியோகம் செய்து வருகின்றனர். அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி ஒருமனதாக திரண்டு இந்நிலத்தை கௌரவத்தை காக்க முன்வரவேண்டும் என்பதனை தெரிவித்தனர்.
 

தேசிய முன்னனின் ஆட்சியில் பேராக் மாநிலத்தில் ஆலய பிரச்சனை தொடர்கிறது.

16/08/10 - மக்கள் ஓசையில் வெளியிட்ட செய்தி. 

தமிழனை கண்டால் அராஜகம் செய்வதா?

 16 /08 /10  திகதி  மக்கள் ஓசையில் வெளியிட்ட செய்தி. 

Friday, August 13, 2010

ஈழத் தமிழர்களின் உயிரைக்காக்க.....

அன்பான மலேசியா வாழ் மனித உணர்வுள்ள மக்கள் கூட்டணி இந்திய தலைவர்களே, உங்கள் அனைவருக்கம் எங்களின் தாழ்மையான வணக்கங்கள்.

ஈழத் தமிழர்களின் உயிரைக்காக்க நீங்கள் அனைவரும் எடுக்கும் அணைத்து நடவடிக்கைகளுக்கும் இவ்வளைப்பூங்கா உங்களுக்கு துணை நிற்கும் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


13/08/10 ம் திகதி மக்கள் ஓசையில் வெளிவந்த செய்தி.


 

டிண்டிங்ஸ் இந்தியர் சங்க நிலப்பிரச்சனை குறித்து 13/08/10 ம்௦ திகதி - மக்கள் ஓசையில் பிரசுரிக்கப்பட்ட செய்தி